My Dear. Bala yella ueirgalum inburttu valzga pls continue i realy very good msg thanks for all arutperum jothi arutperum jothi thaniperumgarunai arutperum jothi SAMARASA SUTHA SATHYA SANMARGA SANGAM A.ELAVARASAN NO.34,ANNA STREET, THIRUVALLUVAR NAGAR, ZAMIN PALLAVARAM,CHENNAI-600 043 CELL NO.9940656549
--- On Tue, 14/7/09, balamurugan d <to.dbala@gmail.com> wrote:
From: balamurugan d <to.dbala@gmail.com> Subject: [vallalargroups:1799] வாழ்க்கைக்கான மந்திரம்.. To: vallalargroups@googlegroups.com Date: Tuesday, 14 July, 2009, 4:40 PM
வாழ்வில் எத்தனையோ துன்பங்கள், இன்பங்கள், பிரச்சினைகள், பரிதவிப்புகள்...எல்லாவற்றையும் நாம் ஒருபோல் பார்க்க வேண்டும்... துன்பம் வரும் நேரத்தில் சிரிங்க என்றெல்லாம் கூறுகிறார்கள். அது சரி கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. துன்பம் வரும்போது அழுகை வராமல் இருந்தால் சரிதான் என்பதல்லவா நமது நிலைமை.அது எப்படி துன்பம் வரும்போது அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்கவோ, இன்பம் வரும்போது வானத்தை தொட்டு வருவது போல் பறப்பதோ இல்லாமல் நம்மால் இருக்க முடியும்.அதற்கு ஒரு மந்திரம் உண்டு. 3 வார்த்தை மந்திரம் தான் அது. இதனை என் வாழ்க்கையில் நான் பல முறை கடைபிடித்துள்ளேன். பல சமயங்களில் இடி விழுந்தது போன்ற பிரச்சினைகளில் இந்த மூன்று வார்த்தையை உச்சரித்த வண்ணம் இருப்பேன். அதுவே எனக்கு பலம் என்றும் எண்ணியுள்ளேன்.அதை உங்களுக்கும் கூறுகிறேன். முயற்சித்துப் பாருங்கள். இதற்கு ஒரு கதை உண்டு. (பல ஆண்டுகளுக்கு முன்பு இன்று ஒரு தகவலில் கேட்டது)ஒரு மன்னர் தன் நாட்டிற்கு வந்த துறவியை நன்கு உபசரித்து அவருக்குத் தேவையான பணிவிடைகளை எல்லாம் கொடுத்து அவரை மனம் குளிர வைத்தார்.துறவி கிளம்பும்போது... மன்னரின் கையில் ஒரு சீட்டைக் கொடுத்து, இதில் ஒரு மந்திரம் எழுதியுள்ளேன். இதனை உனக்கு கடுமையான துன்பம் வரும் நேரத்திலோ அல்லது இன்பமான நேரத்திலோ மட்டும் எடுத்துப் பார். மற்ற நேரங்களில் எடுத்துப் பார்த்துவிட்டால் இந்த மந்திரம் பலனளிக்காது என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.பல காலங்கள் கழிந்தன. அப்போது,ஆ ஈன, மழை பொழிய, இல்லம் வீழஅகத்தடியாள் மெய் நோக, அடிமை சாகமா ஈரம் போகுதென்று விதை கொண்டோடவழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்தள்ளவொண்ணா விருந்து வரச், சர்ப்பம் தீண்டக்கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்டுக்குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே! இந்த பாடலின் பொருள்... ''பசுவானது கன்று போட, பெரும் மழை பொழிய, வீடு இடிந்து விழ, வீட்டுக்காரி உடல் நலமின்றி வருந்த, வேலைக்காரன் இறந்து போக, நிலத்தில் ஈரம் காய்ந்து விடுமே என்று விதை நெல்லைச் சுமந்தொருவன் விரைவாகச் செல்லும் வேளை; கடன்காரன் வழி மறிக்க, சாவு சேதி கொண்டு ஒருவன் எதிரே வர, காலில் பாம்பு கடிக்க, தவிர்க்க முடியாத முக்கியமான விருந்தினர் வந்து சேர, வரி செலுத்தக்கோரி மணியக்காரர் நிர்ப்பந்திக்க, என்ன செய்வது? எப்படி சமாளிப்பது? என்று தவித்துக் கொண்டிருந்த வேலையில் - புரோகிதர், தனக்குச் சேர வேண்டிய தட்சணையைக் கேட்டாராம்!'' இப்படியான ஒரு வேதனைத் தான் அந்த மன்னனுக்கும் ஏற்பட்டது. அப்போது, துறவி கொடுத்த சீட்டு அவரது நினைவுக்கு வந்தது. அதனை எடுத்துப் படிப்பது என்று முடிவு செய்தான் மன்னன்.அந்த சீட்டினை எடுத்து படித்த போது, அதில் "இதுவும் கடந்து போகும்" என்று 3 வார்த்தைகள் இருந்தன.... எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி... அது ஒரு சில மணி நேரங்களிலோ அல்லது நாட்களிலோ கடந்து போய்விடும். எனவே எந்த கஷ்டமாக இருந்தாலும் அது நம்முடனே இருந்துவிடப்போவதில்லை. ஆகவே மனதில் கவலை கொள்ளாமல் பிரச்சினையை எதிர்நோக்கும் அளவிற்கு மனதை பக்குவப்படுத்தி வைத்துக் கொள்வதுதான் சிறந்தது.வாழ்த்துகள்.
--~--~---------~--~----~------------~-------~--~----~ To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/ To change the way you get mail from this group, visit: http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க -~----------~----~----~----~------~----~------~--~---
|
No comments:
+Grab this
Post a Comment