வள்ளலாரின் பேருபதேசம் – "நமது சிறுமையை விசாரித்தல்" :7
181. எட்டிஎனத் தழைத்தேன்.
182. புங்கெனவும் புளிஎனவும் மங்கி உதிர்கின்றேன்.
183. பரசும் வகை தெரிந்து கொளேன்.
184. தெரிந்தாரைப் பணியேன்.
185. பசைஅறியாக் கருங்கல் மனப்பாவிகளிற் சிறந்தேன்.
186. விரசு.நிலத்து ஏன்பிறந்தேன்? நின்கருத்தை அறியேன் வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே!
187. பொருளறியேன்.
188. பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே பொங்கி வழிந்துடைகின்றேன்.
189. பொய்யகத்தேன்.
190. புலையேன் .
191. மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்.
192. வையுண்டும் உழவுதவா மாடெனவே தடித்தேன்.
193. வெருளறியாக் கொடுமனத்தேன்.
194. விழற்கிறைத்துக் களிப்பேன்.
195. வீணர்களில் தலைநின்றேன்.
196. விலக்கனைத்தும் புரிவேன்.
197. தெருளறியேன் உலகிடை நான் ஏன் பிறந்தேன்? நினது திருவுளத்தை அறிந்திலேன் தெய்வ நடந்தவனே!
198. தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத் தருக்குகின்றேன்.
199. உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்.
200. பவம்புரிவேன்.
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
+Grab this
Post a Comment