ஒழிவில் ஒடுக்கம் - பாகம் - 1
முன்னுரை : இன்னூலை அருளியவர் காழிக் கண்ணுடைய வள்ளல் ஆவார் - இவர் , திருஞான சம்பந்தரின் முதல் மாணாக்கர் ஆவார்.
இன்னூல் , எல்லா நூல்களைக் காட்டிலும் மிகவும் மாறுபட்டு இருக்கின்றது
ஏன் எனில், இது சரியை , கிரியை, யோகம் இவைகளக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை - மதிப்பதே இல்லை எனவும் கூறலாம்
இன்னூலின் சாராம்சம் என்னவென்று ஆய்ந்தால் -
1. 36 தத்துவங்களை கடத்தல்
2. அருள் பெறுதல்
3. தற்போதம் ஒழித்தல்
4. தான் அவனாதல்
மேற்கூறியவைகளை , சரியை , கிரியைகளால் அடைய முடியாது என்பதால் , அவைகளை ஆற்ற வேண்டியதில்லை என்றே வலியுறுத்துகின்றது
இன்னூல் பிராமணர்களுக்கு எதிராக இருப்பதால் , அன்னாளில் இதை , எரித்ததாகக் கூறுவர் - பகிஷ்காரம் செய்ததாகவும் கூறுவர்
இன்னூலின் பெருமையை உணர்ந்து தான் , வள்ளலார் இதனை தானே பதிப்பித்தார் .
ஒழிவில் ஒடுக்கத்தின் இரத்தினச் சுருக்கம் - முப்பத்தறுவரையும் கடந்து " சும்மா இரு" - மௌனத்தில் இரு " - " தற்போதம் ஒழித்து நில் "
அவ்வளவே
இன்னூலின் சாராம்சம் கவிதை வடிவில் கொடுக்கப்பட்டிருக்கின்றது
1. சரியை கழற்றி - கிரியை கழற்றி
பக்தி என்றவுடன்
ஆசாரம் அனுட்டானம்
பூஜை புனஸ்காரம்
உபவாசம் அருச்சனை
ஆலய விஜயம் கிரிவலம்
பாத யாத்திரை தீர்த்தம் ஆடல்
என்றே செய்கின்றோம் வழக்கமாக
பக்தி என்றால்
" மன நெகிழ்ச்சி - மன உருக்கம் "
என்பதை அறியாமலே
அன்பு என்றவுடன்
தாய் தந்தை மீதுள்ள பாசம்
மனைவி மீது கொண்டுள்ள காதல்
சுற்றத்தார் மீது காட்டும் பரிவு
சமுதாயம் மீது காட்டும் அக்கறை
தேசத்தின் மீதுள்ள பற்று
என்றே நினைவு கூறுகின்றோம்
உண்மை அன்பு என்பது
" ஆன்மாவின் உருக்கம் - ஆன்மாவின் நெகிழ்ச்சி "
" ஆசையற்ற விடம் தான் அன்பு "
பாசம் காதல் உயிரை வதைக்கும் கொல்லும்
அன்பு அகத்தை குழைய வைக்கும் சிரஞ்சீவி ஆக்கும்
2. உயிர்களை கொல்லுவதால்
உருத்திரனுக்கு பாவம் சேருமானால்
நாம் உண்ணும் உணவினை
வயிற்றில் ஜீரணம் செய்யும் அக்கினிக்கே
அஜீரணம் உண்டாகுமானால்
நாம் ஆற்றும்
சரியை கிரியைகளும்
மந்திர புஷ்ப பூஜைகளும்
பலிக்கும் என்று தேர்வோம்
No comments:
+Grab this
Post a Comment