Tuesday, October 4, 2011

[vallalargroups:4349] திருஅருட்பிரகாச வள்ளலார் வருவிக்க உற்ற நாள் .

திருஅருட்பிரகாச வள்ளலார்
வருவிக்க உற்ற நாள் .


நாள் ;----5--10--2011


அருட்பெரும் ஜோதி
அருட்பெரும் ஜோதி
தனிபபெருங் கருணை
அருட்பெரும் ஜோதி !

திரு அருட்பிரகாச
வள்ளலார் வருவிக்க உற்ற
நாள் .

ஞான பூமியான
இந்தியாவின் தமிழ்
மாநிலத்தில் [தமிழ்
நாட்டில்] இறைவனால்
வருவிக்க உற்றவர்
இராமலிங்கம் என்னும் திரு
அருட்பிரகாச வள்ளலார்
என்பவராகும் .

தமிழ் நாட்டில் இறைவன்,
சிதம்பர சகசியம் என்னும்
திரு உருவைத் தாங்கி திரு
நடனமிடும் தில்லை
சிதம்பரத்திற்கு வடக்கே
மருதூர் என்னும்
சிற்றூரில்,இராமைய்யா
என்பவருக்கும் சின்னம்மை
என்பவருக்கும் ஐந்தாவது
குழந்தையாக 5--10--1823 ,சுபானு
,வருடம் புரட்டாசி மாதம்
இருபத்தி ஒன்றாம் தேதி
ஞாயிற்றுக் கிழமை அருள்
குழந்தையாக அவதரித்தார்
.இந்த நாளை இன்று உலக
ஒருமைப் பாட்டுத்
தினமாகக் கொண்டாடப்
படுகிறது இவை உலகம் அறிந்த
உண்மையாகும் .

வள்ளலார் வளரும்
காலத்தே தந்தையார்
காலமாகி விட்டார் .மூத்த
சகோதரர் சபாபதி குடும்ப
பொறுப்பை ஏற்க
வேண்டியதாயிற்று
.குடும்பத் தேவைக்காக
ஊழியம் செய்ய
முன்னிட்டு,தாயாரையும்
உடன் பிறந்தோரையும்
அழைத்துக் கொண்டு சென்னை
வந்து ஆசிரியர் பணி செய்து
குடும்பத்தை பாதுகாத்து
வந்தார் .

கல்வி ;--

தன் தம்பி
இராமலிங்கத்தை,கல்வி கற்க
பள்ளியில் சேர்த்தார்
.பள்ளியில் சேர்ந்த
முதல்நாளில் ஆசிரியர்
ஓதாமல் ஒருநாளும் இருக்க
வேண்டாம்.ஒருவரையும்
பொல்லாங்கு சொல்ல
வேண்டாம் ,மாதாவை
ஒருநாளும் மறக்க வேண்டாம்
என்ற பாடத்தை
நடத்த,அனைத்து
மாணவர்களும் சொல்ல
இராமலிங்கம் மட்டும்
சொல்லாமல் இருக்க
ஆசிரியர் கோபமாக நீ ஏன்
சொல்லாமல் இருக்கிறாய்
என்று கேட்டார் அதற்கு
,நீங்கள் சொல்லிய
பாடல்களின் முடிவில்
வேண்டாம் வேண்டாம் என்று
வருகிறது அதனால் நான்
சொல்லவில்லை என்றார்
மேலும் ஆசிரியருக்கு கோபம
வரவே நான் சொல்லிக்
கொடுக்கும் பாடலில்
குற்றம் சொல்லும்
அளவிற்கு நீ பெரிய ஞானியா
?வேறு எப்படிச
சொல்லவேண்டும் நீயே
சொல்லு என்று அதட்டினார்
.ஆசிரியரின் அனுமதி
கிடைத்து விட்டது என்ற
ஆனந்தத்தில் தன்னுடைய
முதல் பாடலை அரங்கேற்றம்
செய்தார் இராமலிங்கம்
அந்தப்பாடல்

ஒருமையுடன் நினது
திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்தும் புறம்
மொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் .
பெருமை பெரு நினது புகழ்
பேசவே வேண்டும்
பொய்மை பேசாதிருக்க
வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே
வேண்டும்
உன்னை மறவாதிருக்க
வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான்
வாழ்ந்திடல் வேண்டும்

வேண்டும் வேண்டும்
என்றுதான் இறைவனிடம்
கேட்க வேண்டும் என்று பாடி
முடித்தார் இராமலிங்கம்
இதை கேட்ட ஆசிரியர்
இவருக்கு பாடம் சொல்லும்
தகுதி நமக்கு இல்லை
ஆசிரியருக்கே பாடம்
சொல்லும் அருள் ஞானம்
பெற்றவர் என்பதை உணர்ந்து
கை கூப்பி
வணங்கினார்/அன்று முதல்
பள்ளிக்கு செல்லாமல்
யாரிடமும் பாடம் கற்காமல்
இறைவனிடமே கல்வி பயின்று
அருள் பாடல்களைப்
பாடல்களைப் பாடி
அருளினார், பல
ஆலயங்களுக்கு சென்று
அனைத்து தெய்வங்களின்
பெயரால் பல்லாயிரம்
பாடல்களை பாடி உள்ளார்
அனைத்தும் தேனினும் இனிய
தெய்வத் தமிழ் பாடல்களாக
மக்கள் மத்தியில் பரவச
செய்தன ..

கல்வி என்பது இரண்டு
வகையாகும். சாகும் கலவி
,சாகாக் கல்வி என
பிரித்தார்.உலகியலில்
பொருளைத் தேடுதல் சாகும்
கல்வி ,இறைவனிடம் அருளைத்
தேடுதல் சாகாக் கல்வி
என்றார் .சாகக் கல்வியை
பெறுவதற்கு உயிர்கள் மேல்
அன்பு, தயவு ,கருணைக் காட்ட
வேண்டும் என்றார் .அதனால்
தான் வள்ளலார் வாடியப்
பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினார் .மண் உயிரெல்லாம்
களித்திட நினைத்தார்
.அதனால் இறைவன் அவருக்கு
திருஅருளைக் கொடுத்து
மரணத்தை வெல்லும்
மார்க்கத்தை காட்டினார்
.மரணத்தை வென்று மரணம்
இல்லா பெருவாழுவு என்னும்
ஒளிதேகத்தை பெற்றார்
.இதற்கு சாகாக் கல்வி என்று
பெயர் சூட்டினார்.அவர்
பாடிய பாடல் ஒன்று ;--

வாடிய பயிரைக் கண்ட
போதெல்லாம்
வாடினேன் பசியினால்
இளைத்தே
வீடு தோறும இரந்தம்
பசியறாது அயர்ந்த
வெறறரைக் கண்டு உளம
பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்து
கின்றோர் ஏன்
நெருறக் கண்டு உளம
துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய்
நெஞ்சம்
இளைத்தவர் தமைக் கண்டே
இளைத்தேன் .

என்றார் வள்ளலார் .

திரு அருட்பா ..

சென்னையில் உள்ள வள்ளலார்
நகர,ஏழுகிணறு,வீ ராசாமி
தெருவில் இரண்டு வயது
முதல் முப்பத்தைந்து
ஆண்டுகாலம்
வாழ்ந்துள்ளார்
அக்காலங்களில் அவருடைய
அணுக்கத் தொண்டர்களாக
அநேகர பின் தொடர்ந்து
உள்ளார்கள்,அதிலே
முக்கியமானவர்கள் திரு,
தொழு ஊர வேலாயுதம்,tதிரு
இறுக்கம் ரத்தினம்,திரு,
செலவராயன் என்பவராகும்
இவர்கள் முயற்ச்சியால உரை
நடைப் பகுதிகளான ஒழிவியல்
ஒடுக்கம் ,தொண்டைமண்டல
சதகம்,சின்மயதீபிகை
,மனுமுறை கண்ட வாசகம் ,ஜீவ
காருண்ய ஒழுக்கம் ,மற்றும்
ஆறு திருமுறைகளும்
எண்ணற்ற நூல்களும்
வெளிவந்தன ,

இறைவனுடைய திரு அருளால்
பாடப் பெற்றதால் அவைகடகு
திரு அருபா என்னும்
பெயரிடப்பட்டது அதேபோல்
இறைவனால் வருவிக்க
உற்றவர் என்பதால்
இராமலிங்கம் என்ற பெயரை
திரு அருட்பிரகாச
வள்ளலார் என்னும்
பெயரிட்டு போற்றி
மகிழ்ந்தனர் .ஆனால் இவை
வள்ளலாருக்கு சம்மதமில்லை
வள்ளலார் .என்பது
இறைவனுக்கு மட்டுமே
பொருத்தமானது அவை எனக்கு
பொருத்தமில்லை என்று
மறுத்தார் ,அன்பர்களின்
வேண்டு கோளுக்கு இணங்க
ஏற்றுக் கொண்டார் .

வள்ளலார் கண்ட
மெய்ப்பொருள் !

சென்னையை விட்டு சென்ற
வள்ளலார் சிதம்பரம்
சென்று பல ஆண்டுகள்
கழித்து வடலூர் வந்து
சேர்ந்தார் வள்ளலாரின்
அன்பில் திளைத்து இருந்த
கருங்குழி புருஷோத்தமர்
அவர்களின் வீட்டில் பல
ஆண்டுகள் தங்கி
இருந்தார்,அங்குதான்
தண்ணீரில் விளக்கு எரித்த
அதிசயம் காணப்
பெற்றது.அங்குதான் உலக
உண்மையைத தெரிவிக்கும்
அருள் பூரணமாகி ஆறாம்
திருமுறையையும் ஒரே
இரவில் எழுதிய,
அருட்பெரும் ஜோதி
அகவலையும் எழுதினார் .

கடவுள் ஒருவரே அவரே
அருட்பெரும் ஜோதியாக
உள்ளார் என்பதை உணர்ந்த
வள்ளலார் .அந்த உண்மையான
கடவுளை காண வேண்டுமானால்
அன்பு,தயவு,கருணை என்னும்
ஜீவ காருண்யத்தால் தான்
காண முடியும்.என்பதை
செயலால செயல் படுத்தி
காட்டினார் .

வடலூர் பார்வதி புரத்தில்
மக்கள் கொடுத்த என்பது
காணி இடத்தில்.23--5--1867 ,ஆம்
ஆண்டு வைகாசி பதினொன்றாம்
நாள் சத்திய தருமச்சாலை
தொடங்கப்பட்டது .அன்று
முதல் இன்று வரை சாதி சமயம்
மதம் ஏழை ,பணக்காரன் என்ற
வேறுபாடு இல்லாமல் அண்ணம்
பாலித்துக் கொண்டு
வருகிறது என்பது அனைவரும்
அறிந்ததே .

கடவுள் ஒளியாக உள்ளார்
என்பதை உலக மக்களுக்கு
தெரியப்டுத்திக்
காட்டுவதற்காக, வடலூர்
பெருவெளியில் எண்கோண
வடிவமாக சமரச சுத்த
சன்மார்க்க சத்திய ஞான
சபையை தோற்றுவித்து 25--1--1872
ஆம் ஆண்டு முதல் ஜோதி வழி
பாட்டை தொடங்கி வைத்தார்
.அங்கு ஓவ்வொரு மாதத்தின்
பூச நட்சரத்திலும் ஏழு
திரை நீக்கி ஜோதி
தரிசனமும் .ஆண்டு தோறும தை
பூசத்தில் சிறப்பு ஏழு கால
ஜோதி தரிசனமும் காட்டப்
படுகிறது. வள்ளலாரின்
உண்மையை உணர்ந்து, உலக
நாடுகளில் இருந்து
அனைத்து மதத்தினரும்
வந்து அற்புதம் அற்புதம்
என்று அதிசயித்து வணங்கி
செல்கின்றனர்.

வள்ளலாரின் கொள்கைகள் ;--


மனிதன் மரணம் அடையாமல்
ஒளிதேகம் பெற்று பேரின்ப
சித்திப் பெருவாழ்வு
வாழலாம் என்பதை கண்டு
அறிந்து வாழ்ந்து
காட்டினார் வள்ளலார்
.மரணம் என்பது இயற்கை அல்ல
அவை செயற்கையால் தான்
வருகிறது என்பார் அவருடைய
முக்கியமான கொள்கைகள் .;--

கடவுள் ஒருவரே !
அவர் அருட்பெரும் ஜோதியாக
உள்ளார் !
சிறு தெய்வ வழிபாடு கூடாது
!
தெய்வங்கள் பெயரால் உயிர்
பலி செய்யக் கூடாது !
புலால் [மாமிசம் ]உண்ணக
கூடாது!
சாதி ,சமயம் ,மதம் முதலிய
வேறுபாடுகள் கூடாது !
ஜீவ காருண்யமே பேரின்ப
வீட்டின் திறவு கோல் !
ஜீவ காருண்யமே கடவுள்
வழிபாடு !
ஏழைகளின் பசி தவிர்த்தல்
வேண்டும் !
எவ்வுயிரையும் தம் உயிர்
போல் பாது காக்க வேண்டும் !
ஆன்ம நேய ஒருமைப் பாட்டு
உரிமையைக் கடைப் பிடிக்க
வேண்டும் !
புராணங்களும்
சாத்திரங்களும் முடிவான
உண்மையைத் தெரிவிக்காது !
இறந்தவரை புதைக்க
வேண்டும் எரிக்கக் கூடாது!
கருமாதி திதி முதலிய
சடங்குகள் வேண்டாம் !
கணவன் இறந்தால் மனைவி தாலி
வாங்குதல் கூடாது !
மனைவி இறந்தால் கணவன் வேறு
திருமணம் செய்யக் கூடாது !
எதிலும் பொது நோக்கம்
வேண்டும் .

போன்ற முற்போக்கு
சிந்தனைகளை அறிவு
பூர்வமாக அறியும்
பொருட்டு ஆன்மீக வழியில்
உலக மக்களுக்கு தெரியப்
படுத்தி உள்ளார் .

பேரின்ப சித்திப்
பெருவாழ்வு ;-

வடலூரில் சமரச சுத்த
சன்மார்க்க சத்திய
தருமச்சாலை ,சமரச சுத்த
சனமார்க்க சத்திய ஞான
சபையை சமரச சுத்த
சன்மார்க்க சத்திய
சங்கத்தையும் அமைத்து
சங்கத்தின் வாயிலாக உலக
மக்கள் அனைவருக்கும்
ஆன்மீகத்தின் வாயிலாக,
உண்மையான ஞான வழியைக்
காட்டி,அருள் ஒளி,பெற்று
மக்கள் நலமுடன் வாழ
வகுத்துத் தந்துள்ளார்,
வடலூருக்கு அடுத்த
மேட்டுக குப்பம் என்ற
ஊரில் சில காலம் தனிமையில்
தங்கி இருந்தார் வள்ளலார்,

மேட்டுக்குப்பம் என்ற
ஊரில் பலவிதமான அருள்
அற்புதங்கள் நடந்தன
இறைவனும் தானும் கலந்து
கலந்து பிரிவதை திரு
அருட்பாவில் அருள் விளக்க
மாலை அனுபவமாலை என்றப்
பகுதியில் அருட்
பாமாலையாக பதிவு
செய்துள்ளார் .உலக மக்கள்
எப்படி வாழ வேண்டும்
என்பதற்காக உபதேசப்
பகுதிகள்,பதிவு
செய்துள்ளார் .அதிலே
பேருபதேசம் என்றப் பகுதி
அனைவரையும் மிகவும்
கவர்ந்த்தாகும் .

இந்த உலகத்தை விட்டு நான்
எங்கும் போக மாட்டேன்
,எல்லா உடம்பிலும்
இருப்பேன் இதுவே எனது
கடைசி வார்த்தையாகும் .

இந்த ஊன உடம்பை விட்டு ஒளி
உடம்பாக மாற்றி அழைத்து
செல்ல, இறைவன் என்
குடிசைக்கு வரப போகிறார்
,நானும் அவரும் இணைந்து
கலந்துக் கொள்ளப்
போகிறோம் .யாரும் கவலைப்
படவேண்டாம் .அவநம்பிக்கை
அடைய வேண்டாம் இது நடக்கப்
போவது சத்தியம் என்று
மக்கள் முன்பு உரை
நிகழ்த்துகிறார்
அதன்பின்;- நான் இந்த
குடிசையில் உள்ளே சென்று
தாளிட்டுக் கொள்ளப்
போகிறேன் யாரும் யாது ஒரு
காரியம் குறித்தும்
கதவைத்
திறக்காதீர்கள்.அப்படியும்
மீறித் திறந்துப்
பார்த்தால் வெறும்
வீடாகத்தான் இருக்கும்
ஆண்டவர் என்னைக் காட்டிக்
கொடுக்க மாட்டார் என்று
30--1--1874 ஆம் ஆண்டு ஸ்ரீமுக
ஆண்டு தை மாதம்
பத்தொன்பதாம் நாள் உள்ளே
சென்று தாளிட்டுக்
கொண்டார் சுத்த பிரணவ ஞான
தேகம் என்னும் முத்தேக
சித்திப் பெற்று பேரின்ப
பெருவாழ்வில் வாழ்ந்து
கொண்டு இருக்கிறார்
வள்ளலார் .

ஆங்கிலேயர் ஆட்சி
காலத்தில் கடலூர்
கலைக்டர் தாசில்தார்
மற்றும் அதிகாரிகள்
விபரம் அறிந்து வந்து ,--
மேட்டுக குப்பத்தில்
வள்ளலார் உள்ளே
சென்று தாளிட்டுக் கொண்ட
குடிசையை திறந்து
பார்த்தார்கள் ,வள்ளலார்
சொன்னபடி வெறும்
வீடாகத்தான் இருந்தது.
கடலூர் அரசாங்க
பதிவேட்டில் பதிவு
செய்துள்ளது இதுவே
வள்ளலாரின் வாழ்க்கை
சுருக்கமாகும் .

மனிதர்களாக பிறந்த
அனைவரும் கொலை
செய்யாமலும் ,புலால்
உண்ணாமலும் ஆன்ம நேய
ஒருமைப் பாட்டைக்
கடைபிடித்து ஜீவ
காருண்யமே கடவுள்
வழிபாடாக பின் பற்றி
அருட்பெரும் ஜோதி
ஆண்டவரின் அருளைப் பெற்று
மரணத்தை வென்று மரணமில்லா
பெருவாழ்வில்
வாழ்ந்திடலாம் கண்டீர் .!

நினைந்து நினைந்து
உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து
அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று
எழும் கண்ணீர் அதனால்
உடம்பு
நனைந்து நனைந்து அருள்
அமுதே நன் நிதியே ஞான
நடத்தரசே ஏன் உரிமை நாயகனே
என்று
வனைந்து வனைந்து எத்துது
நாம் வம்மின் உலகிலீர்
மரணம் இல்லா பெரு வாழ்வில்
வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய்
புகலேன் சத்தியம்
சொல்கின்றேன் பொற்சபையில்
சிற்சபையில் புகுந்தருணம்
இதுவே !

உங்கள் ஆன்மநேயன் ஈரோடு
செ,கதிர்வேலு .-

Photo attachment:
http://www.facebook.com/photo.php?fbid=243070269076671&set=o.145718368806893&type=1


To comment on this post, reply to this email or visit:


http://www.facebook.com/n/?groups%2Funiversalfollowersoframalinga%2F&id=254540887924640&mid=4f23a8cG5af35f98b498G6eab86G96&bcode=SMza8UvD&n_m=anandhanl324%40gmail.com

=======================================
Reply to this email to add a comment. Change your notification settings:
http://www.facebook.com/n/?groups%2Funiversalfollowersoframalinga%2F&view=notifications&mid=4f23a8cG5af35f98b498G6eab86G96&bcode=SMza8UvD&n_m=anandhanl324%40gmail.com

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)