thank you for your more informations.
காலையில் இஞ்சி,
கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய்
i wants to know the vallalar's view about this formula.?please...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
On 4/2/09, balamurugan d <to.dbala@gmail.com> wrote:
>
> மூலிகை சாறு...
>
> இன்று நாம் காலையிலும் மாலையிலும் கடற்கரை, கடைவீதிகள், பொது
> இடங்களில் சிறிய வண்டியில் மூலிகை சூப் இங்கு கிடைக்கும் என விளம்பரங்களை எல்லா
> நகரங்களிலும் காண்கிறோம்.
>
> டீ, காஃபி, மது, குளிர் பானங்கள் என பலவற்றை அருந்தி வந்த மக்களிடையே தற்போது
> புதியதாக முளைத்திருக்கும் இந்த மூலிகை சூப் கடைகள் படையெடுக்கக் காரணம்,
> இவர்களில் சிலர் மூலிகையின் பயனால் நோய் வரும்முன் காக்கவும், உடலில் நோய்
> எதிர்ப்பு சக்தி உண்டாகவும், நோயின்றி வாழவும் ஆரோக்கியமானது இத்தகைய மூலிகை
> சாறு (சூப்) களே என்பதை தற்போது உணரத் தொடங்கி விட்டனர் என்ற உண்மை
> புலனாகிறது.
>
> சில மூலிகைச் சாறுகளை உடலில் மேல்பூச்சாக பயன்படுத்தினால் எண்ணற்ற தோல்
> வியாதிகளை குணப்படுத்தலாம்.
>
> நம் முன்னோர்கள் நோயின் தாக்கம் இன்றி வாழ அவ்வப்போது வீடுகளில் மூலிகைச்
> சாறு கொடுப்பார்கள். இது இன்றைய தலை முறையினருக்கு தெரிய வாப்ப்பில்லை.
>
> இந்த மூலிகைச் சாறுகளின் மருத்துவப் பயன்களை அன்றே உணர்ந்த சித்தர்கள் அதை
> எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் தெளிவாக பாடியுள்ளனர்.
>
> இந்த மூலிகைச் சாறுகளின் பயன்களை தற்போது காண்போம்.
>
> எலுமிச்சை சாறு
>
> எலுமிச்சை சாற்றை அருந்தினால் பித்த மயக்கம், வாந்தி, கண்ணோய், இரத்த
> சோகையால் ஏற்பட்ட சோர்வு முதலியவை நீங்கும். உடலுக்கு புத்துணர்வை தரும்.
> நன்கு பசியைத் தூண்டும். தாகத்தைத் தணிக்கும்.
>
> எலுமிச்சம் சாற்றை தலையில் தேய்த்து குளித்து வந்தால் மனநோய், மன அழுத்தம்
> நீங்கும்.
>
> உடலில் தேய்த்து குளித்தால் தோல் சம்பந்தப்பட்ட சில வியாதிகள் குணமடையும்.
> நகச்சுற்றுக்கு இதன் சாறே சிறந்த மருந்து.
>
> யானைக்கால் வியாதி, கண்ணோய், காதுவலிக்கும் எலுமிச்சை சாறு சிறந்த மருந்து.
>
> இஞ்சி சாறு
>
> நம் முன்னோர்கள்
>
> காலையில் இஞ்சி,
>
> கடும்பகல் சுக்கு
>
> மாலையில் கடுக்காய் என்றார்கள்.
>
> இம்மூன்றையும் தினமும் உட்கொண்டால்நோய் என்பதே நம்மை நெருங்காது என்பது
> சித்தர் வாக்கு.
>
> இஞ்சியை சாறு எடுத்து சிறிதளவு தினமும் அருந்தினால் வயிற்றுவலி, வயிற்றுப்
> பொருமல், வாந்தி, குடல்நோய், பித்த மயக்கம், போன்றவை நீங்கும். நீரிழிவு
> நோயாளிகளுக்கும் இது உற்ற மருந்தாகும். மேலும் தொண்டைப்புண், குரல் கம்மல்,
> இவைகளைக் குணப்படுத்தும்.
>
> கரிசலாங்கண்ணிச் சாறு
>
> கரிசலாங்கண்ணிச் சாறு ஜலதோஷம், காய்ச்சல், உடல்வலி, விஷக்கடி, சிறுநீரில்
> இரத்தம் வெளியேறுதல் போன்றவற்றை குணப்படுத்தும். இதன் சாறை காலையில்
> அருந்துவது நல்லது. அல்லது மதிய உணவுக்குப்பின் சூப் செய்து அருந்தலாம்.
>
> பொன்னாங்கண்ணிச் சாறு
>
> பொன்னாங்கண்ணி பல வகையான தைல வர்க்கத்தில் அதிகம் உபயோகப்படுத்தப்படுகிறது.
> இந்த பொன்னாங்கன்னி கீரையை சூப் செய்து காலை மாலை இருவேளை என 15 நாட்களுக்கு
> அருந்திவந்தால் கண் நோய்கள் ஏதும் அண்டாது. உடலின் வெப்பத்தைக் குறைத்து
> உடலுக்கு புத்துணர்வை கொடுக்கும்.
>
> தூதுவளைச் சாறு
>
> வறட்டு இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைப்புண், அடிக்கடி ஜலதோஷம் உள்ளவர்கள்
> தூதுவளைச் சாறு அந்தி வந்தால் சளித் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
>
> அருகம்புல் சாறு
>
> அருகம்புல் சாறானது இரத்தத்தை சுத்தப் படுத்துவதுடன் உடலுக்கும் புத்துணர்வை
> கொடுக்கிறது. உடலில் தேங்கியுள்ள அசுத்த நீர் அனைத்தையும் வெளியேற்றுகிறது.
>
> தண்ணீர் விட்டான் கிழங்கு சாறு
>
> தண்ணீர் விட்டான் கிழங்கின் சாறை எடுத்து தினமும் காலையில் அருந்தி வந்தால்
> உடல் சூட்டை தணித்து பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதலைத் தடுக்கும். தாது
> புஷ்டியை கொடுக்கும்.
>
> பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப் படுத்தும்.
>
> வெள்ளைப் பூண்டு சாறு
>
> வெள்ளைப் பூண்டு சாற்றை காதில் இரண்டு சொட்டு விட்டால் காது மந்தம் குறையும்.
> உள்நாக்கில் தடவினால் உள்நாக்கு வளர்ச்சி (டான்சில்) குறையும். மேலும் சிறிது
> அருந்தினால் இருமல், சுவாசம் அடைப்பு, மலக்கிருமிகள் நீங்கும். உடலின் மேல்
> சுளுக்கு ஏற்பட்ட பகுதிகளிலும் தடவலாம்v வெற்றிலைச் சாறு
>
> வாத பித்த கபத்தினை அதனதன் நிலையில் சமப்படுத்த வெற்றிலைச் சாறு சிறந்த
> மருந்தாகும். சளியைப் போக்கும். காணாக்கடிகளுக்கு இதன் சாறு சிறந்த மருந்து.
> அஜீரணத்தைப் போக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.
>
> வேலிப்பருத்தி சாறு
>
> சுவாசம், காச நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். கருப்பையிலுண்டாகும் பக்க
> சூலைக்கு இதன் சாறு தேன் கலந்து கொடுத்தால் பக்க சூலை நீங்கும். கை கால்
> வீக்கங்களுக்கு மேல் பூச்சாகத் தடவலாம்.
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
>
> எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
>
> சுத்த சன்மார்க்க அன்பன்
> பாலமுருகன்
> காஞ்சிபுரம்
>
>
>
>
>
>
> >
>
--~--~---------~--~----~------------~-------~--~----~
To post to this group, send email to vallalargroups@googlegroups.com
To change the way you get mail from this group, visit:
http://groups.google.com/group/vallalargroups/subscribe?hl=en
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
-~----------~----~----~----~------~----~------~--~---
No comments:
+Grab this
Post a Comment