Pages

Friday, July 24, 2009

[vallalargroups:1871] ஷிர்டி பாபாவின் அமுதமொழிகள்


 

அன்பும் கருணையும் உள்ள சாயிபாபா பலமுறை கீழ்க்கண்ட இனிய மொழிகளை மசூதியில் கூறியிருக்கிறார்:

"என்னை எவன் மிகவும் விரும்புகிறானோ, அவன் எப்போதும் என்னைக் காண்கிறான். என்னைவிட்டு நீங்கிவிடில்  இவ்வுலகமே அவனுக்கு சூனியமாய்த் தோன்றுகிறது. அவன் எனது கதைகளைத் தவிர பிறவற்றைக் கூறுவதில்லை. இடையுறாது அவன் என்னையே தியானித்து என் நாமத்தையே ஸ்மரணம் செய்கிறான். முழுமையும் எவன் தன்னை என்னிடம் சமர்ப்பித்து, என்னையே எப்போதும் நினைவில் கொண்டு இருக்கிறானோ அவனுக்கு நான் கடன்பட்டதாக உணர்கிறேன். அவனுக்கு விடுதலை அளித்து, நான் அவனது கடனைத் தீர்ப்பேன். என்னை நினைத்து, எனக்காக ஏங்குபவனையும், எதையும் முதலில் என்னை நினைக்காமல் உண்ணாதவன்பாலும் நான் சார்ந்து இருக்கிறேன். இங்ஙனம் என்னிடம் வருபவன் ஆறு கடலுடன் ஒன்றாவதுபோல் என்னுடன் இரண்டறக் கலக்கிறான். பெருமையையும், அகங்காரத்தையும் விட்டொழித்துவிட்டு எள்ளளவும் அவற்றின் அடையாளம் கூட இருக்காதபடி விளக்கி உங்கள் இதயத்தே அமர்ந்து கொண்டிருக்கிற என்னிடம் உங்களைப் பூரணமாகச் சமர்ப்பிப்பீர்களாக".

 
நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால், இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத் தெரியும். நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இருதயத்தில் அமர்ந்து இருக்கிறேன். இந்த உலகின் கண் அசைவும், அசைவற்ற சர்வ ஜீவராசிகளையும் நான் அரவணைக்கிறேன். இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுப் படுத்துபவன். ஆட்டுவிப்பவன், எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே. முக்குணங்களின் கூட்டுறவும் நானே. நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அளிப்பவனுமாம் , என்பால் கவனத்தைத் திருப்புபவனை எதுவும் துன்பம் விளைவிக்காது. ஆனால் மாயை, என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும், எல்லாப் பூச்சிகள், எறும்புகள், கண்ணுக்குத் தென்படுபவை, அசையக் கூடிய, அசையமுடியாத உலகம் எல்லாம் என்னுடைய உடம்பு அல்லது உருவம் ஆகும்.

 
சிந்தனைகள்
 
  • கல்லறைக்குள் இருந்தாலும் நான் உயிரோடும் சக்தியோடும் இருப்பேன். நீ எங்கு இருந்தாலும் என்னை நினைத்தால், உன்னுடன் இருப்பேன்!
  • நான் உங்களுடனேயே இருக்கிறேன், உங்கள் இதயமே என் இருப்பிடம்
  • எவன் என்னை மிகவும் விரும்புகிறானோ, அவன் என்னை எப்போதும் காண்கிறான்.
  • என்னிடம் வருபவன், கடலுடன் ஆறு கலப்பது போல் என்னுடன் சேர்கிறான்.
  • என் மீது பாரத்தை ஏற்றினால் நான் நிச்சயமாக அதைத் தாங்குவேன்.
  • உடலால் உலகத்துக் கடமைகளைச் செய்யுங்கள்! மனதை கடவுளுக்கு அளித்து விடுங்கள்.
  • கடவுள் கருணையானவர், நல்லவர்களுக்குத் தீங்கு வருவதை அவர அனுமதிக்க மாட்டார்.
  • முதலில் பசியுடன் இருப்போர்க்கு உணவு கொடுத்துப் பின் நீ உண்ணுவாயாக.

  • ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தும் சேவை செய்தும் நாம் மகிழ்வுடன் இருப்போம்.
  • அதிர்ஷ்டம் உள்ளவர்களுக்கும், பாவங்களை நீங்கப் பெற்றவர்களுக்கும் சாயியை வழிபடும் பேறு கிட்டுகிறது.
  • எனக்கு எட்டு விதமான அல்லது பதினாறு விதமான உபசாரங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை. தூய்மையான பரிபூரண பக்தி உள்ள இடத்தில் நான் இருப்பேன்.
  • அகங்காரம் மிக்கவனுக்கு குருவின் போதனைகள்கூடப் பயனற்றவை
  • ஷிர்டியில் உள்ள துவாரகாமாயீயை அடைந்தவர்கள் அதீதமான மகிழ்ச்சி அடைவார்கள்.
  • மனிதர் எவ்விதம் என்னை நம்புகிறார்களோ அவ்விதமே நான் அவர்களை ஏற்றுக்கொள்கிறேன்.
  • கடவுள் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் வசிக்கிறார், அவரே, இவ்வுலகின் மிகப் பெரிய பொம்மலாட்டக்காரர்.
  • பேராசையும் கடவுளும் எதிரெதிர் துருவங்கள், எங்கே பேராசை நிலவுகிறதோ, அங்கே கடவுள் இருப்பதில்லை.
  • ஒரு பிராணிக்கு உணவளித்து அதன் பசியைத் தணியுங்கள், என் பசி தீர்ந்து விடும்.


http://www.omshirdisai.com/gallery/samadhi-3.jpg



  • உட்காருவதற்கு உங்களது வீட்டுத் திண்ணையை மற்றவருக்கு அளித்தால், ஸ்ரீஹரி மகிழ்வார்.
  • உங்களது பெயரையும், வடிவத்தையும் நீக்கி விட்டால், உள்ளே உணர்வு நிலை காணப்படும். இந்த உணர்வுநிலை உங்களிடத்தும், அனைத்து உயிர்களிடத்தும் நிலைபெற்றுள்ளது. அது நானேயாகும். இதைப் புரிந்து கொண்டு உங்களிடத்தும், எல்லா உயிர்களிடத்தும் என்னைக் காண முயலுங்கள். இந்தப் பயிற்சியின் மூலம் என்னுடன் ஒன்றாகும் நிலையை அடைய முடியும்.


பசி நீக்குதல் சிறந்த ஜீவகாருண்யம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

   சுத்த சன்மார்க்க அன்பன்
      D.பாலமுருகன்

  காஞ்சிபுரம்


--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/

To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---

No comments:

Post a Comment