Thursday, May 29, 2008

Vallalar Way Worship

ÅûÇÄ¡÷ ¸¡ðÎõ ¸¼×û ÅÆ¢À¡Î:(Ref from Prof.Namasivayam)
 
    1. அறிவுடையவர்கள்  தங்கள் அறிவு காட்டும்  உருவில் கடவுளை  வணங்குகிறார்கள் .
    2. கடவுளை சிந்திக்கும் மக்கள் தங்கள் சிந்தனைக்கு ஏற்ற வகையில் அவரை வணங்குகிறார்கள் .
    3. கடவுளை போற்றுபவர்கள் தங்கள் எண்ணப்படி அவரை பாடி துதிகிறார்கள்.
 
இப்படி பலவகையால்  தன்னை ( அறிவால் , கருத்தால் , துதியால் ) 
வணங்குகின்றவர்களுக்கு உரிய வகையில் அருள் செய்கின்றவர் நமது அருட்பெருஞ்சோதி தனிபெருங்கடவுள்
 
இப்படி கடவுளை அறிதல் ,சிந்தித்தல்  , போற்றி துதித்தல் ஆகியவை கடவுள் வழிபாடாகும்.
 
சுத்த சன்மார்க்க சத்திய  சன்மார்க்க சிறு விண்ணப்பம்:
  • எங்கும் ஒரு குறையும் இல்லாமல் விளங்குகின்ற ஓர் உண்மை கடவுள் உள்ளார் .
  • அக் கடவுளை உண்மையான அன்புடன் நினைவில் வைத்து வணங்க வேண்டும் .
  • அப்போது அக்கடவுளின் திருவருளை நாம் உணர முடியும்.(விளங்கும்)
  • அததிருவருள்  விளங்குவதால் நமது பிறவி துன்பங்களான மரணம் , நோய்கள் , முதுமை, பயம் முதலியன நீங்கும் .
  • அதனால் எல்லா காலங்களிலும் , எல்லா இடங்களிலும், எந்த வகையிலும் , எந்த அளவிலும் தடை வராத பேரின்ப வாழ்வை நாம்  அடையலாம்
  • இறைவனேதங்கள்  திருவருளால்  இத்தகைய உண்மைகளை நாங்கள் உணரும் படி செய்து அருளுவாய்.

 

கடவுள் வழிபாடு என்றால் என்ன?
  1. கடவுள் இயல்பின் உண்மை தன்மையை அறிதல்.
  2. கடவுள் இயல்பகிய பெரும் கருணை  தன்மையை எண்ணுதல்.
  3. கடவுள்  பேருளைப் போற்றித் துதித்தல்.
அறிதல்     : கடவுளை ஆன்ம அறிவால் உணர்வது .
கருதுதல் : கடவுளின் கருணையை சித்தம், மனம் முதலிய கருவிகளின் துணையினால் எண்ணி பார்த்தல்.
துதித்தல் : கடவுளின் பெரும் கருணையை நாவினால் போற்றி துதித்தல் .
 
 
எண்ணுதல்:
  1. மனம் முதலான கருவிகளால் இறைவனின் சிறப்புகளை எண்ணி பார்த்தல்.
  2. இதற்கு மனத் தூய்மை  வேண்டும் .
  3. அன்பு முதலிய அரிய குணங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  4. காமம், வெகுளி போன்ற தீய குணங்கள்  கூடா.
  5. மனம்  கருங்கல் போன்ற உறுதி உடையதாய் இல்லாமல்  இலகிதாய் ( நெகிழ்ச்சி உடையதாய் ) இருக்க வேண்டும்.
  6. கடவுளின் அளவிட முடியாத கருணையை எண்ணும்போது உள்ள  நெகிழ்ச்சி ற்படுகிறது.

"கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே
கருதுகின்றேன் வேறொன்றும் கருதுகிலேன் இதுதான்
சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது
திருவுளமே அறிந்ததுநான் செப்புதல்என் புவிமேல்
விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ
விரைந்துவந்தே அருட்சோதி புரிந்தருளும் தருணம்
தொட்டதுநான் துணைந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே
சொல்வதலால் என்அறிவால் சொல்லவல்லேன் அன்றே"

துதித்தல்:

  1. இறைவனை துதித்து நாவினால் போற்ற வேண்டும்.
  2. உண்மை பேசுதல் , இனிய சொற்களை பேசுதல் போன்ற நல்ல பண்புகளை நம் நாவுடையதாய்  இருத்தல் வேண்டும்.
  3. பொய் பேசுதல் , பயனிலாதவற்றை  பேசுதல் போன்ற தீமைகளை உடைய நாவாக  இருத்தல் கூடாது  .

"பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான்
பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே
துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை
துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த
அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன்
அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே
உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய்
உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே"

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)