Showing posts with label நமது "சிறுமையை விசாரித்தல்". Show all posts
Showing posts with label நமது "சிறுமையை விசாரித்தல்". Show all posts

Saturday, February 8, 2014

[vallalargroups:5328] "நமது சிறுமையை விசாரித்தல்" :4

வள்ளலாரின் பேருபதேசம் – "நமது சிறுமையை விசாரித்தல்" :4

121.  மாயைக் களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் .

122.  என்னினும் காத்தருள் எனையே.

123.  தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத் துதித்திலேன்.

124.  தூய்மை ஒன்றறியேன் கழுதெலாம் அனையேன் .

125.  இழுதெலாம் உணவில் கலந்துணக் கருதிய கருத்தேன்.

126.  பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த பாவியேன் .

127.  தீமைகள் சிறிதும் எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன் .

128.  என்னினும் காத்தருள் எனையே.

129.  வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை மனைகவர் கருத்தினேன் .

130.  ஓட்டைச் சட்டியே எனினும் பிறர் கொளத்தரியேன்.

131.  தயவிலேன் சூதெலாம் அடைத்த பெட்டியே நிகர்த்த மனத்தினேன்.

132.  உலகில் பெரியவர் மனம் வெறுக்கச் செய் எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன்.

133.   என்னினும் காத்தருள் எனையே.

134.  உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந் தோதிய வறிஞருக் கேதும்
   கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன்.

135.  உலகில் குணம் பெரிதுடைய நல்லோரை அடுத்திலேன்.

136.  அடுத்தற்காசையும் இல்லேன்.

137.  அவனிமேல் நல்லவன் எனப்பேர் எடுத்திலேன்.

138.  எனினும் தெய்வமே துணைஎன் றிருக்கின்றேன் காத்தருள் எனையே.




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Friday, February 7, 2014

[vallalargroups:5327] "நமது சிறுமையை விசாரித்தல்" :3

வள்ளலாரின் பேருபதேசம் – "நமது சிறுமையை விசாரித்தல்" :3

101.  செக்கினைப் பலகால் இழுத்தலை எருதேன்.

102.  உழத்தலே உடையேன் என்னினும் காத்தருள் எனையே.

103.  புலை விலைக்கடையில் தலை குனித்தலைந்து பொறுக்கிய சுணங்கனேன்.

104.  புரத்தில் தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த தயவிலாச் சழக்கனேன்.

105.  சழக்கர் உலைவிலை எனவே வியக்க வெந் தொழிலில் உழன்று ழன்    

        றழன்றதோர் உளத்தேன்.

106.  இலைவிலை எனக் கென் றகங்கரிததிருந்தேன் என்னினும் காத்தருள் எனையே.

107.  கொட்டிலை அடையாப் பட்டி மாடனையேன்.

108.  கொட்டைகள் பரப்பிமேல் வனைந்த கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த

        கடையனேன்.

109.  கங்குலும் பகலும் அட்டிலை அடுத்த பூஞையேன்.

110.  உணவை அறவுண்டு குப்பைமேற் போட்ட நெட்டிலை அனையேன்.

111.  என்னினும் வேறு நினைத்திடேல் காத்தருள் எனையே.

112.  நேரிழையவர் தம் புணர்முலை நெருக்கில் நெருக்கிய மனத்தினேன்.

113.  வீணில் போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன்

114.  புனைகலை இலர்க்கொரு கலையில் ஓரிழை எனினும் கொடுத்திலேன்.

115.  நீள உடுத்துடுத் தூர்தொறுந் திரிந்தேன் ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன்

116.  என்னினும் காத்தருள்எனையே.

117.  அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன்.

118.  அசடனேன் அறிவிலேன்.

119.  உலகில் குளத்திலே குளிப்பார் குளிக்க வெஞ்சிறுநீர்க் குழியிலே குளித்த         

   வெங் கொடியேன்.

120.  வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க மனங்கொணட சிறியேனன்.

121.  மாயைக் களத்திலே பயின்ற உளத்திலே பெரியன்.

122.  என்னினும் காத்தருள் எனையே.



web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Thursday, February 6, 2014

[vallalargroups:5326] "நமது சிறுமையை விசாரித்தல்" - 2

வள்ளலாரின் பேருபதேசம் – "நமது சிறுமையை விசாரித்தல்" :2

81. தீயரில் தீயனேன்.

82. பாபக் கொடியரில் கொடியேன்.

83. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே…

84. போகமே விழைந்தேன்.

85. புலைமனச் சிறியேன்.

86.  பூப்பினும் புணர்ந்த வெம் பொறியேன்.

87. ஏகமே பொருள் என் றறிந்திலேன்.

88.  பொருளின் இச்சையால் எருது நோவறியாக் காகமே எனப் போய்ப் பிறர் தமை வருத்திக் களித்த பாதகத் தொழிற்கடையேன்.

89. மோகமேஉடையேன் என்னினும் எந்தாய் முனிந்திடேல் காத்தருள் எனையே.

90. பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப் புணர்ந்த வெம் புலையனேன்

91. விடஞ்சார் பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன்

92.  கள்ளனேன்

93. நெருக்கும் ஆப்பினும் வலியேன்

94. அறத்தொழில் புரியேன்

95. அன்பினால்அடுத்தவர் கரங்கள் கூப்பினுங் கூப்பாக் கொடுங்கையேன்

96. எனினும் கோபியேல் காத்தருள் எனையே.  

97. விழுத்தலை நெறியை விரும்பிலேன்.

98. கரும்பின் மிக இனிக்கின்ற நின் புகழ்கள் வழுத்தலை அறியேன்.  

99. மக்களே, மனையே, வாழ்க்கையே, துணை என மதித்துக் கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன்.

100.  கொக்கனேன்.

101.  செக்கினைப் பலகால் இழுத்தலை எருதேன்.

102.  உழத்தலே உடையேன் என்னினும் காத்தருள் எனையே. 




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Wednesday, February 5, 2014

[vallalargroups:5325] திருச்செவிக்கு விண்ணப்பம் - 1


1.    தேவரீர் திருச்சமுகத்தில் , துரும்பினும் சிறியேமாகிய யாங்கள், சிற்றறிவால் செய்து கொள்ளும் சிறு விண்ணப்பங்களை  திருச்செவிக்கு ஏற்ப்பித்து அருளி, எங்களை இரட்சித்தருளல் வேண்டும்.

2.    மலத்தில் புழுத்த சிறியேமாகிய யாங்கள்,திருச்சமுகத்தில் விண்ணப்பித்திற்குரிய 
பெருந்தகை வாசகத்தை எவ்வாறு அறிவோம்! எங்ஙனம் செய்வோம்!

3.    ஆகலில், கருணாநிதியாகிய கடவுளே! யாங்கள் விண்ணப்பிக்கின்ற  அற்ப வாசகத்தில் உரிமை நோக்காது, அங்கீகத்தருளி எங்களைத் காத்தருளல் வேண்டும்.

4.    சிறியேங்கள்,திருச்சமுகத்தில் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பமும், குற்றமே வடிவாய்க், குற்றமே குறிக்கும் என்று அறிந்தோம் ஆயினும், குற்றம் குறியாத வகை விண்ணப்பஞ் செய்தற்க்கு ஒருவாற்றனும் உணர்ச்சியில்லோம். ஆதலில், துணிவு கொண்டு விண்ணப்பிக்கின்றோம்.

5.    குற்றங்களையே குணங்களாக கொள்ளுதல் , தேவரீர் திருவருட் பெருமைக்கு இயற்கையாதலின், இவ்விண்ணப்பங்களில் குற்றம் குறியாது கடைக்கணிந்து அருளிக் கருணை செய்தல் வேண்டும்.



web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Thursday, January 9, 2014

[vallalargroups:5275] ஆன்மாவின் “சிறுமையை விசாரிக்கும்” வள்ளலாரின் வாசகங்கள்

 

 

வள்ளலாரின் பேருபதேசம் – "நமது சிறுமையை விசாரித்தல்" :


1.    எழுவினும் வலிய மனத்தினேன்.

2.    மலஞ்சார் ஈயினும், நாயினும் இழிந்தேன்.

3.    புழுவினும் சிறியேன்.

4.    பொய்விழைந் துழல்வேன்.

5.    புன்மையேன் .

6.    புலைத் தொழிற்கடையேன்.

7.    வழுவினும் பெரியேன்.

8.    மடத்தினும் பெரியேன்.

9.    மாண்பிலா வஞ்சக நெஞ்சக் குழுவினும் பெரியேன்.

10. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென் கடவேனே...

11. கற்றமேலவர் தம் உறவினைக் கருதேன்.

12. கலகர் தம் உறவினிற் களித்தேன்.

13. உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன்.

14. உலகியற் போகமே உவந்தேன்.

15. செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன்.

16. தெய்வம் ஒன்றெனும் அறிவறியேன்.

17. குற்றமே உடையேன்.

18. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென் கடவேனே...

19. கடுமையேன் .

20. வஞ்சக் கருத்தினேன்.

21. பொல்லாக் கல் மனக் குரங்கனேன் கடையேன்.

22. நெடுமைஆண் பனைபோல் நின்றவெற்றுடம்பேன் நீசனேன்.

23. பாசமே உடையேன்.

24. நடுமை ஒன்றறியேன்.

25. கெடுமையிற் கிளைத்த நச்சு மாமரம் எனக்கிளைத்தேன்.

26. கொடுமையே குறித்தேன்.

27. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென் கடவேனே..

28. நிலத்திலும், பணத்தும், நீள்விழி மடவார் நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன்.

29. புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப் போக்கி வீண்போது போக்குறுவேன்.

30. நலத்தில் ஓர் அணுவும் நண்ணிலேன்.

31. கடைய நாயினுங் கடையனேன் நவையேன்.

32. குலத்திலும் கொடியேன்.

33. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென் கடவேனே...

34. செடிமுடிந் தலையும் மனத்தினேன் .

35. துன்பச் செல்லினால்அரிப்புண்ட சிறியேன்.

36. அடிமுடி அறியும் ஆசை சற்றறியேன்.

37. அறிந்தவர் தங்களை அடையேன்.

38. படிமுடி வழித்துக் கடிகொளும் கடையர் பணத்திலும் கொடியனேன்.

39. வஞ்கக் கொடி முடிந்திடுவேன் .

40. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென் கடவேனே..

41. அரங்கினிற் படைகொண்டு உயிர்க்கொலை புரியும் அறக்கடையவரினுங் கடையேன் .

42. இரங்கில் ஓர் சிறிதும் இரக்கம் உற்றறியேன்.

43. இயலுறு நாசியுட் கிளைத்த சிரங்கினிற் கொடியேன் .

44. சிவநெறி பிடியேன் .

45. சிறுநெறிச் சழக்கையே சிலுகுக் குரங்கெனப் பிடித்தேன் .

46. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே...

47. வாட்டமே உடையார் தங்களைக் காணின் மனஞ்சிறிதிரக்கமுற் றறியேன் .

48. கோட்டமே உடையேன்.

49. கொலையனேன்.

50. புலையேன்.

51. கூற்றினும் கொடியனேன் .

52. மாயை ஆட்டமே புரிந்தேன்.

53. அறத்தொழில் புரியேன்.

54. அச்சமும் அவலமும் இயற்றும் கூட்டமே விழைந்தேன்.

55. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே….

56. கலைத்தொழில் அறியேன்.

57. கள்உணுங் கொடியேன்.

58. கறிக்குழல் நாயினும் கடையேன் .

59. விலைத்தொழில் உடையேன்.

60. மெய்எலாம் வாயாய் விளம்புறும் வீணனேன்.

61. அசுத்தப் புலைத்தொழில் புரிவேன்.

62. பொய்யனேன் .

63. சீற்றம் பொங்கிய மனத்தினேன் .

64. பொல்லாக் கொலைத்தொழில் புரிவேன்

65.  அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே.

66. பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப் பணம்பறித் துழல்கின்ற படிறேன்.

67. எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை இயற்றுவேன் .

68. எட்டியேஅனையேன்.

69. மணமிலா மலரிற் பூத்தனன்.

70. இருகால் மாடெனத் திரிந்துழல் கின்றேன்.

71. குணமிலாக் கொடியேன்.

72. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே...

73. கடியரில் கடியேன்.

74. கடையரில் கடையேன்.

75. கள்வரில் கள்வனேன்.

76. காமப் பொடியரில் பொடியேன்.

77. புலையரில் புலையேன்.

78. பொய்யரில் பொய்யனேன்.

79. பொல்லாச் செடியரில் செடியேன்.

80. சினத்தரில் சினத்தேன்.

81. தீயரில் தீயனேன்.

82. பாபக் கொடியரில் கொடியேன்.

83. அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே…



web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Wednesday, January 8, 2014

விண்ணப்பக் கலிவெண்பா : தினசரி பாராயண வாசகங்கள்:

விண்ணப்பக் கலிவெண்பா : தினசரி பாராயண வாசகங்கள்:
417 கண்ணிகளின் (பயன்பாட்டு வடிவக்) கருத்து:
1.   இன்பமுடன் ஈண்டவரும் எண்ணிலரே ஆயினும் என் ஆண்டவனே!
    நின்னைப் போல் ஆவாரோ?
2.   பற்றுலகில் அன்புடைய தாயர்கள் ஓராயிரம் பேர் ஆனாலும் அன்புடையாய் !
    நின்னைப் போல் ஆவாரோ?
3.   ஆற்றில் ஒரு காலும், அடங்காச் சமுசாரச் சேற்றில் ஒரு காலும் வைத்துத்   தேய்கின்றேன்..
4.    உய்வது அறியா உளத்தினேன்! உய்யும் வகை செய்வது அறியேன்! திகைகின்றேன்!
5.    என் பிழைகள் அனைத்தினையும் ஐயா! நீ தானே பொறுக்கத் தகுங்கண்டாய்!
6.    கூற்றன் குறுகில் அதற்கு என் செய்வோம் என்று எண்ணி எய்கின்றேன்!
7.    ஞாலமிசைக் கோட்பார வாழ்க்கைக் கொடுஞ் சிறையினின்று என்னை மீட்பார்   இலாது விழிக்கின்றேன்!
8.    துன்பக் கவலை கடல் வீழ்ந்தே ஆதரவு ஒன்று இன்றி அலைகின்றேன்..
9.    நான் இன்னும் வன்பிறவிப் பந்தக்கடல் அழுந்தப் பண்ணற்க!
10.   நின்னை அன்றி எந்தை பிரானே! உன் ஆணை ! எனக்கு உற்றத்துணை யாரும் இல்லை!
11.  நின் கருணை உண்டோ?  இல்லையோ? என்று எண்ணி எண்ணி உள்ளம்  இளைக்கின்றேன்..
12.  இன்னும் என்ன வந்திடுமோ! என்று நெஞ்சம்  அலைபாய்ந்து உள்ளம்  அழிகின்றேன்..
13.  பஞ்சப் பொறிகளால் வெம்பாம்பின் வாய்ப்படும் ஒரு தேரையைப்போல்  வாடுகின்றேன்..
14.  முன்செய் வினையாம் அறையா நோயால் அகம் மெலிவுற்று ஐயா!
     நான் தாமரையின் நீர் போல் தள்ளாடுகின்றேன்..
15.  வாழ்க்கை எனும் பாலைவனத்து உன் அருள் நீர்த்தாகமது கொண்டே  தவிக்கின்றேன்..
16.  என்றனைக் கைவிட்டு விடேல்!
17.  நின் தயவு சூழ்ந்திடுக!
18.  வாழ்ந்திடுக நின் தாள்மலர்!



web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)