அன்பர்களே,
புலி சிங்கம் மிருகங்கள் எதற்கும் தனியாக தனக்கு என்று சொந்தமாக வீடு வாசல் கிடையாது. மரங்கள் பேசுவது இல்லை சும்மாதான் இருக்கிறது. சும்மா இருக்கிறேன் என்று இந்த தொழிலும் செய்யாமல் பசியிடுக்கும்போது அலைந்து திரிந்து பிச்சையெடுத்து உணவு உண்ணும்போது சும்மா இருக்கிறேன் என்பது காணமல் போகிறது. இயற்கை உபாதைகள் வரும்போது சும்மா இருக்கமுடியுமா. மிருகங்கள் சொந்தம் பந்தம் இல்லாமல் இல்லாமல் உணவு முதலிய இயற்கை உபாதைகளை மட்டும் பூர்திசெய்துகொண்டு வாழ்கிறது ஆனால் அது இறைவனை அடைவது இல்லை. மரம் செடிகள் பேசாமல் மெளனமாக உள்ளன ஆனால் அவையும் படைத்தவனை அடைவதில்லை. எனவே நான் உலக சொந்த பந்தங்களை விடுத்து சொத்து சுகங்களை விடுத்து மெளனமாக அமைந்திருக்கும் சாமியார்களும் பசியால் வாடி நோயால் வருந்தி கடைசியில் எல்லோரும் போல் இறந்துவிடுகிறார்கள். இதனால் என்ன பயன் ஒன்றும் இல்லை.
இவற்றை பார்க்கும்போது நாம் செய்ய தவறியது என்ன. எல்லோராலும் ஏன் இறைநிலையை அடையமுடியவில்லை. நான் சாமியாராக போகிறேன் என்று நாடு நகரத்தை இழந்து காடு நோக்கி செல்ல நினைப்பவர்கள் சற்றே கவனியுங்கள். நான் செய்கிறேன், நான் சாமியாராக போகிறேன், நான் இறைவனோடு சேர்ந்துவிடுவேன் என்று நான் நான் என்ற ஆணவத்தால் அறிவிழந்து இருமாபுடன் சொல்பவர்கள் செய்பவர்கள் இறைவனை அடையமுடியாது. இறைவன் நினைக்க வேண்டும் நம்மை அழைத்துக்கொள்ள இல்லாவிட்டால் அந்த நிலையை அடையமுடியாது. ஒரு குரு பின்னால எல்லாவற்றையும் துறந்து சென்று அந்த குருவுக்கு பணிவிடை செய்தே காலம் போய் குருவோடு சேர்ந்து தானும் இறந்து போகிறான்.
அதனால் இறைவனை மட்டுமே துணையாக கருதி அவனையே குருவாக கருதி அவனையே அடைய வேண்டும் என்று அவனிடமே பிரார்த்தனை செய்துவந்தால் அவனே மனம் இறங்கி தன்னையும் நம்மையும் காட்டுவான். தானே எல்லா பற்றுகளையும் அவனே சுமுகமாக யாருக்கும் பாதகமில்லாமல் விடுவிப்பான். கட்டுக்களை விடுவிக்க அவனிடமே பிரார்த்தனை செய்யவேண்டுமே தவீர நானே விடுவித்து கொள்வேன் என் குருநாதர் விடிவிப்பார் என்று எமாந்து வாழ்கையை வீணடிக்காதீர்கள். வீடு என்ற பற்றை விட்டாலும் நாடு என்ற பற்று நம்மை விடாது. நாடு நம்மை விட்டாலும் உலகம் நம்மை விடாது. உலகமே நம்மைவிட்டாலும் இந்த உடம்பு விடாது. இந்த உடம்பு விட்டாலும் இந்த மாயை விடாது. ஆகவே இவை எல்லாவற்றையும் விடுவிப்பது நம்முள் இருக்கும் இறைநிலையாகும்
நான் ஒரு மரம் நான் ஒரு சிங்கம் நான் மிருகம் நான் மனிதன் என்ற வேற்றுமை எண்ணத்துடன் வாழ்வதால். நான் என்ற குறுகிய வட்டம் வாழ்நாள் முழுவதும் நிலைத்து பிறவி பயனை அடையமுடியாமல் செய்கிறது. நான் இது நீ அது என்று வாழாமல் எல்லாமே ஒன்று தான் எல்லாமே அந்த இறைவனே என்று உணர்ந்தால் அன்பு மலரும் மற்றும் தவறுகள் நீங்கும் பொறாமை தீவிரவாதம் நீங்கி உலகம் சாந்தமாக விளங்கும். இறைவனோடு எப்போது இருக்கும் நமக்கு அதை அறியும் அறிவை நான் என்ற ஆணவத்தால் இழந்துவிட்டோம். அதனால் நான் என்ற வேற்றுமை உணர்வை மறப்போம் எப்போதும் இறைநிலையோடு இறைநிலையாக இருப்போம்.
இறைநிலை கருணையே வடிவானது . நம்மை காப்பாற்ற காத்திருக்கிறது. நம்மால் முடியும் என்று எந்த செயலும் செய்யாமல். இறைவன் துணையால் செய்ய கற்றுகொண்டால் இறைவனை அடைந்துவிடலாம். அவரே இயக்கவும்,கொடுக்கவும்,எடுக்கவும் வல்லமை கொண்டவராய் இருக்கிறார். முதலில் நம்முள் இருக்கும் இறைவனை வணங்குவோம். அந்த இறைவனுக்கு எந்த பெயர் வேண்டுமானாலும் வைத்துகொள்வோம். ஆனால் அவனிடம் முழுமையான அன்பும் நம்பிக்கையும் கொள்வோமாக.
என்றும் அன்புடன்,
உயிர்.
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment