1. இன்பமுடன் ஈண்டவரும் எண்ணிலரே ஆயினும் என் ஆண்டவனே! நின்னைப் போல் ஆவாரோ?
2. பற்றுலகில் அன்புடைய தாயர்கள் ஓராயிரம் பேர் ஆனாலும் அன்புடையாய் ! நின்னைப் போல் ஆவாரோ?
3. நின்னை அன்றி எந்தை பிரானே! உன் ஆணை ! எனக்கு உற்றத்துணை யாரும் இல்லை!
4. என் பிழைகள் அனைத்தினையும் ஐயா! நீ தானே பொறுக்கத் தகுங்கண்டாய்!
5. மாற்றனுக்கு மெட்டா மலர்க்கழலோய் நீயென்னைக் கூற்றனுக்குக் காட்டிக் கொடுக்கற்க!
6. கடற்புவியில் நானின்னும் வன்பிறவிப் பந்தக் கடலழுந்தப் பண்ணற்க!
7. முந்தை நெறி நின்றேயுன் பொற்றாள் நினையாதார் பாழ்மனையில் சென்றே உடலோம்பச் செய்யற்க!
8. நன்றே நின்றோங்கு நெறியோர் உளத்தமர்ந்தோய் என்றன்னைத் தீங்கு நெறியில் செலுத்தற்க!
9. வாழி யெனத்தான் வழுத்தினும் என் சொற்கடங்கா ஏழைமனத்தால் இளைக்கின்றேன்.
10. பொல்லாக் குரங்கெனவே பொய்யுலகக் காடேறு நெஞ்சாற் கலங்குகின்றேன்.
11. மாயையெனும் உட்பகையார் காமமெனும் கள் அறியாதுண்டு கவல்கின்றேன்.
12. நின்தாள் கமலங்களை வழுத்தா மண்ணனையார் பாற்போய் மயங்குகின்றேன்.
13. துன்பக் கவலை கடல் வீழ்ந்தே ஆதரவு ஒன்று இன்றி அலைகின்றேன்..
14. அடியார் தமைக்கண்டு நாத்திகஞ் சொல்வார்க்கு நடுங்குகின்றேன்.
15. உய்வது அறியா உளத்தினேன்! உய்யும் வகை செய்வது அறியேன்! திகைகின்றேன்!
16. நின் கருணை உண்டோ? இல்லையோ? என்று எண்ணி எண்ணி உள்ளம் இளைக்கின்றேன்..
17. கொடுங் கூற்றன் குறுகில் அதற்கு என் செய்வோம் என்று எண்ணி எய்கின்றேன்!
18. முன்செய் வினையாம் அறையா நோயால் அகம் மெலிவுற்று ஐயா! நான் தாமரையின் நீர் போல் தள்ளாடுகின்றேன்..
19. வள்ளல் அருள்கொடுக்க வந்திலனே இன்னும் என உள்ளமது நீராய் உருகுகின்றேன்.
20. இன்னும் என்ன வந்திடுமோ! என்று நெஞ்சம் அலைபாய்ந்து உள்ளம் அழிகின்றேன்..
21. ஞாலமிசைக் கோட்பார வாழ்க்கைக் கொடுஞ் சிறையினின்று என்னை மீட்பார் இலாதுவிழிக்கின்றேன்!
22. ஆற்றில் ஒரு காலும், அடங்காச் சமுசாரச் சேற்றில் ஒரு காலும் வைத்துத் தேய்கின்றேன்..
23. வாழ்க்கை எனும் பாலைவனத்து உன் அருள் நீர்த்தாகமது கொண்டே தவிக்கின்றேன்..
24. மோகமதில் போய்ப்படுமோர் பஞ்சப் பொறிகளால் வெம்பாம்பின் வாய்ப்படுமோர் தேரையைப்போல் வாடுகின்றேன்.
25. மீன்போலும் மாதர் விழியால் வலைப்பட்ட மான்போலும் சோர்ந்தும் அடங்குகின்றேன்.
26. உலக விகாரப் பிரளயத்தில் தோற்றுஞ் சுழியுட் சுழல்கின்றேன்.
27. என்றனைக் கைவிட்டு விடேல்.
28. மாலும், திசைமுகனும், வானவரும், வந்து தடுத்தாலும் சிறியேனைத் தள்ளிவிடேல்.
29. உலகவாதனை கொண்டோனென்று மற்றெவரானாலும் வந்து போதனை செய்தாலும் எனைப் போக்கிவிடேல்!
30. நின்தயவு சூழ்ந்திடுக!
31. என்னை நின் தொண்டருடன் சேர்த்தருள்க
32.வாழ்ந்திடுக நின்தாள் மலர்!
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
+Grab this
Post a Comment