thank u, pl go ahead
On 3/12/09, Manivannan Ganesan <manig78@gmail.com> wrote:
> dear balamurugan sir,
>
>
> welcome your excellant presentation to vallalar groups.....
> many of us benefit from your useful information....
>
> can you tell the rate & mode of payment of your "monthly magazine"....
>
> regards,
> MANIVANNAN.G.
> PALLIKONDA.
>
>
> On 11/03/2009, balamurugan d <to.dbala@gmail.com> wrote:
>>
>>
>>
>> *புளியாரை கீரை *
>>
>>
>>
>>
>> மனிதனின் ஆரோக்கிய வாழ்விற்கு கீரைகளின் பங்கு அளப்பரியது.
>> கீரைகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் மனித உடலின் வளர்ச்சிக்கு அவசியத்
>> தேவையானவை. தினமும் உணவில் கீரையை சேர்த்துக் கொள்பவர்கள் மருத்துவரை அணுக
>> வேண்டியதில்லை. முதுமையிலும் இளமைத் துடிப்புடன் இருப்பார்கள். நீண்ட
>> ஆயுளோடும் சுறுசுறுப்போடும் வாழ்வார்கள்.
>>
>> நாம் ஒவ்வொரு இதழிலும் ஒவ்வொரு கீரையின் மருத்துவக் குணங்களைப் பற்றி
>> அறிந்துவருகிறோம். இம்மாத இதழில் தமிழகம் முழுவதும் பரந்து காணப்படும்
>> புளியாரைக் கீரையின் மருத்துவப் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.
>>
>> புளியாரைக் கீரை வயல் வரப்புகளிலும், நீரோடை வாய்க்கால்களிலும், ஈரப்பதம்
>> நிறைந்த பகுதிகளிலும் நிலத்திலும் படர்ந்து காணப்படும். இதன் இலைகளும்,
>> மெல்லிய
>> தண்டுப் பகுதியும் உணவில் சேர்க்கப்படுகிறது.
>>
>> இதனை புளியாக்கீரை, புளிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.
>>
>> Tamil - Puliyarai
>>
>> English - Indian sorrel
>>
>> Telugu - Pulichinta
>>
>> Malayalam - Paliyarel
>>
>> Sanskrit - Changeri
>>
>> Hindi - Tinpatiya
>>
>> Bot. Name - Oxalis corniculata
>>
>> புளியாரைக் கீரை இந்தியாவின் வெப்பப் பகுதிகளில் ஏராளமாக பரந்து காணப்படும்.
>>
>> புளியாரையின் மருத்துவக் குணங்களைப் பற்றி பல நூல்களில் சித்தர்கள்
>> குறிப்பிட்டுள்ளனர்.
>>
>> பித்த மயக்கமறும் பேருலகின் மானிடர்க்கு
>>
>> நித்தமருள் வாதகபம் நேருமோ - மெத்தனவே
>>
>> மூலக் கிராணியறும் மூல வுதிரமறுங்
>>
>> கோலப் புளியாரைக்கு
>>
>> - அகத்தியர் குணபாடம்
>>
>> பித்த மயக்கத்தைப் போக்கும்
>>
>> சிலருக்கு உடலில் பித்த நீர் அதிகமாகி இரத்தத்தில் கலந்து தலைவலி, மயக்கத்தை
>> உருவாக்கும். இவ்வாறு மயக்கம் ஏற்படுபவர்கள் வாரம் இருமுறை புளியாரைக் கீரையை
>> துவையலாகவோ, மசியலாகவோ உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தத்தால்
>> எற்படும் பாதிப்புகள் குறையும்.
>>
>> மூல நோயைக் குணப்படுத்த
>>
>> அசீரணக் கோளாறாலும், வாயுக்களின் சீற்றத்தாலும் மலச்சிக்கலாலும் மூல நோய்
>> உருவாகிறது. மூலத்தில் புண் ஏற்பட்டு பல பாதிப்புகளை உருவாக்குகிறது. இதனால்
>> பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவ்வாறு மூல நோயால்
>> பாதிக்கப்பட்டவர்களுக்கு புளியாரைக் கீரை அருமருந்தாகும்.
>>
>> புளியாரைக் கீரையை சிறிதாக நறுக்கி நீர்விட்டு அலசி அதனுடன் பூண்டு,
>> வெங்காயம், தேங்காய், மிளகாய், மிளகு சேர்த்து நெய்விட்டு வதக்கி துவையலாக
>> அரைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய், மூல வாயு, உள்மூலம், மூலக்கடுப்பு,
>> இரத்த
>> மூலம் போன்ற நோய்களின் தாக்குதலிலிருந்து விடுபடலாம்.
>>
>> பசியைத் தூண்ட
>>
>> மன உளைச்சலாலும் மனச்சிக்கலாலும் சிலர் பசியின்றி தவிப்பார்கள். இவர்களுக்கு
>> சிறிது சாப்பிட்டாலும் கூட வயிறு நிறைந்தது போல் இருக்கும். இவர்கள்
>> புளியாரைக் கீரையை பருப்பு கலந்து நெய் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு
>> வந்தால் மலச்சிக்கல் நீங்குவதோடு நன்கு பசியும் உண்டாகும்.
>>
>> நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
>>
>> இன்றைய இரசாயன உணவுகளால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல்
>> இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்து உடல் நோய் எதிர்ப்பு
>> சக்தியை இழக்கிறது. இதனால் அடிக்கடி ஜலதோஷம், இருமல், காய்ச்சல் என பல
>> நோய்கள் உடலை எளிதில் தாக்குகின்றன.
>>
>> இவர்கள் புளியாரைக் கீரையை துவையல் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால்
>> உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு பலத்தையும் கொடுக்கும்.
>>
>> தலைவலி நீங்க
>>
>> தலைவலியால் அவதியுறுபவர்கள் புளியாரைக் கீரையுடன் வெள்ளைப் பூண்டு சேர்த்து
>> அரைத்து நெற்றியின் மீது பற்று போட்டால் தலைவலி நீங்கும். இதனுடன் சிறிது
>> பெருங்காயமும் சேர்ப்பது நல்லது.
>>
>> கட்டிகள் குணமாக
>>
>> பொதுவாக உடல் சூட்டினால் ஏற்படும் வெப்பக் கட்டிகள் மீது புளியாரைக்
>> கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தடவினால் கட்டிகள் பழுத்து எளிதில்
>> உடைந்து
>> புண்கள் குணமாகும்.
>>
>> முகப்பரு நீங்க
>>
>> புளியாரைக் கீரையோடு சிறிது பன்னீர் விட்டு அரைத்து முகத்தில தடவி 15
>> நிமிடங்கள் காயவைத்து பின் இளம் சூடான நீரில் முகம் கழுவினால் முகப்பரு
>> நீங்கி
>> முகம் பளபளக்கும்.
>>
>> பாலுண்ணி, மரு நீங்க
>>
>> புளியாரைக் கீரையை சாறெடுத்து அதனுடன் சிறிது மிளகு பொடி, வெண்ணெய் கலந்து
>> பாலுண்ணி, மரு மீது தடவி வந்தால் வெகு விரைவில் இவை காய்ந்து
>> உதிர்ந்துவிடும்.
>>
>> குன்ம நோய்களுக்கு
>>
>> புளியாரைக் கீரையை நன்கு அரைத்து அதனுடன் தேவையான அளவு பசுவின் மோர்
>> சேர்த்து
>> தினமும் காலை வேளையில் அருந்திவந்தால் வயிற்றுப்புண், வாய்ப்புண்,
>> வாயுக்கோளாறு, குன்ம நோய்கள், மூல நோய்கள் குண-மா-கும். ஒரு மண்டலம் (48
>> நாட்கள்) தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பூரண பலனை அடையலாம்.
>>
>> இந்த மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, காரத்தைக் குறைத்துக்கொள்ள
>> வேண்டும்.
>>
>> கண்கள் குளிர்ச்சியடைய
>>
>> கணினியில் அதிக நேரம் வேலைசெய்பவர்களின் கண்கள் அதிக சூடாகி வறட்சியடையும்.
>> இதனால் கண் நரம்புகள் பாதிப்படைய ஆரம்பிக்கும். இவர்கள் புளியாரைக் கீரையை
>> நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு அந்த நீரில் கண்களை
>> அடிக்கடி
>> கழுவி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதுடன் கண் பார்வை நரம்புகள்
>> பலப்படும்.
>>
>> புளியாரைக் கீரையோடு உப்பு, மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம்,
>> இவற்றைத் தகுந்த அளவு சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் பாலியல்
>> சம்பந்தப்பட் நோய்கள் குணமாகும்.
>>
>> நல்ல சுவையுடன், மருத்துவப் பயன் கொண்ட புளியாரைக் கீரையை கிடைக்கும்
>> காலங்களில் உணவில் சேர்த்து பயனடையுங்கள்.
>>
>>
>> with regards
>> Balamurugan
>>
>> >
>>
>
>
> --
> Regards,
> Manivannan.G.
>
> >
>
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment