வள்ளலார் யோகம் ,தவம் .தியானம் .வாசி ஊசி போன்ற செயல் களில் ஈடு படாதீர்கள் .
அப்படி ஏதாவது ஒன்று சொல்லக் கேட்டு அதன் படி நடந்தால் சிறு ஒளி உண்டாகும்
அதனால் பல இளித்து இறுமாந்து கெட நேரிடும் .மேலும் அருட்பெரும் ஜோதியின் ,
அருள் கிடைக்காமல் போய்விடும் .மேலும் நாம் அடைய வேண்டுவது அருட்பெரும்ஜோதியின் அருள்.
அந்த அருளைப் பெறுவதற்கு ஜீவ காருண்யமே முதல்படியாக இருக்கிறது ,முதல்படியாகிய,
ஜிவர்களிடத்தில் கருணையும் ஆண்டவரிடத்தில் அன்பும் தேவை என்கிறார் வள்ளலார் .
காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும்பதியே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை யெல்லாம் தருமச
சாலையிலே ஒருப்பகலில் தந்த தனிப்பதியே
சமரச சன்மார்க்கத் தலையமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை யனிந்தாடும்
மாநடத்தென் அரசே என மாலை யனிந்தருளே .
என்கிறார் ;--மேலும் ஊசியின் மேல் காலுண்றி ஒரு கோடிகாலம்
தவம் செய்யுனும் காண்பரிதாம் கடவுளாகி என்கிறார் .
இதுவரை தவம் யோகம் வாசி போன்ற யோகங்களை செய்தவர்கள்
என்ன லாபத்தை அடைந்திருக்கிறார்கள் என்றால் ஒன்றுமில்லை என்கிறார் .
ஆதலால் எதனிலும் லஷ்சயம் வைக்காமல் ஆண்டவரிடத்தில் லஷ்சயம் வையுங்கள்
என்கிறார் .ஆண்டவர் வந்தவுடன் தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார் ,அதுவரை
பொறுமையுடன் இருங்கள் என்கிறார் .நமக்கு முதலில் ஒருமை வரவேண்டும் .
ஒருமை வந்தால் தான் தயவு வரும் .தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம் .
இப்போது என்னுடைய அறிவு அண்டம் அண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது,
அது அந்த ஒருமையினால் தான் வந்தது ,நீங்களும் என்னைப்போல் ஒருமையுடன்
இருங்கள் அனைத்தும் கிடைக்கும் என்கிறார் .
இதிலிருந்து என்ன தெரிகிறது .அறிவைக்கொண்டு அறிவை பெறுவதுபோல் ,
அருளைக் கொண்டு அருளை பெறவேண்டும் .ஜீவகருனைக் கொண்டு கடவுள் கருணைப்
பெறவேண்டும் .அதுவே நாம முயற்ச்சி செய்ய வேண்டியதாகும் ,அதைவிடுத்து
வேறு எதையும் செய்யக் கூடாது.
அன்புள்ள ;--ஆன்மநேயன் கதிர்வேலு .
-- 26 ஆகஸ்ட், 2010 7:09 pm அன்று, uyir b.r. <uyir73@yahoo.com> எழுதியது:
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment