Wednesday, June 25, 2014

[vallalargroups:5487] கதம்பக் கட்டுரைகள்

கதம்பக் கட்டுரைகள் :

1. ஆன்மா - வேறு பெயர்கள் :

1 காயகல்பம் : இது ஒரு மருந்து . உடலை அழியாமல் காத்து , கல்ப காலத்திற்கு நீடித்திருக்கச் செய்யும்.

சித்தர்களும் , சித்த மருத்துவமும் - புறத்தே மூலிகைகளைக் கொண்டு மருந்தாச் சொல்கின்றது - செய்கின்றது - ஆனால் , அகமாக நோக்கில், ஆன்மா தன் அரும்பெரும் ஆற்றலால், உடலை நீடித்திருக்கச் செய்கின்றது

சன்மார்க்க நோக்கில், ஆன்மா தான் காயகல்பம்

2 குறிஞ்சி மலர் : இது மலையில் 12 வருடத்திற்கு ஒரு முறை பூக்கும் நீல நிறப் பூ.
ஆன்மாவும் , ஏறா மலை மீது, 12 வருட கடுஞ்சாதனைக்குப் பின், மலரும் அற்புதப் பூ.

சன்மார்க்க நோக்கில், ஆன்மா தான் குறிஞ்சி மலர்

 


2. பழமொழிகளும் உண்மைகளும் :

1. பழமொழி : ஆறிலும் சாவு - நூறிலும் சாவு


நமக்கு கற்பிக்கபட்ட பொருள் :
ஆறு வயதிலும் சாவு - நூறு வயதிலும் சாவு

உண்மைப் பொருள் : குந்தி மைந்தன் கர்ணன் , தான் பாண்டவர்கள் பக்கம் சேர்ந்து ஆறானாலும் தனக்கு மரணம் நிச்சயம் - கௌரவர்கள் ( நூறு பேர்) பக்கமே தொடர்ந்தாலும் , தனக்கு சாவு நிச்சயம் என்று கூறியது திரிக்கப்பட்டிருக்கின்றது



2 பழமொழி : அடி உதவுது மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்

நமக்கு கற்பிக்கபட்ட பொருள் :
அடி என்பது அடித்தல், உதைத்தல் போன்றவை

உண்மைப் பொருள் :
“திருவடி” போன்று உதவுவதில் யாரும் நிகரில்லை என்பது தான் உண்மையான பொருள்




வெங்கடேஷ்



No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)