web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts , Vallalar Education ,Vallalar Study Material , Vallalar MP3 Speeches , Vallalar DVD , Vallalar Books,Vallalar Functions - Information Sharing etc
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
181. எட்டிஎனத் தழைத்தேன்.
182. புங்கெனவும் புளிஎனவும் மங்கி உதிர்கின்றேன்.
183. பரசும் வகை தெரிந்து கொளேன்.
184. தெரிந்தாரைப் பணியேன்.
185. பசைஅறியாக் கருங்கல் மனப்பாவிகளிற் சிறந்தேன்.
186. விரசு.நிலத்து ஏன்பிறந்தேன்? நின்கருத்தை அறியேன் வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே!
187. பொருளறியேன்.
188. பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே பொங்கி வழிந்துடைகின்றேன்.
189. பொய்யகத்தேன்.
190. புலையேன் .
191. மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்.
192. வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்.
193. வெருளறியாக் கொடுமனத்தேன்.
194. விழற்கிறைத்துக் களிப்பேன்.
195. வீணர்களில் தலைநின்றேன்.
196. விலக்கனைத்தும் புரிவேன்.
197. தெருளறியேன் உலகிடை நான் ஏன் பிறந்தேன்? நினது திருவுளத்தை அறிந்திலேன் தெய்வ நடந்தவனே!
198. தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத் தருக்குகின்றேன்.
199. உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்.
200. பவம்புரிவேன்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Bangalore Vallalar Education Program ( Free Entrance) Bangalore - Monthly SATH-VICHARAM / காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ராமலிங்க சுவாமிகளின் - "அருட்பா" விளக்கவுரை பெங்களூரில்,மாதம்தோறும், முதல் ஞாயிறு ,5th கிராஸ் , லட்சுமி நாராயண புறத்தில் உள்ள ,வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகின்றது. Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, 5th Cross, Lakshmi NarayanaPuram, Bangalore - 560021. Karthikeyan : 99022-68108 vallalargroups@gmail.com
Going? Yes - Maybe - No more options » | ||||||||
Invitation from Google Calendar You are receiving this email at the account vallalargroups@gmail.com because you are subscribed for reminders on calendar Vallalar Calendar. To stop receiving these notifications, please log in to https://www.google.com/calendar/ and change your notification settings for this calendar. |
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
161. எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன்?. உன்றன்
இதயமறியேன் மன்றில் இனித்த நடத்திறையே!
162. இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்
ஓர் இழிவிலங்கில் இழிந்துநின்றேன்.
163. இரக்கம்ஒன்றும் இல்லேன்.
164. அனித்த நெறியிடைத்தொடர்ந்து மனித்த உடம்பெடுத்த
அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன்.
165. பனித்த மனக்குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன்.
166. பாதகமும் சூதகமும் பயின்றபெறும் படிறேன்.
167. தனித்த கடுங்குணத்தேன் நான் ஏன்பிறந்தேன்?
168. நினது தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே!
169. ஏறுகின்றேம் என மதித்தே இறங்குகின்ற கடையேன்.
170. ஏதமெலாம் நிறை மனத்தேன்.
171. இரக்கமிலாப் புலையேன்.
172. சீறுகின்ற புலியனையேன்.
173. சிறுதொழிலே புரிவேன்.
174. செய்வகை ஒன்றறியாத சிறியரினும் சிறியேன்.
175. மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன்.
176. வஞ்சம்எலாம் குடிகொண்ட வாழ்க்கைமிக உடையேன்.
177. வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன்?
நினது மெய்க்கருத்தை அறிந்திலேன் விளங்குநடத் தரசே!
178. அரசர் எலாம் மதித்திடப் பேராசையிலே
அரசோடால்எனவே மிகக்கிளைத்தேன்.
179. அருளறியாக் கடையேன்.
180. புரசமரம் போற்பருத்தேன்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No | Arutpa Topics | Download Link (e-book PDF) |
1 | ஞான சரியை | |
2 | சுத்த சன்மார்க்க மரபு | |
3 | திருவடிப் புகழ்ச்சி | |
4 | "இறைவனின் பெருமை" விசாரித்தல் | |
5 | விண்ணப்பக் கலிவெண்பா (Vinnappa Kalivenba) | |
6 | நமது "சிறுமையை விசாரித்தல்" |
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
1. இன்பமுடன் ஈண்டவரும் எண்ணிலரே ஆயினும் என் ஆண்டவனே! நின்னைப் போல் ஆவாரோ?
2. பற்றுலகில் அன்புடைய தாயர்கள் ஓராயிரம் பேர் ஆனாலும் அன்புடையாய் ! நின்னைப் போல் ஆவாரோ?
3. நின்னை அன்றி எந்தை பிரானே! உன் ஆணை ! எனக்கு உற்றத்துணை யாரும் இல்லை!
4. என் பிழைகள் அனைத்தினையும் ஐயா! நீ தானே பொறுக்கத் தகுங்கண்டாய்!
5. மாற்றனுக்கு மெட்டா மலர்க்கழலோய் நீயென்னைக் கூற்றனுக்குக் காட்டிக் கொடுக்கற்க!
