Vadalur Jothi Ramalinga Swamigal(Thiru Arut Prakasa Vallalar , Ramalinga Adigalar) Concepts , Vallalar Education ,Vallalar Study Material , Vallalar MP3 Speeches , Vallalar DVD , Vallalar Books,Vallalar Functions - Information Sharing etc
Monday, August 22, 2011
Re: [vallalargroups:4309] மானமிகு சமுதாயம் மலர...!
2011/7/14 sayeeganesh juttusaibabasubramanian <dayasayeeaug11@gmail.com>:
> DEAR SIR
> BEST WISHES
> VALLALAR WILL BE WITH YOU
> SEND ME YOUR ADDRESS
> DAYAVUDAN
> SAYEEGANESH
> 9894765247
>
> 2011/7/8 gangai manimaran <rgangaimanimaran@gmail.com>
>>
>> மானமிகு சமுதாயம் மலர...!
>> அருட் பெருஞ் சோதிக்கு
>> ஆதியும் கிடையாது.
>> அந்தமும் கிடையாது!
>> ஆதியும் அந்தமும் இல்லா
>> ஜோதிக்கு ---
>> ஜாதியும் கிடையாது!
>> சமயமும் கிடையாது!
>> அதனால்தான்--
>> சாதிகளைச் -- சழக்கு என்பார்
>> சாதிகளைப் -- பேய் என்பார்
>> பொறித்தமதம் சமயமெலாம்
>> பொய்- பொய்- பொய்யே என்பார் -
>> நானுரைக்கும் வார்த்தைஎலாம்
>> நாயகன்தன் வார்த்தை என்று
>> நம்பிக்கையோடு சொன்ன -
>> நம்பிரான்--வள்ளல் பிரான்!
>> அவர்தம் மார்க்கத்தில்--மட்டும்தான்...
>> "சாதிகள் இல்லையடி பாப்பா" என்று
>> பாப்பாக்களுக்கும் சொல்லிக் கொண்டிருக்கும்
>> பாவலன் நான்!
>> ஆதியில் --
>> கோயில்கள் அனைத்தும்
>> சாதிக் கோயில்களாகத்தான் இருந்தன!
>> ஆதிக்கவாதிகளின் கோட்டைகளைச் சரித்து
>> சாதிக் கோயில்களுக்கு மத்தியில்--
>> சோதிக் கோயில் கண்ட
>> சொக்கத் தங்கமல்லவா வள்ளலார்..!
>> அவரைச் சரிவரப் பரப்பாமலும்
>> நெஞ்சத்தில் நிரப்பாமலும்
>> பிழைசெய்த பெரும் பாவிகள் நாமல்லவா..!
>> சூதறிந்தீர்..வாதறிந்தீர்.. தூய்மை அறிந்திலரே..!
>> என்று--
>> ஏதறிந்து கொண்டோம் என்பதே தெரியாமல் வாழ்ந்த
>> இந்நாட்டு மக்களுக்காக--
>> ஓதி ஓதி உண்மைகள் உரைத்து
>> உளம் நொந்து போனவர் அல்லவா வள்ளலார்!
>> கடை விரித்தேன் கொள்வார் இல்லை என்று
>> கலங்கியவரும் அவர்தானே!
>> நல்லார் மனம் நடுங்கக் கூடாது!
>> ஏழைகள் வயிறு எரியக் கூடாது!
>> வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிக்கக் கூடாது!
>> கல்லும் நெல்லும் கலந்து விற்கக் கூடாது!
>> பொருளை இச்சித்துப் பொய் சொல்லக் கூடாது!
>> என்று--
>> சமூகப் பாவங்களைப் பட்டியல் இட்டு
>> பல்லாற்றானும் பண்ணிப் பண்ணிப்
>> பாடி நெகிழ்ந்தவர்--
>> பற்றுகள் அனைத்தையும்
>> பற்றறத் தவிர்த்தவர்---வள்ளலார் அல்லவா!
>> அவரைப் பாமரரிடமும் கொண்டு போக வேண்டிய
>> கால கட்டம் இதுவென்று
>> கண்டு கொண்ட காரணத்தால் ---
>> வள்ளலார் பெயரில்
>> அறக் கட்டளைஒன்றை ஆரம்பிக்கிறேன்--
>> அடியேன்!
>> பத்தோடு பதினொன்றாய்
>> பசியாரச் செய்வது மட்டுமே நோக்கமாய்க் கொள்ளாமல்--
>> சன்மார்க்கிகளாய் மக்களை மாற்றும்
>> சமூகப் புரட்சிக்கு வித்தாய்--
>> ஓர் குக் கிராமத்தில்
>> ஆரம்பிக்கிறேன்--என்பணியை!
>> சாலைச் சோலை என்னும் பெயரில்
>> மரக் கன்றுகள் நட்டு--
>> அவற்றை மரமாக வளர்த்துக் காட்டுதல்-
>> கல்வி உதவிகள் மூலம்
>> கண்திறத்தல்--
>> சாதி மறந்த சமூகம் நிர்மாணிக்க
>> ஆழ்ந்த அறிவூட்டுதல்!--
>> தந்தைமொழி தமிழ் என்று சொல்லிப் பெருமிதப் பட்டாரே..
>> வள்ளல் பெருமான் --அந்தத் தமிழ் காக்கும் உணர்வை
>> பட்டி தொட்டிகளில் எல்லாம்
>> பதியச் செய்தல் என்று
>> படரப் போகிறது என் பார்வை!
>> ஈர்த்துப் பிடிக்கும் என்
>> காந்தத் தமிழ் கொண்டு
>> கவரமுடியும் மக்களை என்று
>> அழுத்தமான நம்பிக்கை --என்
>> அடிவாரத்தில் இருக்கிறது!
>> ஆகவே .. நண்பர்களே..!
>> சன்மார்க்க அன்பர்களே..!
>> துணைக்கு நில்லுங்கள்..!
>> தூயவரின் வழிபற்றித்
>> தொடரும் தொண்டுக்கு
>> ஆனவரை உதவுங்கள் !
>> அருள்வார்த்தை கூறுங்கள்!
>> மானமிகு சமுதாயம்
>> மலரவழி அருள்கின்ற
>> ஞானமிகு இராமலிங்கர்
>> நல்வழியில் நாம் வாழ்வோம்!
>> அன்புடன்,
>> கவிஞர்.கங்கை மணிமாறன்
>> நிர்வாக அறங்காவலர்
>> திருவருட் பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக் கட்டளை
>> செல்:9443408824
>>
>> --
>> To register to this vallalargroups, and Old Discussions
>> http://vallalargroupsmessages.blogspot.com/
>>
>> To change the way you get mail from this group, visit:
>> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>>
>> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
>> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>>
>> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
> --
> To register to this vallalargroups, and Old Discussions
> http://vallalargroupsmessages.blogspot.com/
>
> To change the way you get mail from this group, visit:
> http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
"அருளே நம் இனம்; அருளே நம் குலம் என்ற சிவமே" - vallalar வாத்து தன்னுடைய ஆறு குட்டிகளுடன் ஒரு பகுதியை கடக்கிறது ....
-
"நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேன...
-
G etting goosebumps while listening to Raja's Thiruvasagam is nothing uncommon, but the following real life incident gave me goosebu...
-
http://www.4shared.com/dir/7141181/e1c6d6a4/sharing.html 2008-07-14 VALLALAR SONG LYRICS AND FONTS 5 file(s) File Fol...
-
Health No. Book Title Author Download 1 Siddha herbal medicine -சித்த மருத்துவ மூலிகைகள் Dr. Kasi Pitchai 2 Siddha herbs - ச...
-
The English version of VaLLalaarin ViNNappagkal is already with Thiru J.Karthikeyan. Friends interested may approach him. With the best of T...
-
"ELLA UYIRGALUM INBUTRU VAZGA" Vallal Malaradi Vaalga Vaalga Dear All, All are inviting to attend the Bangalore Mont...
-
அருட்பெருஞ்ஜோதி இன் தனிப்பெருங்கருணைக்கு நன்றி On Fri, Oct 11, 2013 at 10:46 AM, Vallalar Groups < vallalargroups@gmail.com ...
-
ungaloda thagaval epavum maratha alavuku koduthurukinga. 2013/5/2 Vallalar Groups < vallalargroups@gmail.com > முருகப் பெருமான் யார்...
Contact Form
Translitrator(English to Tamil)
Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)
No comments:
+Grab this
Post a Comment