வள்ளாரின் பேருபதேசம் : "இறைவனின் பெருமையை" விசாரித்தல்:
1. சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும்,நினைந்தும்,புணர்ந்தும் அனுபவிக்க விளங்குகின்ற தனித்தலைமைப் பெரும்பதியாகிய பெருங்கருணைக் கடவுளே!
2. கருணா நிதியாகிய கடவுளே!
3. தாயினும் சிறந்த தயவுடைக் கடவுளே!
4. உயிர்களின் அகத்தும்,புறத்தும்,அகப்புறத்தும்,புறப்புறத்தும் நீக்கமின்றி விளங்குகின்ற அருட்பெருஞ்சோதி ஆண்டவரே!
5. களைப்பறிந்து உதவும் கருணைக் கடலாகிய கடவுளே!
6. அருட்பெருஞ்சோதி ஆண்டவரே!
7. சர்வ வல்லபராகிய தனித்தலைமைக் கடவுளே!
8. எல்லாமுடைய அருட்பெருஞ்சோதி அற்புதக் கடவுளே!
9. எல்லாமாகிய தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!
..வள்ளலாரின் "சத்திய சிறு விண்ணப்பத்திலிருந்து.."
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
+Grab this
Post a Comment