விண்ணப்பக் கலிவெண்பா : தினசரி பாராயண வாசகங்கள்:417 கண்ணிகளின் (பயன்பாட்டு வடிவக்) கருத்து:1. இன்பமுடன் ஈண்டவரும் எண்ணிலரே ஆயினும் என் ஆண்டவனே!நின்னைப் போல் ஆவாரோ?2. பற்றுலகில் அன்புடைய தாயர்கள் ஓராயிரம் பேர் ஆனாலும் அன்புடையாய் !
நின்னைப் போல் ஆவாரோ?3. ஆற்றில் ஒரு காலும், அடங்காச் சமுசாரச் சேற்றில் ஒரு காலும் வைத்துத் தேய்கின்றேன்..4. உய்வது அறியா உளத்தினேன்! உய்யும் வகை செய்வது அறியேன்! திகைகின்றேன்!5. என் பிழைகள் அனைத்தினையும் ஐயா! நீ தானே பொறுக்கத் தகுங்கண்டாய்!6. கூற்றன் குறுகில் அதற்கு என் செய்வோம் என்று எண்ணி எய்கின்றேன்!7. ஞாலமிசைக் கோட்பார வாழ்க்கைக் கொடுஞ் சிறையினின்று என்னை மீட்பார் இலாது விழிக்கின்றேன்!8. துன்பக் கவலை கடல் வீழ்ந்தே ஆதரவு ஒன்று இன்றி அலைகின்றேன்..9. நான் இன்னும் வன்பிறவிப் பந்தக்கடல் அழுந்தப் பண்ணற்க!10. நின்னை அன்றி எந்தை பிரானே! உன் ஆணை ! எனக்கு உற்றத்துணை யாரும் இல்லை!11. நின் கருணை உண்டோ? இல்லையோ? என்று எண்ணி எண்ணி உள்ளம் இளைக்கின்றேன்..12. இன்னும் என்ன வந்திடுமோ! என்று நெஞ்சம் அலைபாய்ந்து உள்ளம் அழிகின்றேன்..13. பஞ்சப் பொறிகளால் வெம்பாம்பின் வாய்ப்படும் ஒரு தேரையைப்போல் வாடுகின்றேன்..14. முன்செய் வினையாம் அறையா நோயால் அகம் மெலிவுற்று ஐயா!நான் தாமரையின் நீர் போல் தள்ளாடுகின்றேன்..15. வாழ்க்கை எனும் பாலைவனத்து உன் அருள் நீர்த்தாகமது கொண்டே தவிக்கின்றேன்..16. என்றனைக் கைவிட்டு விடேல்!17. நின் தயவு சூழ்ந்திடுக!18. வாழ்ந்திடுக நின் தாள்மலர்!
web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
No comments:
+Grab this
Post a Comment