பசித்திரு தனித்திரு விழித்திரு
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக
ஜீவகாருண்யமே மோட்சவிட்டின் திறவுகோல்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
அன்புள்ளம் கொண்ட ஆண்மீக அன்பர்களுக்கு வந்தனம் ஒருமுறை தென் தமிழ் நாட்டில் வடகரை நல்லூர் என்ற ஊரில் சண்முகம் என்ற புலவர் அவரது இல்ல துணைவியார் பெயர் வள்ளியம்மை இவர்கள் இருவரும் ஆன்மிகத்திலும் கடவுள் நம்பிக்கையும் உடையவர்கள் சண்முகம் தினந்தோறும் அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று கந்தகடவுளை நினைந்து மணமுருக பாடி வழிபடுவார் அவரது மனைவியும் இல்லத்தில் எப்பொழுதும் கடவுள் சிந்தனையோடு வழிபாடு செய்து தம் இல்லத்திற்கு வரும் சிவனடியார்களுக்கு இன்முகத்தோடு
அவர்களுக்கு அமுதுபடைத்து அடியார்களின் உள்ளம் குளிரச்செய்வாள் இப்படி சண்முகமும் வள்ளியம்மையும் இருவரும் இல்லறவாழ்வை செவ்வனே நடத்திவந்தார்கள் ஆனாலும் அவர்கள் வாழ்வில் ஒருகுறை இருந்தது அவையாதெனில் தங்களின் ஒரேமகனுக்கு பிறந்த நாள் முதல் பேசும் திறன் இல்லாமல் இருந்ததுதான் ஊரார்கள் ஒருசிலர் இதை விதிவசம்மென்றார்கள் ஒருசிலர் இவர்களின் முன்ஜென்ம கர்மவினைதான் இப்படி இவர்களுக்கு மூண்டது என்று தூற்ற ஆரம்பித்தார்கள் இன்னும் சிலர் இவர்கள் சென்ற பிறவியில் பசுவின் கன்றுக்கு பால் விடாமல் பட்டிநிபோட்டார்களோ அல்லது கொலை என்னும் பாதக செயல் புரிந்தார்களோஆதலால் இவர்களுக்கு இந்த பிறவியில் இப்படி ஒரு நிலை என்றார்கள் மேலும் சில அன்பர்கள் சண்முகத்திடம் சென்று
வடலூரின் பெருமைதனையும் நமது வள்ளல் பெருமானின் சிறப்பினையும் எடுத்து சொன்னார்கள் வள்ளல் இராமலிங்கத்தின் சிறப்பினையும் ஐயா அவர்களின் ஜீவகாருண்யத்தின் கொள்கைகளையும் கேட்ட சண்முகம் உடனே வடலூர் செல்லவேண்டும் என்ற ஆவலோடு தன் மனைவியிடம் ஐயா அவர்களின் பெருமைகளை கூறினார், உடனே வள்ளியம்மை தானும் உடன் வருவதாக கூறினார் இதையடுத்து அவர் மனைவி வள்ளியம்மை மற்றும் தன்மகன் செல்வத்தையும் அழைத்துகொண்டு வடலூர் புறப்பட்டார் இப்படி இவர்கள் போகின்ற வழியில் ஒருசிறு கிராமத்தை கடந்து செல்லவேண்டும் அந்த கிராமத்தை நெருங்கிகொண்டிருந்தார்கள் மாலைபொழுதாகிவிட்டது இன்று இரவு இந்த ஊரிலே தங்கி நாளை வடலூர் செல்லலாம் என்று அருகாமையில் ஏதாவது வீடு தெரிகிறதா என்று தேடினார்கள் அங்கே சற்றுதொலைவில் ஒருசிருகுடிசை இருப்பதை பார்த்து அதன் அருகே சென்றடைந்தார்கள் அந்த குடிசையில் சாந்தமே உருவாக வயதான பெரியவர் தன்
நெற்றியில் திருநீறு பூசியும் வெள்ளநிறாடை தன்மேலே போர்த்தியவாறும் வெளியில் வந்தார்
அந்த பெரியவரை பார்த்தவுடன் சண்முகத்திற்கு பத்துநாள் பட்டினிகிடந்தவனுக்கு பழையசோறு கிடைத்தால் எவ்வளவு ஆனந்தம் அவன் முகத்தில் வெளிப்படுமோ அதுபோல் சண்முகத்தின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது இந்த நேரத்தில் தன்குடிலுக்கு அருகில் நின்றுகொண்டிருந்த சண்முகம் அவர் மனைவி வள்ளியம்மை மகன் செல்வம் இவர்களை கவனித்த பெரியவர் அவர்களின் அருகாமையில் சென்று வாருங்கள் என்று அன்போடு தன் குடிலுக்கு அழைத்துசென்றார் உடனே தம்சீடர்களை உற்றுநோக்கினார் தம் குருவின் பார்வையின் பொருள் உணர்ந்த சீடர்கள் தங்களின் குடிலுக்கு வந்த சண்முகம் குடுமபத்தினருக்கு இன்முகத்தோடு பசியாற்றுதல் செய்தார்கள் பசியாறிய சண்முகத்தை பார்த்து பெரியவர் தாங்கள் எங்கிருந்து வருகிறிர்கள் என்று நலம் விசாரித்தார் ஐயா நாங்கள் தென் தமிழ் நாட்டில் உள்ள வடகரை நல்லூரை சேர்ந்தவர்கள் எங்களுக்கு ஒரேமகன் இவனுக்கு வாய் பேச இயலாது ஆகையால் எங்கள் ஊரில் உள்ள ஒருஅன்பர் மூலமாக வடலூரின் பெருமைதனையும் அடிகளார் இராமலிங்கம் அவர்களின் ஜீவகாருண்ய கொள்கைகளையும் அறிந்த நாங்கள் தருமசீலர் ஐயா அவர்களை பார்த்து எங்கள் மகனின் நிலையை எடுத்துரைக்க செல்கிறோம் என்றார்கள் இவற்றை எல்லாம் கேட்ட பெரியவர் நீங்கள் வடலூர் சென்றுதான் பெருமானை காணவேண்டும் என்று இல்லை நீங்கள் அனைவரும் ஜோதியின் முன்னாள் அமர்ந்து பெருமானை நினைத்து தியானம் செய்யுங்கள் அவர் உங்கள் முன்னே தோன்றி அருள் புரிவார் என்றார் பெரியவர் இதை கேட்ட சண்முகம் பெரியோர்களின் சொல்லில் எப்பொழுதும் ஒரு அர்த்தம் இருக்கும் உடனே தன்மனைவியுடன் சேர்ந்து இருவரும் ஜோதியின் முன்னாள் அமர்ந்து வடலூர் ஐயாவை மனதில் நினைத்து தங்களின் மெய்யுறிகி வேண்டினார்கள் உண்மை அன்பால் அழைத்தால் கடவுள் கூட காரியபடுவார் என்பதற்க்கு இணங்க நமது வடலூர் வள்ளல் பெருமான் சண்முகத்தின் முன் ஆயிரம் கோடி சூரியபிரகாசமாக தோன்றினார் இப்பேற்பட்ட தேஜஸ் கொண்ட ஒருவரை நாங்கள் இதுவரை எந்த லோகத்திலும் கண்டதில்லை என்று பெருமானின் பொற்பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்கள்
அன்பே வடிவான அருள் வள்ளல் சண்முகத்தை பார்த்து தங்களுக்கு என்னவேண்டும் அன்போடு வினாவினார் கருணையே வடிவாக கொண்ட பெருமானே எங்களின் அன்புமகன் பிறவியிலிருந்தே வாய்பேசமுடியாமல் தவிக்கிறான் அதனால் ஐயா எங்கள் மகனை தங்களிடம் சேர்த்துவிட்டோம் எனவே தங்களின் திருவருள்
கருணையினால் அவனுக்கு பேசும் வல்லமையை தரவேண்டும் என்று கைகூப்பி வணங்கினார்கள் நம்மையெல்லாம் வாழ்விக்க வந்த கருணைவள்ளல் வடலூர் இராமலிங்கம் அந்த வாய் பேசா பிள்ளையை தன் அருகில் அழைத்து தாய் பசுவானது தன் இளங்கன்றை தன் நாவால் வருடுவதுபோல் செல்வத்தை தன் பொற்கரங்களால் தடவினார் மேலும் மஹா மந்தரமாகிய அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி என்று செல்வத்தின் நாவில் தம் திருகரத்தால்
எழுதினார் உடனே அந்த ஊமை பிள்ளையின் வாயிலிருந்து காட்டாற்று
வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதுபோல் திருஅருட்பா என்னும் தேன்மழை
பொழிய தங்கு தடை இன்றி சரளமாக பாடி பரவசம் அடைந்தான்
தங்கள் பிள்ளையின் இனிய குரலோசையை கேட்க்க அருள் பாலித்த ஐயாவிடம் எங்களின் மகன் இனி என்னென்றும் தங்களின் முக்கிய லட்சியமாகிய ஜீவகாருண்யத்தினை வலியுறித்தி இந்த உலகத்தில் அனைத்து மானிடர்களுக்கும் நன்மார்கமாம் சன்மார்க்க கொள்கைகளை எடுத்து சொல்லி செயல்படபாடுபடுவோம் என்று ஐயாவிடமிருந்து விடைபெற்று கொண்டு தங்களுக்கு பெருமானின்
திவ்விய தரிசனம் கிடைக்க வழிகாட்டிய பெரியவருக்கு நன்றி
கூறினார்கள் பெரியவர் சண்முகம் தம்பதியரை பார்த்து உண்மை அன்பால் எதையும் பெறலாம் என்பதற்க்கு உதாரணம் நீங்கள் ஆகவே அன்பாக இருப்பது ஆனந்தம் கண்ணீர்விட்டு அழுபவனுக்கு ஆறுதல் சொல்வதும் ஆனந்தம்தான் இதேபோல் பட்டினியால் பரிதவிப்பவர்களுக்கு ஆகாரம் என்னும் அருமருந்தை கொண்டு அவர்கள் பசியை போக்குவதும் ஆனந்தம்தான் இயற்கையிலே முடியாதவனுக்கு இதயபூர்வமாக சேவை செய்வதும் ஆனந்தமானதுதான் இப்படி நீங்கள் உங்கள் வாழ்வில் பல ஆனந்தம் மலர நமது அருட்ஜோதி வள்ளல் என்றும் உங்களுக்கு அருள் புரிவார் என்று ஆசிகூறி அவர்களை வழியனுப்பிவைத்தார் பெரியவர்
இவ்வாறு பெரியவரின் ஆசிர்வாதத்தை பெற்றுகொண்டு தங்களின் கிராமத்திற்கு புறப்பட்டு சென்று தங்கள் வாழ்வில் இறைவன் அருட்பெரும்ஜோதியின் கருணையினால் எல்லா நலமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்தார்கள் .
கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக
ஜீவகாருண்யமே மோட்சவிட்டின் திறவுகோல்
பசித்தவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்.9940656549
பசித்தவருக்கு உணவு கொடு அதுவே ஜீவகாருண்யம்
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
அ.இளவரசன்
வள்ளலார் உயிர் கொலை தடுப்பு இயக்கம்
நெ.34, அண்ணா தெரு
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை-600 043
கைபேசி எண்.9940656549
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment