Karunaimigu Karthi Anna,
Thank u for information of Karunaimigu Mu.Balasubramainian Avl's Sanmarga Reference Note.MU.balasubramanian is a good
Grand Sanmargi. With Vallalar Loving,AruljothiSujatha.
2009/6/7 Karthikeyan J <karthikeyan.jayapal@googlemail.com>
Vallal Malaradi Vaalga Vaalgaவள்ளலாரின் உபதேச குறிப்புக்கள் :
- சமய சன்மார்க்கம்
- மத சன்மார்க்கம்
- சுத்த சன்மார்க்கம்
சுத்த சன்மார்க்கத்தில் சாதகர்கள் , சாத்தியர்கள் என்று இரண்டு வகை காட்டுகின்றார். இவற்றை பற்றி வள்ளலார் கூறும் விளக்கம் :சமய சன்மார்க்கம் :இயற்க்கை உண்மை ஏக தேசமான சத்துவ குணத்தின் சம்பந்தம் உடைய மார்க்கமே சமய சன்மார்க்கம் .
- கொல்லாமை
- பொறுமை
- சாந்தம்
- அடக்கம்
- இந்திரிய நிக்கிரகம்
- ஜீவ காருண்யம்
ஆகிய ஆறும் தான் சமய சன்மார்க்கத்தின் இயல்பாகும் .இது சத்துவ குணத்தின் வாச்சியார்த்தம் .இவ்வண்ணம் வாசியானுபவம் பெற்று , சொருப அனுபாவம் ஆகிய சாதனமே சமய சன்மார்க்கம்வள்ளலார் கூறும் சமய சன்மார்க்கம் எது என்பதை ஒரு முறை மேலே படித்து கொள்ள வேண்டும் .
சுத்த சன்மார்க்கிகள் என்று சொல்லி கொள்பவர்கள்மற்ற சமய தெய்வங்களை வழிபாடு செய்வோரையும் ,தீரு நீறு , நாமம் முதலிய சமய சின்னங்களை விடாமல் அணிந்து கொள்வோரையும்,சமய சன்மார்க்கிகள் என்று கூறுவதோடு மட்டும் நில்லாமல் ,எந்த சமய தேவரையும் வழிபடாது , வள்ளலார் உருவ சிலையையோஅல்லது அவரது படத்தையோ மட்டும் வணங்க்வோரை கூடசமய சன்மார்க்கிகள் என்று கூறுகிறார்கள்.
சமய தேவரை வழிபாடு செய்பவர்கள் சன்மார்க்க சங்கத்தை சார்ந்து விட்டால் மட்டும் ,வடலூர் வருவதால் மட்டும் , சன்மார்க்கிகள் ஆகவோ அல்லது சமய சன்மார்க்கிகள் ஆகவோ முடியாது. அவர்கள் சமயம் சார்ந்தவர்களே .
ஏனெனில் , சமயங்களில் கூறபட்டுள்ள தெய்வங்கள் கற்பனையே என்கிறவிவரம் அறியாமலும் , அவற்றை இன்னமும் நம்புவதாலும் , அவற்றை வழிபாடு செய்யாது விட்டால் தம்மை என்ன செய்து விடுமோ , என்ற பயத்தாலும் அவற்றை விடாது வைத்து கொண்டு இருக்கிறார்கள் .
பத்தோடு பதினொன்று என்பது போல் , அவற்றோடு வள்ளலாரையும் வைத்து இருப்பார்கள் . அவர்களை சமய சன்மார்க்கிகள் என்பது சரியானது அல்ல .வள்ளலார் கூற்றுபடி சரியான திருவருள் விளளக்கம் பெறாதவர்களே ஆவார் .
=====================================================
4726.
தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்புகின்றாரும்
பொய்வந்த கலை பல புகன்றிடுவாரும்
பொய்ச் சம யாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார்
மேல் விளைவறிகிலர் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந்======================================================
வள்ளலாரின் அளவு கோலின் படி , மேற குறித்தவர்களை அதாவதுபலபல தெய்வங்களை சிந்திபோரும் , கதிகள் பலபல உண்டு என்போரும் ,பொய்யாக சொல்லப்பட்டுள்ள கதைகளையும் ,புராணங்களையும் நடந்த வரலாறு போல புகன்றிடுவாரும் , பொய்யான சமயங்களை போற்றுகின்றோரும் ,இறைவழி வந்த உண்மையான திருவருள் விளக்கம் பெறாத,உண்மை அறிவு விளக்கம் பெற வேண்டிய கூட்டத்தில் சேர்க்க படவேண்டுமே யொழியே,எக்காரணம் கொண்டும் அவர்கள் சமய சன்மார்க்கிகள் அல்லர் .
தெய்வ வழிபாடை வைத்து சமய சன்மார்க்கி என்று கூறாது
கொல்லாமை ,
பொறுமை,
சாந்தம் ,
அடக்கம் ,
இந்திரிய நிக்கிரகம் ,
ஜீவ காருண்யம் ஆகிய ஆறு குணங்களையும் யார் சொருப அனுபவமாகபெறுகின்றார்களோ அவர்களை மட்டும் சமய சன்மார்க்கிகள் " என்று வள்ளலார் கூறுவதை உற்று நோக்கி , இனியாவது யாரை "சமய சன்மார்க்கிகள்
என்று கூற வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்
CONCLUSION :கொல்லாமை ,பொறுமை,சாந்தம் , அடக்கம், இந்திரிய நிக்கிரகம் ,ஜீவ காருண்யம் ஆகிய ஆறு குணங்களையும் யார் சொருப அனுபவமாக
பெறுகின்றார்களோ அவர்களை மட்டும் சமய சன்மார்க்கிகள் " என்று வள்ளலார் கூறுகிரார் .
இதில் எந்த குணத்தையும் எண்ணி பார்க்காத நாம்,வள்ளலார் சிலையை வைத்து வழிபடாததாலும்,பிரசாதம் வைகாததாலும், தீப ஆராதனை செய்யாததாலும் ,மட்டுமே சுத்த சன்மார்க்கிகள் ஆகிவிட முடியுமா ? என்று அமர்ந்துபொறுமையாக சிந்தித்தால் , நாமில் யாருமே "சமய சன்மார்க்கிகள் "சொல்லி கொள்ள லாயக்கு அற்றவர்கள் என்று வேறு யாரும் கூற வேண்டாம். நம்முடைய மனம் நன்கு கூறும்
REFERENCE : வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம(மு. பாலசுப்பிரமணியன்)
Anbudan,
Karthikeyan.J
Click Subscribe to this Vallalargroups
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment