பசித்திரு தனித்திரு விழித்திரு
தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக
ஜீவகாருண்யமே மோட்சவிட்டின் திறவுகோல்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
அன்புள்ளம் கொண்ட ஆன்மீக அன்பர்களுக்கு வந்தனம் ஒரு மனிதன் உழைக்காமல் பேராசை கொண்டால் அவன் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை அறிய இங்கே இரு மனிதர்களின் நிலயை விளக்கும் கதையை பார்ப்போம் மேலூர் என்ற வளம்மிக்க ஒரு கிராமத்தில் இரண்டு விவசாய குடும்பங்கள் அதில் ஒருகுடும்பத்தில் மலையப்பன் எழிலரசி மிகவும் எழ்மையான தம்பதியர் இவர்களுக்கு வீரம் நிறைந்த ஆண்மகன் ஒருவன் அவன் ஞானமே வடிவாக பிறந்தவன் அவன் பெயர் ஞானதேசிகன்
இவர்கள் அனைவரும் எப்பொழுதும் இறைவன்மீது அளவுகடந்த பக்தி செலுத்தி தருமசிந்தனையோடு தங்களால் இயன்ற அளவிற்கு தருமம் பல செய்து வாழ்ந்து வந்தார்கள். மற்றொரு குடும்பத்தில் எல்லப்பன் சந்திரா தம்பதியர் இந்த குடும்பத்தில் கடவுள் நம்பிக்கை சிறிதும் இல்லாதவர்கள் இவர்களுக்கு ஒரேஒரு பெண் இவள் பார்பவர்கள் சிந்தைகலங்கும் அளவிற்கு விண்ணுல ஊர்வசியோ ரம்பயோ அல்லது தேவகன்னிகையோ என்று வியக்கும் அளவிற்கு பேரழகு உடையவள் ஆனால் இவளிடம் ஆணவம் என்னும் பேய் பிடித்து நான் என்ற கர்வத்துடன் இருந்தாள் இவர்கள் வாழ்வில் செல்வம் மலைபோல் கொட்டி கிடந்தன ஆனால் அவற்றால் ஏழை எளியமக்களுக்கு ஒருபயனும் இல்லை ஏன் இவர்கள் அனைவரும் சுயநலவாதிகள் தான தருமம் என்பதை கடுகளவும் செய்துஅரியாதவர்கள் இப்படி இரண்டு குடும்பங்கள் வாழ்ந்துவரும் வேளையில் அந்த ஊரில் அரசாங்க ஊழியன் அரசு தகவல் ஒன்றை வீதிஎங்கும் அறிவித்து வந்தான் அந்த செய்தி என்னவென்றால் பக்கத்து காட்டில் ஞானமே உருவாக கொண்ட தபசி ஒருவர் இருக்கிறார் அவர் தம் தவவலிமையால்அவரிடம் வருபவர்களுக்கு பொன்பொருள் வேண்டுபவர்க்கு பொன்பொருளும்
குழந்தைவரம் கேட்பவர்களுக்கு குழந்தைபாக்கியமும் மற்றும் அவரரவர் மனோபக்குவத்திர்க்கு தகுந்தாற்போல் வேண்டியவற்றை எல்லாம் அளித்துவருகிறார் என்று அந்த ஊர் எங்கும் அறிவித்து வந்தான் இந்த செய்தியை கேட்ட மலையப்பனின் மனைவி தன் கணவனிடம் பயபக்தியோடு அவன் அருகில் போய் அமர்ந்தாள் மனைவின் குரிபரிந்து தன்மனைவியை நோக்கினான் எழிலரசியோ தன்கையில் இருந்த பலகாரத்தை தன் கணவனிடம் கொடுத்தால் தன்மனைவி அன்போடு கொடுத்த பலகாரத்தை வாங்கிக்கொண்டு தபசியை காண காட்டிற்க்கு புறப்பட்டான், மலையப்பன் காட்டிற்கு செல்லும் வழியில் ஒரு புறாவானது வேடுவன் அம்பினால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதை பார்த்து அவன் மணம் துயரத்தினால் துடி துடித்தது உடனே அவன் அருகாமையில் இருந்த மூலிகைகளை கொண்டு அந்த புறாவை காப்பாற்றினான் தன் உயிரை காப்பாற்றிய மலயப்பனை பார்த்து ஐயா தெய்வம்போல் தாங்கள் தக்கசமயத்தில் எண் உயிரை காப்பாற்றினிர்கள் உங்களுக்கு எல்லாம் வல்ல ஆண்டவர் அருட்பெரும் ஜோதி தங்களுக்கு தங்கள் வாழ்வில் எல்லா நலமும் பெற அருள்புரிவார் எனக்கூரி ஆனந்தமாக வானில் பறந்து சென்றது மலையப்பன் பறவைக்கு
உதவிவிட்டு மீண்டும் நடக்கலானான் சிறிது தூரம் சென்றதும் மாலைபோழுதாகிவிட்டது அருகாமையில் இருந்த மண்டபத்தில் இன்று இரவு இங்கேயே தங்கி நாளை புறப்படலாம் என்று மண்டபதின்வாயிலில் அமர்ந்து ஓய்வேடுத்துகொண்டிருந்தான்.
மலையப்பன் மனைவி தன்கணவனை தபசியிடம் அனுப்பியதுபோல்
சந்திராவும் தன்கணவனிடம்போய் ஆணவத்தோடு அடதுப்புகேட்டமனுஷா
ஊரில் எல்லோரும் காட்டில் வந்திருக்கும் தபசியை பார்த்து பொன்பொருள் வாங்கிவர
போய்கொண்டிருக்கிறார்கள் நீயோ வெட்டிபேசிக்கொண்டு இருக்கிறாயேஎன்று
வேண்டாவெறுப்பாக சிலபலகர்ரங்களை பையில் வைத்து காட்டிற்கு அனுப்பிவைத்தால் எல்லப்பனும் தன்மனைவி கட்டளைக்கு இணங்க உடனேகாட்டிற்கு புறப்பட்டான் போகும் வழியில் தன் சொந்த கால்களால் நடக்ககூட முடியாதநிலையில் ஒருஎழை பசியால் வாடிகொண்டிருந்தான் அப்பொழுது சிரிதுதொளைவில் யாரோ வருவதை பார்த்துஇவர்களிடம் எதாவது உணவு இருந்தால் நம்பசியை போக்குவார்கள் என்று ஆவலோடு காத்திருந்தான் அந்த ஏழை எல்லப்பனோ அந்த ஏழையை கண்டும் காணததுபோல் போய்கொண்டிருந்தான் பசியால் வாடிகொண்டிருக்கும் ஏழை எல்லப்பனை பார்த்து கல்நெஞ்சம் கொண்ட கொடியமணிதா நான் எவ்வாறு பசியினால் வாடுகிறேனோ அதுபோல் நீயும் உன்குடும்பமும் பசியினால் வாடவேண்டும் அப்பொழுதுதான் உங்களுக்கு பசிஎன்றால் என்னவென்று உணருவீர்கள் என்று சாபம் கொடுத்துவிட்டு சிறிதுநேரத்தில் அந்த
ஏழை இறைவன் அருட்பெரும்ஜோதியின் திருவடியை சென்றடைந்தார் எல்லப்பனோ இவற்றைஎல்லாம் பொருட்படுத்தாமல் தபசியைகாண போய்கொண்டிருந்தான் சிறிது தூரம் சென்றதும் மாலைபோழுதாகிவிட்டது அருகாமையில் இருந்த மண்டபத்தில் இன்று இரவு இங்கேயே தங்கி நாளை புறப்படலாம் என்றுமண்டபதின்வாயிலில் அமர்ந்து திரும்பிபார்த்தான் அங்கே மலையப்பன் ஓய்வேடுத்துகொண்டிருந்ததை பார்த்து அவன் அருகில் சென்று நலம் விசாரித்தான் இருவரும் ஒரு ஊரை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து அவர்கள் இருவரும் நண்பர்கள் ஆனார்கள் மறுநாள் இருவரும் காட்டில் இருக்கும் தபசியை சந்திக்க சென்றனர் தபசியிடம் எதைக்கேட்டாலும், கொடுப்பாராம் ,என்று பேசிக்கொண்டு இருவரும் நடக்கலானார்கள் சிறிது கடந்ததும் தபசியின் குடிலை நெருங்கினார்கள் தபோபலம் நிறைந்த தபசி தன்குடிளுக்கு வந்தவர்களை உபசரித்து வந்திருபவர்களின் மனநிலைகளை அறிந்துகொண்டு முதலில் மலயப்பனை பார்த்து தங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் மலையப்பன் சுவாமி என்குடும்பம் மூன்று வேளை உணவு உண்டு இருக்க வீடும் உடுக்க உடையும் நிரந்தரமாக கிடப்பதுபோல் இந்த ஊரில் உள்ள அனைவருக்கும் கிடைக்க தங்கள் தான் அருள் செய்யவேண்டும் என்று வேண்டினான் தபசியும் அவன் வேண்டிய வரத்தை அளித்தார் வீடு போய் சேரும் வரை உணவையும் தந்தார்.
அருகாமையில் நின்றிருந்த எல்லப்பனை பார்த்து தங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் பேராசை கொண்ட எல்லப்பன் ஐயா
முனிவரே நான் இந்த உலகத்தில் வாழ தேவைப்படும் பொன்பொருள்களை தாருங்கள் என்று கேட்டன்
தபசி எல்லப்பன் கேட்டவாறே கோடிகணக்கில் பணமும் தங்காபரனங்களும் அளித்தார் தான் எண்ணிவந்த காரியம் நிறைவேறியதை எண்ணி மகிழ்ச்சியுடன் முனிவர் தந்த உணவையும் அவன் வாங்க மறுத்துவிட்டான் இருவரும் வீட்டை நோக்கிப் புறப்பட்டார்கள் எல்லப்பன் வழியில் கிடைத்த பழவகைகள் ஓடை நீரில் தனது பசியை போக்கியபடி வந்தான் மலையப்பனோ முனிவர் தந்த உணவை சிறிது சிறிதாக சாப்பிட்டபடி வந்தான் கடைசியாக ஒரு பாலைவனத்தை அவர்கள் கடக்க வேண்டி வந்தது வெப்பம் அவர்களை வாட்டியது தாகம் எடுத்தது பசியும் வயிற்றை பிசைந்துஎடுத்தது மலையப்பனோ முனிவர் தந்த உணவையும் நீரையும் கொண்டு பசியைபோக்கிகொண்டான் எல்லப்பன் கோடிகணக்கான பணத்தை தூக்கமுடியாமல் தள்ளாடியபடி மலையப்பன் இருக்கும் இருப்பிடம் வந்து சேர்த்தான்
பசி....... பசி........ தாகமாக இருக்கிறது தண்ணீர் தண்ணீர் என்று நிற்க்க கூட முடியாத நிலையில் தள்ளாடியபடி வந்து மலையப்பனிடம் கொஞ்சம் தண்ணீர் குடு என்று கெஞ்சினான் என்னிடம் இருந்த சாப்பாடும் தண்ணீரும் தீர்ந்து போச்சு பாலைவனத்தை கடந்து நகருக்குள் சென்றால் தான் எல்லாம் கிடைக்கும் உன்னிடம் தான் நிறையபணம்மிருக்கிறதே அதைக்கொண்டு இங்கு ஏதாவது கிடைக்கிறதா என்று பார் என்றான் மலையப்பன் இந்த மனித நடமாட்டம் இல்லாத கொடும்பாலைவனத்தில் சாப்பிட என்னகிடைக்கும் ? எண் பேராசையால் ஒருபிடி சோத்துக்கு வழியில்லாமல் தவிக்கிறேனே என்று மணம் நொந்தபடி இந்த பணம் தானே இவ்வளவுதுன்பத்துக்கும் காரணம் இந்த பணமா இங்கே சோறு போட போகிறது இல்லையே என்று தன்கையில் இருந்த பணத்தை எல்லாம் வீசிஎரிந்தான்
அப்போது அந்த இடத்தில் தபசியானவர் வருவதை கண்டு இருவரும் வணங்கினார்கள் எல்லப்பன் முனிவரை பார்த்து ஐயா எனக்கு பணம் வேண்டாம் பொருள் வேண்டாம் செல்வங்கள் வேண்டாம் இப்பொழுது என்பசியை போக்ககூடிய உணவு கிடைக்க செய்தால் அதுவே போதும் என்றான் தபசி எல்லப்பனை பார்த்து நீ என்னை பார்க்கவரும் போது வரும் வழியில் பசியினால் வாடிக்கொண்டிருந்த ஏழையை பார்த்தும் பார்க்காததுபோல் ஆணவத்தோடு வந்தாயே அந்த ஏழை கொடுத்த சாபம் இப்பொழுது நாபகம் வருமே என்றார் முனிவர் எல்லப்பன் தபசியின் பாதத்தில் வீழ்ந்து வணங்கி சிறியேன் அறியாமல் செய்த குற்றம் அனைத்தையும் குணமாக கொண்டு திருவருள் புரியவேண்டும் என்றான் தபசி இன்றுமுதல் நீ பசி என்று யார்வந்தாலும் அவர்பசியை போக்கு பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டிவா அப்பொழுது உன்வாழ்கையில் எல்லா நலமும் பெற்று சீறும் சிறப்புமாக வாழ இறைவன் அருள் உனக்கு பூரணமாக கிடைக்கும் என்று ஆஸிகூரி அவனது பசியை போக்கி அவர்கள் இருவரையும் அனுப்பிவைத்தார்
எனவே அன்பர்களே நாமும் பிற உயிர்களின் பசியை போக்கி இறைவனின் அருளைபெருவோம்
--~--~---------~--~----~------------~-------~--~----~
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment