Friday, January 31, 2014

[vallalargroups:5318] Final Remainder : Bangalore Vallalar Certification Course Session 2 @ Sun 2 Feb 2014 10am - 5pm (Vallalar Calendar)

All are welcome

Topic : Sutha Sanmarkka Marabu.

Speaker : Erode.Sanmarkka Sanbar.Kathirvelu Ayya

Vallalar Certification Program Details , Bangalore

   ( PRAYER & SATH-VICHARAM & MEDITATION)

INVITING VALLALAR

VARUGAI PATHIGAM

10.00 TO 10.15 am

INVITING ANDAVAR

THIRUVADI PUGALCHI

10.15 TO 10.45 am

 

SUTHA SANMARKKA MEDITATION

10.45 TO 11.00 am

 

"Sutha Sanmarkka Marabu" Presentation

11.00 TO 11.50 am

 

KARISALAI BREAK

11.50 TO 12.00 pm

 

Sutha Sanmarkka Marabu Speech

12.00 TO 1.00 pm

DEIVA BAVANAI

GNANA SARIYAI ( 28 SONGS)

1.00 TO 1.30 pm

 

PRAYER FOR ALL / DONOR

1.30 TO 1.40 pm

 

LUNCH BREAK

1.40 TO 2.15 pm

 

Q&A

2.15 TO 4.00 pm

Contact

96630-75461 - Vasudeva | 74112-75928 - Anatha Bharathi
90356-22971 - Rudramurthy
E-Mail :vallalargroups@gmail.com

 




Bangalore Vallalar Certification Course Session2

Bangalore - Monthly SATH-VICHARAM / காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ராமலிங்க சுவாமிகளின் - "அருட்பா" விளக்கவுரை பெங்களூரில்,மாதம்தோறும், முதல் ஞாயிறு ,5th கிராஸ் , லட்சுமி நாராயண புறத்தில் உள்ள ,வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகின்றது.

Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, 5th Cross, Lakshmi NarayanaPuram, Bangalore - 560021.

vallalargroups@gmail.com

When
Sun 2 Feb 2014 10am – 5pm India Standard Time
Where
Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, Vadalur Sri Jothi Ramalinga Swamigal Samarasa Sanamarkka Sangam 5th Cross,LaxmiNaraya Puram 560021, Bangalore, Karnataka (map)
Calendar
Vallalar Calendar
Who
(Guest list is too large to display)

Going?   Yes - Maybe - No    more options »

Invitation from Google Calendar

You are receiving this email at the account vallalargroups@gmail.com because you are subscribed for reminders on calendar Vallalar Calendar.

To stop receiving these notifications, please log in to https://www.google.com/calendar/ and change your notification settings for this calendar.




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Wednesday, January 29, 2014

[vallalargroups:5317] சத்திய பெரு விண்ணப்பம் - Overview

வள்ளற் பெருமான் , நாம் எளிதாக இறைவனிடம் எதனைக் கேட்க வேண்டும் மற்றும் இறைவனுடைய பெரும்கருணைத் திறத்தை / பேராற்றலை எவ்வாறு கருத்தால் கருத வேண்டும் சத்திய பெரு விண்ணப்பத்தில் கொடுத்துள்ளார்கள்.



திருவருள் பெருங்கருணை ( திறம் / தன்மை ):

       ஆறறிவு உள்ள இம்மனிதப் பிறப்புடம்பில் என்னை விடுத்துச் சிறிது அறிவு விளங்கச் செய்த தேவரீரது திருவருள் பெருங்கருணைத் (திறத்தை) எங்ஙனம் அறிவேன்! எங்ஙனம் கருதுவேன்! என்னென்று சொல்வேன்!

         என்னுருவைச் சிதைப்பதற்கு எதிரிட்ட துரிசுகள் எல்லாவற்றையும் நிக்கிரகம் செய்து அருளுனீர். இங்ஙனம் புரிந்த தேவரீரது திருவருள் பெருங்கருணைத் (திறத்தை) எங்ஙகனம் அறிவேன்! எங்ஙனம் கருதுவேன்! என்னென்று சொல்வேன்!

       சோணிதக் காற்றின் அடிபடல்,யோனி நெருக்குண்ணல் முதலிய அவத்தைகளால் அபாயம் நேரிட ஒட்டாமல் காத்து இவ்வுலகினிடத்தே தோற்றுவித்து அருளினீர்.இங்ஙனம் புரிந்த தேவரீரது திருவருள் பெருங்கருணைத் (திறத்தை) எங்ஙனம் அறிவேன்! எங்ஙனம் கருதுவேன்! என்னென்று துதிப்பேன்!

        தந்தை என்பவனது சுக்கிலப் பையின், எவ்வகைத் தடைகளும் வாராதபடி, பகுதிப் பேரணு உருவில் கிடந்த எனது அகத்தினும்,புறத்தினும்,அருவாகியும்,உருவாகியும் சலித்தல் முதலிய இன்றி அன்பொடும்,அருளொடும் பாதுகாத்திருந்த தேவரீரது திருவருள் பெருங்கருணையை (தன்மையை) என்னென்று கருதுவேன்! என்னென்று துதிப்பேன்!

       தாய் என்பவளது சோணிதப் பையின்கண், எவ்வகைத் தடைகளும் வாராதபடி, பூதப் பேரணு உருவிலும் கிடந்த எனது அகத்தினும்,புறத்தினும், அருவாகியும், உருவாகியும் சலித்தல் முதலிய இன்றி பெருந்தயவினோடு பாதுகாத்திருந்த தேவரீரது திருவருள் பெருங்கருணையை(தன்மையை)  என்னென்று கருதுவேன்! எங்ஙனம் துதிப்பேன்!

       எனது அகத்தினும்,புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளகத்திருந்து, உயிரில் கலந்து பெருந்தயவால் திருநடம் செய்தருளுகின்றீர். இங்ஙனம் செய்து அருளுகின்ற, தேவரீரது திருவருள் பெருங்கருணைத் (திறத்தை) என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்!

திருவருள் பேராற்றல்:

        யாவராலும்  பிரித்தற்கு ஒருவாற்றானும் கூடாத பாசம் என்னும் மகாந்த காரத்தினின்றும், ஓர் கணப்பொழுதினுள் அதிக்காரணக் கிரியையால் அதிக்காரணப்பகுதி உருவில் பிரித்தெடுத்தருளிய தேவரீரது திருவருள் பேராற்றலை என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்!

  .    காரணக் கிரியையால் காரணப் பகுதி உருவினும்,

அதிசூக்குமக் கிரியையால் அதிசூக்குமக் பகுதி உருவினும்,

சூக்குமக் கிரியையால் சூக்குமக் பகுதி உருவினும்,

பரத்துவ சத்திசத்தரால் பூத உருவினும்,

அபரத்துவ சத்திசத்தரால் பவுதிக வடிவிலும்,

ஓர் கணப்போதினுள் என்னைச் செலுத்தாமல் செலுத்திய தேவரீரது திருவருள் பேராற்றலை என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்!

        பற்பல புறஉறுப்புக்களும், புறப்புற உறுப்புக்களும் எனக்கு உபகரிக்கும் பொருட்டு இப்பொதிக வடிவின்கண்ஒருங்கே உண்ணின்று தோன்ற, உண்ணின்று தோற்றாது தோற்றுவித்த தேவரீரது , திருவருள் பேராற்றலை எங்ஙனம் அறிந்து, எவ்வாறு கருதி , என்னென்று துதிப்பேன்!

பேரருள் பெருங்கருணைத் திறம்:

        உறுப்பில் குறைவுப்படாத உயர் பிறப்பாகிய, இம்மனிதப் பிறப்பில் என்னைப் பிறப்பித்து அருளிய,தேவரீரது பேரருள் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்!

      எவ்வகை தடைகளாலும் தடைப்படாமல், எனது அகத்தும்,புறத்தும் காத்திருந்து வளர்த்தருளிய, தேவரீரது பேரருள் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்!

        நற்செய்கைகளில் என்னைச் செலுத்திய,தேவரீரது பேரருள் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி, என்னென்று துதிப்பேன்!




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

[vallalargroups:5316] "சுத்த சன்மார்க்க" குறிப்புகள்


  1. சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம் 
  2. சமரச சுத்த சன்மார்க்க சத்திய பெருவிண்ணப்பம் 
  3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம் 
  4. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பம் 
  5. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் - சுத்த தேகம் 
  6. ஷடாந்த  சமரச சுத்த சன்மார்க்க சங்கம் 
  7. சுத்த சன்மார்க்கதிற்கு  உரியவர்கள் 
  8. சுத்த சன்மார்க்க ஆகாரம் 
  9. சுத்த சன்மார்க்க ஆகார விலக்கு
  10. சமய மத சன்மார்க்கமும் , சுத்த சன்மார்க்கமும்
  11. சுத்த சன்மார்க்க சாதனம் 
  12. சுத்த சன்மார்க்க மரபு 
  13. சுத்த சன்மார்க்க லட்சியம்
  14. சுத்த சன்மார்க்கதிற் இன்னிசை 
  15. சுத்த சன்மார்க்க பிராத்தனை
  16. சுத்த சன்மார்க்க உபதேசம் 
  17. சுத்த சன்மார்க்க தியானம் 
  18. சுத்த சன்மார்க்க  கொடி

Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Tuesday, January 28, 2014

[vallalargroups:5313] Bangalore Vallalar Certification Course Session 2 @ Sun 2 Feb 2014 10am - 5pm (Vallalar Calendar)


Topic : Sutha Sanmarkka Marabu.

Speaker : Erode.Sanmarkka Sanbar.Kathirvelu Ayya

Vallalar Certification Program Details , Bangalore

   ( PRAYER & SATH-VICHARAM & MEDITATION)

INVITING VALLALAR

VARUGAI PATHIGAM

10.00 TO 10.15 am

INVITING ANDAVAR

THIRUVADI PUGALCHI

10.15 TO 10.45 am

 

SUTHA SANMARKKA MEDITATION

10.45 TO 11.00 am

 

"Sutha Sanmarkka Marabu" Presentation

11.00 TO 11.50 am

 

KARISALAI BREAK

11.50 TO 12.00 pm

 

Sutha Sanmarkka Marabu Speech

12.00 TO 1.00 pm

DEIVA BAVANAI

GNANA SARIYAI ( 28 SONGS)

1.00 TO 1.30 pm

 

PRAYER FOR ALL / DONOR

1.30 TO 1.40 pm

 

LUNCH BREAK

1.40 TO 2.15 pm

 

Q&A

2.15 TO 4.00 pm

Contact

96630-75461 - vasudeva
74112-75928 - Anatha Bharathi
90356-22971 - Rudramurthy
E-Mail :vallalargroups@gmail.com

 




Bangalore Vallalar Certification Course Session2

Bangalore - Monthly SATH-VICHARAM / காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ராமலிங்க சுவாமிகளின் - "அருட்பா" விளக்கவுரை பெங்களூரில்,மாதம்தோறும், முதல் ஞாயிறு ,5th கிராஸ் , லட்சுமி நாராயண புறத்தில் உள்ள ,வடலூர் ஸ்ரீ ஜோதி இராமலிங்க சுவாமிகள் சமரச சன்மார்க்க சங்கத்தில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்று வருகின்றது.

Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, 5th Cross, Lakshmi NarayanaPuram, Bangalore - 560021.

vallalargroups@gmail.com

When
Sun 2 Feb 2014 10am – 5pm India Standard Time
Where
Vadalur Sri Jothi Ramalinga Swamigal Sanamarkka Sangam, Vadalur Sri Jothi Ramalinga Swamigal Samarasa Sanamarkka Sangam 5th Cross,LaxmiNaraya Puram 560021, Bangalore, Karnataka (map)
Calendar
Vallalar Calendar
Who
(Guest list is too large to display)

Going?   Yes - Maybe - No    more options »

Invitation from Google Calendar

You are receiving this email at the account vallalargroups@gmail.com because you are subscribed for reminders on calendar Vallalar Calendar.

To stop receiving these notifications, please log in to https://www.google.com/calendar/ and change your notification settings for this calendar.




--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Re: [vallalargroups:5314] ஞான சரியையின் சிறப்புகள் / முக்கிய குறிப்புகள்

Thanks a lot for information...
 

* பசித்திரு! தனித்திரு! விழித்திரு!

* அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!

* தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!

* கொல்லாவிரதம் குவலயமெல்லாம் ஓங்குக!

* ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல்!

* ஏல்லாஉயிர்கலும் இன்புற்று வாழ்க!

* வாழ்க வளமுடன்!

* நல்லதே நடக்கும்..



2013-12-26 Vallalar Groups <vallalargroups@gmail.com>

 

ஞான சரியையின்   சிறப்புகள் / முக்கிய குறிப்புகள்:

 

 

1

வள்ளலார் ,  "ஞான சரியை" பதிகத்தில் , 28 பாடல்களை கொடுத்துள்ளார். 8,2 விளக்கத்தை இதனில் வைத்துள்ளார்கள். "நினைந்து" என தொடங்கி "நினைந்தே"  என முடிகிறது.ஒரு பாடலின் முடிவு, அடுத்த பாடலின் தொடக்கமாக அமைத்துள்ளார்கள்.

2

தனது அறையில் வைத்து வழிப்பட்ட தீபத்தை வெளியில் வைத்து ,இதனை "தடைபடாது ஆராதியுங்கள்"  எனவும், இந்த தீப முன்னிலையில்,  28 பாடல்களையும்  தெய்வம் விளங்குவதாக பாவனை செய்து வழிபட வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தி உள்ளார்கள்.

3

"28"  பாடல்களிலும், உலக மக்களை மரணமில்லா பெருவாழ்வு வாழ அழைகிறார்கள். எவ்வாறெனில், 28 பாடல்களிலும் "உலகீர்"("மேதினியீர்"/ நீவிர்) என்ற வார்த்தையை பயன் படுத்தி உள்ளார்கள்.

4

ஞான சரியை, முதற் பகுதியில், நிலையற்றதையும், மரண பயத்தையும் அறிவுறுத்துகிறார்கள்.

5

இரண்டாம் பகுதியில், கடவுள் வருதருணம்  "இதுவே" என குறிப்பு கொடுக்கிறார். அந்த கடவுளின் தன்மைகளை / பெருமைகளை எவை என்று நமக்கு கூறுகிறார்கள்.

6

 இங்கு உள்ள அனைவரும்(கற்றவரும்/கல்லாரும்)   மரணத்தின் பிடியில் இருந்து சற்றும் தப்பிக்க முடியாது என்றும், எவ்வுலகில் எவரும் இல்லை எனவும்   "எச்சரிக்கை"  கொடுகின்றார்கள்.     

7

 ஆனால், சுத்த சன்மார்க்க சங்கத்தவர்கள் மட்டும் "மரணத்தை" எட்டி உதைக்க முடியும் என சத்தியம் செய்கிறார்கள்.

8

 வள்ளலார் தன்னை "அருட்சித்தர்" என அடையாளம் காட்டுகின்றார்.

 

எனவே, வள்ளலார் கூறிய 'மரணமில்லா பெருவாழ்வு" ரகசியங்களை / குறிப்புகளை அறிந்து கொள்ள, வள்ளலார் அறிவுரையின் படி, தீப முன்னிலையில்,  28 பாடல்களையும்  தெய்வம் விளங்குவதாக பாவனை செய்து வழிபடுவோம். 





1

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந்து ஊற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்
உலகியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

2

புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்
உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
உடைமைகளும்
உலகியலும் உற்றதுணை அன்றே
மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் தேனே
மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே

3

பணிந்துபணிந் தணிந்தணிந்து பாடுமினோ உலகீர்
பரம்பரமே சிதம்பரமே பராபரமே வரமே
துணிந்துவந்த வேதாந்த சுத்தஅனு பவமே
துரியமுடி அனுபவமே சுத்தசித்தாந் தமதாய்த்
தணிந்தநிலைப் பெருஞ்சுகமே சமரசசன் மார்க்க
சத்தியமே இயற்கையுண்மைத் தனிப்பதியே என்று
கணிந்துளத்தே கனிந்துநினைந் துரைத்திடில்அப் பொழுதே
காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் ஆமே

4

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே
கற்றதெலாம் பொய்யேநீர் களித்ததெலாம் வீணே
உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே
விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க
மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே
எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்
இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே

5

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்
எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்
அன்புடையீர் வம்மின் இங்கே சமரசசன் மார்க்கம்
அடைந்திடுமின் அகவடிவிங் கனகவடி வாகிப்
பொன்புடைநன் கொளிர்ஒளியே புத்தமுதே ஞான
பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே
வன்புடையார் பெறற்கரிதாம் மணியேசிற் சபையின்
மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே

6

தீமைஎலாம் நன்மைஎன்றே திருஉளங்கொண் டருளிச்
சிறியேனுக் கருளமுதத் தெளிவளித்த திறத்தை
ஆமயந்தீர்த் தியற்கைஇன்ப அனுபவமே மயமாய்
அம்பலத்தே விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோ தியைஓர்
ஓமயவான் வடிவுடையார் உள்ளகத்தே நிறைந்த
ஒருபொருளைப் பெருங்கருணை உடையபெரும் பதியை
நாமருவி இறவாத நலம்பெறலாம்
உலகீர்
நல்லஒரு தருணம்இது வல்லைவம்மின் நீரே

7

நீர்பிறரோ யான்உமக்கு நேயஉற வலனோ
நெடுமொழியே உரைப்பன் அன்றிக் கொடுமொழிசொல் வேனோ
சார்புறவே அருளமுதம் தந்தெனைமேல் ஏற்றித்
தனித்தபெருஞ் சுகம்அளித்த தனித்தபெரும் பதிதான்
சீர்பெறவே திருப்பொதுவில் திருமேனி தரித்துச்
சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
ஓர்புறவே
இதுநல்ல தருணம்இங்கே வம்மின்
உலகியலீர் உன்னியவா றுற்றிடுவீர் விரைந்தே

8

விரைந்துவிரைந் தடைந்திடுமின் மேதினியீர் இங்கே
மெய்மைஉரைக் கின்றேன்நீர் வேறுநினை யாதீர்
திரைந்துதிரைந் துளுத்தவரும் இளமைஅடைந் திடவும்
செத்தவர்கள் எழுந்திடவும் சித்தாடல் புரிய
வரைந்துவரைந் தெல்லாஞ்செய்
வல்லசித்தன் தானே
வருகின்ற தருணம் இது
வரம்பெறலாம் நீவீர்
கரைந்துகரைந் துளம்உருகிக் கண்களில்நீர் பெருகிக்
கருணைநடக் கடவுளைஉட் கருதுமினோ களித்தே

9

களித்துலகில் அளவிகந்த காலம்உல கெல்லாம்
களிப்படைய
அருட்ஜோதிக் கடவுள் வரு தருணம்
தெளித்திடும்எத் தருணம்அதோ என்னாதீர் இதுவே
செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம்
உலகீர்
ஒளித்துரைக்கின்றேன் அலன்நான் வாய்ப்பறைஆர்க் கின்றேன்
ஒருசிறிதும் அச்சமுறேன் உள்ளபடி உணர்ந்தேன்
அளித்திடுசிற் றம்பலத்தென் அப்பன்அருள் பெறவே
ஆசைஉண்டேல் வம்மின்இங்கே நேசமுடையீரே

10

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்ஜோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்
ஏசறநீத் தெனை ஆட்கொண் டெண்ணியவா றளித்தான்
எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்
தேசுடைய பொதுவில்அருள் திருநடனம் புரியத்
திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே
மோசஉரை எனநினைத்து மயங்காதீர்
உலகீர்
முக்காலத் தினும்அழியா மூர்த்தம் அடைந் திடவே

11

அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்
அருட்ஜோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்
கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கே
காணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்
இடைந்தொருசார் அலையாதீர் சுகம்எனைப்போல் பெறுவீர்
யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்
உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியா
ஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே

12

திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்
சிவநெறிஎன்
றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து
வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்
பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்
கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே

13

உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்
உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்
எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்
என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்
தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்
சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்
கண்மைதரும்
ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்
கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே

14

தானேதான் ஆகிஎலாம் தானாகி அலனாய்த்
தனிப்பதியாய் விளங்கிடும்என் தந்தையைஎன் தாயை
வானேஅவ் வான்கருவே வான்கருவின் முதலே
வள்ளால்என் றன்பரெலாம் உள்ளாநின் றவனைத்
தேனேசெம் பாகேஎன் றினித்திடுந்தெள் ளமுதைச்
சிற்சபையில் பெருவாழ்வைச் சிந்தைசெய்மின்
உலகீர்
ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும்
உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே

15

சத்தியவே தாந்தமெலாம் சித்தாந்தம் எல்லாம்
தனித்தனிமேல் உணர்ந்துணர்ந்தும் தனையுணர்தற் கரிதாய்
நித்தியசிற் சபைநடுவே நிறைந்துநடம் புரியும்
நித்தபரி பூரணனைச் சித்தசிகா மணியை
அத்தகையோர் பெரும்பதியை அருமருந்தை அடியேன்
ஆவியைஎன் ஆவியிலே அமர்ந்ததயா நிதியைச்
சித்தியெலாம் எனக்களித்த சிவகதியை
உலகீர்
சிந்தைசெய்து வாழ்த்துமினோ நிந்தைஎலாம் தவிர்ந்தே

16

நிந்தையிலார் நெஞ்சகத்தே நிறைந்தபெருந் தகையை
நிலையனைத்தும் காட்டிஅருள் நிலைஅளித்த குருவை
எந்தையைஎன் தனித்தாயை என்னிருகண் மணியை
என்உயிரை என்உணர்வை என்அறிவுள் அறிவை
சிந்தையிலே தனித்தினிக்கும் தெள்ளமுதை அனைத்தும்
செய்யவல்ல தனித்தலைமைச் சிவபதியை
உலகீர்
முந்தைமல இருட்டொழிய முன்னுமினோ கரண
முடுக்கொழித்துக்
கடைமரண நடுக்கொழித்து முயன்றே

17

முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்
முடுகிஅழிந் திடவும்ஒரு மோசமும்இல் லாதே
இயன்றஒரு சன்மார்க்கம் எங்குநிலை பெறவும்
எம்மிறைவன் எழுந்தருளல் இதுதருணம் கண்டீர்
துயின்றுணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்
தோன்றஎழு கின்றதிது தொடங்கிநிகழ்ந் திடும்நீர்
பயின்றறிய விரைந்துவம்மின் படியாத படிப்பைப்
படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே

18

சுகமறியீர் துன்பம்ஒன்றே துணிந்தறிந்தீர் உலகீர்
சூதறிந்தீர் வாதறிந்தீர் தூய்மையறிந் திலிரே
இகம்அறியீர் பரம்அறியீர் என்னேநுங் கருத்தீது
என்புரிவீர்
மரணம்வரில் எங்குறுவீர் அந்தோ
அகமறியீர் அனகமறிந் தழியாத ஞான
அமுதவடி வம்பெறலாம் அடைந்திடுமின் ஈண்டே
முகமறியார் போலிருந்தீர் என்னைஅறி யீரோ
முத்தரெலாம் போற்றும்அருட் சித்தர்மகன் நானே

19

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்தன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்கள்எலாம் பெறவே
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன்
நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே

20

குறித்துரைக்கின் றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற
உலகீர்
வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்
பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்
செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்
சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே

21

சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரசசன் மார்க்கத்
திருநெறியே பெருநெறியாம் சித்திஎலாம் பெறலாம்
ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்
உலகம்எலாம் கண்டிடும்ஓர் உளவைஅறிந் திலிரே
வார்ந்தகடல் உலகறிய
மரணம்உண்டே அந்தோ
மரணம்என்றால் சடம்எனும்ஓர் திரணமும்சம் மதியா
சார்ந்திடும்அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்
தனித்திடுசிற் சபைநடத்தைத் தரிசனஞ்செய் வீரே

22

செய்தாலும் தீமைஎலாம் பொறுத்தருள்வான் பொதுவில்
திருநடஞ்செய் பெருங்கருணைத் திறத்தான்அங் கவனை
மெய்தாவ நினைத்திடுக சமரசசன் மார்க்கம்
மேவுகஎன் றுரைக்கின்றேன்
மேதினியீர் எனைத்தான்
வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்கொண் டிடுவேன்
மனங்கோணேன் மானம்எலாம் போனவழி விடுத்தேன்
பொய்தான்ஓர் சிறிதெனினும் புகலேன்சத் தியமே
புகல்கின்றேன் நீவிர்எலாம் புனிதமுறும் பொருட்டே

23

பொருட்டலநும் போகம்எலாம் பொய்யாம்இங் கிதுநான்
புகலுவதென் நாள்தொறுநும் புந்தியிற்கண் டதுவே
மருட்டுலகீர் இருட்டுலகில் மடிவதழ கலவே
மரணமிலாப் பெருவாழ்வில் வாழவம்மின் இங்கே
பொருட்டிறஞ்சேர் சுத்தசிவ சன்மார்க்க நிலையில்
பொருந்துமின்சிற் சபைஅமுதம் அருந்துமின்அன் புடனே
அருட்டிறஞ்சேர்ந் தெண்ணியவா றாடுமினோ நும்மை
அடுப்பவரே அன்றிநின்று தடுப்பவர்மற் றிலையே

24

மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்
மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ
சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே
சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள் அல்லால் அதனை
எற்றிநின்று தடுக்கவல்லார்
எவ்வுலகில் எவரும்
இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண்
டுலகீர்
பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்
பலப்பற்றே பற்றுமினோ என்றும்இற வீரே

25

இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின்
இங்கே
பிறந்தபிறப் பிதில்தானே நித்தியமெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே

26

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர்
உலகீர்
கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்
கரணம்எலாம் கலங்கவரும்
மரணமும்சம் மதமோ
சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமது
தன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்
இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடுசேர்ந் திடுமின்
என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே

27

சன்மார்க்கப் பெருங்குணத்தார் தம்பதியை என்னைத்
தாங்குகின்ற பெரும்பதியைத் தனித்தசபா பதியை
நன்மார்க்கத் தெனைநடத்திச் சன்மார்க்க சங்கம்
நடுவிருக்க அருளமுதம் நல்கியநா யகனைப்
புன்மார்க்கர்க் கறிவரிதாம் புண்ணியனை ஞான
பூரணமெய்ப் பொருளாகிப் பொருந்தியமா மருந்தை
அன்மார்க்கம் தவிர்த்தருளி அம்பலத்தே நடஞ்செய்
அருட்பெருஞ்ஜோ தியை
உலகீர் தெருட்கொளச்சார் வீரே

28

சார்உலக வாதனையைத் தவிர்த்தவர்உள் ளகத்தே
சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை
நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி
ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை
ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
உள்ளம்எலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே

 






Anbudan,
Vallalar Groups 
web    :
http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)