Monday, August 22, 2011

Re: [vallalargroups:4309] மானமிகு சமுதாயம் மலர...!



2011/7/14 sayeeganesh juttusaibabasubramanian <dayasayeeaug11@gmail.com>:
> DEAR SIR
>          BEST WISHES
>          VALLALAR WILL BE WITH YOU
>          SEND ME YOUR ADDRESS
> DAYAVUDAN
> SAYEEGANESH
> 9894765247
>
> 2011/7/8 gangai manimaran <rgangaimanimaran@gmail.com>
>>
>> மானமிகு சமுதாயம் மலர...!
>> அருட் பெருஞ் சோதிக்கு  
>> ஆதியும் கிடையாது.
>> அந்தமும் கிடையாது!
>> ஆதியும் அந்தமும் இல்லா 
>> ஜோதிக்கு ---
>> ஜாதியும்  கிடையாது!
>> சமயமும் கிடையாது! 
>> அதனால்தான்-- 
>> சாதிகளைச் -- சழக்கு என்பார்
>> சாதிகளைப் -- பேய் என்பார்
>> பொறித்தமதம் சமயமெலாம் 
>> பொய்- பொய்- பொய்யே என்பார் - 
>> நானுரைக்கும் வார்த்தைஎலாம் 
>> நாயகன்தன் வார்த்தை என்று 
>> நம்பிக்கையோடு சொன்ன -
>> நம்பிரான்--வள்ளல் பிரான்!
>> அவர்தம் மார்க்கத்தில்--மட்டும்தான்...
>> "சாதிகள் இல்லையடி பாப்பா"   என்று
>> பாப்பாக்களுக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் 
>> பாவலன் நான்!
>> ஆதியில் --
>> கோயில்கள் அனைத்தும் 
>> சாதிக் கோயில்களாகத்தான் இருந்தன!
>> ஆதிக்கவாதிகளின் கோட்டைகளைச் சரித்து
>> சாதிக் கோயில்களுக்கு மத்தியில்--
>> சோதிக் கோயில் கண்ட 
>> சொக்கத் தங்கமல்லவா வள்ளலார்..!
>> அவரைச் சரிவரப் பரப்பாமலும் 
>> நெஞ்சத்தில் நிரப்பாமலும் 
>> பிழைசெய்த பெரும் பாவிகள் நாமல்லவா..!
>> சூதறிந்தீர்..வாதறிந்தீர்.. தூய்மை அறிந்திலரே..!
>> என்று--
>> ஏதறிந்து கொண்டோம் என்பதே தெரியாமல் வாழ்ந்த 
>> இந்நாட்டு மக்களுக்காக--
>> ஓதி ஓதி உண்மைகள் உரைத்து
>> உளம் நொந்து போனவர் அல்லவா வள்ளலார்!
>> கடை  விரித்தேன் கொள்வார் இல்லை என்று 
>> கலங்கியவரும்  அவர்தானே! 
>> நல்லார் மனம் நடுங்கக் கூடாது!
>> ஏழைகள் வயிறு எரியக் கூடாது!
>> வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிக்கக் கூடாது!
>> கல்லும் நெல்லும் கலந்து விற்கக்  கூடாது!
>> பொருளை இச்சித்துப் பொய் சொல்லக் கூடாது!
>> என்று--
>> சமூகப் பாவங்களைப் பட்டியல் இட்டு 
>> பல்லாற்றானும் பண்ணிப் பண்ணிப் 
>> பாடி நெகிழ்ந்தவர்--
>> பற்றுகள் அனைத்தையும் 
>> பற்றறத் தவிர்த்தவர்---வள்ளலார் அல்லவா!
>> அவரைப் பாமரரிடமும் கொண்டு போக வேண்டிய 
>> கால கட்டம் இதுவென்று 
>> கண்டு கொண்ட காரணத்தால் --- 
>> வள்ளலார் பெயரில் 
>> அறக் கட்டளைஒன்றை ஆரம்பிக்கிறேன்--
>> அடியேன்!
>> பத்தோடு பதினொன்றாய் 
>> பசியாரச் செய்வது மட்டுமே  நோக்கமாய்க் கொள்ளாமல்--
>> சன்மார்க்கிகளாய் மக்களை மாற்றும்
>> சமூகப் புரட்சிக்கு வித்தாய்--
>> ஓர் குக் கிராமத்தில் 
>> ஆரம்பிக்கிறேன்--என்பணியை!
>> சாலைச் சோலை என்னும் பெயரில் 
>> மரக் கன்றுகள் நட்டு--
>> அவற்றை மரமாக  வளர்த்துக் காட்டுதல்-
>> கல்வி உதவிகள் மூலம் 
>> கண்திறத்தல்--
>> சாதி மறந்த சமூகம் நிர்மாணிக்க 
>> ஆழ்ந்த அறிவூட்டுதல்!--
>> தந்தைமொழி தமிழ் என்று சொல்லிப் பெருமிதப் பட்டாரே.. 
>> வள்ளல் பெருமான் --அந்தத் தமிழ் காக்கும் உணர்வை 
>> பட்டி தொட்டிகளில் எல்லாம் 
>> பதியச் செய்தல் என்று 
>> படரப் போகிறது என் பார்வை!
>> ஈர்த்துப் பிடிக்கும்  என்
>> காந்தத் தமிழ் கொண்டு 
>> கவரமுடியும் மக்களை என்று 
>> அழுத்தமான நம்பிக்கை --என் 
>> அடிவாரத்தில் இருக்கிறது!
>> ஆகவே ..  நண்பர்களே..!
>> சன்மார்க்க அன்பர்களே..!
>> துணைக்கு நில்லுங்கள்..!
>> தூயவரின் வழிபற்றித் 
>> தொடரும் தொண்டுக்கு 
>> ஆனவரை உதவுங்கள் !
>> அருள்வார்த்தை  கூறுங்கள்!
>> மானமிகு  சமுதாயம் 
>> மலரவழி அருள்கின்ற 
>> ஞானமிகு இராமலிங்கர் 
>> நல்வழியில் நாம் வாழ்வோம்!
>> அன்புடன்,
>> கவிஞர்.கங்கை மணிமாறன்
>> நிர்வாக அறங்காவலர்  
>> திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை 
>> செல்:9443408824  
>>
>> --
>> To register to this vallalargroups, and Old Discussions
>> http://vallalargroupsmessages.blogspot.com/
>>  
>> To change the way you get mail from this group, visit:
>> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>>  
>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>>  
>> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>  
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>  
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>  
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)