6. கடற்புவியில் நானின்னும் வன்பிறவிப் பந்தக் கடலழுந்தப் பண்ணற்க!
7. முந்தை நெறி நின்றேயுன் பொற்றாள் நினையாதார் பாழ்மனையில் சென்றே உடலோம்பச் செய்யற்க!
8. நன்றே நின்றோங்கு நெறியோர் உளத்தமர்ந்தோய் என்றன்னைத் தீங்கு நெறியில் செலுத்தற்க!
9. வாழி யெனத்தான் வழுத்தினும் என் சொற்கடங்கா ஏழைமனத்தால் இளைக்கின்றேன்.
10. பொல்லாக் குரங்கெனவே பொய்யுலகக் காடேறு நெஞ்சாற் கலங்குகின்றேன்.
11. மாயையெனும் உட்பகையார் காமமெனும் கள் அறியாதுண்டு கவல்கின்றேன்.
12. நின்தாள் கமலங்களை வழுத்தா மண்ணனையார் பாற்போய் மயங்குகின்றேன்.
13. துன்பக் கவலை கடல் வீழ்ந்தே ஆதரவு ஒன்று இன்றி அலைகின்றேன்..
14. அடியார் தமைக்கண்டு நாத்திகஞ் சொல்வார்க்கு நடுங்குகின்றேன்.
15. உய்வது அறியா உளத்தினேன்! உய்யும் வகை செய்வது அறியேன்! திகைகின்றேன்!
16. நின் கருணை உண்டோ? இல்லையோ? என்று எண்ணி எண்ணி உள்ளம் இளைக்கின்றேன்..
17. கொடுங் கூற்றன் குறுகில் அதற்கு என் செய்வோம் என்று எண்ணி எய்கின்றேன்!
18. முன்செய் வினையாம் அறையா நோயால் அகம் மெலிவுற்று ஐயா! நான் தாமரையின் நீர் போல் தள்ளாடுகின்றேன்..
19. வள்ளல் அருள்கொடுக்க வந்திலனே இன்னும் என உள்ளமது நீராய் உருகுகின்றேன்.
20. இன்னும் என்ன வந்திடுமோ! என்று நெஞ்சம் அலைபாய்ந்து உள்ளம் அழிகின்றேன்..
21. ஞாலமிசைக் கோட்பார வாழ்க்கைக் கொடுஞ் சிறையினின்று என்னை மீட்பார் இலாதுவிழிக்கின்றேன்!
22. ஆற்றில் ஒரு காலும், அடங்காச் சமுசாரச் சேற்றில் ஒரு காலும் வைத்துத் தேய்கின்றேன்..
23. வாழ்க்கை எனும் பாலைவனத்து உன் அருள் நீர்த்தாகமது கொண்டே தவிக்கின்றேன்..
24. மோகமதில் போய்ப்படுமோர் பஞ்சப் பொறிகளால் வெம்பாம்பின் வாய்ப்படுமோர் தேரையைப்போல் வாடுகின்றேன்.
25. மீன்போலும் மாதர் விழியால் வலைப்பட்ட மான்போலும் சோர்ந்தும் அடங்குகின்றேன்.
26. உலக விகாரப் பிரளயத்தில் தோற்றுஞ் சுழியுட் சுழல்கின்றேன்.
27. என்றனைக் கைவிட்டு விடேல்.
28. மாலும், திசைமுகனும், வானவரும், வந்து தடுத்தாலும் சிறியேனைத் தள்ளிவிடேல்.
29. உலகவாதனை கொண்டோனென்று மற்றெவரானாலும் வந்து போதனை செய்தாலும் எனைப் போக்கிவிடேல்!
30. நின்தயவு சூழ்ந்திடுக!
31. என்னை நின் தொண்டருடன் சேர்த்தருள்க
32.வாழ்ந்திடுக நின்தாள் மலர்!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
143. மலத்திடையே புழுத்த சிறுபுழுக்களிலும் கடையேன்.
144. வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்.
145. நலத்திடை ஓர் அணுஅளவும் நண்ணுகிலேன்.
146. பொல்லா நாய்க்கு நகை தோன்றநின்றேன்.
147. பேய்க்கும் மிக இழிந்தேன்.
148. நிலத்திடை நான் ஏன்பிறந்தேன்? நின்கருத்தை அறியேன் !
149. விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது விம்முகின்ற
குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்.
150. அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்து நெடுங் காலம் அலைந்தலைந்து
மெலிந்ததுரும் பதனின் மிகத் துரும்பேன்.
151. கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்த பழுமரத்தேன்.
152. கெடுமதியேன்.
153. கடுமையினேன்.
154. கிறிபேசும் வெறியேன்.களக்கறியாப் புவியிடை நான் ஏன் பிறந்தேன்?
155. அந்தோ கருணை நடத்தரசே நின்கருத்தை அறியேனே!
156. அறியாத பொறியவர்க்கும் இழிந்த தொழிலவர்க்கும் அதிகரித்துத்
துன்மார்க்கத் தரசு செயும் கொடியேன்.
157. குறியாத கொடும் பாவச்சுமை சுமக்கும் திறத்தேன்.
158. கொல்லாமை என்பதை ஓர் குறிப்பாலும் குறியேன்.
159. செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன்.
160. சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி