அகத்திக்கீரை
-வைத்தியர் வேதாச்சலம்
அகத்திக்கீரையை காம்பு பழுப்பு புழுக்கள் தூசி கழுவி நீரில்லாமல் வடித்தெடுத்த கீரையை வழக்கப்படி செய்கின்ற தனிச் சாம்பாரில் இட்டு உண்பது அல்லது மேற்படி கீரையை முன்போல் சுத்தப்படுத்தி துவட்டலாகச் செய்து அன்னத்துடன் உபயோகிப்பதும் உண்டு.
இப்படி வாரத்திற்கு ஒருமுறை உண்டுவரதேகத்தில் உள்ள உசம்ணம் தனியும்.கண்கள் குளிர்ச்சிப் பெறும். மலம் இளகாகப் போகும். சிறுநீர் தாராளமாகப்போகும். மகோதர வீக்கம்,நீடைப்பு,பித்த மயக்கம் முதலியவை நீங்கும், இன்னும் இந்த இலையை அடிபட்டு இரத்தம் சொரியும் காயங்களுக்கு வைத்துக்கட்ட சீழ்பிடிக்கமால் விரைவில் ஆறும். அகத்திக்கீரை எல்லா மருந்துகளின் வீரியத்தை கெடுத்து விடுமாதலால் இது பத்திய பதார்த்தங்களில் இருந்து தள்ளப்பட்டுள்ளது.
அகத்திக்கீரை தைலம்: சுத்தப்படுத்திய அகத்திக்கீரையை இடித்துப் பிழிந்து வடிகட்டிய சாறு படி ½ நல்லெண்ணெய் ½ படி, இவை இரண்டையும் பழகின மண்பாண்டத்திலிட்டு அடுப்பிலேற்றி சிறுக எரித்து சாறு சுண்டி மெழுகு பதம் வரும்போது கஸ்தூரி மஞ்சள், பளிங்கு சாம்பிராணி, பச்சை கிச்சிலிக் கிழங்கு, விளாமிட்சவோம் வகைக்கு ½ டலம் வீதம் இடித்து தூள் செய்து போட்டு தைலத்தை கீழிறக்கி வடித்து ஆறியபின் சீசாவில் பத்திரப்படுத்துக.
இதை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து நீராடிவர – பித்தம் தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்தத் தலைவலி போகும்.
பத்தியம்: அன்று (ஸ்நானம் செய்த தினத்தில் பகல் நித்திரை, அலைச்சல், திரிச்சல்கூடாது.
அடிக்கடி அகத்திக்கீரை புசிக்கக்கூடாது. இரத்தத்தை கேட்டையச் செய்யும், சொறி, சிரங்குககளை உண்டாக்கும், இரத்தம் குறைந்து உடல் வெளுத்தல், உடல் வீங்கல், வயிற்றுக் கடுப்பு, கழிச்சல், இவைகளை உண்டாக்கும், ஆனால் வயிற்று புழு ஒழியும், வாயுவையும், கடுவனையும் உண்டாக்கும்.
இவ் இலைச் சாற்றைப் பிழிந்து மூக்கில் இரண்டொரு துளிவிட, நான்காம் நாள் சுரம் போம். மற்றைய சுரங்களில் உடம்பின் மேல் பூசிவர, வெப்பந்தணியும், சாறு ஒரு பங்கும் தேன் ஐந்து பங்கும் கூட்டி நன்றாக உறவுபடக் கலந்து உச்சியில் விரலால் தடவ, குழந்தைகட்குக் காணும் நீர்ம்க்கோவை போம். இதையே மூக்கில்விட நீர்ம்க்கோவை தலைவலி இவைகள் தீரும்.
அகத்திப்பூ: அகத்திப் பூச் சாற்றை கண்களில் பிழிய கண் நோய்போகும். இலையைப்போல் பூவையும் சமைத்து உண்ண வெயிலாதீக்கத்தாலும் புகையிலை சுருட்டு முதுலியவைகளாலும் பிறந்த பித்தக்குற்றம் உடலிற்தோன்றும், வெப்பம் தணியும்.
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
பாலமுருகன்
காஞ்சிபுரம்
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment