Anbu Thiru Elavarasan Avl.
This is a splendid life example and really I should thank you for narrating the life experience. because more than theories, facts do have deep impacts .So our request to you all brothers and sisters, please share with us such examples as we can in turn show this and discuss in our groups at different places.
Valgha valamudan,
Anbudan,
Bro Maruthapillai
2010/5/26 ELAVARASAN ANNAMALAI <elavarasansumathi@gmail.com>
--பசித்திரு தனித்திரு விழித்திருஅருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
கொல்லா விரதம் குவலயம்மெல்லாம் ஓங்குக!
ஜீவகாருண்யமே மோட்ஷ வீட்டின் திறவுகோல்!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
என்னையும் பணிகொண்டு இறவா வரம் அளித்து
அன்னையில் உவந்த அருட்பெருஞ்சோதி (அகவல்)
ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம்!
அன்பு உள்ளம் கொண்ட ஆண்மீக அன்பர்களே ஒரு தாய் தன் பிள்ளைகளின் மீது கொண்ட பாசத்தின் மிகுதியால் தான் என்னசெய்கிறோம் என்று தெரியாமல் செய்த தவறை நினைத்து வருந்தும் தாயுள்ளம் பற்றி ஒரு சிறுநிகழ்வு பற்றி பார்ப்போம்.
அன்பர்களே சேரவல நாட்டிலேயே பாடியநல்லூர் என்ற ஊரிலே பண்புமிகுந்த குணவதியான கண்ணம்மாள் என்ற அம்மையார் அவருக்கு இரண்டு பிள்ளைகள் ஒருவன் பெயர் சந்தானம் இன்னொருவன் பெயர் சாந்தமூர்த்தி கண்ணம்மாள் அதே ஊரிலே ஏற்றுமதி ஆடை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் வேலைபார்த்து அதில் வரும் வருமானத்தை கொண்டு தன் இரண்டு பிள்ளைகளையும் சிறப்பாக வளர்த்தால் இப்படி வாழ்ந்துவரும் வேளையில் கண்ணம்மா தன்னுடைய இரண்டு பிள்ளைகளையும் அதே ஊரில் உள்ள பள்ளியில் சேர்த்து தன பிள்ளைகள் இருவரும் கல்வி பயின்று அவர்கள் எதிர்காலத்தில் நல்லமுறையில் வாழவேண்டும் என்பது அவளின் ஆசை ஆனால் நடந்தது என்னவென்றால்சாந்தமூர்த்தி நற்பண்பு உள்ளவனாகவும் தெய்வ நம்பிக்கையோடும் சிறந்தமுறையில் கல்விபயின்று பருவ வயதை அடைந்தபோது அமுதா என்ற பெண்ணை தன் தாயின் பூரண ஆசிர்வாதத் தோடு திருமணம் செய்துகொண்டு எப்பொழுதும் அவன் வடலூர் வள்ளல் பெருமான் கண்ட அருட்பெருஞ்சோதி ஆண்டவனை ஜோதி சொருபமாக வழிபட்டு அவர் காட்டிய ஜீவகாருண்ய கொள்கையை தன்வழ்க்கையிலே கடைபிடித்து அதாவது ஒரு சிறுபறவை துன்பத்தினால் வருந்தினாலும் இவன் மணம் அனல்மேல் விழுந்த விட்டில் பூச்சி போல துடித்துபோயவிடுவான் மற்றும் பசிஎன்று தன் இல்லம் நாடி வருபவர்களுக்கு உணவு என்னும் மருந்தை கொண்டு அவர் தம் பசிப்பிணி போக்கி சீறும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார்கள் சாந்தமூர்த்தி தம்பதியர்கள் ஆனால் இயற்கையின் நியதிக்கு யாரும் தப்பமுடியாது என்பதிர்க்குயேற்ப்ப அம்மையார் பிள்ளைகளில் ஒருவன் அதாவது சந்தானத்தின் குணங்கள் செயல்கள் எல்லாம் பிறருக்கு துன்பம் தரக்குடியதாகவே இருந்தன சந்தானம் சரிவர பள்ளிக்கு செல்லாமல் சரியாகவும் படிக்காமல் தீயவர்களின் சேர்க்கையினால் அவன் அருகில் உள்ள மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க வேண்டும் என்று ஆசைபட்டான் ஆகையால் அவனுடைய நண்பன் ஒருவன் மூலமாக அருகில் இருந்த மதுக்கடையில் வேலைக்கு சேர்ந்துவிட்டான் அவன் வேலைக்கு சேர்ந்த ஓரிருமாதங்கள் கடந்தன மதுவின் மயக்கம் இவன் மனதை அலைபாயசெய்தது கொஞ்சம் கொஞ்சமாக இவன் மனம் மதுபழ்க்கத்திர்க்கு அடிமையாகிவிட்டது தினந்தோறும் மது குடித்துவிட்டு விலைமாதர்களின் சகவாசத்தால் பலநாட்கள் அவன் அவனது வீட்டுக்கே செல்வதில்லை அப்படியே சென்றாலும் மது மயக்கத்தோடு சென்று தன வீட்டில் உள்ள அம்மாவையும் உடன் பிறந்தவனையும் தீய சொற்களால் வசைபாடுவான் இப்படி தன்மகன் தீயவழியில் சென்று கேட்டுவிட்டானே என்று வருந்திய கன்னமாவிர்க்கு ஒரு யோசனை தோன்றியது தன்மகனுக்கு திருமணம் செய்துவைத்தால் ஒருவேளை அவனுக்கு வாழ்க்கை துணையாக வருபவள் இவனை நற்பண்பு உள்ளவனாக மாற்றலாம் என நினைத்து தன் மகனுக்கு திருமணம் செய்துவைக்க பெண்பார்க்களானால் இவன் தான் தீயவன் ஆயிற்றே ஆகையினால் இவனுக்கு பெண் உள்ளுரில் தர யாரும் முன்வரவில்லை கண்ணமா அருகில் உள்ள ஊரிலாவது பெண்பார்க்கலாம் என்று அவர்கள் வாழ்ந்த கிராமத்துக்கு அருகில் கடம்பத்தூர் என்ற கிராமத்தில் கார்மேகம் கன்னியம்மாள் இவர்களுக்கு ஒரே மகள் அவளின் பெயர் ஆனந்தி பற்றி தரகர்மூலம் கேள்விப்பட்டு ஆனந்தியை தன் மகனுக்கு திருமணம் செய்துவைக்கலாம் என்று கடம்பத்தூருக்கு புறப்பட்டாள் கண்ணம்மாதாங்கள் இல்லத்திற்கு பெண்பார்க்க கண்ணம்மா வருகிறார் என்கின்ற செய்தியை தரகர்மூலம் அறிந்த கார்மேகம்கன்னியம்மாள் தம்பதியர் கண்ணம்மா வருகைக்காக வாசலில் காத்திருந்தனர் தாங்கள் இல்லத்திற்கு அருகில் வந்த கண்ணம்மாவை இன்முகத்தோடு வரவேற்று நலம் விசாரித்து பிறகு தங்களின் மகளை என்மகனுக்கு பெண்கேட்பதர்க்காக தங்களின் இல்லம் நாடி வந்திருக்கிறேன் என்று தான் வந்த செய்தியை கார்மேகம் தம்பதியரிடம் சொல்லிமுடித்தாள் கண்ணம்மா கார்மேகம் தம்பதியர் தாங்கள் மகன் சந்தனத்தின் குணம் அவ்வளவாக சரியில்லை என கேள்விபட்டிருக்கிறோம் இருந்தாலும் தங்களுடைய உயர்ந்த குணத்துக்காகவும் நற்பண்புக்காகவும் தாய் பாசத்திர்க்ககவும் எங்கள் மகளை தாங்கள் மகனுக்கு மணம்முடித்து கொடுக்க சம்மதிக்கிறோம் எனவே இனி தாங்கள் எங்கள்மகளை தங்கள் மகள் போல் பாவித்து அவள் வாழ்க்கையை இனிதாக ஆக்குவீர்கள் என நம்பிக்கையோடு உங்களிடம் ஒப்படைக்கிறோம் என்றனர் கார்மேகம் தம்பதியர்.கண்ணம்மா கார்மேகம் தம்பதியரிடம் தாங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாமல் தங்களின் மகளை நல்லமுறையில் பார்த்துகொள்கிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டு தன் கிராமத்திற்கு வந்து திருமண நிகழ்வுகளை ஏற்ப்பாடு செய்து நல்லமுறையில் சந்தானம் ஆனந்தி இருவருக்கும் திருமணத்தை நடத்திமுடித்தார் இனிமையான இல்லறவாழ்க்கையை துவக்க வந்த ஆனந்திக்கு முதல் இரவிலேயே ஏமாற்றம் நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது வாலைகுழைத்து கொண்டு போகும் இடத்திற்கு தான் போகும் என்பதிர்க்கு உதாரணமாக சந்தானத்தின் குணம் மாறவே இல்லை பொறுமையிர் சிறந்த புனிதவதி ஆனந்தி தன் கணவன் என்றாவது ஒருநாள் திருந்துவான் என்று அவள் தினந்தோறும் அகல்விளக்கின் முன்னாள் அமர்ந்து சிதம்பரம் இராமலிங்கசுவாமி அவர்கள் ஓர் இரவில் எழுதிய அகவலை தினந்தோறும் வாசித்து வந்தால் இப்படி அவள் வாசிக்க வாசிக்க அதன் உண்மை தத்துவங்களை உணர்ந்துகொண்டு அகவலின் பெருமைகளை தன் மாமியாருக்கும் எடுத்துசொல்லி அவர்களையும் அகவல் ஓத செய்தாள் கண்ணம்மாவும் மருமகள் ஆனந்தியும் வடலூர் வள்ளல் பெருமான் அவர்களிடம் மணம்வருந்தி வேண்டிகொள்வதெல்லாம் சந்தானத்தின் குணங்களை நல்வழி படுத்தி அவரை நற்பன்புமிக்கவராக மாற்றுங்கள் இறைவா என்று இறை நம்பிக்கையோடு வாழ்ந்துவந்தார்கள் இப்படியே சில காலம் ஓடின காலம் ஒருநாள் மாறும் என்பது போல் சந்தானத்தின் வாழ்க்கையிலும் நடந்து சந்தனத்திர்ற்கு வயதுமுதிர்ந்துவிட்டது அவன் தான் இளமையில் செய்த தவறுக்கு எல்லாம் இப்பொழுது பதில் சொல்லும் நேரம் அவன் உடல் நோயின்வ்யப்பட்டு அவதியுறலணன் இப்பொழுது அவனின் இளமை அழகைரசித்த சீமாட்டிகள் எல்லாம் அவனை இப்பொழுது வெறுத்து ஒதுக்கிவிட்டனர் அவனுடன் சேர்ந்து மது அருந்தி மாமிசம் உண்டவர்கள் எல்லாம் மாயமாய் மறைந்துவிட்டனர் இப்பொழுது அவனுடைய நித்திய தேவைகளான குளிக்க சாப்பிடகுட அவனால் முடியவில்லைஅவன் முன் தான் செய்த தவறான செயல்கள் பெரியவர்களிடம் பண்பில்லாதவனாக நடந்துகொண்டவிதம் எல்லாவற்றையும் எண்ணி தினந்தோறும் வருந்திகொண்டிருந்தான் இப்படி இவன் வருந்திகொண்டிருக்கும் வேளையில் கள்வனுக்கும் கருணை காட்டிய வள்ளல் பெருமான் சந்தானத்தின் கனவில் தோன்றி தங்கள் தாய் மற்றும் இல்லத்துணைவியார் எம்மிடம் வேண்டிகொண்டதர்க்காகவும் தாங்கள் இப்பொழுது உங்களுடைய இல்லத்திற்கு செல்லுங்கள் அங்கு உங்களுக்கு ஆச்சிரியம் காத்துகொண்டிருக்கிறது கூரி மறைந்துவிட்டார் உடனே சந்தானம் வள்ளல் பெருமான் தன் கனவில் கூறியபடி தன் இல்லத்திற்கு வந்துசேர்ந்தான் ,நீண்டநாள் கழித்து தன் கணவன் தன்னால் நடக்க கூட முடியாத நிலையில் வீடு வந்து சேர்ந்த கணவனை ஒரு குழந்தையை பரமரிப்பதுபோல் பராமரித்து அவனுடைய நித்திய தேவைகளை பூர்த்தி செய்து வந்தாள் ஆனந்தி சந்தானம் தன் மனைவியை பார்த்து நான் உனக்கு எவ்வளவு கொடுமைகள் செய்தேன் அவகளைஎல்லாம் பொறுத்துக்கொண்டு இப்பொழுது நான் நோய் வயபட்டிரும் போது முகம் சுளிக்காமல் எனக்கு பணிவிடை செய்கிறாயே இதற்க்கு நான் என்ன கைம்மாறு செய்ய போகிறேன் என்று வருந்தினான் ஆனந்தி தாங்கள் நீண்டநாள் கழித்து வந்திருக்கிறிர்கள் மணம் வருந்தவேண்டாம் தாங்கள் இன்றுமுதல் திருவிளக்கின் முன் அமர்ந்து அகவல் ஓதி ஜீவகாருண்ய கொள்கைகளை கடைபிடித்துவந்தால் அதுவே தாங்கள் எனக்கு செய்யும் உபகாரமாகும் என்றால் ஆனந்தி இதை கேட்ட சந்தானம் அன்றுமுதல் பிற உயிர்கள் படும் துன்பத்தை கண்டு வருந்தி அதாவது சிறுபறவை மற்றும் மான் முயல் போன்ற பிற உயிரினங்கள் நோயினால் அவதிப்படும் போது அவைகளின் துன்பம் நீக்கிஅவைகளை நல்லமுறையில் வாழசெய்தார் சந்தானம் மற்றும் சிதம்பரம் ராமலிங்கசுவாமி அவர்களின் முக்கிய லட்சியமாகிய ஏழைகளின் பசி போக்குதல் எனவே சந்தனமும் பிறர்பசியை கண்டு மணம் பொறுக்காமல் சாலை தொடங்கி அதில் நித்திய அன்னதானம் செய்ய தொடங்கினார்கள் சந்தானம் தம்பதியர் பசி என்று யார் வந்தாலும் அவர்களை இன்முகத்தோடு வரவேற்று அவர்களின் அரும் பசியை போக்கினார்கள் அதைப்போலவே தபசிகள் பாமர ஏழைகள் எல்லாம் சந்தானத்தை வாழ்த்தி சென்றார்கள் இப்படியே சில காலம் கடந்தன ஒருவன் உள்ளன்போடு செய்யும் செயல்களை பார்த்து கடவுள் அனுகிரகம் புரிவார் என்பதிர்க்கு உதாரணமாக சந்தானத்தின் நோய் முற்றிலுமாக குணம் அடைந்து அவனுடல் முன்பிருந்தது போலவே மாறின இப்படி தன் உடல் நிலை நல்ல முறையில் குணம் அடைந்ததற்க்கு இறைவன் அருட்பெருஞ்சோதி ஆண்டவருக்கு நன்றி கூறி தன் இறுதி வாழ்நாள்வரை தம்முடைய இனிய குடும்பத்தோடு இல்லறத்தை செவ்வனே நடத்தி இனிமையாக வாழ்ந்துவந்தார்கள்எனவே அன்பர்களே நாமும் தினந்தோறும் அகல்விளக்கின் முன்னாள் அமர்ந்து ஆறுதிருமுறைகளும் உள்ளடங்கிய வாசித்து பசி என்று வந்தவருக்கு உணவு என்னும் மருந்தை கொண்டு அவர் தம் பசிப்பிணி போக்கி வந்தால் எல்லாம் வல்ல இறைவன் அருட்பெருஞ்சோதி நம்முள்ளே காரியப்படுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை .பசி என்று வந்தவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல்என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்அ.இளவரசன்வள்ளலார் உயிர்க்கொலை தடுப்பு இயக்கம்நெ.34, அண்ணா தெரு,திருவள்ளுவர் நகர்,ஜமீன் பல்லாவரம் ,சென்னை -600043கைபேசி :9940656549,9677160065
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment