Sunday, January 27, 2019

[vallalargroups:6076] Vallalar Poor Feeding @ KRPuram, Bangalore

Vallalar Poor Feeding @ KRPuram, Bangalore
With Sanmarkka Sathu.Murgan ayya

Saturday, January 19, 2019

[vallalargroups:6075] Blood is required

we need four unit of any blood. we have arranged 3 units. one more unit required.intested persons please contact me. this is for my mother in law.

contact details...Bangalore Karthikeyan ..08971233966

thanks

Thursday, January 17, 2019

[vallalargroups:6074] ஆண்டவா இவனுங்களை ஒன்னு திருத்ததுற...

கொல்லாமை புலால் உண்ணாமை 
இவ்விரு ஒழுக்கங்களில் நிற்காதவர்களுக்கு திருக்கறள் மற்றும் திருவருட்பாவில் 
பி ஹெ ச் பட்டம் பயிலவே அனுமதிக்கக் கூடாது.  இதனை சட்டமாக அறிவிக்கவண்டும் அப்பதான் இதன் பெருமையும் புனிதமும் காக்கப்படும் .

அடிமாட்டுக்கு அதாவது வெட்டுக்கு மாட்டை விலைக்கு விக்கிறவன் மாட்டுப்பொங்கல் கொண்டாடுறான்.
கொல்லாமை புலால் உண்ணாமை ஒழுக்கத்திற்கு வராதவன் திருவள்ளுவர் தினம் கொண்டாடுறான்.
அப்பா அம்மாவை காப்பாத்தாம நடுரோட்ல விடடவன் தைப்பூச ஜோதி தரிசனம் பார்த்துட்டு ஜீவகாருண்யம் பேசுகிறான்.

சாதயும் மதமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி என்று படித்துக்கொண்டே சாதிபார்த்துதான் பெண் கொடுக்கிறான் எடுக்கிறான்.

காதில் இவ்வளவு பெரிய ஓட்டை போட்டவர்ககு சின்ன ஓட்டை போடத்தெரியாதா என்று பேருபதேசம் படிக்கிறானுங்க 50 ,60 சன்மார்க்கியானாலும் நகையனிஞ்சிகிட்டு குளுக்குவதும் மினக்குவதமாகத்தான் இருக்காங்க.

இதெல்லாம் ஏன்டா இப்படி பன்றீங்கன்னு கேட்டா எல்லா திருடனும் ஒன்னு சேர்ந்து உதைக்கவர்ரானுங்க 
ஆண்டவா இவனுங்களை ஒன்னு திருத்ததுற அல்லது சம்ஹாரம் பன்ற ஆற்றலைக் கொடு ஆண்ட வா ,ஆள்ற வா,ஆளப்போற வா,கிளம்பி வா!வா!!வா!!!

திருச்சிற்றம்பலம்.

Thursday, January 3, 2019

[vallalargroups:6072] சுத்தசன்மார்க்க சாதனா சாத்தியம்

🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !

🙏🌻🌺 *சுத்தசன்மார்க்க சாதனா சாத்தியம்* 🌺🌻🙏
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
     ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 👏
  
சுத்தசன்மார்க்க நெறியின் அடிப்படைத் தகுதியே  தயவுதான் .
 
 *"தயவுடையோர்கள் அனைவரும் சுத்தசன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள்"* 

அப்படி என்றால்,
 *தயவு இல்லாமல் சன்மார்க்கம் என்று கூறிக்கொண்டு நாம் செய்கின்ற செயல்கள் அனைத்துமே சுத்தசன்மார்க்க நெறியைச் சாராத செயல்களேயாகும்* .

 அதனால்தான் *தயவு இல்லாமல் செய்கின்ற செயல்கள் அனைத்தும் மாயாசாலச் செய்லகளே என்று நமது பெருமான் கூறுகின்றார்கள்* .

 _*அப்படி என்றால் இதன் பொருள் என்ன ?*_ 
தயவு இல்லாமல் செய்கின்ற எந்த செயல்களும் நிலையான இன்பத்தை தராமல் ,நிலையற்று மறைந்து போகக்கூடிய சிற்றின்ப வகைகளேயாகும் என்பதாகும் .

 *தயவினால் செயயப்படக்கூடிய செய்லகள் எதுவாக இருந்தாலும் அது நிலைத்து நின்று திருவருள் சம்மதத்துடன் பயன்தரக்கூடியதாகும்* .

 *எனவே , ஆன்மாக்களாகிய நமது ஜீவதயவைக் கொண்டு கடவுளது பெருந்தயவை பெறவேண்டி நடக்கின்ற "தயவைநோக்கியப்" பயணம்தான் நமது மானுடவாழ்க்கைப் பயணம் .* 

 *🔥ஜீவதயவைக்கொண்டு கடவுளது பெருந்தயவை பெறச்செய்வதே சுத்தசன்மார்க்கமாகும்* 🔥

     இப்படிப்பட்ட *தயாநெறியில்* பயணிக்கின்ற சுத்தசன்மார்க்க அன்பர்களுக்கு *சாதனங்களாக* இருப்பவைகளும்

அவற்றின் முடிவில் பெறப்படுகின்ற *சாத்தியமாக* இருப்பவைகளும் எவைஎன்று பெருமான் கூறுகின்றதைப் பார்ப்போம் 🔥🙏

🌺 *சாதனங்கள்* 🌺
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
சுத்தசன்மார்க்கத்தின் முதற்சாதனம் " *ஜீவகாருண்ய ஒழுக்கமேயாகும்* இதைத்தான் பெருமான் " *பரோபகாரம்* " என்று கூறுகின்றார்கள் 

 *இந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் நமக்குள் அரும்பி மலர்ந்து காய்த்து பிறகு கனியாகி கடவுளது பெருந்தயவைப் பெறவேண்டுமானால் நமது கரணங்களும் ஜீவனும் ஆன்மாவும் சில ஒழுக்கங்களை கடைபிடிக்கவேண்டியுள்ளது இவைகள்தான் அடுத்த சாதானங்கள்* .

அவற்றை வள்ளல் பெருமான் ,
 *1:இந்திரிய ஒழுக்கம்,             2:கரண ஒழுக்கம்,     3:ஜீவ ஒழுக்கம்,             4: ஆன்ம ஒழுக்கம்* என்ற நான்கையும் கூறி அவற்றினுள் ஒவ்வொன்றிலும் எவ்வாறு நமது இந்திரியங்களும்,  கரணங்களும்,  
ஜீவனும், ஆன்மாவும் ஒழுக்கம் சார்ந்து நிற்கவேண்டும் என்பதை பெருமான் உரைநடைப் பகுதியில் விவரித்து வகைப்படுத்தி கொடுத்துள்ளார்கள் .

ஆகலில் *சுத்தசன்மார்க்க நெறியை கடைபிடித்து பயன்பெற முதல் சாதனம் ஜீவகாருண்ய ஒழுக்கமாகிய பரோபகாரம் என்பதும் ,அதற்கு அடுத்த இரண்டாவது சாதனம் நான்கு ஒழுக்கங்கள் என்பதுவும் ஆகும்.* 

அடுத்து மூன்றாவது சாதனமாக " *பரவிசாரம்* " கூறப்படுகின்றது.
இந்தப் பரவிசாரத்தின் மூலமே  *"நிராசை" என்னும் மேலானப் படியை* அடைய இயலும் என்பதாலும் ,
 *இந்த நிராசை படியை அடைந்துவிட்டால் இவ்வுலகப்பற்றை விடுத்து அம்பலப் பற்றையே பற்றாகப் பற்றிக்கொண்டு பெறவேண்டிய பெருவாழ்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதால் இங்கு "பரவிசாரத்தை"மூன்றாவது சாதனமாக சொல்லப்பட்டுள்ளது.*

ஆனால் உரைநடைப் பகுதியில் பரோபகாரம் பரவிசாரம் என்ற இரண்டு மட்டுமே சன்மார்க்க சாதனமாகச் சொல்லப்பட்டிருக்கும் . 

ஏனென்றால் *சுத்தசன்மார்க்கத்தார்கள் என்றாலே இந்திரிய கரண ஒழுக்கம் சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதுதான் .* 

மேற்கண்ட இந்த இரண்டு ஒழுக்கத்தையும் ஜீவர்களாகிய நமது நற்செயலாலும் முயற்சியாலும் அடைந்துகொண்டால் அடுத்துள்ள ஜீவஒழுக்கம் மற்றும் ஆன்மஒழுக்கம் திருவருள்துணையால் விரைந்து அடைந்துகொள்ளலாம் .


எனவே,
சுத்தசன்மார்க்கத்தில் பயணிக்கும் அன்பர்களுக்கு , *சாந்தசற்குணத்தை விருத்திசெய்விக்கும்இந்திரிய கரண ஒழுக்கங்களும்,* 

 *அன்பையும் அறிவையும் விருத்திசெய்விக்கும் ஜீவகாருண்ய ஒழுக்கமாகிய பரோபகாரமும்,* 

 *இவ்வுலகப்பற்றை விடக்கூடிய நிராசை என்னும் படியை அடைவிக்கும் "பரவிசாரமும் " ஆகிய மூன்று சாதனங்களும் மிகவும் அவசியமாகும்.* 

🙏🔥🌻 *மேற்கண்ட சாதனத்தால் பெறக்கூடிய சுத்தசன்மார்க்க சாத்தியங்கள்** 🌻🔥🙏
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
 மேற்கண்ட  சாதனங்களைக்கொண்டு சுத்தசன்மார்க்க நெறியில் நன்முயற்சியுடன் வாழ்ந்துவருகின்ற ஜீவர்கள் அடையக்கூடிய  புருஷார்த்தங்களாகிய சாத்தியங்கள் நான்காகும் .
அவை,
 *1:ஏமசித்தி(தங்கம் செய்தல்),                          2: சாகாக்கல்வி, 3:தத்துவ நிக்கிரகம்,4:கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்.*

என்ற நான்கு அரியபெரிய புருஷார்த்தங்களைப் பெற்று *சுத்தசன்மார்க்கப் பெருநிலையாகிய அருட்பெருஞ்ஜோதி இயற்கை என்னும் அருள்தேகம் பெற்று, அருள்நிலையில் நின்று, அழிவற்ற அருள்வாழ்வாகிய, மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்தல்கூடும் என்பதாம்.* நாமும் அவ்வண்ணமே சாதனத்தை தொடர்ந்து சாத்தியத்தைப் பெற்று வாழ்வதற்கு திருவருள் துணைக்கொண்டு  முயல்வோம் 🔥🙏
.....நன்றி🙏
...வள்ளல் பெருமான் மலரடிப் போற்றி போற்றி🙏
....பெருமான் துணையில் 🙏
...தயவுடன் வள்ளல் அடிமை🙏
....வடலூர் இரமேஷ்;

Wednesday, January 2, 2019

[vallalargroups:6071] form12bb

[vallalargroups:6070] பெருமான் உருவத்தை வணங்காதவர்களும் வணங்க மறுபபவர்களும் சிந்திக்கவேண்டியவை.

பெருமான் உருவத்தை வணங்காதவர்களும் வணங்க மறுபபவர்களும் சிந்திக்கவேண்டியவை.

பெருமானின் தேகம் மற்றவர்களைப்போல் அழியவில்லை .முத்தேக சித்தி பெற்றவர் . இன்றும்அவர் தேகம் தகுதியுள்ளவர்க்குத் தோன்றும்.
பெருமான் சித்தியடைந்த பிறகு இமயமலைச்சாரலில் பெருமானை கண்டதாக தியாசபிகல் சொசைட்டி அம்மையார் குறிப்பிடுகின்றார். தேகம் இல்லாமல் ஆன்மா ஜீவிக்கமுடியாது இது பெருமானின் வாக்கு .

மேலும் ஸ்தூல தேகம்,சூட்சும தேகம்,காரணதேகம் என மூன்று தேகங்களையும் சித்தி செய்து முத்தேக சித்தியடைந்தவர் . தேவை்படும்போது மூன்றுமே வெளிப்படும்.
 என்னைபார்க்க வேண்டுமெனில் உன்னைப்பாருங்கள்.உன்னைப்பார்க்க வேண்டுமெனில் என்னைப்பாருங்கள். என்பதும் பெருமானின் திருவாக்கு.

பேரறிவில் சமயங்கடந்த நிலையில் இயற்றிய அகவலில்
உருவமும் அருவமும் உபயமுமாகிய அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி. என்று உருவமாகவும் அருவமாகவும் உரு அருவமாகவும் அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றது அருட்பெருஞ்ஜோதி.

உருவ அருவ உருஅருவமாகிய மூன்று வழிபாடும் சன்மார்க்கத்தில் உண்டு.

உருவ வழிபாடு-ஆண்டவரோடு கலந்த பெருமானின் உருவம் மற்றும் கடவுள் காரியப்படும் உத்தமமான ஆன்மவியாபகமாகிய மனித தேகங்கள். ஏனெனில் கடவுளால் செதுக்கப்பட்ட சிலைகளாகவும் நடமாடும் ஆலயங்களாகவும் விளங்குவதால்  ஆகும்.

உரு அருவ வழிபாடென்பது ஜோதியை வழிபடுவதாகும்.

அருவ வழிபாடென்பது ஞானசிங்காதன பீடத்தை வைத்து அதில் ஆண்டர் அமர்ந்து அருட்செங்கோலாட்சி செய்து வருகின்றதாக பாவித்து வணங்குவதாகும்.
இந்த மூன்று வழிபாட்டையும் நாம் வழிபடச் செய்வதற்காக வடலூரில் சத்திய தருமச்சாலையில் பசியாற வந்திருக்கும் ஜீவ தேகமாகிய நடமாடும் ஆலயமாகிய மனித தேகத்தை வணங்கி வழிபடுவது.

ஞான சபையிலும் சித்திவளாகத்திலும் ஜோதி வழிபாடு

சித்தி வளாக திருவரறையில் அருவ வழிபாடாக உள்ளது.

உருவ வழிபாட்டில் மல ஜல உபாதி உள்ள இந்த மனித கேத்தையே வணங்கச் சொன்னார் என்றால் முத்தேக சித்தி பெற்ற சுத்ததேகத்தை வணங்கக்கூடாது என்பது தவறான புரிதல் .ஆகும்.

உலகத்திலேயே முதலில் வணங்கவேண்டிய உத்தமமான புனிதமான உருவம் பெருமானின் உருவமேயாகும் .

உருவ வழிபாட்டை தவிர்ப்பது உங்கள் கொள்கையானால் தீப கூன்டும்ஓர் உருவம் தானே அதில் ஜோதியும் ஒரு உருவம் தானே ஏன் இந்த உருவத்தை வழிபடவேண்டும் .

கடவுள் ஔி வடிவானவர்தான்.  அந்த ஔியைக்காட்ட உருவமான கூன்டும் அகலும் தேவைப்படுகிறதே  கடவுளை வணங்குவேன் ஐனால் ஆலயத்தை வணங்கமாட்டேன் என்றால் எப்படி.
ஆலயம்அவசியமில்லையென்றால் கடவுள் நேரடியாக ஔி வடிவிலே வந்து நமக்கு சுத்த சன்மார்க்கத்தை போதித்திருக்கலாம் அல்லவா ஏன் சிதம்பரம் ராமலிங்கம் என்ற உருவில் வர வேண்டும்.

பெருமான் உருவத்தை வழிபட மறுப்பதென்பது பெருமானின் முத்தேக சித்தியையே மறுப்பதாகிவிடும் . மேலும் இப்பொழுது பெருமான் இல்லையென்றாகிவிடும்.
பெருமானின் உருவத்தை ஆலயமாகத்தான் வழிபடுகிறோம் . கடவுளை ஔியாகத்தான் வழிபடுகிறோம். தவறில்லையே. 

நமக்கு பெருமான் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் கூறியதாவது தமது குடும்ப செலவை கூடியமட்டில் குறைத்து அதை ஜீவகாருண்யத்திற்கு பயன் படுத்த வேண்டும் என்கிறார் ஆகையினால் 
பெருமானின் உருவத்திற்கு பூமாலை கற்பூரம் தேங்காய் பழம்  வத்தி போன்றவை அவசியமல்ல அந்த பணத்தில் ஜீவகாருண்யம் செய்வதே சரியானததாகும் .

உருவம் கரைந்து அருவமாகும்.இது உண்மை .

பெருமான்என்னை தெய்வமென சுற்றாதீர்கள் என்று கூறியதன் பொருள் பொது ஜனங்களின் இடையூறுகளை தவிர்ப்பதற்காகவே. உதாரனத்திற்கு அன்பர் ஒருவர் திருமனம் செய்து கொள்ளலாமா என்று பெருமானிடம் கேட்டதற்கு சிவ சிந்தனையிலிருந்துகொண்டு ஆயிரம் திருமணம்கூட செய்யலாம் என்கிறார். உடனேஎல்லாசன்மார்க்கிகளும் 1000கல்யானம் செய்வதில்லையே ஏன் . அதுபோலத்தான் என்னை வணங்காதீர் என்பது.

 பெருமான் தனது உருவபொம்மையை போட்டுடைத்ததென்பது தற்பெருமையையும் தற்புகழ்ச்சியையும் விரும்பவில்லை என்ற அர்த்தமாகும் . அதேசமயத்தில் மரணந்தவிர்ந்தேன் என்ற அறையப்பா முரசு என்று கூறியிருப்பதையும் ஒப்பிட்டால் உண்மை விளங்கும்.

கடவுள் நியைறிந்து அம்மயமான எக்காலத்தும் அழியாத சுத்ததேக உருவப்படத்தை வணங்குவது உத்தமமாகும் .

இதற்கு மாறாக உருவப்படத்தை வணஙகாமலிருப்பதோடில்லாமல்  பெருமானின் உருவப்படத்தை கிழிப்பது போட்டோவை உடைப்பது சிலையை உடைப்பதென்பது அறியாமை மேலும் கண்டிக்கத்தக்கதாகும்.

மேலும் திருநீரணிவது பற்றியும் 5திருமுறைகள் பற்றியும் விரைவில் விரிவாக பார்ப்போம்.

திருச்சிற்றம்பலம் 
-சாது ஹரி

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)