Friday, December 7, 2018

[vallalargroups:6060] அருளாகிய தயவை" பெற்றுக்கொள்ள வேண்டுமானால்

🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !

 🙏🔥 கடவுள் தயவாகிய பூரண அருளைப் பெற்றிடவே  சுத்தசன்மார்க்கம் 🔥🙏
 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனம்🔥🙏
       தனிப்பெருங்கருணை நாயகியாம் மைவிழி அம்மை சிவகாமவல்லி என்று சொல்லக்கூடிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய "அருளாகிய தயவை" பெற்றுக்கொள்ள வேண்டுமானால் ,

ஆன்மாக்களின் ஜீவதயவைக்கொண்டுதான் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும் 🌺

எப்படி என்னில்,
கடவுளது அருளைப் பெறவேண்டுமாயில் ஜீவகாருண்யம் ஒன்றினால் மட்டுமே பெறுதல்கூடுமேயல்லது வேறு எந்த வகையினாலும் பெறுதல்கூடாது ,

இந்த இடத்தில் நமது பெருமான் அழுத்தமாக கூறுகின்ற இந்த வார்த்தையை அனைவரும் சற்றும் அகங்காரம் இன்றி உற்றுக் கவணித்து ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் 🙏

கடவுளின் அருளைப் பெறவேண்டும் என்று கருதி வீணில் அங்கும் இங்கும் ஓடி இழுத்தல் அடக்குதல் விடுதல் என்று காலத்தை வீணடித்து பயனற்று அருளை பெறுவதற்கு வழிதுறை தெரியாமல் பிறவியை தொலைத்து விடக்கூடாது🌺

ஏனென்றால் ,
பெருமான் இங்கு மிகமிக அழுத்தமாக கூறுகின்ற வார்த்தை என்னவென்றால் ,
ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் மட்டுமே கடவுளது அருளைப் பெறக்கூடும்.
வேறு எந்த வழியிலும் .....
என்ன கூறுகின்றார்கள் ?
வேறு எந்த வழியிலும் கடவுளது அருளை "சிறிதும்" இதையும் நன்றாக கவணிக்க வேண்டும் .

சிறிதும் பெறுதல்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும் என்று ,
உறுதி என்ற வார்த்தையையும் பயன்படுத்தி கூறுகின்றார்கள் என்பதை சற்று நன்றாக ஊன்றி கவணித்திட வேண்டி சகோதர சகோதரிகளை பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் 🔥🙏

மற்றொரு இடத்தில் ,
சுத்தசன்மார்க்கத்திற்கு என்று ஏதாவது சாதனம் வேண்டுமா என்றால் !
அதற்கு பெருமான் சொல்லுகின்ற வார்த்தையையும் நன்றாக கவணியுங்கள்.

சாதனங்கள் ஒன்றும் வேண்டாம் .
ஏதாவது ஒருசாதனத்தை சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம் .
அதைக்கண்டு பல்லிளித்து இறுமாந்து கெடநேரிடும் ......
இந்த இடத்தை ஒருமுறைக்கு பலமுறை கவணிக்க வேண்டியது அவசியம்....

என்னவென்றால் ,
ஏதாவது ஒரு சாதனத்தை கூறினால் அதன்படி நடந்தால் சிறு ஒளி காணநேரிடும் என்றால்  !
இங்கு சிறு ஒளி காண்பதற்கு உரிய சாதனம் எது என்றால் !

திருவருட்பா ஆறாம்திருமுறையில் அருள்விளக்க மாலையில் கூறியுள்ளபடி,
உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்,
புற்றெழுந்தும் ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப் பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பதரிதாய்ச்.......
என்று கூறிய நிலையைப் போன்றும்,

விழித்து விழித்து பார்த்தாலும் சுடர் உதயம் இலையேல்,
விழிகள் விழித்திளைப்பதால் விளைவொன்றும் இலையே என்றும்.... 
கூறுவதையும் இங்கு கவணிக்க அந்த சாதனம் எதுவென்று நமக்கு விளங்குகின்றது .
ஆகலில் ,
இப்படிபட்ட சாதனத்தை தொடர்ந்தால் முடிவில் ஓர் சிற்றொளி கண்டு அதில் உண்டாகும் அற்ப சித்தியில் பல்லை இளித்து மகிழ்ந்து இறுமாந்துகிடந்து ,
கெடநேரிடும் இதனால் நாம் அடையவேண்டிய பெரிய லட்சியத்தை அடைவதற்கு காலமில்லாமல் அற்ப சித்தியையும் அதற்குரிய சித்திக்காலம் முடிந்தபின் பிறவியை இழக்க நேரிடும் என்று பெருமான் அந்த அற்ப சிற்றொளியை தருகின்ற சாதனம் வேண்டாம் என்று கூறி,

சுத்தசன்மார்க்க லட்சியத்தை அடையக்கூடிய சாதனம் எதுவென்றால் "எல்லா உயிரையும் தன்னுயிர் போல் பார்க்கும் உணர்வை காலம் தாழ்த்தாது விரைந்து வருவித்துக்கொள்ளுதல் வேண்டும் "
இதுவே சாதனம் .

இந்தக்குணம் வந்தவர் எவரோ அவர்தான் இறந்தாரை எழுப்புகின்றவர் என்றுகூறுகின்றார்கள் நமது பெருமான்🌺

இதைத்தான் அருட்பெருஞ்ஜோதி அகவலில்,
"உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே" என்று மிக மிக அழகாக கடவுள் இருப்பிடத்தைக்காட்டி அங்கு அதற்கு உபகாரம் செய்தால் அது நேரடியாக கடவுளுக்கே செய்த புண்ணியத்திற்குரியதாய் இருக்கின்றது என்று கூறி,

இவ்வுலகில் கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களிலும் கடவுள் வாழுகின்றார்கள் .

ஆதலில்,
 அக்கடவுளின் ஆலயமாக விளங்கும் அவ்வுயிர்களின் தேகத்திற்கும் அவ்வுயிர்களுக்கும் உண்டாகும் துன்பத்தை போக்குவதாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் அத்தேகத்தில் குடியிருக்கும் ஆண்டவரின் கருணைக்கு உரியவர்களாகின்றோம்.🌺🙏

ஆகலில்,
அருள் என்பது கடவுளுடைய தயவு.

ஜீவகாருண்யம் என்பது ஜீவர்களுடைய தயவு.

இந்த சிறிய ஜீவ தயவைக்கொண்டுதான் , கடவுளுடைய பெரிய தயவைப் பெறுதல் கூடும் என்பது சத்தியம். இதற்கு வேறு எந்த வழியும் கிடையாது என்பது சுத்தசன்மார்க்க கடவுளின் ஆணையாகும்🔥🙏

ஆகலில் ,
சுத்தசன்மார்க்க லட்சியத்தை அடைய விரும்பும் ,
சுத்தசன்மார்க்க  சாதகர்கள் ஜீவகாருண்யத்தையே கடவுள் வழிபாடாக செய்து , கடவுளுடைய பெருந்தயவாகிய அருளைப் பெறவேண்டும் என்பது கடவுள் ஆணையாகும் 🌺🙏

இதைவிடுத்து ,
தியானம் தவம் தீட்ஷை என்று அங்கும் இங்கும் ஓடி காலத்தை விரையமாக்கி கண்மூடி ஓர்இடத்தில் அமர்ந்து கிடந்தால் அதில் மூடம் உண்டாகும்,

இவ்வுலகம் அருட்சக்தி,பொருட்சக்தி,கிரியாசக்தி,யோகசக்தி"ஞானசக்தி மயமாக இருப்பதாகப் பார்த்துக்கொண்டிருத்தல் வேண்டும்.ஆனால் யோகம் செய்ய வேண்டுவதில்லை.
அதில் அழுந்திவிட்டால் மீளுவது கடினம்.
சதா சிவக் கலப்பாய் கிடந்தாலும் மீளுதல் கடினம்.மூடம் உண்டாகும் இது உண்மை என்று உரைநடை பக்க 388 ல்  யோகத்தில் அழுந்த வேண்டாம் என்று பெருமான் அழுத்தமாக விளக்குகின்றார்கள் இவற்றைக் கவணித்து அனைவரும் கடைபிடித்தால் பெருமான் கூறியபடி பெறவேண்டியதை பெறலாம் இல்லையென்றால் அதுவே நமது கர்மாவாகும் 🌺

கடவுளை வழிபடும் விதத்தில் ,
தியானம் என்பதை கடவுளை ஸ்தோத்தரித்தல், சிந்தித்தல், தியானித்தல் என்ற வழிபாட்டின் ஒருவகையா இருத்தலே வேண்டும் .

