பெருமான் உருவத்தை வணங்காதவர்களும் வணங்க மறுபபவர்களும் சிந்திக்கவேண்டியவை.
பெருமானின் தேகம் மற்றவர்களைப்போல் அழியவில்லை .முத்தேக சித்தி பெற்றவர் . இன்றும்அவர் தேகம் தகுதியுள்ளவர்க்குத் தோன்றும்.
பெருமான் சித்தியடைந்த பிறகு இமயமலைச்சாரலில் பெருமானை கண்டதாக தியாசபிகல் சொசைட்டி அம்மையார் குறிப்பிடுகின்றார். தேகம் இல்லாமல் ஆன்மா ஜீவிக்கமுடியாது இது பெருமானின் வாக்கு .
மேலும் ஸ்தூல தேகம்,சூட்சும தேகம்,காரணதேகம் என மூன்று தேகங்களையும் சித்தி செய்து முத்தேக சித்தியடைந்தவர் . தேவை்படும்போது மூன்றுமே வெளிப்படும்.
என்னைபார்க்க வேண்டுமெனில் உன்னைப்பாருங்கள்.உன்னைப்பார்க்க வேண்டுமெனில் என்னைப்பாருங்கள். என்பதும் பெருமானின் திருவாக்கு.
பேரறிவில் சமயங்கடந்த நிலையில் இயற்றிய அகவலில்
உருவமும் அருவமும் உபயமுமாகிய அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி. என்று உருவமாகவும் அருவமாகவும் உரு அருவமாகவும் அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றது அருட்பெருஞ்ஜோதி.
உருவ அருவ உருஅருவமாகிய மூன்று வழிபாடும் சன்மார்க்கத்தில் உண்டு.
உருவ வழிபாடு-ஆண்டவரோடு கலந்த பெருமானின் உருவம் மற்றும் கடவுள் காரியப்படும் உத்தமமான ஆன்மவியாபகமாகிய மனித தேகங்கள். ஏனெனில் கடவுளால் செதுக்கப்பட்ட சிலைகளாகவும் நடமாடும் ஆலயங்களாகவும் விளங்குவதால் ஆகும்.
உரு அருவ வழிபாடென்பது ஜோதியை வழிபடுவதாகும்.
அருவ வழிபாடென்பது ஞானசிங்காதன பீடத்தை வைத்து அதில் ஆண்டர் அமர்ந்து அருட்செங்கோலாட்சி செய்து வருகின்றதாக பாவித்து வணங்குவதாகும்.
இந்த மூன்று வழிபாட்டையும் நாம் வழிபடச் செய்வதற்காக வடலூரில் சத்திய தருமச்சாலையில் பசியாற வந்திருக்கும் ஜீவ தேகமாகிய நடமாடும் ஆலயமாகிய மனித தேகத்தை வணங்கி வழிபடுவது.
ஞான சபையிலும் சித்திவளாகத்திலும் ஜோதி வழிபாடு
சித்தி வளாக திருவரறையில் அருவ வழிபாடாக உள்ளது.
உருவ வழிபாட்டில் மல ஜல உபாதி உள்ள இந்த மனித கேத்தையே வணங்கச் சொன்னார் என்றால் முத்தேக சித்தி பெற்ற சுத்ததேகத்தை வணங்கக்கூடாது என்பது தவறான புரிதல் .ஆகும்.
உலகத்திலேயே முதலில் வணங்கவேண்டிய உத்தமமான புனிதமான உருவம் பெருமானின் உருவமேயாகும் .
உருவ வழிபாட்டை தவிர்ப்பது உங்கள் கொள்கையானால் தீப கூன்டும்ஓர் உருவம் தானே அதில் ஜோதியும் ஒரு உருவம் தானே ஏன் இந்த உருவத்தை வழிபடவேண்டும் .
கடவுள் ஔி வடிவானவர்தான். அந்த ஔியைக்காட்ட உருவமான கூன்டும் அகலும் தேவைப்படுகிறதே கடவுளை வணங்குவேன் ஐனால் ஆலயத்தை வணங்கமாட்டேன் என்றால் எப்படி.
ஆலயம்அவசியமில்லையென்றால் கடவுள் நேரடியாக ஔி வடிவிலே வந்து நமக்கு சுத்த சன்மார்க்கத்தை போதித்திருக்கலாம் அல்லவா ஏன் சிதம்பரம் ராமலிங்கம் என்ற உருவில் வர வேண்டும்.
பெருமான் உருவத்தை வழிபட மறுப்பதென்பது பெருமானின் முத்தேக சித்தியையே மறுப்பதாகிவிடும் . மேலும் இப்பொழுது பெருமான் இல்லையென்றாகிவிடும்.
பெருமானின் உருவத்தை ஆலயமாகத்தான் வழிபடுகிறோம் . கடவுளை ஔியாகத்தான் வழிபடுகிறோம். தவறில்லையே.
நமக்கு பெருமான் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் கூறியதாவது தமது குடும்ப செலவை கூடியமட்டில் குறைத்து அதை ஜீவகாருண்யத்திற்கு பயன் படுத்த வேண்டும் என்கிறார் ஆகையினால்
பெருமானின் உருவத்திற்கு பூமாலை கற்பூரம் தேங்காய் பழம் வத்தி போன்றவை அவசியமல்ல அந்த பணத்தில் ஜீவகாருண்யம் செய்வதே சரியானததாகும் .
உருவம் கரைந்து அருவமாகும்.இது உண்மை .
பெருமான்என்னை தெய்வமென சுற்றாதீர்கள் என்று கூறியதன் பொருள் பொது ஜனங்களின் இடையூறுகளை தவிர்ப்பதற்காகவே. உதாரனத்திற்கு அன்பர் ஒருவர் திருமனம் செய்து கொள்ளலாமா என்று பெருமானிடம் கேட்டதற்கு சிவ சிந்தனையிலிருந்துகொண்டு ஆயிரம் திருமணம்கூட செய்யலாம் என்கிறார். உடனேஎல்லாசன்மார்க்கிகளும் 1000கல்யானம் செய்வதில்லையே ஏன் . அதுபோலத்தான் என்னை வணங்காதீர் என்பது.
பெருமான் தனது உருவபொம்மையை போட்டுடைத்ததென்பது தற்பெருமையையும் தற்புகழ்ச்சியையும் விரும்பவில்லை என்ற அர்த்தமாகும் . அதேசமயத்தில் மரணந்தவிர்ந்தேன் என்ற அறையப்பா முரசு என்று கூறியிருப்பதையும் ஒப்பிட்டால் உண்மை விளங்கும்.
கடவுள் நியைறிந்து அம்மயமான எக்காலத்தும் அழியாத சுத்ததேக உருவப்படத்தை வணங்குவது உத்தமமாகும் .
இதற்கு மாறாக உருவப்படத்தை வணஙகாமலிருப்பதோடில்லாமல் பெருமானின் உருவப்படத்தை கிழிப்பது போட்டோவை உடைப்பது சிலையை உடைப்பதென்பது அறியாமை மேலும் கண்டிக்கத்தக்கதாகும்.
மேலும் திருநீரணிவது பற்றியும் 5திருமுறைகள் பற்றியும் விரைவில் விரிவாக பார்ப்போம்.
திருச்சிற்றம்பலம்
-சாது ஹரி
No comments:
+Grab this
Post a Comment