உயிர்உறும் உடலையும் உடல்உறும் உயிரையும்
அயர்வறக்காத்தருள்அருட்பெருஞ்ஜோதி
ஒரு துறவியிடம்
இளைஞன் ஒருவன்...
வேலையும் இல்லை
கையில் பணமும் இல்லை...
வாழ்வதை விட
சாவது மேல் என்றான்...
அப்பா...கைகள் இரண்டை
வெட்டிக் கொடு...
இரண்டு லட்சம் தருகிறேன் என்றார்...
பதறி மறுத்தான் இளைஞன்...
சரி..உன் கண்களைக் கொடு
ஐந்து லட்சம் தருகிறேன் என்றார்...
பிதற்றாதீர்கள் என்றான் இளைஞன்...
சரி...இதயத்தைக் கொடு
இருபது லட்சம் தருகிறேன் என்றார்...
கோபத்தின் எல்லையிலே
இருந்த இளைஞன்...
முனிவரா நீர்...?
வாழ வழி கேட்டால்
சாக வழி சொல்கிறீரே என்றான்...
முனிவர் உரைத்தார்...
முட்டாளே...விலைமதிப்பிலா
உடலினைப் பெற்ற நீ
உழைக்கக் துணியவில்லையே...
உன் உயிரும் உனக்கு வீணே என்றார்...
உண்மை உணர்ந்தான்
உழைத்துப் பிழைத்தான்...
ஆக இறைவன் உடலைக் கொடுத்து
அதனுள் உயிரைக் கொடுத்து
இயங்க வைக்கையிலே...
உயிர் நிலைத்து வாழ
நீ உடலைக் காக்க வேண்டும்...
சரிவிகித உணவும்
சத்துவ உணவும் உண்டு...
அவைகள் உன் உழைப்பாலே
எரிபொருளாக ஆக வேண்டும்...
அளவோடு உண்டு
மிகுதியாய் உழைத்து
ஆற்றலை வெளிக்கொணர...
உடல் பாகங்கள்
இணக்கமாக வளையும்...
தின்பதை மட்டுமே
வழக்கமாய் கொண்டால்...
உடல் பாகங்கள்
இயக்கமும் முடங்கி
உயிர் பறந்தோட துடிக்கும்...
ஆகவே உறவுகளே
உடலும் உயிரும்
ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் படி
இறைவன் வகுத்திருக்கிறார்...
உயிரைக்காக்க உடல்
வளர்த்தேன் என்று
திருமூலர் சொன்னார்...
உயிரைப்பொருந்தி
உடல் இருக்கவும்...
உடலைச் சார்ந்து
உயிர் இயங்கவும்...
இவை இரண்டினையும்
சோர்வின்றி காப்பதே...
அருட்பெருஞ்ஜோதியின்
அருள் பணி என்பதாக
பெருமானார் உரைக்கிறார்...
உயிர்உறும் உடலையும்
உடல்உறும் உயிரையும்
அயர்வறக்காத்தருள்
அருட்பெருஞ்ஜோதி...
No comments:
+Grab this
Post a Comment