ஆனால் சதா சர்வகாலமும் அதிலே அழுந்திவிடக்கூடாது .
இந்த நியதி சுத்தசன்மார்க்க சாதகர்களுக்கு பெருமான் விதித்தது.🌺🙏

🙏🏵 தயவு ,சகிப்புத்தன்மை 🏵🙏
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
பெருமான் ,
தன்னை இந்த பெரிய நிலைக்கு ஏற்றிவித்ததாக தமக்கிருந்த "தயவே" காரணம் என்று கூறி ,
அதுபோன்றே நீங்களும் தயவை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றார்கள் 🌺

நல்லது ,
அந்த தயவு எப்படி இருக்க வேண்டுமெனில்,

எண்ணுகின்ற எண்ணத்தில் "தயவு !

பேசுகின்ற பேச்சில் தயவு !

செய்கின்ற செயலில் தயவு !

தான் பற்றி இருக்கின்ற நெறியில் தயவு !

தான் செய்கின்ற கடவுள் வழிபாட்டில் தயவு !

பிறர்கு சொல்லுகின்ற உபதேசத்தில் தயவு !

பிறர் கூறுகின்ற உபதேசத்தை ஏற்பதில் தயவு !

ஆன்மநேயத்திலும் தயவு !

இரக்கம் பொருட்டு செய்கின்ற ஜீவகாருண்யத்திலும் தயவு !

ஒத்தார் உயர்ந்தார் தாழ்ந்தாரோடு செய்கின்ற விசாரத்திலும் தயவு !

இன்னும் மேலாக கூறவேண்டுமானால் உயிரற்ற பொருள் என்று அவமதிக்காமல் ,
சடப்பொருள்களின் மீதும் தயவுகாட்டுவதே சுத்தசன்மார்க்கத்திற்குரிய சிறந்த சாதனமாகும் 🌺🙏

மற்றொன்று சகிப்புத்தன்மை .
இந்த சகிப்புத்தன்மை வரவேண்டும் என்றால் ,
இங்கு நமக்கு நம் வாழ்வில் நடக்கின்ற நன்மைகளும், தீமைகளும் ,தடைகளும், தடையற்ற சகாய சாதக அனுகூலங்களும் ,இன்பங்களும், துன்பங்களும் ஆகிய எல்லாவற்றிற்கும் காரணம் நாமே  நமது முன்வினையே என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தினால் மட்டுமே இந்த சகிப்புத்தன்மை வரக்கூடும் 🌺

பெருமான் கூறுவார்கள் ,
ஒருவர் நமக்கு எப்படிபட்ட கொடிய தீங்கு செய்தாலும் ,
அவற்றை பொறுத்துக்கொண்டு ,
நாம் அவருக்கு பதிலுக்கு திருப்பி தீங்கு எதுவும் செய்யாமல் சகித்துக்கொண்டு பொறுமையுடன் அவருடைய அறியாமையையும் வினையையும் எண்ணி, 

தற்போது அவர் நமக்கு செய்த தீங்கினால் அருள் நியதின்படி தணடனை அவருக்கு கிடைக்கக்கூடுமே ,
அந்த தண்டனைக்காகவும் இறைவனிடன் அவருக்காக இரங்கி வேண்டுதல் என்ற உயரிய "சகிப்புத்தன்மை" நிலையை பெருமான் அழகாக கூறுகின்றார்கள் 🌺🙏

ஆகலில் ,
சுத்தசன்மார்க்க சங்கத்து லட்சியர்களுக்கு தயவு சகிப்புத்தன்மை என்னும் இந்த இரண்டு சத்துவ சாத்வீக குணத்தைப் பெற்று நெறிப்படி வாழ்தல் சுத்தசன்மார்க்க லட்சியத்தை விரைந்து பெறுவதற்கு ஏதுவாகும் 🔥🌺🙏
......நன்றி🔥🙏
.....வள்ளல் மலரடிப் போற்றி !போற்றி !🔥🙏
.....பெருமான் துணையில் 🔥🙏
....தயவுடன் வள்ளல் அடிமை 🔥🙏
....வடலூர் இரமேஷ்.

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)