அன்பும் கருணையும் உள்ள சாயிபாபா பலமுறை கீழ்க்கண்ட இனிய மொழிகளை மசூதியில் கூறியிருக்கிறார்: "என்னை எவன் மிகவும் விரும்புகிறானோ, அவன் எப்போதும் என்னைக் காண்கிறான். என்னைவிட்டு நீங்கிவிடில் இவ்வுலகமே அவனுக்கு சூனியமாய்த் தோன்றுகிறது. அவன் எனது கதைகளைத் தவிர பிறவற்றைக் கூறுவதில்லை. இடையுறாது அவன் என்னையே தியானித்து என் நாமத்தையே ஸ்மரணம் செய்கிறான். முழுமையும் எவன் தன்னை என்னிடம் சமர்ப்பித்து, என்னையே எப்போதும் நினைவில் கொண்டு இருக்கிறானோ அவனுக்கு நான் கடன்பட்டதாக உணர்கிறேன். அவனுக்கு விடுதலை அளித்து, நான் அவனது கடனைத் தீர்ப்பேன். என்னை நினைத்து, எனக்காக ஏங்குபவனையும், எதையும் முதலில் என்னை நினைக்காமல் உண்ணாதவன்பாலும் நான் சார்ந்து இருக்கிறேன். இங்ஙனம் என்னிடம் வருபவன் ஆறு கடலுடன் ஒன்றாவதுபோல் என்னுடன் இரண்டறக் கலக்கிறான். பெருமையையும், அகங்காரத்தையும் விட்டொழித்துவிட்டு எள்ளளவும் அவற்றின் அடையாளம் கூட இருக்காதபடி விளக்கி உங்கள் இதயத்தே அமர்ந்து கொண்டிருக்கிற என்னிடம் உங்களைப் பூரணமாகச் சமர்ப்பிப்பீர்களாக". | ||
நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத் தெரியும். நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். இந்த உலகின் கண் அசைவும், அசைவற்ற சர்வ ஜீவராசிகளையும் நான் அரவணைக்கிறேன். இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுப் படுத்துபவன். ஆட்டுவிப்பவன், எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே. முக்குணங்களின் கூட்டுறவும் நானே. நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அளிப்பவனுமாம் , என்பால் கவனத்தைத் திருப்புபவனை எதுவும் துன்பம் விளைவிக்காது. ஆனால் மாயை, என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும், எல்லாப் பூச்சிகள், எறும்புகள், கண்ணுக்குத் தென்படுபவை, அசையக் கூடிய, அசையமுடியாத உலகம் எல்லாம் என்னுடைய உடம்பு அல்லது உருவம் ஆகும். | ||
சிந்தனைகள் | ||
| ||
பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
சுத்த சன்மார்க்க அன்பன்
D.பாலமுருகன்
காஞ்சிபுரம்
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
சுத்த சன்மார்க்க அன்பன்
D.பாலமுருகன்
காஞ்சிபுரம்
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment