தேன் போன்று சுவையுள்ளது வேறு எதுவும் இல்லை.
பழமும் செங்கரும்பும் பலன் மிகத் தருபவை.
இவை எல்லாம் போன்றவர் தாம்
நம் அருட் பெரும் ஜோதி ஆண்டவர்.
அவர் பாய்ந்து வேகாத திருக் காலையும்
சகாத கலைகளையும் கொண்ட தலையினையும் கொண்டவர்.
அடி முடி காணவியலா நிலையை பிரம்மா விஷ்ணுவிற்கே
தந்து உருவ பாவனைக்கு மேற்ப்பட்ட ஒளியினன் ஆகி,...
ஒப்பற்ற மேலானாய்,....
உள்ளமெல்லாம் அமுது அனைய நிலையை
நிறைக்க வல்லானாய்,...
என்னுள் உறையும் தன்னிலையை
மறைக்க இயலாதவனாய்,..
எனது பாடலை ஏற்று அருள் பாலித்தவனாய்,..
தனிப் பெரும் கருணை காட்டிய எம்பெருமான்
அருட் பெரும் ஜோதி ஆண்டவரைக் கண்டு களித்திருந்தேன்
என வள்ளல் பெருந்தகை கூறுகின்றார்.
அவரது கூற்று நம்மையெல்லாம் அவ்வமுத நிலைக்கு அழைக்கும்
பறை சாற்று.
ஆத்ம மலர்களே! அருட் ஜோதி ஆண்டவர் தரிசம் பெறுவீரே!
பாலு குருசாமி
அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் காட்சி - Part 2
1
பாலானைத் ,
2
தேனானைப் ,
3
பழத்தினானைப்,
4
பலனுறு செங்கரும்பானைப்,
5
பாய்ந்து வேகாக் காலானைக்,
6
கலை சாகாத் தலையினானைக்,
7
கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா மேலானை,
8
மேல்நிலை மேல் அமுதானானை,
9
மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி ஏலானை,
10
என் பாடல் ஏற்றுக் கொண்ட எம்மானைக்,
கண்டு களித்திருக்கின்றேனே....,
Thiru Arutpa Song No :3935
பாலானைத் தேனானைப் பழத்தி னானைப்
பலனுறுசெங் கரும்பானைப் பாய்ந்து வேகாக்
காலானைக் கலைசாகாத் தலையி னானைக்
கால்என்றும் தலையென்றும் கருதற் கெய்தா
மேலானை மேல்நிலைமேல் அமுதா னானை
மேன்மேலும் எனதுளத்தே விளங்கல் அன்றி
ஏலானை என்பாடல் ஏற்றுக் கொண்ட
எம்மானைக் கண்டுகளித் திருக்கின் றேனே
Anbudan,
Karthikeyan.J
Cell: 09902268108
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
To unsubscribe from this group, send email to vallalargroups+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
No comments:
+Grab this
Post a Comment