Thursday, March 13, 2014

[vallalargroups:5351] "நமது சிறுமையை விசாரித்தல்" : Part 8

வள்ளலாரின் பேருபதேசம் – "நமது சிறுமையை விசாரித்தல்" :8

201.  கமரினிடைப் பால் கவிழ்க்கும் கடையேன்.

202.  பயனறியா வஞ்ச மனப்பாறை சுமந்து உழல்வேன்.

203.  அவம்புரிவேன். அறிவறியேன். அன்பறியேன்.

204.   அன்பால் ஐயா நின் அடியடைந்தார்க் அணுத்துணையும் உதவேன்.

205.  நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன்? நினது நல்ல திருவுளம் அறியேன்
ஞான நடத்திறையே!

206.   இறைஅளவும் அறிவொழுக்கத்து இச்சையிலேன்.

207.   நரகில் இருந்து உழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்.

208.  பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை புரிகின்றேன்

209.  எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்.

210.   நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த.நெடுஞ்சால நெஞ்சகத்தேன்

211.  நீலவிடம் போல்வேன்.

212.  கறையளவா உலகிடைநான் ஏன் பிறந்தேன்?
       நினது கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே!

213.  காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும், செல்வக் களிப்பினிலும்,
       சிறந்து மிகக் களித்து நிறைகின்றேன்.

214.  நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன்.

215.  நெடுந்தூரம் ஆழ்ந்து உதவாப் படுங் கிணறு போல்வேன்.

216.  ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன்.

217.  அச்சமிலேன்.

218.  நாணமிலேன் .

219.  அடக்கம்ஒன்றும் இல்லேன்.

220.  கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன்?
      நினது குறிப்பறியேன் மன்றில்நடங் குலவு குல மணியே!

 




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



--




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி


No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)