அன்புடையீர்,ஒரு சிறு விளக்கத்தை இங்கு கூறநினைகிறேன். தியானம் செய்பவர்களுக்கு தெரியும் இந்த அனுபவம் பற்றி. நாம் கண்களை மூடி தியானம் பண்ணும்போது புருவமதியுள் ஜோதி தரிசனத்தை பார்ப்பார்கள் . கண்கள் மூடியிருக்க காட்சிகள் எப்படி பார்க்கமுடியும். 10 விதமான ஒலிகள் கேட்கும் என்று சொல்லுவார்கள். நறுமணத்தை உணர்ந்தாக சொல்லுவார்கள். ஆனந்தம் பொங்கியது என்பார்க்கள். புலன்கள் அதாவது உடம்பின் உதவியால் தான் நாம் பார்க்கிறோம்,கேட்டிகிறோம்,சுவை உணருகிறோம் என்பது உண்மையானால், கண்களை மூடிக்கொண்டு ஜோதியை எப்படி பார்க்க முடிந்தது. ஒளியை எப்படி உணரமுடிந்தது. இதன் ரகசியம் என்ன?. சுக்கும தேகமாகிய மனமே இதை உணருகிறது. எதையும் கடந்து போனால் தான் இறைநிலை விளங்கும். அதனால் கண்ணுக்கு தெரியும் இந்த மண்பாண்டத்தையும் அதன் சுற்றத்தையும் பெரிதாக எண்ணாமல். மனம் நிர்மலமானால் ஆகாய வெளி தெரியும் அந்த ஆகாயவெளியை வெளி என்றும் காட்டுவது யார்? அதை புரிந்து கொள்ளுவது யார்? இங்கே அருட்பெரும்ஜோதி ஆண்டவர் யார் என்று தன்னை காட்டுவார் பின்னர் உன்னை யார் என்று காட்டுவார் பின்பு சும்மா இருக்கும் சுகம் பேரின்ப ஆனந்தமான அமைதிநிலை, ஒருமைநிலை வரும். அரூபத்தை புரிந்துகொண்டால் அருவுருவத்தை புரிந்துகொள்ளலாம். அருவுருவத்தை புரிந்துகொண்டால் ரூபத்தை புரிந்துகொள்ளலாம்.சிறு விளக்கை கொண்டு பெருவிளக்கை ஏற்றுவது போல் நாம் கொண்டுள்ள ஆன்மா அறிவை கொண்டு பேரறிவாகிய பரம ஆன்மாவை அறிந்துகொள்ள முயற்சிப்போம். நம் ஆன்மா அறிவை எப்படி அறிவது மனதின் அறிவை (கலை அறிவை) கொண்டு ஆன்மா அறிவை தெரிந்துகொண்டு பின்னர் ஆன்மா விளக்கை கொண்டு பரம ஆன்ம விளக்கத்தை அறிந்துகொள்ள முயற்சிப்போம். மனதின் அறிவை அறிந்துகொள்ள மனத்தூய்மை வேண்டும். அதை பெற்றுக்கொள்ள ஜீவகாருண்யம் செய்வோம். தானே சுததேகம் பிரணவதேகம் ஞானதேகம் வாய்க்கும். அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வழி நடப்போம். ஒருமை நிலையை அறிந்துகொண்டு ஒருமைநிலையை அடைய முயற்சிப்போம்.என்றும் அன்புடன்,உயிர்.கடவுள் மயம் அறிந்து அம்மையம் ஆனவரை கடவுள் என்று கூறாமல் வள்ளலார் என்ற பெயர் சொல்வதை விட அருட்பெரும்ஜோதிண்டவர் என்று அழைப்பதுவே சால சிறந்தது. இது ஏன் சுயவிருப்பம் ஆகும்.2010/10/26 Mohan Suresh <psureshdreams@gmail.com>
--திருப்பள்ளி எழுச்சி பாடல் எண்.6 உரைவிளக்கம்.
திருப்பள்ளி எழுச்சிஉரை விளக்கம்.சுவாமி சரவணானந்தா.
பாடல் எண்-6.
ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
ஊதின சின்னங்கள்; ஊதின சங்கம்
பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
பெரும்புகழ் பேசினர்; பெரியவர் சூழ்ந்தார்;
அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி
அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே
இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் ஜோதி
என்அரசே பள்ளி எழுந்தருள் வாயே
வானைக் கிழித்துக் கொண்டு "ஊம் ! ஊம்!" என்று திருச் சின்னங்கள் ஓங்கி ஒலித்தன.இந்தத் திருச் சின்னங்களின் ஊங்கார ஒலிகளும் வெண் சங்குகளின் ஓங்கார நாதங்களும் மக்களைத் தட்டி எழுப்பின, அவர்கள் மனதைக் கவர்ந்தன. அவர்களுக்குள் ஒருமையை உண்டாக்கின.எல்லாம் பிரணவமாகிய 'ஓம்' என்னும் அருட் சக்தியின் மயமாகவே விளங்குகின்றன. உள்ளத்துள் ஓங்காரமாயிருக்கும் அருட் சக்தியின் அம்சமே நாம் ஒவ்வொருவரும். எனவே நாம் எல்லோரும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை உடைய சகோதரர்களே ஆவோம். இந்த உண்மையைத்தான் பிரணவ நாதம் நமக்கு உணர்த்துகிறது.
மக்கள் ஆன்ம நேய உரிமைப்பாட்டு உரிமையை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.எல்லாரும் உள்ளும் புறமும் ஒத்து உரிமை உடையவர்களாய் வாழ்ந்து தழைத்து ஓங்க வேண்டும் என்று அந்தப் பிரணவ நாதம் கட்டளையிடுகிறது. சுத்த சன்மார்க்கப் பெரியவர்கள் அந்த சன்மார்க்கத்தின் பெருமையை பேசுகிறார்கள் என்று ஓங்கார முழக்கம் தெரிவிக்கிறது.
மக்களைத் துன்பத்தில் ஆழ்ந்த்தி அவர்களைச் சீர்குலைத்து வந்த மற்ற மார்க்கங்களைப் பற்றி அவர்கள் பேசவில்லை.
சுத்த சன்மார்க்கம் மற்ற சன்மார்க்கத்திலிருந்து வேறு பட்டது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அதன் உயர்வையும், தனிச் சிறப்பையும் நன்கு தெரிந்து கொள்ள முடியும்.
சன்மார்க்கம் என்றால் பொதுவாக அறநெறி; நல்வழி என்று பொருள் கொள்ளலாம்.
அறநெறிகளும், நல்வழிகளும் பொய்யான போக வாழ்க்கையில் ஈடுபடும் மனதைத் திருத்தி அதை இறை அனுபவத்தை நோக்கிச் செலுத்தவதற்காகவே ஏற்பட்டன.
இந்த நெறிகளால், மக்கள் அழிவைத் தரும் உலகியல் தொடர்பை அறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரவர்கள் விரும்பியதை நிறை வேற்றிக் கொள்வதற்குத்தான் அந்த நெறிகள் ஓரளவு பயன்பட்டன. அந்த சன்மார்க்கங்களால் பெரும் நன்மை ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை.
கடவுள் அனுபவமான பேரின்பத்தைப் பெறுவதற்கே நம் உடம்பு பயன் பெற வேண்டும். ஓங்கார தத்துவ நிறைவை உடையது மனிதனின் புனித உடல்.
இந்த உடல் அழியாமல் நிலைத்து இருந்தால்தான் பேரின்பப் பெருவாழ்வைப் பெற முடியும்.
கடவுள் நித்தியமானவர். அவர் உடலின் உள் இருக்கும் ஆன்ம வடிவை மட்டும் பற்றிக் கொண்டு விடுவாரானால் உடல் உயிர் அற்று வீழ்ந்து விடும். அந்த உடலைப் பெற்றிருந்த ஆன்மாவின் ஆனந்த அனுபவமும் அத்தோடு முடிந்து போய்விடும். ஆன்மா மட்டும் கடவுளுடன் கலந்து போய்விடும்.
இதுவரை எத்தனையோ ஆன்மாக்கள் இவ்வாறு தங்கள் புனித உடலைப் பூமியிலே கிடத்திவிட்டுக் கடவுளுடன் கலந்து போயிருக்கின்றன.
ஆன்மா தம் உடலை விட்டுப் பிரிந்து போவதால் அந்த ஆன்மா தம் உடல் உடன் இருந்து அனுபவித்து வந்த பேரின்ப நிலையையும் இழந்து விடுகிறது. இதைத்தான் ஜீவன்முக்தி நிலை என்று சைவ சித்தாந்தம் சொல்கிறது !
இது எப்படி ஜீவன் முக்தி நிலையாகும் ? இது தேகத்தை இழந்த விதேக நிலை அல்லவா ? தேகத்தை இழந்த நிலையே விதேக நிலையாகும். உடலை விட்டுவிட்ட ஆன்மா, உடல் இல்லாமலே பேரின்பத்தைப் பெற்றுவிட்டது என்று சைவ சித்தாந்தம் பேசுகிறது.
இது எப்படி நியாயமாகும் ?
ஆன்மாவும் உடலும் சேர்ந்து இருக்கும்போது தான் பேரின்பத்தை அனுபவிக்க முடியும் என்பதை, சுத்த சன்மார்க்கம் தெளிவாகத் தெரிவிக்கிறது.
இப்போது சுத்த சன்மார்க்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ் ஜோதியாய்த் தனிப் பெருங் கருணையுடன் இருப்பவர். இதை விளக்கிக் காட்டுவதுதான் சுத்த சன்மார்க்கம்.
அருட்பெருஞ் ஜோதியை நடுவில் வைத்து, அதைச் சுற்றி ஓர் உடல் உருவம் தோன்றும்படி அதன் தனிப்பெருங் கருணை செய்து வருகிறது.
அந்த உயிரின் உடலுக்கு அதன் அதன் தன்மைக்கு ஏற்ப அனுபவங்களைக் கொடுத்து அதை மேல் நிலைக்கு உயர்த்திக் கொண்டு இருக்கிறது.
ஒவ்வொரு உடலில் இருக்கும் உயிரையும் இயக்கிக் கொண்டிருப்பவர் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர். அவர் நித்தியமானவர். ஒவ்வொரு உயிருக்கும் அருள் ஞானம் உண்டாக்கும் கருவியாகவே அருட்பெருஞ் ஜோதியின் தனிப்பெருங்கருணை அந்த உயிர்களுக்கு உடலைக் கொடுத்திருக்கிறது.
உயிருக்குள் இருக்கும் இறைவனை எண்ணித் தியானிக்கும் ஒருவன் அந்த இறைவனுடன் ஒண்றுவதற்காகத் தன் உடலை விட்டு விடுவது பேரின்ப வாழ்வாகாது.
ஒவ்வொருவரும் அருட்பெருஞ் ஜோதி இல்லாமல், தான் இல்லை என்பதை உணர வேண்டும். அதன் தனிப் பெருங் கருணையாகிய ஜீவர்களிடம் தயவு காட்டுவதை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தங்கள் உயிர், உடல், சிந்தனை, சொல் செயல் முதலியவற்றில் எல்லாம் அருட்பெருஞ் ஜோதியை நிறைத்துக் கொள்ள வேண்டும்.
அப்போது நம் உள் இருந்து ஆள்கின்ற அருட்பெருஞ் ஜோதியின் தயவே அங்கிருந்து அனகமுற விரிந்து எல்லாவற்றையும் தன் வண்ணமாக ஆக்கிக் கொள்கிறது. அந்த ஆன்மாவின் உடல் அருட்பெருஞ் ஜோதியின் தனிப் பெருங் கருணை மயமாகவே மாறி விடுகிறது.
இந்த நிலையில் அந்த உடம்பு சுத்த உடம்பாகி விடுகிறது. இந்தச் சுத்த உடம்பில் கடவுள் நித்தியத் தன்மையுடன் நிலைபெற்று இருக்கிறார். அந்த உடம்பையும் நித்தியத் தன்மை உடையதாய்ச் செய்கிறார்.
நம் உள் இருக்கும் இறைவனை உணர்ந்து அவர் அருளுடன் அனகமுற வாழ்கின்ற பேரின்பப் பெரு வாழ்வுதான் சுத்த சன்மார்க்கம். சுத்த சன்மார்க்கத்தில் ஒருவன் தன் தூல உடம்பை இழப்பதில்லை.
ஒருவன் செய்கின்ற அருட்பணி காரணமாக அருட்பெருஞ் ஜோதியின் தனிப்பெருங்கருணை, அவன் தூல உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உயிர் அணுவிலும் புகுந்து பரவுகிறது. இதன் மூலமாக அந்தத் தூல உடம்பின் அசுத்தம் நீங்கி விடுகிறது. அது சுத்த உடல் ஆகிறது. மரணம் இல்லாத நித்தியத் தன்மையைப் பெற்றுவிடுகிறது.
உடம்பின் உள்ளே இருக்கும் அருட்சோதியே அனகமாக விரிந்து உடம்பின் ஒவ்வொரு உயிர் அணுவிலும் நிறைவதால், அந்த உடம்பு அருள் ஒளி உடம்பாக மாறிவிடுகிறது.இந்த நிலையில்தான் ஒருவன் இறைவனின் பேரின்ப அனுபவத்தைப் பெறுகிறான். மரணமிலாப் பெருவாழ்வை அடைகிறான். இதுதான் சுத்த சன்மார்க்கத்தின் தனிப் பெருமை.
இந்த உண்மையை நன்றாக அறிந்து சுத்த சன்மார்க்கிகள் இதன் புகழையே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சுத்த சன்மார்க்கத்தின் பெருமையை அறிந்து கொண்ட பெரியோர்கள் வேறு கற்பனை மார்க்கங்களின் கதைகளைப் பேசி வீண் பொழுது போக்க மாட்டார்கள்.
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அம்பலத்தில் சித்தாடல் புரிந்து கொண்டிருக்கிறார். அவர் அருமையும், எளிமையும் இவை இரண்டும் அல்லாத நிலைமையும் உடையவர்.
உயிர்ப்பணி செய்து வருவதன் மூலமாகத்தான் ஒருவர் தன்னிடம் இருக்கும் அகங்காரத்தைப் போக்கிக் கொள்ள முடியும். அகங்காரத்தைப் போக்கிக் கொண்டவர்களுக்கு ஆண்டவன் அருள் எளிதாகக் கிடைக்கிறது.
இவர்களுக்கு இறைவன் எளிமையாக இருக்கிறார்.
உயிர்ப்பணி புரியாமலும், இரக்க உணர்வு இல்லாமலும், கருணை இதயம் பெறாமலும், வெறும் கல்வித் திறமையைக் காட்டும் ஆணவமுடையவர்களுக்கு இறைவன் அருள் கிடைப்பது அருமையாகும்.
இவர்களுக்கு ஆண்டவர் அருமையாக இருக்கிறார்.
உயிர்ப்பணி புரியாமலும், அதே சமயத்தில் கல்வித் திறமை இல்லாமலும் இருக்கும் சாதாரண மக்களுக்கு இறைவன் எங்கும் இருக்கின்றவராகவும் இருக்கிறார். அவர்களால் கண முடியாதவராகவும் இருக்கிறார். ஆத்திகர்க்கு அவர் இருக்கின்றவராகவும், நாத்திகர்க்கு அவர் இல்லாதவராகவும் இருக்கிறார். பொதுமக்களுக்கோ இறைவன் இந்த இரண்டும் இல்லாத மத்திய நிலையில் இருக்கிறார்.
அருட்பெருஞ்ஜோதி அரசே 1 எனக்கு இருமையையும், அளித்திருக்கிறீர்கள். எனக்குத் தந்திருக்கின்ற இந்த இருமையின் பெருமையை யார் அறிவார் ?
இந்தப் பிறவியை இம்மை என்றும், மறு பிறவியை மறுமை என்றும் சித்தாந்திகள் சொல்வார்கள்.
எனக்கு இப் பிறவியிலேயே இறப்பும், பிறப்பும் இல்லாத பெரு வாழ்வான மறுமையை அல்லவா தந்திருக்கிறீர்கள்.
சைவ சித்தாந்திகள் சொல்கிற இம்மை மறுமை என்ற இருமையில் என்ன பெருமை இருக்கிறது ?
சித்தாந்திகள் கருத்துப்படி இம்மை நீங்கினால் அல்லவா மறுமை என ஒன்று வந்து அடைய வாய்ப்பு இருக்கும் ? இப் பிறவி போனால் அல்லவா மறுபிறவி ஏற்பட முடியும் ?
என் தூல உடல்தான் அழியாத நித்திய உடலாக மாறிவிட்டதே. எனக்குப் பேரின்ப பெரு வாழ்வையே அல்லவா அளித்திருக்கிறீர்கள். நான் பெற்றிருக்கும் இந்த இருமை சுத்த சன்மார்க்க இருமை ஆயிற்றே. சைவ சித்தாந்திகள் கூறும் இப் பிறவியையும் மறு பிறவியையும் குறிக்கும் அழிவைத் தரும் இருமை அல்லவே.
சுத்த சன்மார்க்க இருமை அருள்மை, பொருள்மை என்ற நிலையான இருமையை உடையது ஆயிற்றே.
அருள்மைப் பேற்றினால் எல்லாப் பொருள்களையும் ஆளும் பொருள்மைப் பேற்றையும் பெற்றிருக்கிறேன்.
இந்த நிலையான இருமையை எனக்கு அளித்து உலகை எல்லாம் வாழ்வித்து ஆளும் அருளையும் தந்திருக்கிறீர்கள் ! வாழ்க தங்கள் தனிப்பெருங்கருணை !
சுத்த சன்மார்க்கத்தின் நிலையான இருமையை எனக்கு வழங்கியதுடன் என் திருப்பள்ளியில் இருந்தும் எழுந்து இருக்கிறீர்கள். தேவரீர் அனகமுற்று என்னை ஆண்டருள வேண்டும் என்பதே அடியேன் விண்ணப்பமாகும்.
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க--
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
To register to this vallalargroups, and Old Discussions http://vallalargroupsmessages.blogspot.com/
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
No comments:
+Grab this
Post a Comment