"மரணமில்லாப் பெருவாழ்வில்" வாழ வள்ளலார் அழைக்கின்ற வாசகங்கள்:
உலகீரே, மரணம் அனைவருக்கும் உண்டு.அதனை யாராலும் தடுத்து கொள்ள முடியாது.ஆனால்,
அந்த மரணத்தை தடுத்து கொள்ள வழி உள்ளது எனவும் "மரணமில்லாப் பெருவாழ்வில்" வாழ வம்மின் என உலகீரை அழைகின்றார்.
ஞானசரியையில் "மரணமில்லாப் பெருவாழ்வு" பெருவாசகங்கள்:
1. மரணமில்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் ..
2. காணாத காட்சிஎல்லாம் கண்டு கொள்ளலாம்..
3. படியாத படிப்பை படித்திடலாம்.. பற்றிடலாம் சுகமே..
4. இறவாதவரம் பெறலாம் இன்பம் உறலாமே..
5. பெரும்பதியை நாம்மருவி இறவாதவரம் பெறலாம்..
6. திரைந்து திரைந்து உளுத்த வரும் இளமை அடைந்திடவும்..
7. செத்தவரை எழுப்புகின்ற திகழ்தருணம்..
8. முக்காலத்தினும் அழியா மூர்த்தம் அடைந்திடுவே..
9. கருநெறி வீழ்ந்து உழலாதீர்..
10. ஊனேயும், உடலழியாது ஊழிதோறும் ஓங்கும் உத்தம சித்தியை பெறுவீர்..
11. அழியாத ஞான அமுத வடிவம் பெறலாம்
12. சார்ந்திடும் அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்..
13. மரணமிலாப் பெருவாழ்வில் வாழ வம்மின்..
14. சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே, பிணி, மூப்பு, மரணம் சேராமல் தவிர்ந்திடுங் காண்..
15. இப்பிறப்பில் தானே "நித்திய மெய்வாழ்வு" பெற்றிடலாம்..
16. என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே..
No comments:
+Grab this
Post a Comment