வள்ளலாரின் பேருபதேசம் – "நமது சிறுமையை விசாரித்தல்" :2
81. தீயரில் தீயனேன்.
82. பாபக் கொடியரில் கொடியேன்.
83. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே…
84. போகமே விழைந்தேன்.
85. புலைமனச் சிறியேன்.
86. பூப்பினும் புணர்ந்த வெம் பொறியேன்.
87. ஏகமே பொருள் என் றறிந்திலேன்.
88. பொருளின் இச்சையால் எருது நோவறியாக் காகமே எனப் போய்ப் பிறர் தமை வருத்திக் களித்த பாதகத் தொழிற்கடையேன்.
89. மோகமேஉடையேன் என்னினும் எந்தாய் முனிந்திடேல் காத்தருள் எனையே.
90. பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப் புணர்ந்த வெம் புலையனேன்
91. விடஞ்சார் பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன்
92. கள்ளனேன்
93. நெருக்கும் ஆப்பினும் வலியேன்
94. அறத்தொழில் புரியேன்
95. அன்பினால்அடுத்தவர் கரங்கள் கூப்பினுங் கூப்பாக் கொடுங்கையேன்
96. எனினும் கோபியேல் காத்தருள் எனையே.
97. விழுத்தலை நெறியை விரும்பிலேன்.
98. கரும்பின் மிக இனிக்கின்ற நின் புகழ்கள் வழுத்தலை அறியேன்.
99. மக்களே, மனையே, வாழ்க்கையே, துணை என மதித்துக் கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன்.
100. கொக்கனேன்.
101. செக்கினைப் பலகால் இழுத்தலை எருதேன்.
102. உழத்தலே உடையேன் என்னினும் காத்தருள் எனையே.
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
+Grab this
Post a Comment