ஆன்ம நேய அன்புடைய சகோதரர்கள் அனைவருக்கும் வணக்கத்துடன்
தெரிவிப்பது ;--
வள்ளலார் அருட்பாவில் சைவ உணவு ,அசைவ உணவு ,எனறு எங்கும்
குறிப்பிட வில்லை,அருள் உணவு ,பொருள்உணவு,என்றுதான்
குறிப்பிடுகிறார் ,
பொருள் உணவு என்பது உயிர்அற்றது,அதாவது உயிர் இல்லாதது .
உயிர் இல்லாத உணவை மனிதன் உண்ணலாம் ,உயிர் உள்ள உணவை
உண்ணக்கூடாது என்பது வள்ளலாரின் ,சுத்த சன்மார்க்க கொள்கையாகும் .
உயிருள்ள ஜீவன்களை கொன்று உண்பதால் அது நியதி ஆகாரமல்ல ,
ஒரு உயிரைக் கொள்வதற்கு ,யாருக்கும் அதிகாரம் இல்லை ,
அப்படிக் கொண்றால் ஆண்டவர் கட்டளையை மீறிய செயலாகும் .
இயற்கையின் சட்டவிரோத செயல்களாகும் ,
அதனால் தான் ''ஜீவகாருண்யமே ''மோட்ச வீ ட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார் ,
ஒருஜீவனைக்கொன்று ஒருஜீவனுக்கு மாமிசத்தால் பசியாற்றுதல்
ஜீவகாருண்ய ஒழுக்கமே அல்ல என்றும் ,---கடவுள் சம்மதமும் அல்லவென்றும்
முழு விரோதமானதென்றும் அறிய வேண்டும் என்றும் தெரியப் படுத்தியுள்ளார் .
எல்லா உயிர்களும் இயற்க்கை உண்மை ஏக தேசங்கள் ஆகிய, கடவுள்இயற்கை
விளக்கமாகிய அருளுக்கு இடமாக இருக்கின்றபடியாலும் ,
கடவுள் இயற்கை விளக்கம் மறைபடும் போது ஜீவத்தன்மைஇல்லாதபடியாலும் ,
கடவுள் இயற்கை விளக்கமும் ,ஜீவன் இயற்கை விளக்கமும் ,ஒன்றோடு ஒன்று
மாறுபடாத தாலும்,
கடவுள் இயற்கை விளக்கமும், ஜீவன் இயற்கை விளக்கமும் அந்த அந்த தேகங்களிலும்,
விளங்குகின்ற படியாலும் ,
ஒரு ஜீவனை வதைத்து அதனால் மற்றொரு ஜீவனுக்குப் பசியார்ருவித்தல் ,
ஜீவகாருண்ய ஒழுக்கத்திற்கு முழு விரோதம்ஆகும் , எனறு அறியவேண்டும் எனறு
வள்ளலார் விளக்கமாக தெரியப் படுத்தியுள்ளார் .
தாமச ஆகாரமான புலால் [மாமிசம் ] ஆகாரத்தால் கடவுள் இயற்கை விளக்கம் என்னும்
சத்துவ மாகிய ஆன்ம இயற்கை விளக்கமாகிய ''அருள் ''விளங்காமல் போய்விடும் .
''இருளால் ஒளி விளங்காதது போல் ''
தாவரங்களை உணவாக உட்கொள்வது ,தவறல்ல அதுவும் வேரோடு பிடிங்கி
உண்ணக் கூடாது ,
நமக்கு அருள் கிடைக்கும் வரை தாவர உணவு தேவைப்படுகிறது .அருள் என்னும்
சுரப்பி ஆன்மாவில் சுரக்க ஆரம்பித்தால் ,மற்ற எந்த பொருள் உணவும் தேவை இல்லை ,
அடுத்து நாம் சிந்திக்க வேண்டும் ,;--
தாவரங்களில்'' ரத்தம் '' ஓட்டம் கிடையாது ,நீரோட்டம் தான் இடுக்கிறது ,
ரத்த ஓட்டம் உள்ள எந்த உயிரையும் உணவாக உட்கொள்ளக் கூடாது,
ரத்தம் என்பது சிகப்பு ,சிகப்பு என்பது ஆபத்து ,ஆபத்தை நாமே தேடிச செல்லக் கூடாது.
நீரோட்டம் உள்ள ஆகாரத்தால் எந்த ஆபத்தும் இல்லை ,
இன்றைய உலகம் அமைதி இல்லாமல் இருப்பதற்கு அடிப்படைக் காரணம் ,
வாயில்லாத ஜீவன்களை அடித்து, கொன்று, உணவாக உட் கொண்டு வருவதால்தான்.
இதை உலக நாடுகள் அறிந்து ,புரிந்து செயல் பட்டால் ,உலகம் அமைதியாக இருக்கும் .
இன்றைய விஞ்சான உலகம் ,இதை ஆராட்சி செய்யாதது ஏன் ?
வள்ளலார் கொள்கைகளை கடைபிடிக்கும் சுத்த சன்மார்க்க அன்பர்களாகிய நாம் ,
உயிர்க்கொலை செய்வதை தடுக்க பெரு முயற்ச்சி எடுக்க வேண்டும் .அதுவே
நாம் இந்த உலகிற்கு செய்யும் பெரிய நண்மையாகும்.
வள்ளலார் பாடல் ஒன்று ;--
துண்ணெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத்
தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறவுயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வளையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளே நடுங்கிய நடுக்கம்
என்தந்தை நின் திருவுளம் மறியும்.
எனறு வேதனையுடன் விளக்குகிறார் ,
அடுத்து தெய்வங்கள் பெயரால் பலியிடுவதைப் பற்றி ஒருபாடல் ;--
நலிதரு சிறிய தெய்வம் எனறு ஐயோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள்
பலிகடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புத்தி நொந்துளம் நடுக் உற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெங்கோயில்
கண்ட காலத்திலும் பயந்தேன் ,
எனறு சிறு தெய்வ வழிபாட்டு முறைகளை கண்டிக்கிறார் ,
இந்த உலக மக்கள் எப்பொழுது திருந்து வார்களோ பார்ப்போம்.
அன்புடன் ;--கதிர்வேலு .
28 ஜூலை, 2010 4:22 pm அன்று, Karthikeyan J
<karthikeyan.jayapal@googlemail.com> எழுதியது:
வள்ளலாரின் "ஆன்ம ரகசியங்கள் / ஆன்ம குறிப்புக்கள் "
- ஆன்ம லாபம்
- ஆன்ம உருக்கம்
- ஆன்ம அறிவு
- ஆன்ம உரிமை
- ஆன்ம இனம்
- ஆன்ம காரணம்
- ஆன்ம காரியம்
- ஆன்ம நேயம்
- ஆன்ம ஒழுக்கம்
- ஆன்ம திருஸ்டி
- ஆன்ம இயற்கை விளக்கம்
- ஆன்ம நேய ஒருமைபாட்டு உரிமை
- ஆன்ம இன்ப வாழ்வு
- ஆன்ம இன்ப சுகம்
அனைத்திற்கும் விடை வள்ளலாரின் "ஜீவகாருண்ய ஒழுக்கத்தில்" மற்றும் "உரைநடை பகுதியில் "உள்ளது.
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions
http://vallalargroupsmessages.blogspot.com/ To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க