Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts
Wednesday, February 6, 2019
Monday, February 4, 2019
Sunday, February 3, 2019
[vallalargroups:6078] நல்வழி.9.குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார்
9. ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லையென மாட்டார் இசைந்து
ஆற்றுப் பெருக்கு அற்று - ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய்,
அடி சுடும் அந்நாளும்-(மணலானது வெயிலினாலே காய்ந்து நடப்பவருடைய) அடியைச் சுடுகின்ற அக்காலத்திலும், அவ் ஆறு - அந்த ஆறானது,
ஊற்றுப் பெருக்கால் - ஊற்றுநீர்ப் பெருக்கினால்,
உலகு ஊட்டும் - உலகத்தாரை உண்பிக்கும்;
(அது போல) நல்ல குடிப்பிறந்தார்-நற்குடியிற் பிறந்தவர்,
நல்கூர்ந்தார் ஆனாலும்-வறுமையுடையவரானாலும்,
ஏற்றவர்க்கு - இரந்தவர்க்கு,
இசைந்து - மனமிசைந்து,
இல்லையென மாட்டார்-இல்லையென்று சொல்லமாட்டார் (இயன்றது கொடுப்பர்).
உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார் .
Saturday, February 2, 2019
[vallalargroups:6077] ஞானிகள் பற்றற்றிருப்பர்
ஞானிகள் பற்றற்றிருப்பர்
7. எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்
அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல நீர்போற்
பிறிந்திருப்பார் பேசார் பிறர்க்கு
எல்லாப் படியாலும் - எல்லா வகையாலும், எண்ணினால் - ஆராயுமிடத்து,
இவ்வுடம்பு - இந்த உடம்பானது, பொல்லாப் புழு-பொல்லாத புழுக்களுக்கும்,
மலி நோய்-நிறைந்த பிணிகளுக்கும்,
புல் குரம்பை - புல்லிய குடிசையாக இருக்கின்றது;
நல்லார் - நல்லறிவுடையோர், அறிந்திருப்பார் - (இவ்வுடம்பினிழிவை) அறிந்திருப்பார்கள்;
ஆதலினால்-ஆகையால் (அவர்கள்), கமல நீர் போல் - தாமரை இலையில் தண்ணீர் போல,
பிறிந்து இருப்பார் - (உடம்போடு கூடியும்) கூடாதிருப்பார்கள்;
பிறர்க்குப் பேசார் - (அதைக் குறித்துப்) பிறரிடத்தில் பேசமாட்டார்கள்,
ஆம்: அசை.
உடம்பின் இழிவை யறிந்த ஞானிகள் உடம்போடு கூடி இருப்பினும் அதிற் பற்றற்றிருப்பார்கள்
Sunday, January 27, 2019
[vallalargroups:6076] Vallalar Poor Feeding @ KRPuram, Bangalore
Saturday, January 19, 2019
[vallalargroups:6075] Blood is required
we need four unit of any blood. we have arranged 3 units. one more unit required.intested persons please contact me. this is for my mother in law.
contact details...Bangalore Karthikeyan ..08971233966
thanks
Thursday, January 17, 2019
[vallalargroups:6074] ஆண்டவா இவனுங்களை ஒன்னு திருத்ததுற...
கொல்லாமை புலால் உண்ணாமை
இவ்விரு ஒழுக்கங்களில் நிற்காதவர்களுக்கு திருக்கறள் மற்றும் திருவருட்பாவில்
பி ஹெ ச் பட்டம் பயிலவே அனுமதிக்கக் கூடாது. இதனை சட்டமாக அறிவிக்கவண்டும் அப்பதான் இதன் பெருமையும் புனிதமும் காக்கப்படும் .
அடிமாட்டுக்கு அதாவது வெட்டுக்கு மாட்டை விலைக்கு விக்கிறவன் மாட்டுப்பொங்கல் கொண்டாடுறான்.
கொல்லாமை புலால் உண்ணாமை ஒழுக்கத்திற்கு வராதவன் திருவள்ளுவர் தினம் கொண்டாடுறான்.
அப்பா அம்மாவை காப்பாத்தாம நடுரோட்ல விடடவன் தைப்பூச ஜோதி தரிசனம் பார்த்துட்டு ஜீவகாருண்யம் பேசுகிறான்.
சாதயும் மதமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி என்று படித்துக்கொண்டே சாதிபார்த்துதான் பெண் கொடுக்கிறான் எடுக்கிறான்.
காதில் இவ்வளவு பெரிய ஓட்டை போட்டவர்ககு சின்ன ஓட்டை போடத்தெரியாதா என்று பேருபதேசம் படிக்கிறானுங்க 50 ,60 சன்மார்க்கியானாலும் நகையனிஞ்சிகிட்டு குளுக்குவதும் மினக்குவதமாகத்தான் இருக்காங்க.
இதெல்லாம் ஏன்டா இப்படி பன்றீங்கன்னு கேட்டா எல்லா திருடனும் ஒன்னு சேர்ந்து உதைக்கவர்ரானுங்க
ஆண்டவா இவனுங்களை ஒன்னு திருத்ததுற அல்லது சம்ஹாரம் பன்ற ஆற்றலைக் கொடு ஆண்ட வா ,ஆள்ற வா,ஆளப்போற வா,கிளம்பி வா!வா!!வா!!!
திருச்சிற்றம்பலம்.
Thursday, January 3, 2019
[vallalargroups:6072] சுத்தசன்மார்க்க சாதனா சாத்தியம்
🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !
🙏🌻🌺 *சுத்தசன்மார்க்க சாதனா சாத்தியம்* 🌺🌻🙏
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 👏
சுத்தசன்மார்க்க நெறியின் அடிப்படைத் தகுதியே தயவுதான் .
*"தயவுடையோர்கள் அனைவரும் சுத்தசன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள்"*
அப்படி என்றால்,
*தயவு இல்லாமல் சன்மார்க்கம் என்று கூறிக்கொண்டு நாம் செய்கின்ற செயல்கள் அனைத்துமே சுத்தசன்மார்க்க நெறியைச் சாராத செயல்களேயாகும்* .
அதனால்தான் *தயவு இல்லாமல் செய்கின்ற செயல்கள் அனைத்தும் மாயாசாலச் செய்லகளே என்று நமது பெருமான் கூறுகின்றார்கள்* .
_*அப்படி என்றால் இதன் பொருள் என்ன ?*_
தயவு இல்லாமல் செய்கின்ற எந்த செயல்களும் நிலையான இன்பத்தை தராமல் ,நிலையற்று மறைந்து போகக்கூடிய சிற்றின்ப வகைகளேயாகும் என்பதாகும் .
*தயவினால் செயயப்படக்கூடிய செய்லகள் எதுவாக இருந்தாலும் அது நிலைத்து நின்று திருவருள் சம்மதத்துடன் பயன்தரக்கூடியதாகும்* .
*எனவே , ஆன்மாக்களாகிய நமது ஜீவதயவைக் கொண்டு கடவுளது பெருந்தயவை பெறவேண்டி நடக்கின்ற "தயவைநோக்கியப்" பயணம்தான் நமது மானுடவாழ்க்கைப் பயணம் .*
*🔥ஜீவதயவைக்கொண்டு கடவுளது பெருந்தயவை பெறச்செய்வதே சுத்தசன்மார்க்கமாகும்* 🔥
இப்படிப்பட்ட *தயாநெறியில்* பயணிக்கின்ற சுத்தசன்மார்க்க அன்பர்களுக்கு *சாதனங்களாக* இருப்பவைகளும்
அவற்றின் முடிவில் பெறப்படுகின்ற *சாத்தியமாக* இருப்பவைகளும் எவைஎன்று பெருமான் கூறுகின்றதைப் பார்ப்போம் 🔥🙏
🌺 *சாதனங்கள்* 🌺
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
சுத்தசன்மார்க்கத்தின் முதற்சாதனம் " *ஜீவகாருண்ய ஒழுக்கமேயாகும்* இதைத்தான் பெருமான் " *பரோபகாரம்* " என்று கூறுகின்றார்கள்
*இந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் நமக்குள் அரும்பி மலர்ந்து காய்த்து பிறகு கனியாகி கடவுளது பெருந்தயவைப் பெறவேண்டுமானால் நமது கரணங்களும் ஜீவனும் ஆன்மாவும் சில ஒழுக்கங்களை கடைபிடிக்கவேண்டியுள்ளது இவைகள்தான் அடுத்த சாதானங்கள்* .
அவற்றை வள்ளல் பெருமான் ,
*1:இந்திரிய ஒழுக்கம், 2:கரண ஒழுக்கம், 3:ஜீவ ஒழுக்கம், 4: ஆன்ம ஒழுக்கம்* என்ற நான்கையும் கூறி அவற்றினுள் ஒவ்வொன்றிலும் எவ்வாறு நமது இந்திரியங்களும், கரணங்களும்,
ஜீவனும், ஆன்மாவும் ஒழுக்கம் சார்ந்து நிற்கவேண்டும் என்பதை பெருமான் உரைநடைப் பகுதியில் விவரித்து வகைப்படுத்தி கொடுத்துள்ளார்கள் .
ஆகலில் *சுத்தசன்மார்க்க நெறியை கடைபிடித்து பயன்பெற முதல் சாதனம் ஜீவகாருண்ய ஒழுக்கமாகிய பரோபகாரம் என்பதும் ,அதற்கு அடுத்த இரண்டாவது சாதனம் நான்கு ஒழுக்கங்கள் என்பதுவும் ஆகும்.*
அடுத்து மூன்றாவது சாதனமாக " *பரவிசாரம்* " கூறப்படுகின்றது.
இந்தப் பரவிசாரத்தின் மூலமே *"நிராசை" என்னும் மேலானப் படியை* அடைய இயலும் என்பதாலும் ,
*இந்த நிராசை படியை அடைந்துவிட்டால் இவ்வுலகப்பற்றை விடுத்து அம்பலப் பற்றையே பற்றாகப் பற்றிக்கொண்டு பெறவேண்டிய பெருவாழ்வைப் பெற்றுக்கொள்ளலாம் என்பதால் இங்கு "பரவிசாரத்தை"மூன்றாவது சாதனமாக சொல்லப்பட்டுள்ளது.*
ஆனால் உரைநடைப் பகுதியில் பரோபகாரம் பரவிசாரம் என்ற இரண்டு மட்டுமே சன்மார்க்க சாதனமாகச் சொல்லப்பட்டிருக்கும் .
ஏனென்றால் *சுத்தசன்மார்க்கத்தார்கள் என்றாலே இந்திரிய கரண ஒழுக்கம் சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதுதான் .*
மேற்கண்ட இந்த இரண்டு ஒழுக்கத்தையும் ஜீவர்களாகிய நமது நற்செயலாலும் முயற்சியாலும் அடைந்துகொண்டால் அடுத்துள்ள ஜீவஒழுக்கம் மற்றும் ஆன்மஒழுக்கம் திருவருள்துணையால் விரைந்து அடைந்துகொள்ளலாம் .
எனவே,
சுத்தசன்மார்க்கத்தில் பயணிக்கும் அன்பர்களுக்கு , *சாந்தசற்குணத்தை விருத்திசெய்விக்கும்இந்திரிய கரண ஒழுக்கங்களும்,*
*அன்பையும் அறிவையும் விருத்திசெய்விக்கும் ஜீவகாருண்ய ஒழுக்கமாகிய பரோபகாரமும்,*
*இவ்வுலகப்பற்றை விடக்கூடிய நிராசை என்னும் படியை அடைவிக்கும் "பரவிசாரமும் " ஆகிய மூன்று சாதனங்களும் மிகவும் அவசியமாகும்.*
🙏🔥🌻 *மேற்கண்ட சாதனத்தால் பெறக்கூடிய சுத்தசன்மார்க்க சாத்தியங்கள்** 🌻🔥🙏
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
மேற்கண்ட சாதனங்களைக்கொண்டு சுத்தசன்மார்க்க நெறியில் நன்முயற்சியுடன் வாழ்ந்துவருகின்ற ஜீவர்கள் அடையக்கூடிய புருஷார்த்தங்களாகிய சாத்தியங்கள் நான்காகும் .
அவை,
*1:ஏமசித்தி(தங்கம் செய்தல்), 2: சாகாக்கல்வி, 3:தத்துவ நிக்கிரகம்,4:கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்.*
என்ற நான்கு அரியபெரிய புருஷார்த்தங்களைப் பெற்று *சுத்தசன்மார்க்கப் பெருநிலையாகிய அருட்பெருஞ்ஜோதி இயற்கை என்னும் அருள்தேகம் பெற்று, அருள்நிலையில் நின்று, அழிவற்ற அருள்வாழ்வாகிய, மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்தல்கூடும் என்பதாம்.* நாமும் அவ்வண்ணமே சாதனத்தை தொடர்ந்து சாத்தியத்தைப் பெற்று வாழ்வதற்கு திருவருள் துணைக்கொண்டு முயல்வோம் 🔥🙏
.....நன்றி🙏
...வள்ளல் பெருமான் மலரடிப் போற்றி போற்றி🙏
....பெருமான் துணையில் 🙏
...தயவுடன் வள்ளல் அடிமை🙏
....வடலூர் இரமேஷ்;
Wednesday, January 2, 2019
[vallalargroups:6070] பெருமான் உருவத்தை வணங்காதவர்களும் வணங்க மறுபபவர்களும் சிந்திக்கவேண்டியவை.
பெருமான் உருவத்தை வணங்காதவர்களும் வணங்க மறுபபவர்களும் சிந்திக்கவேண்டியவை.
பெருமானின் தேகம் மற்றவர்களைப்போல் அழியவில்லை .முத்தேக சித்தி பெற்றவர் . இன்றும்அவர் தேகம் தகுதியுள்ளவர்க்குத் தோன்றும்.
பெருமான் சித்தியடைந்த பிறகு இமயமலைச்சாரலில் பெருமானை கண்டதாக தியாசபிகல் சொசைட்டி அம்மையார் குறிப்பிடுகின்றார். தேகம் இல்லாமல் ஆன்மா ஜீவிக்கமுடியாது இது பெருமானின் வாக்கு .
மேலும் ஸ்தூல தேகம்,சூட்சும தேகம்,காரணதேகம் என மூன்று தேகங்களையும் சித்தி செய்து முத்தேக சித்தியடைந்தவர் . தேவை்படும்போது மூன்றுமே வெளிப்படும்.
என்னைபார்க்க வேண்டுமெனில் உன்னைப்பாருங்கள்.உன்னைப்பார்க்க வேண்டுமெனில் என்னைப்பாருங்கள். என்பதும் பெருமானின் திருவாக்கு.
பேரறிவில் சமயங்கடந்த நிலையில் இயற்றிய அகவலில்
உருவமும் அருவமும் உபயமுமாகிய அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி. என்று உருவமாகவும் அருவமாகவும் உரு அருவமாகவும் அருள்பாலித்துக்கொண்டிருக்கின்றது அருட்பெருஞ்ஜோதி.
உருவ அருவ உருஅருவமாகிய மூன்று வழிபாடும் சன்மார்க்கத்தில் உண்டு.
உருவ வழிபாடு-ஆண்டவரோடு கலந்த பெருமானின் உருவம் மற்றும் கடவுள் காரியப்படும் உத்தமமான ஆன்மவியாபகமாகிய மனித தேகங்கள். ஏனெனில் கடவுளால் செதுக்கப்பட்ட சிலைகளாகவும் நடமாடும் ஆலயங்களாகவும் விளங்குவதால் ஆகும்.
உரு அருவ வழிபாடென்பது ஜோதியை வழிபடுவதாகும்.
அருவ வழிபாடென்பது ஞானசிங்காதன பீடத்தை வைத்து அதில் ஆண்டர் அமர்ந்து அருட்செங்கோலாட்சி செய்து வருகின்றதாக பாவித்து வணங்குவதாகும்.
இந்த மூன்று வழிபாட்டையும் நாம் வழிபடச் செய்வதற்காக வடலூரில் சத்திய தருமச்சாலையில் பசியாற வந்திருக்கும் ஜீவ தேகமாகிய நடமாடும் ஆலயமாகிய மனித தேகத்தை வணங்கி வழிபடுவது.
ஞான சபையிலும் சித்திவளாகத்திலும் ஜோதி வழிபாடு
சித்தி வளாக திருவரறையில் அருவ வழிபாடாக உள்ளது.
உருவ வழிபாட்டில் மல ஜல உபாதி உள்ள இந்த மனித கேத்தையே வணங்கச் சொன்னார் என்றால் முத்தேக சித்தி பெற்ற சுத்ததேகத்தை வணங்கக்கூடாது என்பது தவறான புரிதல் .ஆகும்.
உலகத்திலேயே முதலில் வணங்கவேண்டிய உத்தமமான புனிதமான உருவம் பெருமானின் உருவமேயாகும் .
உருவ வழிபாட்டை தவிர்ப்பது உங்கள் கொள்கையானால் தீப கூன்டும்ஓர் உருவம் தானே அதில் ஜோதியும் ஒரு உருவம் தானே ஏன் இந்த உருவத்தை வழிபடவேண்டும் .
கடவுள் ஔி வடிவானவர்தான். அந்த ஔியைக்காட்ட உருவமான கூன்டும் அகலும் தேவைப்படுகிறதே கடவுளை வணங்குவேன் ஐனால் ஆலயத்தை வணங்கமாட்டேன் என்றால் எப்படி.
ஆலயம்அவசியமில்லையென்றால் கடவுள் நேரடியாக ஔி வடிவிலே வந்து நமக்கு சுத்த சன்மார்க்கத்தை போதித்திருக்கலாம் அல்லவா ஏன் சிதம்பரம் ராமலிங்கம் என்ற உருவில் வர வேண்டும்.
பெருமான் உருவத்தை வழிபட மறுப்பதென்பது பெருமானின் முத்தேக சித்தியையே மறுப்பதாகிவிடும் . மேலும் இப்பொழுது பெருமான் இல்லையென்றாகிவிடும்.
பெருமானின் உருவத்தை ஆலயமாகத்தான் வழிபடுகிறோம் . கடவுளை ஔியாகத்தான் வழிபடுகிறோம். தவறில்லையே.
நமக்கு பெருமான் ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் கூறியதாவது தமது குடும்ப செலவை கூடியமட்டில் குறைத்து அதை ஜீவகாருண்யத்திற்கு பயன் படுத்த வேண்டும் என்கிறார் ஆகையினால்
பெருமானின் உருவத்திற்கு பூமாலை கற்பூரம் தேங்காய் பழம் வத்தி போன்றவை அவசியமல்ல அந்த பணத்தில் ஜீவகாருண்யம் செய்வதே சரியானததாகும் .
உருவம் கரைந்து அருவமாகும்.இது உண்மை .
பெருமான்என்னை தெய்வமென சுற்றாதீர்கள் என்று கூறியதன் பொருள் பொது ஜனங்களின் இடையூறுகளை தவிர்ப்பதற்காகவே. உதாரனத்திற்கு அன்பர் ஒருவர் திருமனம் செய்து கொள்ளலாமா என்று பெருமானிடம் கேட்டதற்கு சிவ சிந்தனையிலிருந்துகொண்டு ஆயிரம் திருமணம்கூட செய்யலாம் என்கிறார். உடனேஎல்லாசன்மார்க்கிகளும் 1000கல்யானம் செய்வதில்லையே ஏன் . அதுபோலத்தான் என்னை வணங்காதீர் என்பது.
பெருமான் தனது உருவபொம்மையை போட்டுடைத்ததென்பது தற்பெருமையையும் தற்புகழ்ச்சியையும் விரும்பவில்லை என்ற அர்த்தமாகும் . அதேசமயத்தில் மரணந்தவிர்ந்தேன் என்ற அறையப்பா முரசு என்று கூறியிருப்பதையும் ஒப்பிட்டால் உண்மை விளங்கும்.
கடவுள் நியைறிந்து அம்மயமான எக்காலத்தும் அழியாத சுத்ததேக உருவப்படத்தை வணங்குவது உத்தமமாகும் .
இதற்கு மாறாக உருவப்படத்தை வணஙகாமலிருப்பதோடில்லாமல் பெருமானின் உருவப்படத்தை கிழிப்பது போட்டோவை உடைப்பது சிலையை உடைப்பதென்பது அறியாமை மேலும் கண்டிக்கத்தக்கதாகும்.
மேலும் திருநீரணிவது பற்றியும் 5திருமுறைகள் பற்றியும் விரைவில் விரிவாக பார்ப்போம்.
திருச்சிற்றம்பலம்
-சாது ஹரி
Wednesday, December 26, 2018
[vallalargroups:6069] அகவல் தரும் விளக்கம்
உயிர்உறும் உடலையும் உடல்உறும் உயிரையும்
அயர்வறக்காத்தருள்அருட்பெருஞ்ஜோதி
ஒரு துறவியிடம்
இளைஞன் ஒருவன்...
