செல்வம் நிலையாமை
சடமாகி இன்பம் தராதாகி மிகுபெருஞ் சஞ்சலா காரமாகிச்
சற்றாகி வெளிமயல் பற்றாகி ஓடும் இத்தன்மைபெறு செல்வம்ந்தோ
விடமாகி ஒருகபட நடமாகி யாற்றிடைவிரைந்துசெலும் வெள்ளம்ஆகி
வேலைஅலையாகி ஆங்கார வலையாகி முதிர் வேனில்உறு மேகம்ஆகிக்
கடமாய சகடமுறு காலாகி நீடுவாய்க்காலோடும் நீராகியே
கற்விலா மகளிர்போல் பொற்பிலா துழலும்இதுகருதாத வகைஅருளுவாய்
தடமேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே
-திரு அருட்பிரகாச வள்ளலார் (தெய்வமணி மாலை)
· ஜட பொருள். (செல்வம்)
· இன்பம் தராத பொருள். (செல்வம்)
· சஞ்சலத்திற்கு உரிய பொருள். (செல்வம்)
· வெளி மயக்கத்திற்கும் ,பற்றுக்கும் காரணமான பொருள். (செல்வம்)
· மேற்கண்டவை செல்வத்தின் உண்மைத்தன்மை
இந்த (செல்வம்), ஒரு கபட நாடகம் .
இந்த (செல்வம்), ஆற்றிடை விரைந்து செல்லும் வெள்ளம் போன்றது.
இந்த (செல்வம்), வேலை ,வேலை,வேலை என்ற அலை ( இடைவிடாது தொடரும் கடல்அலையை ) போன்றது
இந்த (செல்வம்), ஆங்காரம் வர காரணம் ஆனது .
இந்த (செல்வம்), மேகம் போன்றது.
இந்த (செல்வம்), பெரிய வாய்கால் வழியே ஓடும் நீரை ஒத்தது .
இந்த செல்வத்தை (கருதியே) தேடியே அழிந்து விடாது என்னை கடை தேற்றுவாய் ... இறைவா !!!Anbudan,
Vallalar Groups
web : http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
Please visit Our WebSite for all Discussions: http://vallalargroupsmessages.blogspot.com/
---
You received this message because you are subscribed to the Google Groups "Vallalar Groups" group.
To post to this group, send email to vallalargroups@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/vallalargroups?hl=en-US.
No comments:
+Grab this
Post a Comment