ஒத்த விடம்
ஒரே விஷயத்தை நிறைய ஞானிகளும் சித்தர்களும் பாடியிருப்பார்கள்
உதாரணமாக
1. திருவடி பற்றி - வள்ளுவரும் , வள்ளலாரும்
இதில் திருவடி பற்றி அதிகம் பாடியது வள்ளலார் தான்
2. சும்மா இருக்கும் சுகம் பற்றி நிறைய சித்தர்களும் , ஞானிகளும் பாடியிருக்கின்றார்கள்
3. எட்டிரண்டு பற்றி நிறைய சித்தர்களும் , ஞானிகளும் பாடியிருக்கின்றார்கள்
இந்த வகையில், ஒத்தவிடம் பற்றி வள்ளுவரும் , வள்ளலாரும் பாடியிருக்கின்றார்கள்
திருக்குறள் :
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்
மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்
திருவருட்பா :
ஒத்தவிடம் நித்திரை செய்யென்றீர் - அந்த
இடம் காட்ட வாரீர்
ஒத்தவிடம் என்றால் என்ன ??
ஒத்தவிடம் என்றால் இரு வினையும் சமம் ஆகின்ற இடம் - வினைகள் தீர்கின்ற இடம் - கன்ம மலம் அறுகின்ற இடம் ஆகும்
இது எப்படி சாத்தியம் எனில் -
நாம் செய்கின்ற வினைகள் மூன்று வகை :
1. பழ வினைகள் - முழு கன்ம கணக்கு
2. மேலிருந்து, இந்த ஜென்மத்திற்கு அனுபவிக்க கொண்டு வந்திருக்கும் கன்மம்
3. இந்த ஜென்மத்தில் ஆற்றும் கன்மங்கள்
இந்த ஜென்மத்தில் ஆற்றும் கன்மங்கள் பழ வினைகள் கணக்கில் சேர்ந்து கொண்டே வரும் - இதனால் , கன்மங்களும் , பிறவியும் தொடர்ந்து கொண்டே வரும்
இந்த சங்கிலித் தொடரை எப்படி அறுப்பது ??
நாம் செய்யும் தவத்தினால் - இந்த ஜென்மத்தில் ஆற்றும் கன்மங்கள் பழ வினைகள் கணக்கில் சேராமலும், பழ வினைகள் கணக்கில் இருப்பது மட்டும் குறைந்து கொண்டே வர வேண்டும்
இப்படி செய்தால் மட்டுமே - வினைகள் தீரும் என்பது திண்ணம்
இப்படி செய்தால் மட்டுமே - வினைகள் தீரும் என்பது திண்ணம்
இரு வினையும் சமமானால் - " சத்தினிபாதம் " என்னும் நிலை வரும் - அது வாய்த்தால் , அருள் வந்து நம்மீது பதியும் - அருள் வந்தால் எல்லா சித்திகளும் - மரணமில்லாப் பெருவாழ்வும் நாம் அடைவோம்
இது நடைப் பெறுவதற்கு - நாம் - சுழிமுனையை - ஆன்ம நிலையை அடைய வேண்டும் - அன்னிலையில் மட்டுமே இது சாத்தியம் ஆகும்
ஏனெனில் - ஆன்மாவிற்கு கன்ம மலம் கிடையாது - எனவே ஆன்ம நிலையில் இரு வினையும் சமம் ஆகி , வினைகள் தீர்ந்து விடும்
BG Venkatesh
No comments:
+Grab this
Post a Comment