Sunday, February 3, 2019

[vallalargroups:6078] நல்வழி.9.குடிப்பிறந்தார் இல்லை எனமாட்டார்

9.  ஆற்றுப் பெருக்கற் றடிசுடுமந் நாளுமவ்வாறு
       ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும்-ஏற்றவர்க்கு
       நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
       இல்லையென மாட்டார் இசைந்து

ஆற்றுப் பெருக்கு அற்று - ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய், 
அடி சுடும் அந்நாளும்-(மணலானது வெயிலினாலே காய்ந்து நடப்பவருடைய) அடியைச் சுடுகின்ற அக்காலத்திலும், அவ் ஆறு - அந்த ஆறானது, 
ஊற்றுப் பெருக்கால் - ஊற்றுநீர்ப் பெருக்கினால், 
உலகு ஊட்டும் - உலகத்தாரை உண்பிக்கும்; 
(அது போல) நல்ல குடிப்பிறந்தார்-நற்குடியிற் பிறந்தவர், 
நல்கூர்ந்தார் ஆனாலும்-வறுமையுடையவரானாலும், 
ஏற்றவர்க்கு - இரந்தவர்க்கு, 
இசைந்து - மனமிசைந்து, 
இல்லையென மாட்டார்-இல்லையென்று சொல்லமாட்டார் (இயன்றது கொடுப்பர்).

உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக் காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார் .

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)