- கார்த்திகை மாதத்தில் கிருத்திகை நட்சத்திரத்துடன் பௌர்ணமி சேர்ந்து வரும்.
அன்று அண்ணாமலையார் தீபம்.
- மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்துடன் பௌர்ணமி சேர்ந்து வரும் .
அன்று சிதம்பரத்தில் ஆருத்திரா தரிசனம்.நடராஜர் நடனம்.
- தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் பௌர்ணமியுடன் சேர்ந்து வரும்.
அன்று வடலூரில் சத்திய ஞான சபையில் அருட்பெருஞ்ஜோதி தரிசனம் .
பூசம் ஞானத்திற்குரிய நாளாகமுன்னோர் வகுத்துள்ளனர். ஞானத்திற்குரிய முருகனுக்குத் தைப்பூசம் உகந்த நாளாக வைத்துள்ளனர்.வள்ளலாரும் ஞானத்திற்குரிய நாளன்று ஞானசபையைத் திறந்து வைத்தார். மேலும் தான் பெற்ற ஞான உடம்பினால் மரணத்தைத் தவிர்த்துவிட்டேன் என்று மக்களுக்கு நிரூபிப்பதற்காகவே தான் திருக்காப்பிட்டுக்கொள்ள அந்த நாளைத் தேர்ந்தெடுத்தார். அவரது தேகம் மண்ணில் சமாதி வைக்கவோ அல்லது நெருப்பிலிட்டு எரிக்கவோ இல்லை. மனிதன் மரணமில்லாமல் வாழ முடியும் என்று நிரூபிக்கப்பட்ட நாளே தைப்பூசம்.
web : http://vallalargroupsmessages.blogspot.com E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
No comments:
+Grab this
Post a Comment