Showing posts with label புராண விளக்கம். Show all posts
Showing posts with label புராண விளக்கம். Show all posts

Wednesday, April 23, 2014

[vallalargroups:5406] சுரர் , அசுரர் : வள்ளலார் உரைநடை பகுதியில் இருந்து

சுரர் , அசுரர் : வள்ளலார் உரைநடை பகுதியில் இருந்து

சுரர் : 

    அறிவுடைய ஜீவர்கள் முதல் வாசனாதி வஸ்துக்கள் எல்லாம் சுரர்.

அசுரர் :

   - அகங்காரி முதல் துர்-கந்த வஸ்த்துக்கள் எல்லாம்..
   - பூமிகள் தோன்றும் கந்த மூலம்..
   - அழுக்குடைய வஸ்த்து..

அறிவின் உயர்ச்சி , தாழ்சியால் மனிதரென்றும் , தேவரென்றும் சொல்லப்பட்டதே தவிர , வேறு எந்த காரணத்தாலும் அல்ல.அனால் , தயை விசேஷம் இருக்க வேண்டியது அறிவு உச்சியில் அடங்கி விட்டது.தேவர்களுக்கு நான்கு கை என்பது தயையின் விசேஷத்தை குறித்து சொன்னதே தவிர வேறில்லை.தயையே வடிவமாக இருக்கின்ற புண்ணிய தேகிகளே தேவர்கள்.


Reference :  Vallalar Urainadai Text







web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Tuesday, April 22, 2014

[vallalargroups:5403] “எம சம்ஹாரம் “ - வள்ளலார் உரைநடை பகுதியில் இருந்து


"எம சம்ஹாரம் " வள்ளலார் உரைநடை பகுதியில் இருந்து :

 

மார்க்கண்டருக்காக , ருதிரமூர்த்தி இடது காலால் உதைத்தத்து என்பது :

மார்க்ண்டேயர் - மயக்கமாகிய மறைப்பெனும் மரணத்தை தவிர்த்தது
ருத்திரன்                - தனித்த ஆன்மா அறிவு
எமன்                       - மயக்கததை தரத்தக்க சினம்,வெகுளி
இடது                     - சந்திர கலை
கால்                       - பிராண வாயு
எம சம்ஹாரம்   - ஜனன மரணத்தை உண்டு பண்ணுவது சூரிய சந்திர சக்தி.ஆதலால் , அஞ்ஞான பாசத்தால் சினமாகிற கூற்றுவன் கட்ட ,விவேகி எனும் மார்கண்டன் , ருத்ரன் எனும் ஆன்ம அறிவுடன் கூடவே , மேற்படி ருத்ரன் பிண்ட நஷ்டம் செய்கின்ற இட கலையை மேலேற்றி , குணங்கள் ஆகிய சூலத்தால் கூற்றை ஒழித்து, அருளாகிய சத்துவ மயமாய் நீட்டிக்க செய்வது எம சம்ஹாரம் 

இடது கால்          - இடது காலால் எமனை உதைத்தார் என்பது இடையாகிய சக்தி எனும் அருளாகிய ஆன்ம இயற்கையால் தேகத்தை நீடித்துக் கொண்டது 

 

 


Reference Text:


 




web    :
http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com

அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)