வேலையும் இல்லை
கையில் பணமும் இல்லை...
வாழ்வதை விட
சாவது மேல் என்றான்...
அப்பா...கைகள் இரண்டை
வெட்டிக் கொடு...
இரண்டு லட்சம் தருகிறேன் என்றார்...
பதறி மறுத்தான் இளைஞன்...
சரி..உன் கண்களைக் கொடு
ஐந்து லட்சம் தருகிறேன் என்றார்...
பிதற்றாதீர்கள் என்றான் இளைஞன்...
சரி...இதயத்தைக் கொடு
இருபது லட்சம் தருகிறேன் என்றார்...
கோபத்தின் எல்லையிலே
இருந்த இளைஞன்...
முனிவரா நீர்...?
வாழ வழி கேட்டால்
சாக வழி சொல்கிறீரே என்றான்...
முனிவர் உரைத்தார்...
முட்டாளே...விலைமதிப்பிலா
உடலினைப் பெற்ற நீ
உழைக்கக் துணியவில்லையே...
உன் உயிரும் உனக்கு வீணே என்றார்...
உண்மை உணர்ந்தான்
உழைத்துப் பிழைத்தான்...
ஆக இறைவன் உடலைக் கொடுத்து
அதனுள் உயிரைக் கொடுத்து
இயங்க வைக்கையிலே...
உயிர் நிலைத்து வாழ
நீ உடலைக் காக்க வேண்டும்...
சரிவிகித உணவும்
சத்துவ உணவும் உண்டு...
அவைகள் உன் உழைப்பாலே
எரிபொருளாக ஆக வேண்டும்...
அளவோடு உண்டு
மிகுதியாய் உழைத்து
ஆற்றலை வெளிக்கொணர...
உடல் பாகங்கள்
இணக்கமாக வளையும்...
தின்பதை மட்டுமே
வழக்கமாய் கொண்டால்...
உடல் பாகங்கள்
இயக்கமும் முடங்கி
உயிர் பறந்தோட துடிக்கும்...
ஆகவே உறவுகளே
உடலும் உயிரும்
ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் படி
இறைவன் வகுத்திருக்கிறார்...
உயிரைக்காக்க உடல்
வளர்த்தேன் என்று
திருமூலர் சொன்னார்...
உயிரைப்பொருந்தி
உடல் இருக்கவும்...
உடலைச் சார்ந்து
உயிர் இயங்கவும்...
இவை இரண்டினையும்
சோர்வின்றி காப்பதே...
அருட்பெருஞ்ஜோதியின்
அருள் பணி என்பதாக
பெருமானார் உரைக்கிறார்...
உயிர்உறும் உடலையும்
உடல்உறும் உயிரையும்
அயர்வறக்காத்தருள்
அருட்பெருஞ்ஜோதி...
Sunday, December 23, 2018
[vallalargroups:6068] யார் சன்மார்க்கிகள்..
எமது தெய்வம் எமதுதெயவம் என்ற மதப்பற்றுடைய சங்கற்பவாதிகளும்
மற்ற ஞாநிகளை தூஷனம் செய்யும் விகற்பவாதிகளும்
சன்மார்க்கத்திற்கு அருகராகர்கள் .
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா நிலை பெருமான் நிலை என்பதை ஏற்காதவரும்
உலகில் தரு நெறியெல்லாம் உள்வாங்கும்படியான பொது நோக்கும் சமரச நோக்கும் இல்லாத வெறுப்புணர்ச்சியும் விரக்தியும் உடையவரகள் பெருமானின் சமரச சுத்த சன்மார்க்கத்திற்கு எதிரானவர்களே இவரகளிடமிருந்து அருட்பாவை காப்பாற்ற வேண்டும். எல்லா சமயங்களுக்கும் பொது வேதமாக தருவருட்பா திகழழ வேண்டும் இந்த புரிதலலில்லாதவர்கள் சன்மார்க்கி என்பது எப்படி.
திருவருட்பா எல்லா சமய மதங்களின் அந்தங்களை தனக்கு பூர்வமாக்கி தான் உத்திரத்தில் ஏறி நிறபதாகும்.
இவ்வுலகில் தந்தை சொல் கேளா பிள்ளைகள் .
வள்ளற் பெருமான் அடைந்த நிலையை மற்ற ஊஅருளார்களி்ன் நிலையோடு இணை துனை வைப்பவர்கள்.
தான் தன்னுடைய நிலையறியாது பிரம்ம நீதி கேட்போர் பிரம்மையாவே சாதிப்பர் போதிப்பர் போல் ரணமிலாப் பெருவாழ்வையும் சுத்த சன்மார க்கத்தையும் படித்துவிட்டு கற்பனை சு.சன்மார்க்கியாக மற்ற அருளாளர்களை தூஷனம் செய்பவரகள். எல்லா சமய ம ஆச்சாரங களையும் தவிர் த்து பெதுவாகிய ஞான ஆச்சாரத்தை தயவை கடைபிடிக்காதவர்களே.
பூர்வத்தை உத்திர நிலையோடு ஒப்பிடும் குழப்பவாதிகளும்,பூர்வமென்பது ஒன்று இல்லை தேவையுமில்லை என்கின்ற கற்பனை சன்மார்க்கிகளும்தான் இதுவரை யாரும் நிலையடையாததின் காரணம்
Hari,Vadalur
Friday, December 21, 2018
[vallalargroups:6067] ஜீவகாருண்யம்
🌲🍍 ஜீவகாருண்யம். 🍍🌲
சமுசாரிகள் விவாக முதலிய விசேஷ
காரியங்களில் பந்தலை அலங்கரித்துக் -
அவ்விடத்தில் வேறு வேறு சடங்குகளைச்
செய்வித்தும் - ஆடல், பாடல், வரிசை,
ஊர்வலம் முதலிய விநோதங்களை அப்ப வர்க்கம், சித்திரான்னம் முதலிய பெருமைப் பாடுகளையும் நடத்தியும் எக்களிப்பில்
அழுந்தியிருக்குந் தருணத்தில் -
பசித்த ஏழைகள் முகத்தைப் பார்க்கவும் சம்மதிக்கவில்லை. இப்படிப்பட்ட சந்தோஷ காலத்தில் தமக்காயினும், தமது மக்கள், துணைவர் முதலியோர்க்காயினும், ஒவ்வோர் ஆபத்து நேரிடுகின்றது.
அப்போது, அவ்வளவு சந்தோஷத்தையும் இழந்து துக்கப்படுகின்றார்கள்.
இப்படி துக்கப்படும்போது அலங்காரஞ் செய்த பந்தலும், சங்கல்ப விகல்பமான சடங்குகளும், -ஆடல் ,பாடல்
வாத்தியம் , வரிசை ஊர்கோலம் முதலிய
வினோதங்களும் அப்பவர்க்கம் சித்திரா
அன்னம் முதலிய பெருமைப்பாடுகளும்
அந்த ஆபத்தை தடை செய்யக்கண்ட
தில்லை.
அந்த சுப காரியத்தில் உள்ள
படியே பசித்த ஜீவர்களுக்கு ஆகாரங்
கொடுத்துப் பசியை நீக்கி அவர்கள்
அகத்திலும் முகத்திலும் கடவுள் விளக்க
த்தையும்,கடவுளின்பத்தையும் வெளிப்பட செய்திருந்தார்களானால்
அந்த விளக்கமும் இன்பமும் அத் தருணத்தில் நேரிட்ட ஆபத்தை நீக்கி, விளக்கத்தையும் இன்பத்தையும் சத்தியமாக உண்டு பண்ணும்
அல்லவா?,ஆதலின் விவாக முதலிய
விசேஷச் செய்கைகளிலும் தங்கள்தங்கள் தரத்திற்கு ஒத்தபடி பசித்தவர்களது பசியை ஆற்றுவித்துத் திருப்தியின்பத்தை உண்டுபண்ணுவது முக்கியமென்று அறிய வேண்டும். 🌹 வள்ளலார் 🌹
🍒இனிய காலை வணக்கம். 🍒
Thursday, December 20, 2018
[vallalargroups:6066] Today Pasi Atruvithal by Magendran, KRPuram, Bangalore
சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளுக்குப் பசியாற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருணிய அனுசரிப்பு கல்வி அறிவு செல்வம் போகம் முதலானவைகளை உண்டு பண்ணுமென்பது உண்மை.
Thursday, December 13, 2018
[vallalargroups:6065] அற்புத மருந்துங்க..
- வாழ்க்கையில் - குடும்பத்தில்,
- நிம்மதி இல்லையா?பிரச்சனையா?
- தீராத வியாதியா?
- வியாபாரத்தில் நஷ்டமா?
- குழந்தை பாக்கியம் இல்லையா?
- கல்வி, அறிவு, செல்வம் வேண்டுமா?
- தீர்க்க ஆயுள் வேண்டுமா?
- மரணத்தை வெல்ல வேண்டுமா?
கவலை வேண்டாம்...
நல்ல மருந்து...
சஞ்சலம் தீர்க்கும் மருந்து...
சுகம் நல்கும் வைத்தியநாத மருந்து...
நம்முள் என்றும் விடாமல் இனிக்கும் மருந்து..
சொல்லால் அளவா மருந்து...
சுயஞ்ஜோதி மருந்து எனும் அருட்பெருஞ்ஜோதி
அற்புத மருந்துங்க..
ஆனந்த மருந்து..
அரிய மருந்துங்க...
பெரிய மருந்துங்க...
ஞான மருந்துங்க..
இந்த மருந்து எங்கும் விலைக்கு கிடைக்காதுங்க..
விற்க, வாங்க முடியாதுங்க..
புண்ணியம் எனும் ஜீவகாருண்ய ஒழுக்கம் செய்தால் மட்டும் இந்த மருந்து கிடைக்கும்ங்க...
வேரெறங்கும் கிடைக்காதுங்க...
கிடைக்குமிடம்.. .அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் ...
வேறு எங்கும் கிளைகள் இல்லைங்க..
நன்றி. வந்தனம்...
Monday, December 10, 2018
[vallalargroups:6064] சமாதி வற்புறுத்தல் ::: பெற்றோர்,உறவினர்களை கொலை செய்யாதீர்கள்.
குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட்
டால்அதுதான் கொலையாம் என்றே
வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச்
சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்
சம்மதிக்கும் பேய ரேநீர்
எணம்புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற்
டால்அதுதான் கொலையாம் என்றே
வணம்புதைக்க வேண்டும்என வாய்தடிக்கச்
சொல்கின்றேன் வார்த்தை கேட்டும்
பிணம்புதைக்கச் சம்மதியீர் பணம்புதைக்கச்
சம்மதிக்கும் பேய ரேநீர்
எணம்புதைக்கத் துயில்வார்நும் பாற்றுயிலற்
கஞ்சுவரே இழுதை யீரே.
..........
குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டது
சுட்டால் அதுதான் கொலையாம் என்றே
வணம் புதைக்க வேண்டும் என வாய்தடிக்கச்
சொல்கின்றேன்
வார்த்தை கேட்டும்,பிணம்புதைக்கச் சம்மதியீர்
பணம்புதைக்கச் சம்மதிக்கும் பேயரே
நீர் எணம்புதைக்கத் துயில்வார்
நும் பாற்றுயிலற் கஞ்சுவரே இழுதை யீரே
[vallalargroups:6063] சிதம்பர இராமலிங்க சுவாமிகளுக்கு வந்தனம்
சிதம்பர இராமலிங்க சுவாமிகளுக்கு வந்தனம்
🥦🥦🥦🥦🥦🥦🥦🥦
🍓நாம் பல பிறவிகளை கடந்து மேலான மனிதப்பிறவி எடுத்தது இறைவனின் திருவருளைப் பெறுவதற்காகத் தான்.🍓
🍎உண்மையை பேசுங்கள்.அது உங்கள் வார்த்தைகளை பாதுகாக்கும்.🍎
🍊உள்ளத்தில் தயவு இருந்தால்,கடவுள் அருள் நிச்சயமாக கிடைக்கும்.🍊
🍋பசித்தோர் முகம் கண்டால் இரக்கம் கொள்ளுங்கள் ஜீவகாருண்யமே பேரின்பத்தின் திறவுகோல்.🍋
🍏உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக இருப்பவர்களின் உறவை நாட வேண்டாம்.🍏
🍈மன ஒருமையுடன் கடவுளின் திருவடியை வணங்கும் நல்லவர்களோடு பழகுங்கள்.🍈
🍑உனக்காக மட்டுமின்றி உன்னைச் சுற்றி இருப்போருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.🍑
🍅குற்றம் புரிவது மனித இயல்பு.அதையும் குணமாக ஏற்று அருள்வது கடவுளின் இயல்பு.🍅
🥗🥗🥗🥗🥗🥗🥗🥗
_இறைப்பணியில்_ _என்றும்_ _குஞ்சாண்டியூர்_ _சமரச_ _சுத்த_ _சன்மார்க்க_ _சத்திய_ _சங்கம்_ , _மேட்டூர்_ _அணை_ , _சேலம்_
🍩🍩🍩🍩🍩🍩🍩🍩
Sunday, December 9, 2018
[vallalargroups:6062] வள்ளலாரின் சமாதி வற்புறுத்தல் பாடல்
வள்ளலாரின் சமாதி வற்புறுத்தல் பாடல்::
பரன்அளிக்கும் தேகம்இது சுடுவது
அராதம் எனப் பகர்கின்றேன் நீர்
சிரம் நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்
பற்பலரும் சித்த சாமி
சிரம் நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்
பற்பலரும் சித்த சாமி
உரனளிக்க எழுகின்ற திருநாள்
வந்தடுத்தன ஈதுணர்ந்து நல்லோர்
வரனளிக்கப் புதைத்த நிலை காரோ
கண் கெட்ட மாட்டினீரே.
பரன்அளிக்கும் தேகம்இது..
இந்த தேகம் இறைவன் கொடுப்பது
சுடுவதுஅராதம் எனப் பகர்கின்றேன்:::
சுடுவது அபராதம்(Punishment) என சொல்கின்றேன்
நீர் சிரம் நெளிக்கச் சுடுகின்றீர்::
சிரம் துடி துடக்க உயிரை சுடுகின்றீர்கள்
செத்தவர்கள் பற்பலரும் சித்த சாமி::
செத்தவர்கள் பலரும் சாமிக்கு ஒப்பானவர்கள்
உரனளிக்க எழுகின்ற திருநாள்
வந்தடுத்தன ஈதுணர்ந்து :: இதனை உணர்ந்து
நல்லோர் வரனளிக்கப் புதைத்த நிலை::
நல்லோரை புதைத்தால் இறைவன் வரம் அளிப்பார்
காரோ கண் கெட்ட மாட்டினீரே :: இதனை உணராமல் கண்மூடி தனமாக செய்து,சுட்டு அபராத்தை , கொலை சாபத்தை வாங்கி கொள்ளாதீர்கள்..
[vallalargroups:6061] சமாதிக் கட்டளை
சமாதிக் கட்டளை
1. சமாதி வற்புறுத்தல் என எச்சரிக்கை பத்திரிகை கைப்பட எழுதியுள்ளார்கள்.
2. சமாதி வற்புறுத்தல் என பதிகம் இயற்றி உள்ளார்கள்.
சில வாசகங்கள்::
1.சுடுவது கொலை
2. சிரம் நெளிக்க சுடுகின்றீர்
3. சுடுவது அபராதம்
4. பணம் புதைக்க சம்மதிக்கும் நீர் ஏன் பிணம் புதைக்க சம்மதீயீர்?
5.இறந்தவரை எரிப்பது என்பது தூங்குபவனை எரிப்பதற்கு சமம்.
நண்பர்களே, நலம்சார் பண்பர்களே, இறைசார் அன்பர்களே நமது 'சாகாஅருளர் வள்ளலார்' இதனை உலகியலர்களுக்கு "சமாதிக் கட்டளை" என்றே நமக்கு கட்டளை (ORDER) இடுகின்றார். ஓர் அரசின் அதிகாரத்தை பெற்றவர்கள் மட்டுமே கட்டளை இடமுடியும் என்பது தெரிந்ததே. அதுபோல 'சாகாஅருளர் வள்ளலார்' அருட்பெருஞ்ஜோதி' ஆண்டவரின் 'செங்கோலை' பெற்று அண்ட சராசரங்களையும் தற்போதும், எப்போதும் ஆட்சி செய்து வருகின்றார், அப்படிப்பட்ட சாகாஅருளரின் அரசக் கட்டளைதான் இது. இதனை மீறுபவர்கள் தாங்களகவே சுடுகாட்டில் தண்டித்துக்கொண்டுவிடுகிறார்கள் என்பதனைக் கவனிக்க வேண்டும்.
அது என்ன 'சமாதிக் கட்டளை' என்பதனை பார்ப்போம்...
இக்கட்டளை நமது 'சாகாஅருளர் வள்ளலார்' 30-03-1871 ஆம் ஆண்டு தமது அரச ஆணையாக வெளியிட்டார், அதனை அப்படியே இங்கே மீண்டும் (26-04-2013) இவ்வுலக மக்களுக்காக சாகாஅருளரின் ஆணைப்படி வெளியிடுகிறேன்.
அன்புள்ள நீங்கள் சமரச வேதசன்மார்க்க சங்கத் தருமச் சாலைக்கு மிகவும் உரிமையுடையீர்க ளாகலின் உங்களுக்கு உண்மையுடன் அறிவிப்பது.
நீங்களும் உங்களை அடுத்தவர்களும் சிற்றம்பலத் தந்தையார் திருவருளாற் சுகமாக வாழ்வீர்களாக,
கர்மகால முதலிய பேதங்களால் யார்க்காயினுந் தேக ஆனி நேரிட்டால் தகனஞ் செய்யாமல் சமாதியில் வைக்கவேண்டும். இறந்தவர்கள் திரும்பவு மெழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போம் என்கிற முழு நம்பிக்கையைக் கொண்டு எவ்வளவுந் துயரப்படாமலும் அழுகுரல் செய்யாமலும் சிற்றம்பலக் கடவுள் சிந்தையுடனிருக்க வேண்டும். புருடன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம். மனைவி இறந்தால் புருடன் வேறு கல்யாணப் பிரயத்தனஞ் செய்யவேண்டாம். பிள்ளைகள் இறந்தால் சஞ்சலிக்க வேண்டாம். கர்ம காரியங்கள் ஒன்றுஞ் செய்யவேண்டாம். தெரிவிக்கத்தக்கவர்களுக்குத் தெரிவித்து ஒரு தினத்தில் நேரிட்டவர்களுக்கு நேரிட்டமட்டில் அன்ன விரயஞ் செய்ய வேண்டும். இவ்வாறு உண்மையாக நம்பிச் செய்யுங்கள். செய்திருந்தால், சமரசவேத சன்மார்க்க சங்கமும் மேற்படி தருமச்சாலையும் நிலைபெற விளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் சிதம்பரஞ் கோயில் திருச்சபைகளைப் புதுக்கி நிலைபெறவிளக்கஞ் செய்யும் பொருட்டாகவும் கருணை கூர்ந்துஎனது தந்தையாராகிய எல்லாம் வல்ல திருச்சிற்றம்பலக் கடவுள் பார்வதிபுரம் சமரச வேதசன்மார்க்க சங்கத் தருமச்சாலைக்கு எழுந்தருளிக் காட்சி கொடுக்குந் தருணம் மிகவும் அடுத்த சமீபமாக விருக்கின்றது அந்தத் தருணத்தில் சாலைக்கு உரியவர்களாகியிருந்து இறந்தவர்களையெல்லாம் எழுப்பிக் கொடுத்தருளுவார். இது சத்தியம். இது சத்தியம். இந்தக் கடிதம் வெளிப்பட்டறிந்து கொள்ளாமுன் இறந்து தகனமானவர்களையும் எழுப்பியருளுவார். இது வெளிப்பட்டறிந்த பின் தகனஞ் செய்தல் கூடாது அது சன்மார்க்கத்திற்கு தக்கதல்ல. ஆகலில் மேற்கண்டபடி உண்மையான நம்பிக்கையுடன் வாழ்வீர்களாக.
எனக்கு உலக அறிவு தெரிந்தது தொட்டு எனது தந்தையார் திருவருளை நாம்அடையும் வரையில், என்னுடன் பழகியும் என்னை நம்பி யடுத்தும் என்னைக் கேள்வியால் விரும்பியும் எனக்கு உரிமைப்பட்டும் இருந்து இறந்தவர்களையெல்லாம் எழுப்பிக் கொடுத்து சமரச சன்மார்க்க சங்கத்தை விருத்தி செய்விக்கத் திருவுள்ளத்துக் கருதிய பெருங்கருணை வள்ளல் சாலைக்கு உரியவர்களாகி யிருந்தும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றவர்கள் விஷயத்திலும் இந்த உபகாரம் செய்தேயருளுவர். ஆனால் அவர்கள் சன்மார்க்க சங்கத்திற்கு மாத்திரம் அருகராகார்கள். ஆகலில் நம்பிக்கையுடன் இருங்கள். பெரிய களிப்பை யடைவீர்கள். இது சத்தியம். இது சத்தியம்.
பிரமோதூத வருடம் பங்குனி மாதம் 18. பார்வதிபுரம்.
இப்படிக்கு
சிதம்பரம் இராமலிங்கம்
Friday, December 7, 2018
[vallalargroups:6060] அருளாகிய தயவை" பெற்றுக்கொள்ள வேண்டுமானால்
🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !
🙏🔥 கடவுள் தயவாகிய பூரண அருளைப் பெற்றிடவே சுத்தசன்மார்க்கம் 🔥🙏
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனம்🔥🙏
தனிப்பெருங்கருணை நாயகியாம் மைவிழி அம்மை சிவகாமவல்லி என்று சொல்லக்கூடிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய "அருளாகிய தயவை" பெற்றுக்கொள்ள வேண்டுமானால் ,
ஆன்மாக்களின் ஜீவதயவைக்கொண்டுதான் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும் 🌺
எப்படி என்னில்,
கடவுளது அருளைப் பெறவேண்டுமாயில் ஜீவகாருண்யம் ஒன்றினால் மட்டுமே பெறுதல்கூடுமேயல்லது வேறு எந்த வகையினாலும் பெறுதல்கூடாது ,
இந்த இடத்தில் நமது பெருமான் அழுத்தமாக கூறுகின்ற இந்த வார்த்தையை அனைவரும் சற்றும் அகங்காரம் இன்றி உற்றுக் கவணித்து ஏற்றுக்கொள்ளுதல் வேண்டும் 🙏
கடவுளின் அருளைப் பெறவேண்டும் என்று கருதி வீணில் அங்கும் இங்கும் ஓடி இழுத்தல் அடக்குதல் விடுதல் என்று காலத்தை வீணடித்து பயனற்று அருளை பெறுவதற்கு வழிதுறை தெரியாமல் பிறவியை தொலைத்து விடக்கூடாது🌺
ஏனென்றால் ,
பெருமான் இங்கு மிகமிக அழுத்தமாக கூறுகின்ற வார்த்தை என்னவென்றால் ,
ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் மட்டுமே கடவுளது அருளைப் பெறக்கூடும்.
வேறு எந்த வழியிலும் .....
என்ன கூறுகின்றார்கள் ?
வேறு எந்த வழியிலும் கடவுளது அருளை "சிறிதும்" இதையும் நன்றாக கவணிக்க வேண்டும் .
சிறிதும் பெறுதல்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும் என்று ,
உறுதி என்ற வார்த்தையையும் பயன்படுத்தி கூறுகின்றார்கள் என்பதை சற்று நன்றாக ஊன்றி கவணித்திட வேண்டி சகோதர சகோதரிகளை பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன் 🔥🙏
மற்றொரு இடத்தில் ,
சுத்தசன்மார்க்கத்திற்கு என்று ஏதாவது சாதனம் வேண்டுமா என்றால் !
அதற்கு பெருமான் சொல்லுகின்ற வார்த்தையையும் நன்றாக கவணியுங்கள்.
சாதனங்கள் ஒன்றும் வேண்டாம் .
ஏதாவது ஒருசாதனத்தை சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம் .
அதைக்கண்டு பல்லிளித்து இறுமாந்து கெடநேரிடும் ......
இந்த இடத்தை ஒருமுறைக்கு பலமுறை கவணிக்க வேண்டியது அவசியம்....
என்னவென்றால் ,
ஏதாவது ஒரு சாதனத்தை கூறினால் அதன்படி நடந்தால் சிறு ஒளி காணநேரிடும் என்றால் !
இங்கு சிறு ஒளி காண்பதற்கு உரிய சாதனம் எது என்றால் !
திருவருட்பா ஆறாம்திருமுறையில் அருள்விளக்க மாலையில் கூறியுள்ளபடி,
உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்,
புற்றெழுந்தும் ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப் பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பதரிதாய்ச்.......
என்று கூறிய நிலையைப் போன்றும்,
விழித்து விழித்து பார்த்தாலும் சுடர் உதயம் இலையேல்,
விழிகள் விழித்திளைப்பதால் விளைவொன்றும் இலையே என்றும்....
கூறுவதையும் இங்கு கவணிக்க அந்த சாதனம் எதுவென்று நமக்கு விளங்குகின்றது .
ஆகலில் ,
இப்படிபட்ட சாதனத்தை தொடர்ந்தால் முடிவில் ஓர் சிற்றொளி கண்டு அதில் உண்டாகும் அற்ப சித்தியில் பல்லை இளித்து மகிழ்ந்து இறுமாந்துகிடந்து ,
கெடநேரிடும் இதனால் நாம் அடையவேண்டிய பெரிய லட்சியத்தை அடைவதற்கு காலமில்லாமல் அற்ப சித்தியையும் அதற்குரிய சித்திக்காலம் முடிந்தபின் பிறவியை இழக்க நேரிடும் என்று பெருமான் அந்த அற்ப சிற்றொளியை தருகின்ற சாதனம் வேண்டாம் என்று கூறி,
சுத்தசன்மார்க்க லட்சியத்தை அடையக்கூடிய சாதனம் எதுவென்றால் "எல்லா உயிரையும் தன்னுயிர் போல் பார்க்கும் உணர்வை காலம் தாழ்த்தாது விரைந்து வருவித்துக்கொள்ளுதல் வேண்டும் "
இதுவே சாதனம் .
இந்தக்குணம் வந்தவர் எவரோ அவர்தான் இறந்தாரை எழுப்புகின்றவர் என்றுகூறுகின்றார்கள் நமது பெருமான்🌺
இதைத்தான் அருட்பெருஞ்ஜோதி அகவலில்,
"உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே" என்று மிக மிக அழகாக கடவுள் இருப்பிடத்தைக்காட்டி அங்கு அதற்கு உபகாரம் செய்தால் அது நேரடியாக கடவுளுக்கே செய்த புண்ணியத்திற்குரியதாய் இருக்கின்றது என்று கூறி,
இவ்வுலகில் கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிர்களிலும் கடவுள் வாழுகின்றார்கள் .
ஆதலில்,
அக்கடவுளின் ஆலயமாக விளங்கும் அவ்வுயிர்களின் தேகத்திற்கும் அவ்வுயிர்களுக்கும் உண்டாகும் துன்பத்தை போக்குவதாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் அத்தேகத்தில் குடியிருக்கும் ஆண்டவரின் கருணைக்கு உரியவர்களாகின்றோம்.🌺🙏
ஆகலில்,
அருள் என்பது கடவுளுடைய தயவு.
ஜீவகாருண்யம் என்பது ஜீவர்களுடைய தயவு.
இந்த சிறிய ஜீவ தயவைக்கொண்டுதான் , கடவுளுடைய பெரிய தயவைப் பெறுதல் கூடும் என்பது சத்தியம். இதற்கு வேறு எந்த வழியும் கிடையாது என்பது சுத்தசன்மார்க்க கடவுளின் ஆணையாகும்🔥🙏
ஆகலில் ,
சுத்தசன்மார்க்க லட்சியத்தை அடைய விரும்பும் ,
சுத்தசன்மார்க்க சாதகர்கள் ஜீவகாருண்யத்தையே கடவுள் வழிபாடாக செய்து , கடவுளுடைய பெருந்தயவாகிய அருளைப் பெறவேண்டும் என்பது கடவுள் ஆணையாகும் 🌺🙏
இதைவிடுத்து ,
தியானம் தவம் தீட்ஷை என்று அங்கும் இங்கும் ஓடி காலத்தை விரையமாக்கி கண்மூடி ஓர்இடத்தில் அமர்ந்து கிடந்தால் அதில் மூடம் உண்டாகும்,
இவ்வுலகம் அருட்சக்தி,பொருட்சக்தி,கிரியாசக்தி,யோகசக்தி"ஞானசக்தி மயமாக இருப்பதாகப் பார்த்துக்கொண்டிருத்தல் வேண்டும்.ஆனால் யோகம் செய்ய வேண்டுவதில்லை.
அதில் அழுந்திவிட்டால் மீளுவது கடினம்.
சதா சிவக் கலப்பாய் கிடந்தாலும் மீளுதல் கடினம்.மூடம் உண்டாகும் இது உண்மை என்று உரைநடை பக்க 388 ல் யோகத்தில் அழுந்த வேண்டாம் என்று பெருமான் அழுத்தமாக விளக்குகின்றார்கள் இவற்றைக் கவணித்து அனைவரும் கடைபிடித்தால் பெருமான் கூறியபடி பெறவேண்டியதை பெறலாம் இல்லையென்றால் அதுவே நமது கர்மாவாகும் 🌺
கடவுளை வழிபடும் விதத்தில் ,
தியானம் என்பதை கடவுளை ஸ்தோத்தரித்தல், சிந்தித்தல், தியானித்தல் என்ற வழிபாட்டின் ஒருவகையா இருத்தலே வேண்டும் .
ஆனால் சதா சர்வகாலமும் அதிலே அழுந்திவிடக்கூடாது .
இந்த நியதி சுத்தசன்மார்க்க சாதகர்களுக்கு பெருமான் விதித்தது.🌺🙏
🙏🏵 தயவு ,சகிப்புத்தன்மை 🏵🙏
🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻🌺🌻
பெருமான் ,
தன்னை இந்த பெரிய நிலைக்கு ஏற்றிவித்ததாக தமக்கிருந்த "தயவே" காரணம் என்று கூறி ,
அதுபோன்றே நீங்களும் தயவை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றார்கள் 🌺
நல்லது ,
அந்த தயவு எப்படி இருக்க வேண்டுமெனில்,
எண்ணுகின்ற எண்ணத்தில் "தயவு !
பேசுகின்ற பேச்சில் தயவு !
செய்கின்ற செயலில் தயவு !
தான் பற்றி இருக்கின்ற நெறியில் தயவு !
தான் செய்கின்ற கடவுள் வழிபாட்டில் தயவு !
பிறர்கு சொல்லுகின்ற உபதேசத்தில் தயவு !
பிறர் கூறுகின்ற உபதேசத்தை ஏற்பதில் தயவு !
ஆன்மநேயத்திலும் தயவு !
இரக்கம் பொருட்டு செய்கின்ற ஜீவகாருண்யத்திலும் தயவு !
ஒத்தார் உயர்ந்தார் தாழ்ந்தாரோடு செய்கின்ற விசாரத்திலும் தயவு !
இன்னும் மேலாக கூறவேண்டுமானால் உயிரற்ற பொருள் என்று அவமதிக்காமல் ,
சடப்பொருள்களின் மீதும் தயவுகாட்டுவதே சுத்தசன்மார்க்கத்திற்குரிய சிறந்த சாதனமாகும் 🌺🙏
மற்றொன்று சகிப்புத்தன்மை .
இந்த சகிப்புத்தன்மை வரவேண்டும் என்றால் ,
இங்கு நமக்கு நம் வாழ்வில் நடக்கின்ற நன்மைகளும், தீமைகளும் ,தடைகளும், தடையற்ற சகாய சாதக அனுகூலங்களும் ,இன்பங்களும், துன்பங்களும் ஆகிய எல்லாவற்றிற்கும் காரணம் நாமே நமது முன்வினையே என்று ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தினால் மட்டுமே இந்த சகிப்புத்தன்மை வரக்கூடும் 🌺
பெருமான் கூறுவார்கள் ,
ஒருவர் நமக்கு எப்படிபட்ட கொடிய தீங்கு செய்தாலும் ,
அவற்றை பொறுத்துக்கொண்டு ,
நாம் அவருக்கு பதிலுக்கு திருப்பி தீங்கு எதுவும் செய்யாமல் சகித்துக்கொண்டு பொறுமையுடன் அவருடைய அறியாமையையும் வினையையும் எண்ணி,
தற்போது அவர் நமக்கு செய்த தீங்கினால் அருள் நியதின்படி தணடனை அவருக்கு கிடைக்கக்கூடுமே ,
அந்த தண்டனைக்காகவும் இறைவனிடன் அவருக்காக இரங்கி வேண்டுதல் என்ற உயரிய "சகிப்புத்தன்மை" நிலையை பெருமான் அழகாக கூறுகின்றார்கள் 🌺🙏
ஆகலில் ,
சுத்தசன்மார்க்க சங்கத்து லட்சியர்களுக்கு தயவு சகிப்புத்தன்மை என்னும் இந்த இரண்டு சத்துவ சாத்வீக குணத்தைப் பெற்று நெறிப்படி வாழ்தல் சுத்தசன்மார்க்க லட்சியத்தை விரைந்து பெறுவதற்கு ஏதுவாகும் 🔥🌺🙏
......நன்றி🔥🙏
.....வள்ளல் மலரடிப் போற்றி !போற்றி !🔥🙏
.....பெருமான் துணையில் 🔥🙏
....தயவுடன் வள்ளல் அடிமை 🔥🙏
....வடலூர் இரமேஷ்.
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
Blessed Immortal Soul, I totally agree with the explanation given by Mr.Raja. Let us see what Saivasidhantha philosophy says. Si...
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
-- web : http://vallalargroupsmessages.blogspot.com | E-Mail : vallalargroups@gmail.com அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெர...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
-
Bangalore Monthly Sath Vicharam OneDay Program Bangalore - Monthly SATH-VICHARAM / 9.30 am to 4.30pm/ Monthly FIRST SUNDAY PROGRAM வடலூர் ரா...
-
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோ தி Vallalar advices the following ...
-
Dear Sir! as we want to purchase this book, pl send the address of this book. thanks ! On 4 June 2012 17:02, Sri Nithyahimaadri < himaadr...
-
DEAR MR. RAM ATLAST VALLALAR MADE YOU TO RAISE THIS SENSIBLE QUESTION. THANKS. PREVIOUSLY EVERYBODY WERE TRYING TO ATTAIN A STATE...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)










