Wednesday, June 25, 2014

[vallalargroups:5486] அருள்

I அருள் :

1. அருளுறில் எல்லாமாகும்

2. அருளைப் பெற்றால், ஒரு துரும்பும் ஐந்தொழில் செய்யும்

3. அருளின் பெருமை அகவலில் 1000வது வரி முதல் 20 வரிகளில் வள்ளலார் விளக்குகின்றார்

4 கதி இருக்கின்ற திருச்சிற்றம்பலத்திலே கருணை
நீதி இருக்கின்றாதலால்

5 அருள் விளங்கிய திருச்சிற்றம்பலத்திலே அழியாப்
பொருள் விளங்குதல் காண்மினோ


அருள் - விளக்கம் :

அருளைப் பெறுவது என்பது ஒரு சாதகன் தன் உடம்பில் அருட்கலையை ( அருளொளி ) வீசச் செய்வது. சுத்த உஷ்ணத்தினால், முப்புரத்தை சினந்த பின்னும், மாயத்திரைகள் யாவும் எரிந்து தீக்கிரையான பின்னும், வெண்மையான பொடி போன்று துகள்கள் சிரத்தின் மீதிலிருந்து சாதகன் உடல் முழுதும் வீசும்.

இதனைத் தான் சமயம் திரு நீறு என்கிறது.

இதன் அடையாளமாகத் தான் , அனேக சாமியார்கள் தங்கள் உடல் முழுதும் திரு நீறு/ சாம்பல் பூசிக் கொண்டிருப்பார்கள்


பயிற்சி :

பரவிந்து பரநாதத்துடன் கலந்த பிறகு தான், ஒரு சாதகன் அருளை பெற முடியும் - அதற்கு விந்து , பரவிந்துவாக மாற வேண்டும் .


அருள் பெறும் இடம் :

அருள் விளங்குவது சிற்றம்பலத்தே என்பதால் , ஒரு சாதகன் சிற்றம்பலத்திற்குள் நுழைந்த பிறகு தான் , அருளைப் பெற முடியும் - அதற்கு நம் உணர்வு மிகவும் நுணுகி , நுண்மை - இறைத் தன்மை அடைய வேண்டும் - அணுவை விடவும் நுண்மை அடைய வேண்டும்




வெங்கடேஷ்


No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)