🌲🍍 ஜீவகாருண்யம். 🍍🌲
சமுசாரிகள் விவாக முதலிய விசேஷ
காரியங்களில் பந்தலை அலங்கரித்துக் -
அவ்விடத்தில் வேறு வேறு சடங்குகளைச்
செய்வித்தும் - ஆடல், பாடல், வரிசை,
ஊர்வலம் முதலிய விநோதங்களை அப்ப வர்க்கம், சித்திரான்னம் முதலிய பெருமைப் பாடுகளையும் நடத்தியும் எக்களிப்பில்
அழுந்தியிருக்குந் தருணத்தில் -
பசித்த ஏழைகள் முகத்தைப் பார்க்கவும் சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட சந்தோஷ காலத்தில் தமக்காயினும், தமது மக்கள், துணைவர் முதலியோர்க்காயினும், ஒவ்வோர் ஆபத்து நேரிடுகின்றது.
அப்போது, அவ்வளவு சந்தோஷத்தையும் இழந்து துக்கப்படுகின்றார்கள்.
இப்படி துக்கப்படும்போது அலங்காரஞ் செய்த பந்தலும், சங்கல்ப விகல்பமான சடங்குகளும், -ஆடல் ,பாடல்
வாத்தியம் , வரிசை ஊர்கோலம் முதலிய
வினோதங்களும் அப்பவர்க்கம் சித்திரா
அன்னம் முதலிய பெருமைப்பாடுகளும்
அந்த ஆபத்தை தடை செய்யக்கண்ட
தில்லை.
அந்த சுப காரியத்தில் உள்ள
படியே பசித்த ஜீவர்களுக்கு ஆகாரங்
கொடுத்துப் பசியை நீக்கி அவர்கள்
அகத்திலும் முகத்திலும் கடவுள் விளக்க
த்தையும்,கடவுளின்பத்தையும் வெளிப்பட செய்திருந்தார்களானால்
அந்த விளக்கமும் இன்பமும் அத் தருணத்தில் நேரிட்ட ஆபத்தை நீக்கி, விளக்கத்தையும் இன்பத்தையும் சத்தியமாக உண்டு பண்ணும்
அல்லவா?,ஆதலின் விவாக முதலிய
விசேஷச் செய்கைகளிலும் தங்கள்தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ணுவது முக்கியமென்று அறிய வேண்டும். 🌹 வள்ளலார் 🌹
🍒இனிய காலை வணக்கம். 🍒
No comments:
+Grab this
Post a Comment