Friday, December 18, 2009

Re: [vallalargroups:2495] Sanmargam

அன்பு சகோதரர் சுகுமார் ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு,

கடந்த நூற்று ஐம்பது ஆண்டுகளாக உலகத்தில் ஏற்பட்டுள்ள 
மிக பெரிய மாற்றங்கள் 
உலக ஒற்றுமைக்காக ஐ நா சபை தோற்றம்
மேலை நாடுகளின்  மிக பெரிய பிரச்சனையான இன வேறுபாடு 
ஒழிக்கப்பட்டு இன வேறுபாடு காண்பது குற்றமாக கருதப்பட்டு 
தண்டனைக்குரிய சட்டங்கள் இயற்றப் பட்டுள்ளது.
மாமிச உணவையே பிரதானமாக உண்ணும் மக்கள் மத்தியில் 
ஜீவ காருண்யம் தலை தூக்கி இருப்பது.
ஜீவ காருண்யத்தை ஆயுதமாக எடுத்த காந்தி மகான் தோன்றி
நமது இந்திய தேசத்திற்கு விடுதலை பெற்று தந்தது.
மேலும் 
நமது தேசத்தில் வருணாசிரமம் என்கின்ற 
ஒரு காட்டு மிராண்டி தனமான எழுதாத சட்டம் 
ஒரு பிரிவினர் உயர்ந்த வகுப்பாகவும்,
அவர்களுக்கு உதவும் வகுப்பினர் அவர்களை விட சிறிது தாழ்ந்தவர்களாகவும் 
அடுத்து போர்குணம் கொண்ட வகுப்பினர் அவர்களை விட 
தாழ்ந்த மக்களாகவும்
பொருளாத ரீதியில் மிகவும் பின் தங்கியவர்களை
மிகவும் தாழ்ந்த மனிதர்களாகவும்
நடத்தப்பட்டு மனிதர்களிடையே பிரிவினையும்
பேதமும் காண்கின்ற நிலை
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலவி வந்தது இன்று எங்கே ஓடி போனது.
இவை அனைத்தும் வள்ளல் பெருமானார் வருகைக்கு பிறகு 
ஏற்பட்டதுதான்.
முதலில் சன்மார்க்க அடிப்படை என்ன என்றால் 
உயிர்களிடம் உள்ள பேதம் நீங்கி அனைவரையும் 
சகோதரர்களாக  காண்கின்ற பக்குவத்தை பெறுவதுதான்.

உண்மையில் இன்றைய உலகில் 
95 சதவீதம் மக்கள் நல்லவர்களாக 5 சதவீதம் தீயவர்களாகவும்
இருக்கின்றார்கள். 
அப்படி இல்லாமல் இருக்குமேயானால் 
உலகம் இன்றைக்கு அமைதி பெற்று இருக்காது.

உலகில் தோன்றிய மதங்கள், சமயங்கள் எல்லாம்
காலம் காலமாக தீமையிலிருந்து மனிதர்களை 
மீட்பதற்காக பாடுபட்டன. ஆனால் அவற்றில் சமத்துவம்
முழுவதுமாக இல்லாத காரணத்தினால் 
மனிதர்களை திருத்துவதற்காக 
இறைவனால் வள்ளல் பெருமான் வருவிக்க உற்றார்.
அவர் இன்றும் சூக்கும தேகத்தின் மூலம்
உலகை வழி நடத்தி வருகிறார்.
ஆகவே கூடிய விரைவில் உலகம் முழுமையாக
சமத்துவம் நிறைந்ததாக மாறும் என்பதில் ஐயமில்லை.

அன்புடன்
விழித்திரு ஆறுமுக அரசு  


2009/12/17 P Sujatha Rajashree <aruljothisujatha@gmail.com>
கருணைமிகு சுகுமார் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு,
        வள்ளல் பெருமானின் வாழ்க்கை அனுபவங்கள் , முயற்சிகள் அனைத்தும் உண்மையில்  அவர்களுக்காக தான் இன்று வரை தொடர்கிறது.வள்ளல் பெருமான் இன்றும் அவர்கள் மாறுவதற்காக அவர்களில் வாழ்ந்து கொண்டிருப்பதை அவர்கள் உணர வில்லை.ஞான தேக வடிவில் எல்லோரிடமும் வாழ்கிறார். எதுவும் அதிலும் வள்ளலாரின் முயற்சி வீணாக போகாது.யார்  எப்போது மாறுவார்கள் என்பது தெரியாது?.சுத்த சன்மார்க்கத்தில் நம்பிக்கை வைத்து நமது அக வாழ்வுக்கு தயவினால் வழி கண்டு நாமும் அவர்கள் மாறுவதற்கு காரணம் ஆவோம்.வள்ளலார் துணையோடு உண்மை இறையால் வெற்றி பெறுவோம் உறுதி.-AruljothiSujatha


On 17/12/2009, sukumar srinivasan <siranjeevisukumar@yahoo.com> wrote:

வள்ளல்பெருமானின் ஆசை ஏன் நிறைவேறாமல் போனது?

அகத்தே கருத்து புறத்தே வெளுத்த மனிதர்களை திருத்தி சன்மார்க வழி அழைத்து செல்ல அல்லவா அவரை இறைவன் உய்வித்து அருளினன்

 

தெரிந்துகொள்ளவிழையும்

அடியேன்

சுகுமார்ஸ்ரீநிவாசன்


 

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க



--
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

அன்புடன்

விழித்திரு ஆறுமுக அரசு

--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
 
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
 
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)