தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி !
Very good information, kindly send this kind of information in frequent manner. This will enable us not to trap any other ego.
Regards
M.Singaravelan
Very good information, kindly send this kind of information in frequent manner. This will enable us not to trap any other ego.
Regards
M.Singaravelan
2012/12/7 ELAVARASAN ANNAMALAI <elavarasansumathi@gmail.com>
--பசித்திரு! தனித்திரு! விழித்திரு!அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி !தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி !கொல்லா நெறியே குவலயமெல்லாம் ஓங்குக!
ஜீவகாருண்யமே மோட்சவிட்டின் திறவுகோல்!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு!.
இன்புறு சித்திகள் எல்லாம் புரிகவென்று
அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்சோதி (அகவல்ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் ஒருமனிதன் தான் மட்டும் தான் நிறைய தர்மங்கள் செய்கிறோம்என்கிற ஆணவம் அவனுக்குள் வருமேயானால் அவனுடைய ஆணவத்தை அருட்பெருஞ்சோதி ஆண்டவர் எவ்வாறு பக்குவப்டுத்துகிறார் என்பதை பற்றி இங்கே ஒரு நிகழ்வு அவையாதெனில்முன்பு ஒருகாலத்தில் மருதநாடு என்ற வளம்நிறைந்த நாடு அந்நாட்டை மருதன் என்ற மன்னன் ஆண்டுவந்தான் அவன் தன நாட்டு மக்களுக்கு யாதொருகுறையுமில்லாமல் கண்ணை இமைகாப்பதுபோல் காத்து தனது தாரள குணத்தால் தான தர்மங்களை செய்துவந்தார்எவ்வாறெனில் பொன்பொருள் வேண்டுவோர்க்கு பொன்பொருளும் கோதானம் வேண்டுவோர்க்குகோதானமும் தானியங்கள் வேண்டுவோர்க்கு தானியமும் பசிஎன்று வருவோர்க்கு அன்னதானமும் மேலும் பல தானதருமங்களை செய்து சிறந்தமுறையில் ஆட்சிசெய்து வந்தார்,இப்படி ஒரு நல்ல மன்னன் கிடைக்க நாம் முன்ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று நம் மன்னர் நீண்டநாள் வாழ்க என வாழ்த்தினார்கள் இப்படி சிறந்த முறையில் ஆட்சிசெய்து வந்தநல்லதொரு மன்னனை விதி வலியது என்பதற்க்கு ஏற்ப்ப ஆணவம் என்கிற பேய்பிடித்து கொண்டது ,மருதன் தன் ஆனவசெறுக்கினால் தவசிகளை மற்றும் யோகியர்கலையும் ஏளனமாக பேசிகொண்டிருந்தான்மருதநாட்டு மன்னன் மருதன் இப்படி தன் கர்வத்தினால் மற்றும் நான் என்கிற ஆனவசெருக்கினால்மதிய்ழந்து செயல்படுவதை அறிந்த நமது வடலூர் வள்ளல் பெருமான் வணங்கிய அருட்பெருஞ்சோதிஆண்டவர்,நமக்கு கிடைத்த நல்லபிள்ளை தன கர்வத்தினால் கிழ்தரமாக நடந்து தனக்கு கிடைத்த நல்ல பெயரையும் பாழ்படுத்தி கொள்கிறானே என்று வேதனை அடைந்தார்.இருப்பினும் நம்பிள்ளை மருதனுக்கு தக்கசமயத்தில் நல்லதொரு வழியை காட்டுவது நம்முடைய கடமை ஆயிற்றே எனமருதனின் மதியுக மந்திரி நெடுமாறன் முலமாக மருதனுக்கு நல்லதொரு வழியை காண்பிக்கவேண்டும்என மந்திரி நெடுமாறன் கணவில் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தோன்றி நெடுமாறனே தங்களின் மன்னன் இப்பொழுது தான் முன்பு செய்த நற்காரியங்களை நினைந்து தனக்கு நிகர் இந்த உலகில் யாரும் இல்லை என அவருக்கு முன்பு கிடைத்த நற்பெயரை பாழ்ப்டுத்திகொள்கிறாரே இவற்றை தாங்கள் நல்லதொரு மந்திரி என்ற முறையில் அவருக்கு எடுத்துரைக்க கூடாதா என்றார் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.மந்திரி நெடுமாறன் அருட்பெருஞ்சோதி ஆண்டவரே என் மனதிலும் நெடுநாளாக இத்துயரம் வாட்டிகொண்டிருக்கிறது ஆனால் அடியேன் சிறியவன் ஆயிற்றே ஆகையால் தாங்களே இதற்க்குஒரு உபாயம் சொல்லவேண்டும் என ஆண்டவரிடத்தில் வேண்டினான் உண்மை அன்பால் வேண்டினால்கடவுள் காரியபடுவார் என்பதிற்கு ஏற்ப்ப அப்பா நெடுமாறா நீ உம்முடைய மன்னனை காட்டிற்க்குவேட்டைக்கு அழைத்து செல் அங்கே நீங்கள் செல்லும் வழியில் உமக்கு நல்லதொரு வழிபிறக்கும் என கூறி மறைந்தார்.இவ்வாறு நெடுமாறன் தான் சொப்பனத்தில் கண்ட நிகழ்வை மனதில் கொண்டுஎவ்வாறு நம் மன்னனை எவ்வித உபாயம் சொல்லி வேட்டைக்கு அழைப்பது என யோசித்தான்இவ்வாறு யோசிக்கும் வேளையில் அப்பொழுது அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது அவையாதெனில் ஏற்கனவே கர்வம் கொண்டிருக்கும் மன்னன் மனதில் ஆசையை தூண்டினால் நம்முடைய காரியம் எளிதில் நிறைவேறும் என மறுநாள் அரசாங்க சபை கூடியதும் மன்னனை பார்த்து மன்னா தாங்கள் நாட்டில் எவ்வளவோ தருமங்கள் செய்து நல்லதொரு அரசனாக விளங்குகிறிர்கள் ஆகையால் மேலும் சிறப்படைய கானகம் சென்று தவசிகளை சந்தித்து ஆசி பெற்றால் தங்களுக்கு நிகர் தாங்களே என்றான் மந்திரி நெடுமாறன்.தன்மந்த்ரியின் யோசனை மன்னனுக்கு மிகவும் பிடித்திருந்தது ஆகையால் மன்னன் அப்படியே ஆகட்டும் என தபோவனம் என்று சொல்லகூடிய தவசிகள் நிறைந்த வனத்திர்க்கு புறப்பட்டு சென்றார்கள் மன்னனும் மந்திரியும்.அவர்கள் செல்லும் வழியில் வாய்பேசா இலங்கன்றானது கொடியவன் ஒருவனால் எயித அம்பினால்துடித்து கொண்டிருந்தது அவற்றை கண்ணுற்ற மன்னன் நமது வடலூர் பெருமான் கண்ட இயற்கை மூலிகைகொண்டு அவற்றிக்கு வைத்தியம் செய்து குணம்மடைய செய்தார்கள்.மீண்டும் தங்கள் பயணத்தை தொடர நினைத்தார்கள் ஆனால் அங்கே இரவு நேரமானதால் இன்று இரவு இங்கேயே தங்கி மறுநாள் பயணத்தை தொடரலாம் என்று அருகில் ஏதாவது வீடு தென்படுகிறதா எனப்பார்த்தார்கள் அங்கே சற்று தொலைவில் ஒரு சிருவிளக்கின் ஒளி தெரிந்தது அந்த ஒளியை நோக்கி இருவரும் நடந்தார்கள் ஒளியின் அருகாமையில் சென்றதும் அவ்விடத்தில் ஒரு சிறுகுடில் ஒன்று இருந்தது அவற்றின் அருகில் சென்று உள்ளே யாரேனும் இருக்கிறிர்களா என குரல் கொடுத்தார்கள் சற்று நேரம் கழித்து உள்ளிருந்து பக்கத்து நாட்டு மன்னன் மகோதரனும் மற்றும் சேனைகளும் இன்னும் சில தவசிகளும் வெளியில் வந்தார்கள் அவர்கள் வெளியில் நின்றிருந்த மருதனை பார்த்து தாங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று வினவினார்கள் உடனே மந்திரி நெடுமாறன் தாங்கள் வந்த விவரத்தை கூறி இரவு நேரமானதால் இங்கே தங்கி மறுநாள் பயணத்தை தொடரலாம் என்றுவந்தோம் என்றான் மந்திரி நெடுமாறன்.நல்லவர்கள் முகக்குறிப்பரிந்து செயல்படுவார்கள்என்பதிற்கு ஏற்ப்ப மகோதரன் அவர்களை உள்ளே அழைத்து சென்று உபசரித்து அவர்களின் பசியை போக்கும் விதமாக அரண்மனையில் சமைத்தது போன்ற பலவிதமான உணவுகளை த்ங்கதட்டுகளில் பரிமாறினார்கள் உணவை ருசித்து உண்டபின்னர் தங்கள் உணவு அருந்திய தங்கதட்டுகளை அங்குயிருக்கும் பணியாளர்களிடம் திருப்பி கொடுத்தனர் .ஆனால் அதனை எவரும் பெற மறுத்துவிட்டனர் அதன் காரணம் தெரியாமல் மன்னன் விழித்தார் மந்திரி நெடுமாறன் கண்டும் காணாததுபோல் இருந்தான் அப்போது அப்பணியாளர்கள் எங்கள் மன்னன் மகோதரனின் ஆட்சியில் கொடுத்ததை திரும்ப பெரும் வழக்கம் இல்லை என்றனர், மன்னன் மந்திரியை பார்த்தான் உடனேமந்திரி நெடுமாறன் பணியாளர்களை பார்த்து எங்கள் மன்னரும் அவருடைய நாட்டில் தினமும் ஆயிரம்பேருக்கு அன்னதானம் செய்கிறோம் என்றான் அதன் அத்தனை பெருமையும்எங்கள் மன்னரையே சாரும் என்றான் அதற்க்கு பக்கத்து நாட்டு மன்னன் மகோதரன்அப்படியானால் தங்கள் நாட்டில் உங்கள் மன்னர் நடத்தும் ஆட்சியில் உணவு தடுப்பாட்டுடன் அவ்வளவு ஏழைகள் இருக்கிறார்களா ?நானும் தினமும் பலருக்கு அன்னதானம் செய்யவேண்டும் என நினைக்கிறேன் ஆனால் எங்கள் நாட்டில்அன்ன ஆகாரம் வாங்க ஆட்களே இல்லை என்றான் மகோதரன்,மதியுக மந்திரி நெடுமாறன் தன மன்னனின்காதில் ஒரு மன்னன் தனது நாட்டில் வாழும் மக்களுக்கு தினமும் தான தர்மம் செய்வதைவிட,அவர்கள் தான தர்மங்களை எதிர்பார்க்காத வகையில் ஆட்சி செய்வதே தன நாட்டு மக்களுக்குமன்னன் வழங்கும் கொடையாகும் என்றான் இவற்றை கேட்ட மன்னன் மருதனின் உள்ளம் தெளிவடைந்தது முன்பு அவன் கர்வத்துடன் நடந்துகொண்ட விதத்தை எண்ணி அவன்தலை நிலத்தைபார்த்தது அன்று முதல் அவனை பற்றியிருந்த கர்வம் மற்றும் மாயத்திரைகள் நீங்கப்பெற்று கலங்கிய சேற்றுநீர் போல் இருந்த அவன் உள்ளம், நமது வடலூர் வள்ளல்பெருமான் உருவாக்கியதீஞ்சுவை நீரோடையைப்போல் அவனுள்ளம் தெளிவடைந்தது.மந்திரி நெடுமாறன் மன்னனை பார்த்து மன்னா விடிந்ததும் நாம் நெடுந்தூரம் பயணிக்கவேண்டும் சற்றே ஓய்வெடுங்கள் என்றான். மன்னன் மருதன் தன் மதியுகமந்திரி நெடுமாறனை பார்த்து நாம் காட்டிற்க்கு சென்று பெறவேண்டியதை எல்லாம் மாமன்னன் மகோதரன் அவர்தம்சேனைமூலமாக பெற்றுவிட்டேன் என கூறி தன நாடு திரும்பி தம்முடைய நாட்டில் பட்டினியில்லா நோயில்லா செல்வசெழிப்போடு வாழும்குடிமக்களை கொண்டு அவர்தம் நாட்டின் தவசிகளின் தயவோடும் மற்றும் தன மதியுக மந்திரியோடும் சீரும் சிறப்புமாக ஆட்சிசெய்துவந்தார்எனவே அன்பர்களே சான்றோர்பெருமக்களே நாமும் நம் வாழ்வில் கர்வம் கொள்ளாமல் நான் என்கிறஆணவப்பேய் நம்மை பற்றிக்கொல்லாமல் எப்பொழுதும் இறைசிந்தனையோடும் ஜீவதயவோடும் பசிஎன்று வருவோர்க்கு உணவு என்னும் மருந்தைகொண்டு அவர்தம் பசிப்பிணிபோக்கிவந்தால்எல்லாம்வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவர் நம்முள்ளே காரியப்பட்டு நம்மையும் சீரும்சிறப்புமாக வாழவைப்பார் என்பதில் சிறிதும் ஐயமில்லைபசி என்று வருவோர்க்கு உணவுகொடு அதுவே ஜீவகாருண்யம்!ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல் !எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்ஆன்மநேய:அ .இளவரசன்சமரச சத்திய சன்மார்க்க சங்கம்நெ.34,அண்ணா தெருதிருவள்ளுவர் நகர்ஜமின் பல்லாவரம்சென்னை -6000 43கைபேசி:9940656549
--
No comments:
+Grab this
Post a Comment