பசித்திரு ! தனித்திரு ! விழித்திரு !
அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி !
தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி !
கொல்லாவிரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு !
அன்புஉள்ளம் கொண்ட ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் நாம் நம் வாழ்க்கையில்
ஆசையை துறந்தால் மோட்சவீட்டீன் கதவு தானாக திறந்து நம்மை உள்ளே அழைத்து செல்லும்
என்பதற்க்கு உதாரணமாக இங்கே ஒரு நிகழ்வை பார்ப்போம்.
அன்பர்களே முன்பு ஒருகாலத்தில் சோழவல நாட்டில் சொக்கநாதபுரம் என்ற சிறு நகரம் இந்த நகரத்தை ஆண்டுவந்த சோமேஸ்வரன் என்ற குறுநிலமன்னன் தன் நாட்டை சீரும் சிறப்புமாக
ஆட்சிபுரிந்து வந்தான் எப்படி என்றால் தன் நாட்டின் மக்களை கண்ணை இமைகாப்பது போல்
அவர்களை காத்து வந்தான்.இது தவிர காட்டில் தவம் செய்யும் தவசிகள் யோகிகள் சித்தர்கள்
போன்ற யாவருக்கும. மிருகத்தலும் விஷ ஜந்துக்களாலும் யாதொரு இடையூறு நிகழாவண்ணம்
காவல் புரிந்து செவ்வனே ஆட்சிசெய்து வந்தான். இவ்வாறு சிறந்து விளங்கிய நாட்டில் திடிரென
மழை பொய்த்துவிட்டது நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் உண்ண உணவின்றி பரிதவித்தனர்
இப்படிப்பட்ட துன்பத்திற்க்கு தவசிகளும் கூட விதிவிலக்கல்ல .அவர்களுக்கு உண்ணத்தகுந்த உணவாகிய பழங்கள் கிழங்கு வகைகள் போன்ற ஆகாரம் கிடைக்காமல் அவர்கள் அனைவரும்
மிகுந்தபசியினால் வாடினார்கள்.
இவ்வாறு இருக்க தன்னுடைய நாட்டில் இப்படி திடிரென வறட்சிவர காரணம் என்னவாக இருக்கும்
தமது ஆட்சியில் ஏதாவது பிழை செய்துவிட்டோமோ என தன்மனதில் சஞ்சலம் நிறைந்தவனாக
இருந்தான் சோமேஸ்வரன்.இப்படி தன மன்னன் சோகமாக இருப்பதை அறிந்த அந்நாட்டின் மதியுக மந்திரி பிரதாபன். மறுநாள் அரசசபை கூடியதும் மன்னனை பார்த்து மன்னா நம் நாட்டில் நிகழும் இத்துன்பத்தின் கரணம் அறிய நாளை நாம் இருவரும் நகர்வலம் சென்றுவரலாம் என்பது
அடியேனின் வேண்டுகோள் என்றான் மந்திரி பிரதாபன். மன்னன் சோமேஸ்வரன் தன் மதியுக மந்திரி
பிரதாபனின் ஆலோசனைதனை ஏற்றுக்கொண்டு அடுத்தநாள் மன்னனும் மந்திரியும் ஆகிய இருவரும் நகர்வலம் சென்றார்கள்.
மன்னனும் மந்திரியும் தம்நாட்டின் மூளை முடுக்குகள் என ஒரு இடம்விடாமல் சுற்றிவந்தார்கள்
இப்படி சுற்றி வழியெல்லாம் மக்கள் தங்களை பற்றி என்ன பேசிக்கொள்கிறார்கள் என அறிந்தவண்ணம் வலம்வந்தார்கள் இவ்வாறு நகர்வலம் வந்துகொண்டிருக்கும் வேளையில்
நகரின் எல்லை பகுதியில் ஒருகுடிமகன் தன்மனைவியிடம் நம் நாடு இவ்வாறு வறட்சி அடைய
காரணம் என்ன தெரியுமா.நம் நாட்டில் நமது மன்னன் அனைத்துவித தானதருமங்களை செய்து
வந்தார்கள.ஆனால் ஒன்றை மட்டும் தடுக்க தவறிவிட்டார்கள் அது என்னவென்றால் அவர்தம் நாட்டு மக்களில் ஒருசிலர் தம்முடைய பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் நலமுடன்
வாழவேண்டும் என்ற பேராசையினால் தமது சிறுமதியை கொண்டு சிறுதெய்வ வழிபாடு
என்றபெயரில் வாய்பேசா உயிரினங்களை பலிகொடுக்கிரார்கள் இப்படி இவர்கள் பலிகொடுக்கும்
வாய்பேசா உயிரினங்களிகிய ஆடு மாடு ,கோழி ,பன்றி ,போன்றவற்றின் குட்டிகள் குஞ்சுகள் எல்லாம்
ஆனாதைகளாகி விடுகின்றன. ஒரு நாட்டின் மக்கள் செய்யும் தீவினைகள் யாவும் அதை தடுக்க தவறிய மன்னனையே சாரும் ஆதலால் தான் நம்நாட்டில் இவ்வளவு வறட்சி.
அதற்க்கு அவனுடைய மனைவி இதற்க்கு என்னதான் உபயம் என்று வினவினால்.இவற்றுக்கு அக்குடிமகன் நம் நாடு செழிப்படைய வேண்டுமானால் நமது வடலூர் வள்ளல் பெருமான் உணர்த்திய பசிப்பிணி போக்குதலையும் பிறஉயிர்களிடத்தில் அன்பும் தயவும் கொண்டு
வாழும் மக்களை உருவாக்கவேண்டும் நம்முடைய மன்னர்.என்று தன் மனைவியிடம்
உரையாடிகொண்டிருந்தான் அந்தகுடிமகன்.
இவற்றை எல்லாம் கேட்டறிந்த மன்னனும் மந்திரியும் அரண்மனை திரும்பியவுடன் மன்னன்
மறுநாள் அரசசபையை கூடிய உடன் மந்திரிபிரதநிகளுடன் தான் நகர்வலத்தில் அறிந்தவற்றை
கலந்து ஆலோசித்து அவர்தம் நாட்டில் பசிப்பிணி போக்கும் தருமசலையும்,மற்றும் வேதபாடசாலை,நிறுவ ஆணை ஒன்றை நிறைவேற்றினார்.ஆதலால் அந்நாட்டில் அன்றுமுதல்
மக்கள் யாவரும் வாய்பேசா உயிரினங்களை பலிகொடுக்கும் சிறு தெய்வவழிபாட்டினை
கைவிட்டு பசிப்பிணி போக்கும் தருமசிந்தனையோடும் உயிர்நேயத்தோடும்
அதாவது பிற உயிர்களிடத்தில் அன்போடும் கருணை காட்டி. பேரருள் பெற்று மரணமிலா
பெருவாழ்வு கொடுக்ககூடிய தெய்வவழிபாட்டினை பூரணமாய் கடைபிடித்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்கள் . இவ்வாறு தருமசிந்தனை கொண்ட மக்களை கண்ட மன்னனின் மனம் நீண்டநாள் கன்றை இழந்த பசுவுக்கு மீண்டும் தன்னுடைய கன்று தன்னிடம் வந்தால் எவ்வளவு ஆனந்தம் அடையுமோ அதைவிட பன்மடங்கு பேரானந்தம் அடைந்தது அரசனின் மனம்.எனவே அன்றுமுதல் சொக்கநாதபுரம் சொர்க்க பூமியாக மாறி செல்வசெழிப்போடு விளங்கிற்று.
எனவே அன்பர்களே நாமும் நம் வாழ்வில் பசிஎன்று வருவோர்க்கு உணவு என்னும் மருந்தை
கொண்டு அவர்தம் பசிப்பிணி போக்கிவந்தால் எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நம்முள்ளே கரியப்படுவார் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை.
பசி என்று வருவோர்க்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்!
ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ .இளவரசன்
வள்ளலார் உயிர்வதை தடுப்பு இயக்கம்
நெ .34,அண்ணா தெரு ,
திருவள்ளுவர் நகர் ,
ஜமின் பல்லாவரம் ,சென்னை -6000 43
கைபேசி :9940656549