மகாதேவ மாலை சிறப்பு:
|
திரு அருட் பிரகாச வள்ளலார் , மகாதேவ மாலை என்ற பகுதியில் , 100 பாடல்களை இயற்றி உள்ளார்கள்.
இதனில், முதல் 70 பாடல்களில் இறைவனின் பெருமையையும், மீதம் 30 பாடல்களில் நமது சிறுமையையும் இறைவனிடம் எவ்வாறு விண்ணப்பம் ( விசாரிக்க) வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்கள்.
இந்த "மகாதேவ மாலை" பகுதியில், வேதாந்தத்தில் , சித்தாந்தத்தில் உள்ள அனைத்து சாராம்சங்களையும் வள்ளலார் ஒருங்கே கொடுத்துள்ளார்கள் .இதனை பின் வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.
"காப்பு செய்யுளில்" , சிவஞான போதம் "12 சூத்திரங்களின்" சாரத்தை ஒரே பாடலில் கொடுத்துள்ளார்கள்.
|
கருணைநிறைந் தகம்புறமும் துளும்பிவழிந்
துயிர்க்கெல்லாம் களைகண் ஆகித் தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற கண்ணுடையோய் சிதையா ஞானப் பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்ற மலர்வாயோய் பொய்ய னேன்றன் மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையும்உட் கசிந்துருக்கும் வடிவத் தோயே |
கருணைநிறைந்து - காருண்யம் / தயவு நிரம்பி
தகம்புறமும் - உள்ளும் புறமும் துளும்பி - ததும்பி வழிந்து - பெருகி பாய்ந்து உயிர்க்கெல்லாம் - சர , அசர உயிகள் அனைத்தினுக்கும் களைகண் ஆகித் - ஆதாரமாகி தெருள் நிறைந்த - தெளிவு நிரம்பிய இன்பநிலை - நித்திய இன்ப நிலையை வளர்க்கின்ற - பாதுகாக்கின்ற கண்ணுடையோய் - அருளாகிய கண்ணை உடையவனே சிதையா - அழிவில்லாத ஞானப்பொருள் - ஞானப்பொருள் நிறைந்த - நிரம்பிய மறையமுதம் - வேத ஆகமங்கலாகிய அமிர்தத்தை பொழிகின்ற - பெய்கின்ற மலர்வாயோய் - செந்தாமரை மலர் போன்ற திருவாய் உடையவனே பொய்யனேன் தன் - பொய்யனேன் ஆகிய எனது மருள்நிறைந்த - மயக்கம்(அஞ்ஞானம்) நிறைந்த மனக் கருங்கற்பாறையும் - கருங்கல்,பாறை போன்ற எனது மனமும் உட்கசிந்து - உள்ளே கசிந்து உருக்கும் - உருக்கும் வடிவத்தோயே - அருள் திருமேனி உடையவனே |
Next Article : சிவஞான போதம் "12" சூத்திரங்கள் - மகாதேவ மாலை பாடல் தொடர்பு
|
MahaDeva Malai Text : http://thiruarutpa.org/thirumurai/v/3005/Makaadheva_Maalai
|
Anbudan,
Vallalar Groups
web : http://vallalargroupsmessages.blogspot.com
E-Mail : vallalargroups@gmail.com
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி
No comments:
+Grab this
Post a Comment