Tuesday, October 9, 2018

[vallalargroups:6025] மூளைச்சாவு - பித்தலாட்டத்தின் உச்சம்

மூளைச்சாவு - பித்தலாட்டத்தின் உச்சம் !
---------------------------------------------------

"மூளை இறக்குமா?..."
- டாக்டர் A. ஷேக் அலாவுதீன்
MD., (Chin.Med), A.T.C.M(CHINA)
Zhejiang University, Hangzhou,(China)
(Chinese Traditional Medicine).

ஒருவருக்கு உயிர் இருக்கின்றதா? இல்லையா என்பதை அறிய முதலில் மூச்சு இருக்கின்றதா? என்றுதான் பார்ப்போம்...

பாமரர் முதல் படித்தவர் வரை உயிர் இருக்கின்றதா என்பதை கண்டறிய உலகெங்கும் உள்ள நடைமுறை இதுதான்...

ஆனால்?...........இன்றோ!!!?

மூச்சு(சுவாசம்) இருக்கின்றது!

இரத்த ஓட்டம் இருக்கின்றது!

நாடி துடிப்பு இருக்கின்றது!

இதயத்துடிப்பும் இருக்கின்றது!

இருந்தும்...

மூளை இறந்து விட்டது என்று சொல்லி உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கொன்று அவரின் உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பழக்கம் டாக்டர்கள் மத்தியில் மிக அதிகமாகிக் கொண்டு வருகின்றது...

உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யும் டாக்டர்கள் இவர்கள்...

மக்களும் இதற்கு ஆதரவளித்து வருவது மிகவும் வேதனைப் படக்கூடிய, வெட்கப்படக்கூடிய விசயமாகும்...

மூளை இறந்து விட்டது என்று சொல்லி தமக்கு தேவையான அனைத்து உறுப்புகளையும் எடுத்துக்கொள்ளும் இந்த கொள்ளையர்கள், மாபெரும் பல உண்மைகளை மக்களிடம் மறைத்து விடுகின்றார்கள்...

மூளை இறக்குமா?

அப்படி கூறும் டாக்டர்களுக்கு மூளை இருக்குமா?

மூளை இறந்துவிட்டது என்று சொல்லுபவர்களே...
நீங்கள் சொல்லும் வார்த்தையில் உண்மை இருக்குமானால், மனச்சாட்சி உள்ள டாக்டர்களாக இருப்பீர்களேயானால்...

பதில் சொல்லுங்கள்...

இறந்துவிட்டது என்று சொன்ன மூளை, உடம்பில் இருந்தபோது இயங்கிய மூச்சு, இரத்த ஓட்டம், இதய துடிப்பு, நாடி துடிப்பு இவையெல்லாம் இறந்த அந்த மூளையை உடம்பிலிருந்து எடுத்தவுடன் (மூச்சு, இரத்த ஒட்டம், இதய துடிப்பு, நாடிதுடிப்பு இவையெல்லாம்) நின்று விடுகின்றனவே!
ஏன்? ஏன்? ஏன்?...

காரணம் மூளை இறக்கவில்லை, மூளை இயங்கி கொண்டுதானிருக்கின்றது...

மனிதனின் கடைசி மூச்சு இருக்கும் வரை மூளையானது
இயங்கி கொண்டுதானிருக்கும்...

சிந்தியுங்கள்... 
மக்களே!...
இது ஒரு மாபெரும் கொலை!...
பெரிய மோசடி!!!

இந்த கொலைக்கு மக்களும், அரசாங்கமும் துணை போவதுதான்
மிகக்கொடுமை...

உறுப்பு தானங்களுக்கு நான் எதிரியல்ல...

இறந்துவிட்ட ஒருவரின் உறுப்பை தானம் பெறுவதை நான் எதிர்க்கவில்லை...

உயிரோடு இருப்பவரின் அனுமதி பெற்று அவரின் உறுப்புகளை தானம் பெறுவதையும் நான் எதிர்க்கவில்லை...

நாம் எதிர்ப்பதெல்லாம் உடலில் முக்கிய உறுப்புகள் எல்லாம் இயங்கி கொண்டிருக்கும்போது, மூளை இறந்துவிட்டது என்று சொல்லி ஒருவருடைய மூச்சை நிறுத்தி கொலை செய்து உடல் உறுப்புகளை தானம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதைத்தான்...

இப்படி உறுப்புகளை எடுப்பதன் மூலம் பல குடும்பங்களை வாழவைப்பதாக(?) கூறும் இவர்கள் இதன் மூலம் பல பெண்கள் தாலி அறுக்கப்பட்டு விதவைகளாக நிற்பதை வெளியில் சொல்லுவதில்லை!

பல குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதைகள் ஆவதை வெளியில் சொல்லுவதில்லை!!!

பெற்றோர்கள் தங்கள் குழந்தையை இழந்து தவிப்பதை வெளியில் சொல்லுவதில்லை!!!

இப்படி 6 மாத குழந்தையிலிருந்து 60 வயதானவர்கள் வரை இவர்களின் கொலைக்கரங்கள் நீண்டுவிட்டன...

இனி யாரும் மயக்கம் போட்டுக் கூட கீழே விழுந்துவிட கூடாது...

அப்படியே விழுந்தாலும் தவறி இவர்களிடம் போகக் கூடாது...

காரணம் மூளை இறந்துவிட்டது என்று சொல்லி கொலை செய்து
உறுப்புகளுக்கு விலைபேசி விற்று விடுவார்கள்...

இவர்கள் உறுப்புகளை தானமாக பெற்றாலும் அதை
மற்றவர்களுக்கு பொருத்தும் ஆப்ரேசனை இவர்கள் (டாக்டர்கள்) தானமாக (இலவசமாக) செய்வார்களா?...

செய்ய மாட்டார்கள்...

மக்களே!
எச்சரிக்கையாக இருங்கள்!! 
இவர்களின் நோக்கம் பணம் தான்...
மக்கள் நலமல்ல!!! என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

நம் மக்களும், மலிவான பத்திரிக்கைகள் மற்றும் டி.வி விளம்பரங்களுக்கு அடிமைப்பட்டு இதற்கு உடன்படுவதுதான் ஒரு மாபெரும் வேதனை...

கோமா என்று நாம் அழைத்ததைத்தான் இவர்கள் "Brain Death" (மூளை இறந்துவிட்டது) என்று சொல்லி நம்மை ஏமாற்றுகின்றார்கள்.

கோமாவில் இருந்தவர்கள் பலநாட்கள், பல மாதங்கள் ஏன் வருடங்களுக்கு பிறகு கூட உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உயிர் பிழைத்து நலமாக வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம்.

அப்படி இருக்கும்போது உயிர் வாழ (கோமா நிலையிலிருந்து மீண்டெழ) வாய்ப்புகள் அதிகம் உள்ள அவர்களை அவசர அவசரமாக கொலை செய்ய வேண்டிய நோக்கம் என்ன என்பது
உங்களுக்குப் புரிந்திருக்கும்...

இது ஒரு முழுமையான சாட்சியுடன் கூடிய கொலை என்பதால் இதை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை அரசாங்கம் இவர்களுக்கு வழங்க வேண்டும்.

உலகில் எத்தனையோ விதமான மருத்துவங்கள் இருக்க அந்தந்த துறை சம்பந்தப்பட்டவர்களிடம் எல்லாம் எவ்வித யோசனையும் கேட்காமல் ஆங்கில மருத்துவம் கூறுவதை அப்படியே அரசும் மக்களும் நம்பியதால் இவர்கள் இந்த அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.

1947-ல் இந்தியா சுதந்திரமடைந்தபோது நாம் விரட்டியடித்த ஆங்கிலேயர்கள் கூடவே இந்த ஆங்கில மருத்துவத்தையும் விரட்டியிருக்க வேண்டும்...

அப்படி விரட்டாமல் அரசியலில் மட்டும் சுதந்திரம் அடைந்து ஆங்கில மருத்துவத்திற்கு அடிமையானதின் விளைவுதான் இன்று நம்மை உயிரோடு புதைக்கின்றார்கள்...

இந்திய மருத்துவங்களான சித்தா, யுனானி, ஆயுர்வேதா, உடலில் சக்தியை வைத்தே நோயை குணப்படுத்தும் அக்குபஞ்சர், ஆகியவை இருக்க, மற்றும் ஆங்கில மருத்துவத்தின்
கொடுமையை படித்து அதில் வெறுப்புற்ற ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஹானிமன் உலகுக்கு வழங்கியது தான்ஹோமியோ மருத்துவம். 
இது போன்ற நல்ல மருத்துவங்கள் எல்லாம் இருக்க
அவற்றை மதிக்காமல் கண்மூடித்தனமாக இவர்களை பின் பற்றியதின் விளைவுதான் இன்று உயிரோடு இருக்கும்போதே கண்களை எடுக்கிறார்கள்...

இந்திய மெடிக்கல் கவுன்சில், தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் என்று பெயரை மாத்திரம் வைத்துக்கொண்டு அதில் ஆங்கில மருத்துவத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கு அரசாங்கம் சேவகம் செய்வதால் தான் இந்த அவலங்களை, கொடுமைகளை
நாம் அனுபவிக்கின்றோம்.

இந்திய மெடிக்கல் கவுன்சிலில் நமது இந்திய மருத்துவமும் இல்லை...

தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் நம் சித்த மருத்தவமும் இல்லை...

மக்களே சிந்தியுங்கள்!...

நம் வரிப்பணத்தில் அந்நிய நாட்டு மருத்துவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் அநியாயத்தையும், இதனை அங்கீகரிக்கும் அரசையும்
புரிந்து கொள்ளுங்கள்...

திறமையும் அறிவும் உள்ள நம்நாட்டு மருத்துவங்களை படித்த பல இலட்சக்கணக்கான டாக்டர்கள் வெளியில் தெரியமல் போனதற்கும் அவர்கள் திறமை பயன்படாமல் அமுங்கி போனதற்கும் மக்களாகிய நாமும், அரசும் தான் காரணம்.

இந்த மருத்துவங்களுக்காக தேவையான உதவிகளை அரசு செய்திருக்குமானால் விண்ணை முட்டும் வளர்ச்சியை நம் மருத்தும் பெற்றிருக்கும்.

சமீபத்தில் 198 ஆம்புலன்சுகளை வழங்கிய நம் தமிழக அரசு ஒரே ஒரு ஆம்புலன்சை கூட இந்திய மருத்துவங்களுக்காக வழங்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

மக்களாகிய நாம் விழிப்படைய வேண்டும்!...

அரசும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்!...

மேலும் உறுப்புகள் தானம் என்ற பெயரில் கொலைகள் நடக்காமல் சட்டம் இயற்றி அரசாங்கம் இதை உடனடியாக தடுக்க வேண்டும்.

ஆங்கில மருத்துவ கொடுமைகளிலிருந்து விடுதலை பெற நாம் தெளிவு பெற வேண்டும். அதற்காக முழு முயற்சியுடன் பாடுபட வேண்டும்.

நமது வாழ்க்கை முறையில் சில விஷயங்களை ஒழுங்குப்படுத்துவது, புரிந்து கொள்ளுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்...

அதாவது,

"கழிவின் தேக்கம் வியாதி..."

"கழிவின் வெளியேற்றம் குணம்..."

"Accumulation of waste / toxins in our body is
disease
Elimination of waste / toxins is cure"

இதை மக்களுக்கு புரியவைப்பதே எனது நோக்கம்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" -திருக்குறள்.

அதாவது, 
"எந்தவொரு பொருள் குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்."

நவீன மருத்துவம் எனப்படும் ஆங்கில மருத்துவத்தால் எந்த நாள்பட்ட நோயையும் குணப்படுத்தமுடியாது. நோயின் குறிகளைச் சிறிது காலம் மறைத்து வைக்க மட்டுமே முடியும்...

மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் (Drugs and Cosmetic Act) 1995-ல் திருத்தப்பட்டு ஷெட்யூல்-து 51 என்ற பிரிவின் கீழ் ஆங்கில வைத்தியத்தால் 51 வகை வியாதிகளை குணப்படுத்த முடியாது என்று இந்தியச்சட்டம் தெளிவாக எச்சரிக்கிறது.

அவ்வாறு ஷெட்யூல்-து 51ல் கூறப்பட்டுள்ள நோய்களுக்கு ஆங்கில் மருத்துவம் வைத்தியம் பார்க்க கூடாது.

ஷெட்யூல்-து 51ல் வரையறுக்கப்பட்டுள்ள 51 நோய்களின் பட்டியல்
பின்வருமாறு:-

1. எய்ட்ஸ் (AIDS)
2. நெஞ்சுவலி (Angina)
3. குடல் வால் நோய் (Appendicitis)
4. இருதய இரத்தக் குழாய் அடைப்பு (Block in Blood Vessels)
5. கண்பார்வை அற்ற நிலை (Blindness)
6. தலை வழுக்கை (Baldness)
7. ஆஸ்துமா (Asthma)
8. உடலில் தோன்றும் கட்டிகள் முதலாக, புற்றுநோய்
வரை (Cancer)
9. கண்புரை (Cataract)
10. தலை முடி வளர, நரையை அகற்ற (To Growth of Hair, To removing Grey Hair)
11. கருவில் வளரும் குழந்தையை ஆண் அல்லது பெண்ணாக மாற்றுவோம் என்று கூறுவது.
12. பிறவிக் கோளாறு
13. காது கேளாமை (Deafness)
14. நீரிழிவு நோய் (Diabetic Mellitus)
15. கர்ப்பப்பை சம்பந்தமான அனைத்து கோளாறுகள்.
16. வலிப்பு நோய் - மனநோய் (Eplilipsy)
17. மூளைக்காய்ச்சல்
18. உடல் நிறம் கருப்பாக இருந்தால் சிவப்பாக மாற்றுதல்.
19. மார்பக வளர்ச்சிக்கு
20. புரையோடிய புண் (Gagerence)
21. மரபணு நோய்கள் (Genetic Diseases)
22. க்ளாகோமா எனும் கண்நோய் (Glaucoma)
23. கழுத்து வீக்கம் (தைராய்டு) (Thyrodism)
24. ஹெர்னியா (Hernia)
25. உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் (BP)
26. விரைவீக்கம் (Orchitis)
27. பைத்தியம் (Mental Disorder)
28. ஞாபக மறதி, ஞாபக சக்தியை அபிவிருத்தி
செய்ய (To improve Memory Power)
29. குழந்தையின் உயரத்தைக் கூட்ட (To Increase Height)
30. சாதாரணமாக ஏற்படும் கண்பார்வைக் குறைபாடு கிட்டப்பார்வை, தூரப்பார்வை.
31. ஆண் உறுப்பு வளர்ச்சி, வீரியம்
32. பற்களை உறுதிப்படுத்த
33. மஞ்சள் காமாலை, கல்லீரல் மர்ம நோய் (Hepatitis)
34. இரத்தப் புற்றுநோய் (Leukemia)
35. வெண்குஷ்டம் (Leocoderma)
36. உடலுறவில் வீரியம் அதிகப்படுத்தல்
37. மூளை வளர்ச்சிக் குறைவு
38. மாரடைப்பு நோய் (Heart Attack)
39. குண்டான உடம்பு மெலிய (Obesity)
40. பக்கவாதம் (Paralysis)
41. உடல் நடுக்கம் (Parkinson)
42. மூலநோய் மற்றும் பவுத்திரம் (Piles)
43. வாலிப சக்தியை மீட்க
44. குறைந்த (இள) வயதில் முதிர்ச்சியடைந்த தோற்றம்
45. குறைந்த (இள) வயதில் தலைநரை (Greying Hair)
46. ரூமாட்டிக் இதய நோய் (Rheumatism)
47. ஆண்மைக்குறைவு, விரைவில் ஸ்கலிதம் (Impotance)
48. கழுத்துவலி மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும்
அனைத்து வலிகளும் (Spondylosis)
49. திக்குவாய் (Stammering)
50. சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள், நிறுநீர்ப்பை கற்கள் (Kidney Stone, Gall Stone).
51. காலில் இரத்த நாளங்கள் வீக்கம் அடைதல் (Varicose Vein).

மேற்கண்ட நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தும் கிடையாது, மருத்துவமும் பார்க்கக்கூடாது என இந்தியச்சட்டம் சொல்கிறது.

மக்களே!

இனிமேலாவது விழிப்படையுங்கள்!!!

உங்களையும் உங்கள் சந்ததிகளையும்
காப்பாற்றிக்கொள்ளுங்கள்!...

இந்த தகவல்கள் உண்மை என உணர்ந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

[vallalargroups:6024] கோவையில் ஆன்மீக சத்சங்கப் பெருவிழா

கோவையில் 13,14/10/2018
அருட்பெருஞ்ஜோதி🔥🙏🏾 வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின்                  196ம் ஆண்டு வருவிக்கவுற்ற தினத்தை முன்னிட்டு
🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀
கோவையில்
ஆன்மீக சத்சங்கப் பெருவிழா
🙇‍♂📿🙇‍♂📿🙇‍♂📿🙇‍♂📿
👉சாதுக்களின் சன்மார்க்க சத்சங்கம்
👉அறிஞர்களின் அருளுரை
👉திருஅருட்பா இசைக்கச்சோ்ி
👉அன்னதானம்
👨‍👩‍👧👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧👩‍👩‍👦👩‍👩‍👧👪👨‍👩‍👧
போன்ற பல்வேறு அருள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
13/10/2018, சனிக்கிழமை,மாலை 5.00 மணி முதல்
14/10/2018 ஞாயிறு, காலை 6.00 மணி முதல்

👉இடம் - மணி மஹால் A/C ,
இராமலட்சுமி நகர், மணீஷ் தியேட்டர்  அருகில்,  பீளமேடு,  கோயம்புத்தூர்
👨‍👩‍👧‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧👩‍👩‍👦👩‍👩‍👧👪👨‍👩‍👧👨‍👩‍👧‍👦
👉 நிகழ்ச்சி நிரல்

 🔥13-10-2018 சனிக்கிழமை
👉மாலை 5:00-5:30 திருஅருட்பா பாராயணம் 

👉 5:31-7:00: திருஅருட்பா இசைக் கச்சேரி வழங்குபவர்: தயவுதிரு. கலைச்செல்வன்  அவர்கள், சிதம்பரம்.

👉இரவு 7:01-8:15:   சிறப்பு சத்சங்கம் - மனிதகுலத்திற்கு உயர்வழி காட்டும் மாண்புடைய மார்க்கம் - சன்மார்க்கம்  வழங்குபவர்:  பட்டிமன்ற புகழ் முனைவர் தயவுதிரு. த. ராசாராம் அவர்கள்,

👉இரவு 8:16-8:30: தியானம் மற்றும் பிரார்த்தனை. 

🔥14-10-2018 ஞாயிறு
 👉காலை 6:30-8:30: அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்

👉காலை 9:00-9:15: வரவேற்புரை    

👉 காலை 9:16-10:30:   சிறப்பு சத்சங்கம் - அறமே கடவுள், வழங்குபவர்: முனைவர் கிருங்கை திரு சேதுபதி  அவர்கள், பாண்டிச்சேரி. 
        
👉காலை 10:31-11:45 சிறப்பு சத்சங்கம் -  'தவநேயம் சுத்த சன்மார்க்க நேயம், சத்தியமாம் சிவநேயம், ஓர் விளக்கம்' வழங்குபவர்: தயவுதிரு. மு.பா. பாபு அவர்கள், சென்னை. 

👉காலை 11:46- மதியம் 1:00: கேள்வி பதில் நேரம். 

👉மதியம் 2:00-3:00: காணொளி காட்சி 

👉3:01-4:30: திருவருட்பா இசைக்கச்சேரி வழங்குபவர்: தயவுதிரு. ஜெயபிரகாஷ் நாராயணன்& குழுவினர், சோமந்துரை சித்தூர். 

👉மாலை 4:31-6:00:சிறப்பு சத்சங்கம் - 'வான்நோக்கி மண்வழி  நடப்பவன்- இக்கால மனிதன்' 
வழங்குபவர்: கோடையிடி புலவர் தயவுதிரு. கங்கை மணிமாறன் அவர்கள், குத்தாலம். 

👉மாலை 6:01- 6:30 திருவருட்பா பாராயணம் & தியானம்.

 👉இரவு 6:31 -  8: 00 சிறப்பு சத்சங்கம் - 'வருவிக்கவுற்ற  வள்ளலார்' வழங்குபவர்: தயவுதிரு. முனைவர் திரு. திருப்பூர் கிருஷ்ணன்  அவர்கள் ஆசிரியர் - அமுதசுரபி பத்திரிகை,  சென்னை. 

👉இரவு 8:01-8:30: ஜோதி வழிபாடு
சிறப்பு அன்னதானம் நடைபெறும்ண
🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼
மேற்கண்ட புண்ணிய காாியத்திற்கு உதவிகள் தேவைப்படுகின்றன
👇👇👇👇👇👇👇👇
சேவை & உதவிகள் செய்ய விரும்பும் அன்பா்கள் தொடா்பு கொள்ளவும்
8838540176 , 9597719535
நிகழ்ச்சி ஏற்பாடு
நண்பர்களுக்கு பகிரவும்

Monday, October 8, 2018

[vallalargroups:6023] சமயம் புகுவதற்கு கனவிலும் நினையேன்

🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !
🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏
      🌴🌺சமயம் புகுவதற்கு கனவிலும் நினையேன்🌺🌴
🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 🔥🙏
         
நமது அருட்பெருந் தந்தை திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் தமது இளமைப் பருவத்திலிருந்து சமயம் தொட்டு வாழ்ந்து வந்தார்கள் .

அப்படி அவர்கள் சமயத்தில் வைத்திருந்த லஷியம்தான் அவர்களை இவ்வளவு பெரிய மேல்நிலைக்கு ஏற்றியது ,
என்று கருதுபவர்களுக்கெல்லாம் பெருமான் திருவருட்பா ஆறாம் திருமுறையின் வாயிலாக பலப்பாடல்களில் தமது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்திருப்பார்கள் .

அதுமட்டும் அல்ல உரைநடைப் பகுதியிலேயே ,
சமயத்தில் நான் வைத்திருந்த லஷியம் என்னை இந்த மேல்நிலைக்கு ஏற்றவில்லை ,
என்னை இந்த மேல்நிலைக்கு ஏற்றியது எனக்குள் இருந்த உயிர்இரக்கம்தான் என்றும் அந்த உயிர்இரக்கத்தின் பொருட்டு நான் பெற்றுக்கொண்ட
தயவுதான் ,
இன்று என்னை இதுவரை யாருக்கும் எட்டாத மேல்நிலையில்  ஏற்றி விட்டது என்றும் வெளிப்படையாகவே கூறுகின்றார்கள்.

அதுமட்டும் அல்ல இதுவரை இவ்வுலகம் கண்ட சமயத் துறவிகள் காவியையும் கலர்துணிகளையும்தான் தங்களது உடைகளாக அணிந்து வந்துள்ளார்கள்.

ஆனால் நமது பெருமான் 
உண்மையில் சமயப்பற்றுடன் இருந்தவரானால் மற்றவர்களைப் போன்றே தாமும் இளமை முதல் காவியாடை அணிந்திருக்கலாமே !

ஏன் தூய்மையான வெண்ணிற ஆடையையே அணிந்து வந்தார்கள் .

ஏனென்றால் , கடவுளுடைய பெருந்தயவை இளமையிலேயே பெற்றுக்கொண்டதற்கு அடையாளமாகத்தான் , தயவின் வண்ணமாகிய வெண்துகிலையே இளமை முதல் அணிந்து வந்தார்கள் நமது பெருமான்.

இதன் விளக்கத்தையும் திருவருட்பா உரைநடைப் பகுதியில் கூறுவார்கள் பெருமான் .
காவி என்பது கடவுளின் தயவைப் பெறுவதற்கான முயற்சியில் இருப்பவர்கள் அணிவது என்றும்,

வெண்ணிறம் கடவுளின் தயவைப் பெற்றுக்கொண்டதற்கானஅடையாள வெற்றிச்சின்னம் என்றும் கூறுவார்கள் .

இவற்றை எல்லாம் நாம் உற்று கவணிக்கவேண்டியது அவசியமேயாகும். 🏵

அது மட்டும் அல்ல பெருமான் வாசகப் பெருவிண்ணப்பத்தில் ,
"வாலிபப் பருவந் தோன்றுவதற்கு முன்னரே ,எல்லா உயிர்கட்கும் இன்பந்தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்கின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர்"

என்று அருட்பெருஞ்ஜோதி ஒருவர்தான் கடவுள் என்பதை தனது வாலிபப் பருவத்திற்கு முன்பே ஆண்டவர் தமக்கு தெளிவாகத் தெரிவித்தருளியதாகவும் கூறியுள்ளார்கள் 🏵

மற்றும் ஆறாம் திருமுறையிலே பிறிவாற்றாமை என்ற 68வது தலைப்பில் ,
5வது பாடலில் ,
"மாயையாற் கலங்கி வருந்திய போதும் வள்ளல்உன் தன்னையே மதித்து உன் சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால் தலைவ வேறெண்ணியதுண்டோ தூய பொற்பாதம் அறிய நான் அறியேன்"

என்று மாயை என்னைப்பற்றி அதனால் கலக்கமுற்று வருந்தியபோதுகூட ,
உன்னையே எனது மனதில் கருதிக்கொண்டு ,
உன்னுடைய தோற்றமாகவே பார்த்து நான் மற்றவரை எல்லாம் வழிபட்டுவந்தேனே அல்லால் ,
எனது தலைவனே வேறெதுவும் நான் எண்ணியது உண்டோ ?
உனது தூய்மையான பொன்மலரடிகள் அறிய நான் எதுவும் அறியேன் என்று தெளிவாக கூறுகின்றார்கள் பெருமான். 🏵

நல்லது ,
அப்படி என்றால் ,
சிறுவயதிலேயே பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஒருவர்தான் கடவுள் என்று தெளிவாகத் தெரிந்தபின் ,
பிறகு எதற்கு கந்தக்கோட்டத்து முருகனையும்,
திருவொற்றியூர் சிவனையும்,
தணிகை முருகனையும்,
தில்லை நடராஜரையும்,
மற்றும்பற்பலத் தெய்வங்களின் பேரில் ஸ்தோத்திரங்களையும் பெருமான் இயற்றி வழிபட்டு வந்தார்கள் ?

நேரடியாகவே இளம்வயதிலிருந்தே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபட்டு வந்திருக்கலாமே என்று நமக்குள் கேள்வி எழும்பலாம் இல்லையா ?

ஏனென்றால் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்கவுற்ற  வேலையை சரிவர செய்வதற்காகத்தான் என்பதை உணர்தல் வேண்டும் 🏵 
 
பெருமான் தோன்றிகாலத்தில் சைவமும் வைணவமும் தழைத்து மக்கள் அச்சமய மதத்தில் அபிமானம் வைத்து இறுகப்பற்றி வாழ்ந்து வந்ததனால் அவற்றைக் கவணித்த பெருமான்,

தற்போது,
சமயம் மதம்பொய் இதனால் ஒரு ஆன்மா அடையவேண்டிய லஷியத்தை அடையமுடியாது , நீங்கள் வணங்குகின்ற கடவுளர்கள் எல்லாம் உண்மைக் கடவுள் இல்லை,

 உண்மைக்கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே என்று தனக்கு அச்சிறுவயதில் ஆண்டவர் அறிவித்ததை  கூறியிருந்தால் இவ்வுலகம் பெருமானின் பிள்ளைப்பருவத்தை கருத்தில்கொண்டு ஏற்று இருக்குமா ?
ஒருகாலமும் ஏற்று இருக்காது .🏵

அதனால்தான் பெருமான் ,
ஆடுகின்ற மாட்டை ஆடிக்கறப்பது போன்றும் ,
பாடுகின்ற மாட்டை பாடிக்கறந்திடுவது  போன்றும்,

இவ்வுலகவர் போக்கிலேயே சென்று,
அவர்கள் வழிபட்ட கடவுள்களாகிய  அறிவுருவாகிய முருகர் வழிபாட்டில் தொடங்கி ,
அந்தச் சிறுவயதிலேயே மேலான மெய்ஞான கருத்தைப் போதிக்கும் தெய்வமணிமாலையில் தனது பூரண மெய்ஞான நிலையையும் ,

தனக்கு இறப்பு என்பதே கிடையாது என்பதை,
பிரம்மன் இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ ? 
இரவு நிறமுடைய எமன் என்னைக் கனவினும் இறப்பிக்க எண்ணம் உறுமோ ?
என்று  தனது இறவா நிலையை தெளிவாக பாடலில் கூறுவார்கள்.🏵

அப்படி ,
அறிவுருவாகிய முருகவழிபாட்டில் தொடங்கி சைவர்கள் வழிபட்டுவந்த சிவனையும் அம்பாளையும் திருவொற்றியூரின் வாயிலாக பலகாலம் வழிபட்டு அத்தலத்தில் இதுவரை சைவசித்தாந்திகள் ஓதி வந்த தேவாரம் திருவாசகத்தினும் பக்தி உருக்கத்தை தரக்கூடிய ஸ்தோத்திரப் பாடல்களை மெய்யுருக  இயற்றியும் ,

அதன்பிறகு வைத்தியநாத சுவாமிகளின் பெயரில் பலப் பதிகங்கள் ,  ராமர் ,கிருஷ்ணர் என்று பலப்பாடல்கள் இயற்றியும் இறுதியில் தில்லை நடராஜரின் பெயரில் பலப்பாடல்களை இயற்றியும் ,

தலயாத்திரையாக சென்ற  தலத்தில் எல்லாம் அந்தந்த மூர்த்திகளின் பெயரில் பலப்பாடல்களை இயற்றி தலவரலாறு கூறி,

முன்பு வந்து சென்று அருளார்கள் போன்றே தாமும் சைவப் பற்றுடன் சமயத்தில் வாழ்வதுபோன்றே நமக்காக வாழ்ந்து காண்பித்து ,

முடிவில் , 
தாம் வந்த லஷியத்தை நிறைவேற்றக்கூடிய காலம் வந்தவுடன் ,
தனது உண்மையை உரைக்க முன்வந்தார்கள் 🏵

எப்படி என்றால் ,
ஒரு ஆன்மா அடையவேண்டிய ஆன்மலாபத்தை  இந்த சமயமும் மதமும் ஒருகாலமும் வழங்க இயலாது ,

அந்த சமயத்தை விட்டு நான் வெளியில் வந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பற்றினேன் ,
அவர் எனக்கு கூறிய மெய்ப்பொருள் பெருநெறி ஒழுக்கம் என்னவெனில் ,
"கருணையும் சிவமே என்பதாகும்"

அதன்படி "உயிர் இரக்கம்கொண்டேன் ",
கடவுளது பெருந்தயவைப் பெற்றேன்,
அந்த தயவைக்கொண்டு
ஏறா நிலைமேல் என்னை ஆண்டவர் ஏற்றுவித்தார்கள் .

தாங்களும் என்னைப்போல் பெற்றுக்கொள்ளலாம் ,
நான் விட்டதுபோல் தாங்களும் சமயத்தை விட்டு விட்டு வாருங்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரையே வழிபடுங்கள் ,

அவர் ஒருவர்தான் எல்லாம் செய்ய வல்லவர் என்று கூறி இவ்வுலகவர்களை சுத்த சன்மார்க்கத்திற்கு பெருமான் அழைக்கின்றார்கள்🏵

இதன் மூலம் நமக்கு என்ன தெரிகின்றது ,

அருட்பெருஞ்ஜோதி என்ற உண்மைக்கடவுளை உலகம் அறியும் காலம் வந்துவிட்டதாலும் ,

சமண மத்தை கழுவேற்ற ஞான சம்பந்தர் வந்தது போன்று,

சமயத்தையும் வைணவத்தையும் மற்றைய மார்க்கங்களை எல்லாம் ஒருநிலைப்படுத்தி சாதி சமயம் மதம் என்ற பெயர்களால் ஒன்றான கடவுளை பலவாக வழிபட்டு மனிதகுலம் பாழ்பட்டு போகாவண்ணம் அனைவரையும் சுத்தசன்மார்க்கம் என்ற ஒரே நெறியில், ஒரேக் கடவுளை வழிபட்டு ஒருமையுடன் வாழ்வித்திடும் பொருட்டு,

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவுள்ளம் கொண்டு நமது பெருமானை இவ்வுலகிற்கு வருவித்தார்கள் .

பெருமானும் நம் அனைவரையும் நமது போக்கிலேயே சென்று மாற்றும் வண்ணம்
நமக்காக சமயத்தில் வாழ்வதுபோன்று வாழ்ந்து காட்டினார்கள் என்பதை நாம் சத்தியமாக உணர்தல் வேண்டும் 🏵 

தற்போது கீழ்கண்ட பாடலின் பொருளை எனது சிற்றவிற் தோன்றிய வண்ணம் காண முற்படுகின்றேன். பிழைஏதும் இருப்பின் கற்றறிந்த பெரியோர்கள் குணமாகப் பொறுத்தருள்வீர் 🏵

பாடல்;
புல்லவா மனத்தேன் எனினும் சமயம் புகுதவா பொய்நெறி ஒழுக்கம் 

சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர் சொப்பனத்தாயினும் நினையேன் .

கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன் கனகமா மன்றிலே நடிக்கும்

நல்லவா எல்லாம் வல்லவா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே🔥🙏

பொருள்;
புல்லவா மனத்தேன் ; இழிவான ஆசைகொண்ட மனத்தேன்.

எனினும்;
இருந்தபோதும்.

சமயம் புகுதவா;
சமநெறிகளில் புகுவதற்கோ ,

பொய்நெறி ஒழுக்கம் சொல்லவா;
ஆன்மலாபத்தை அடையச்செய்து, 
இறவா அருள்வாழ்வை அளிக்கக்கூடிய பேரின்ப பெருவாழ்விற்கு வழிதுறைக் காட்டாத பொய்நெறிகளின் ஒழுக்கங்களைப் பற்றி  பேசுவதற்கோ ,

பிறரைத் துதிக்கவா ;
உன்னைத் தவிர மற்றையத் தெய்வங்களை வணங்கித் துதிப்பதற்கோ,

சிறிதோர் சொப்பனத்தாயினும் நினையேன்;
ஒரு சிறிய கனவில் கூட நினைத்தது இல்லை.

கல்லவா; 
பாறையை ஒத்த கடின ஆசைக்கொண்ட,

மனத்தோர் உறவையும் கருதேன்;
அப்படிபட்ட மனதைக் கொண்டவர்களுடைய உறவையும் விரும்பிலேன்.

கனகமா மன்றிலே நடிக்கும் ;
மாற்றறியா சுத்த பொன்னால் ஆன  சபையில் நடிக்கின்ற,

நல்லவா எல்லாம் வல்லவா ;
நல்லவரே எல்லாவற்றையும் செய்யக்கூடிய வல்லமைப் பொருந்தியவரே !

உனையே நம்பினேன் கைவிடேல் எனையே ;
உன்னையே நம்பிஇருக்கின்றேன் என்னைக் கைவிட்டுவிடாதீர்கள் 💐🔥🙏

பூரணப் பொருள்;
அருட்பெருஞ்ஜோதி என் தந்தையே !
இழிவான ஆசைகளைக் கொண்ட மனத்தவனாக நான் இருந்தாலும்,

ஆன்ம வாழ்வை நிலைக்க வைத்து ,சிவானுபவ லஷியத்தை அடையசெய்விக்கும் வழிதுறை காட்டாத சமய நெறிகளில் புகுவதற்கோ ,

அல்லது அந்த நெறிகளைப் பற்றி பேசுவதற்கோ ,
சிறியதொரு கனவில்கூட நினைத்தது இல்லை.

இரக்கமற்ற கடினமான பாறைக்கு நிகரான ஆசைகளை மனத்திற்கொண்டவர்களுடைய உறவையும் விரும்பிலேன்.

சுத்தப் பொன்னால் ஆன சபையில் நட்ம்புரிகின்ற நல்லவரே எல்லாவற்றையும் செய்ய வல்லவரே அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவரே ,

உன்னையே நம்பி இருக்கின்றேன் என்னைக் கைவிட்டுவிடாதீர்கள் என்று பெருமான் கூறுகின்றார்கள் 🔥🙏
...நன்றி 🙏
...வள்ளல் மலரடிப் போற்றி போற்றி 🙏
...பெருமான் துணையில் 🙏
...வள்ளல் அடிமை 🙏
... தயவுடன் வடலூர் இரமேஷ் 🙏

Sunday, October 7, 2018

[vallalargroups:6022] சன்மார்க்கப் பெருநெறிகள்

🌇 வள்ளல் பெருமானாரின்
 சன்மார்க்கப் பெருநெறிகள். 

🌇 இந்திரிய  ஒழுக்கம். 🌇
●●●●●●●●●●●●●●●●●●●●●●

🌇 கொடிய சொல் செவிபுகாது நாத முதலிய ஸ்தோத்திரங்களைக் கேட்டல். 🌇
●●●●●●●●●●●●●●●●●●●●●●

🌌 மெல்லியல் சிவகாம வல்லியுடன் களித்து 
விளையாடவும் எங்கள் வினை ஓடவும் ஒளித்து 
எல்லையில் இன்பந் தரவும் நல்ல சமயந்தான் இது 
இங்கும் அங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது. 

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம் நல்ல வரமே.  🌌

🌌 எனைத்தும் துன்புஇலா இயலளித்து எண்ணிய 
அனைத்தும் தருஞ் சபை அருட்பெருஞ்ஜோதி. 🌌

🌌 பாணிப் பிலதாய்ப் பரவினோர்க்கு அருள்புரி 
ஆணிப் பொன் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி. 🌌

🌌 வள்ளலார். 🌌


[vallalargroups:6021] கணவனை இழந்த சன்மார்க்க குடும்பத்திற்கு ஆதரவு

எல்லா உயிர்களும் இன்புற்ற: 🔥🔥அருட்பெருஞ்ஜோதி 
🔥சகோதர சகோதரிகளுக்கு பணிவான வணக்கம். 

🔥 இந்த👆 புகைப்படத்தில் இருக்கும்  அம்மாவின் துணைவர் லாரி விபத்தில் உயிரிழந்து விட்டார். இந்த மூன்று மகன்களுடன் தன் தாயார் ஊரான வேலூர் அருகில் ஒரு கிராமத்தில் வசித்துவருகிறார் இவர் கணவர் இறந்து 6 மாதங்கள் ஆன நிலையில் பிள்ளைகளுக்கு   உணவு கொடுக்க முடியாத நிலையிலும் படிக்க வைக்க முடியாத நிலையிலும் பெரிய மகன் மூளை வளர்ச்சி குன்றிய நிலையில் அடுத்த மகனுக்கு நுரையீரலில் பிரச்சனையால் மூச்சுவிட சிரமமான நிலையிலும் இந்த  அம்மாவின் தலையிலும் அடிபட்டு  வறுமையால் சிகிச்சை எடுத்துக் கொள்ளமுடியாமல் கடுமையான தலைவலியினால் தன் அம்மா வீட்டில் வறுமையுடன் அவதிப்படுகிறார்கள் . இவருடைய அம்மா சன்மார்க்கம் அறிந்தவர் . இவரும் சமீபத்தில் தனது கணவரை இழந்தவர்  தன் கணவரின் இறுதி சடங்கில் கூட  எந்த சடங்குகளும் செய்யாது அகவல்மட்டும் படித்து உறவுகளின் எதிர்ப்புகளிடையே உறுதியாக செயல்படுத்தினார் 

🔥 தன் சன்மார்க்க வாழ்க்கையில் பல சமூக சேவைகள் செய்தும், பள்ளிச் செல்ல முடியாத ஏழைப் பிள்ளைகளை இவர் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தவர் பலரின் பசி போக்கிய இக் குடும்பம் இப்போது பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமலும்,  உணவு கிடைக்காமலும் வயதான காலத்தில் தன் மகளையும் பேரப்பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பதாக
 அவ்வூரைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர்  ஞானசேகரன்  ஐயா நேற்று போனில் தகவல் தெரிவித்தார் . 

🔥 நான் அவரிடம் அம்மாவின் போன் நம்பர் வாங்கி அம்மாவிடமும் மகளிடம் பேசினேன். அவர்களின் நிலையை அறிந்தபோது மிகவும் வேதனையாக  இருந்தது. 

🔥  திருச்சி சண்முகம் ஐயாவின் மனைவி அம்சங்களில் அம்மாவிடம் இப்பிரச்சனை குறித்து பேசி உங்களால் உதவமுடியுமா அக்கா என்று கேட்ட  உடனேயே அவரும் நான் மளிகை அரிசி உணவுப்  பொருள்களுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டார்கள் மருத்துவ செலவிற்கும் நோட்டு  பேனா படிப்புக்கு உள்ள பொருட்கள் வாங்க நம்மாள் முடிந்த சிறு தொகையாக இருந்தாலும் அந்த  குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் .

🔥 மேலும் அப்பெண்ணிற்கு வாழ்வாதாரத்திற்கு தற்சமயம் இவ்வுதவி அவர்களுக்கு பேருதவியாக  இருக்கும். எதிர்காலத்திற்கு அவர்கள் பசியின்றியும் நோயின்றியும் வாழ்வதற்கு  சில  ஆலோசனைகளை அவர்களிடம் கூறியிருக்கிறேன் . 🔥

 
[: N . ANNIBESANT

A/c  01370100014253

IFSC code : UCBA 
0000137

UCO BANK. 

NAGAPATTINAM

For more details, please contact Nagapattinam Ajantha Nagarajan +919443456245

உதவி செய்ய விரும்பும் அன்பர்கள் இந்த 👆👆👆வங்கி கணக்கில்  செலுத்த வேண்டுகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

Friday, October 5, 2018

[vallalargroups:6020] வள்ளலார் சிந்தனை ::நல்வினை, தீவினை

🍁 திருக்குறள்.  5. 🍁
●●●●●●●●●●●●●●●●●●

🍁இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 🍁

🍁 இறைவனது உண்மையான புகழை விரும்பி எப்போதும் அன்பு செலுத்துவாரிடத்தில் அறியாமையால் வருகின்ற நல்வினை,  தீவினை ஆகிய  இருவினைகளும் சேர்வதில்லை. 🍁

🍁 வள்ளுவர். 🍁
•••••••••••••••••••••••••••

🍀 திருவருட்பா. 🍀
●●●●●●●●●●●●●●●

🍀 வன்பெரு நெருப்பினைப் புண்புழுப் பற்றுமோ 
வானை ஒரு மான் தாவுமோ 
வலியுள்ள புலியை ஓர் எலி சீறுமோ பெரிய 
மலையை ஓர் ஈச்சிறகினால் 
துன்புறு அசைக்குமோ வச்சிரத் தூண் ஒரு 
துரும்பினால் துண்டமாமோ 
சூரியனை இருள் வந்து சூழுமோ காற்றில் மழை 
தோயுமோ இல்லை அதுபோல் 
அன்புடைய நின் அடியர் பொன் அடியை உன்னும் அவர் 
அடிமலர் முடிக்கணிந்தோர்க்
கவலமுறுமோ காமம் வெகுளி உறுமோ  மனத் 
தற்பமும் விகற்பமும் உறுமோ. 🍀

🍀 தத்துவச்  சேட்டையும் தத்துவ துரிசும்  
அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி. 🍀

🍀 கரைவின் மாமாயைக் கரும்பெரும் திரையால் 
அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி. 🍀

🍀 வள்ளலார். 🍀
●●●●●●●●●●●●●●●

[vallalargroups:6019] 196-வது ஆண்டு வருவிக்கவுற்ற நாள்

*5-10-1823 வள்ளல் பிரான் அவதரித்த நாள்.*
*இன்று 5-10-2018 அவரின் 196-வது ஆண்டு வருவிக்கவுற்ற நாள்*

Thursday, October 4, 2018

[vallalargroups:6018] 21 oct 2018 சன்மார்க்க அன்பர் ஹரிஹரன் திருமணம் முன்னிட்டு பசி ஆற்றுவித்தல்

சன்மார்க்க அன்பர் ஹரிஹரன் திருமணம் முன்னிட்டு   தொடர்ந்து மாதந்தோறும் பூச தினத்தன்று  அன்னதானம் செய்தார். வள்ளலார் அருளோடு வருகின்ற 21 Oct 2018 திருத்தணி முருகன் சந்நிதியில் திருமணம் நடைப்பெற உள்ளது. மணமக்கள் நீடூழி திருவருளோடு வாழ பிரார்த்தனை செய்வோம்.

Tuesday, October 2, 2018

[vallalargroups:6017] சுத்த சன்மார்க்க பிரார்த்தனை

🙏 சுத்த சன்மார்க்க பிரார்த்தனை.🙏
●●●●●●●●●●●●●●●●●●●●●●

🙏 ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. 

🙏 இந்த  உலக மெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். 

🙏 அப்படிச் செய்வதால் , அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான் செய்ய வேணடும். 🙏

🙏 பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பி அருட்
ஜோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் 
நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது என் போல்  இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே. 🙏

🙏 என்பதே என் பிரார்த்தனை யாகும். 🙏

🙏 வள்ளலார் .🙏
●●●●●●●●●●●●●●●

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

[vallalargroups:6016] வள்ளலாரின் சிந்தனைகள்::: காமம், வெகுளி, மயக்கம்

🍒 திருக்குறள். 🍒
●●●●●●●●●●●●●●●●

🍒 காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் 
நாமம் கெடக் கெடும் நோய். 🍒

🍒 காமம்,  வெகுளி,  மயக்கம்  என்னும் இவை மூன்றின் பெயர்களைக் கூட  உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால் பிறவித் துன்பமும் கெடும். 🍒

🍒 வள்ளுவர். 🍒
●●●●●●●●●●●●●●

🍇 திருவருட்பா. 🍇
●●●●●●●●●●●●●●●●

🍇 மாயை எனும் இரவில் என் மனையகத்தே விடய 
வாதனை எனுங் கள்வர் தாம் 
வந்து மன  அடிமையை எழுப்பி அவனைத் தமது 
வசமாக உளவு கண்டு 
மேயமதி எனும் ஒரு விளக்கினை அவித்து எனது 
மெய்ந்நிலைச் சாளிகை எலாம் 
வேறுற உடைத்து உள்ள பொருள் எலாம் கொள்ளை கொள 
மிக நடுக்குற்று நினையே 
நேயம் உற  ஓவாது கூவுகின்றேன் சற்றும் 
நின் செவிக் கேற இலையோ
நீதி இலையோ தரும நெறியும் இலையோ அருளின் 
நிறைவும் இலையோ என் செய்கேன். 🍇

🍇 காமப் புடைப்புயிர் கண்தொடரா வகை 
ஆமற  அடக்கும் அருட்பெருஞ்ஜோதி. 🍇

🍇 பொங்குறு வெகுளிப் புடைப்புகள் எல்லாம் 
அங்கற  அடக்கும் அருட்பெருஞ்ஜோதி. 🍇

🍇 மதம்புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு
அதம்பெற  அடக்கும் அருட்பெருஞ்ஜோதி. 🍇

வடுவுறு அசுத்த வாதனை அனைத்தையும் அடற்பற  அடக்கும் அருட்பெருஞ்ஜோதி. 🍇

🍇 வள்ளலார். 🍇
●●●●●●●●●●●●●●●●

Monday, October 1, 2018

[vallalargroups:6015] சுத்த சன்மார்க்க சாதனம்

🍁 சுத்த சன்மார்க்க சாதனம். 🍁
●●●●●●●●●●●●●●●●●●●●●●

🍁 சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். 

🍁ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம் ,அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். 

🍁 ஆதலால், காலந் தாழ்த்தாது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். 

🍁இதுவே சாதனம். 
இந்த குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகின்றவன் அவனே ஆண்டவனு மாவான் .🍁

🍁 எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை.

🍁கருணையுஞ் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருணெறி யெனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்.

🍁 எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே. 

🍁 வள்ளலார். 🍁
●●●●●●●●●●●●●●●

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Sunday, September 30, 2018

[vallalargroups:6014] Invitation: Online conference Sathvicharam by Vallalar mission USA @ Sun 30 Sep 2018 7pm - 9pm (IST) (Vallalar Groups)

Online conference Sathvicharam by Vallalar mission USA

When
Sun 30 Sep 2018 7pm – 9pm India Standard Time - Kolkata
Calendar
Vallalar Groups
Who
•
Vallalar Groups- organiser
•
hariharan hariharan- creator
•
vallalargroups@googlegroups.com
Attachments
perubadhesam
Discourse on Perubadhesam by Dhayavuthiru Mu.Pa. Babu ayya
See the attachment for further details

Going?    - -     

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups@googlegroups.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to modify your RSVP response. Learn More.

Monday, September 24, 2018

[vallalargroups:6013] நமக்குள் கோடி சூரியப்பிரகாசம்

🙏🔥
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !

             💥ஆன்மாக்களாகிய நமக்குள் கோடி சூரியப்பிரகாசம் அடங்கியுள்ளது 💥
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
       ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 🙏

   சாதாரண ஒரு அணுவை நமது புறக்கண்ணால் காணமுடியாது என்பதும் அவற்றை நுண்ணோக்கி சாதனத்தைக்கொண்டுதான் பலமடங்கு பெரிதுபடுத்தி பார்க்கவேண்டும் என்பதும் அணைவரும் அரிந்ததுதான் 🌺
     அண்டம் முழுவதும் தனது கதிர்களால் ஒளியைக்கொடுத்து  பிராகசிக்கின்ற ஒரு சூரியனின் வெளிச்சம் எத்தன்மை உடையது என்பதை நம்மால் ஓரளவு எண்ணிப்பார்க்க இயலும் 🌺

இதேபோன்று ,
ஒன்று அல்ல இரண்டு அல்ல கோடி சூரியனின் பிரகாசம் ஒன்றினைந்தால் எவ்வளவு பிரகாசம் இருக்கும் என்பதை நம்மால் எண்ணிப்பார்க்க இயலுமா ?

அத்தனை வெளிச்சமும் 
நாம் நமது புறக்கண்ணால் பார்க்க முடியாத நுண்மையிலும் நுண்மையான ஒரு ஆன்ம அணுவினுள் இருக்கின்றது என்றால் உங்களால் நம்புவதற்கு இயலுமா ?

அந்த கோடிசூரியப் பிரகாசமும் நமக்குள் வைத்துக்கொண்டுதான் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்றால் நமக்கு நம்பிக்கை வருகின்றதா ?

இப்படிப்பட்ட பெருவெளிச்சத்தை மாயாசக்திகளாக ஏழு திரைகள் மறைத்துக்கொண்டு வெளிப்பட நமது சிற்றறிவிற்கும் ஊனக்கண்களுக்கும் காட்டாவண்ணம் மறைத்திருக்கின்றது என்பதை நம்மால் உணரமுடிகின்றதா ?

அப்படி என்றால் நமது ஆன்மாவிற்குள் இருக்கும் அந்த  பெரு வெளிச்சத்திற்கு உரியவர் யார் ?

அவர் வேறுயாருமல்ல அணுவை மலையாகவும்,
மலையை அணுவாகவும் மாற்ற வல்லவராயும்,

647கோடி பேதமாகிய மகாசித்திகளையும் தன்னிஷ்டத்தில் நடத்த வல்லவராயும் ,

அண்டகோடிகளையும்,
அவற்றில் உள்ள அனைத்து உயிர்களையும்,
பொருள்களையும் ஆக்கி காத்து அழிக்க வல்லவராயும்,

பாரொடு விண்ணாய் பரந்ததோர் ஜோதியாய் எங்கும் எதிலும் நீக்கமற கலந்து நிறைந்தவராயும் ,

எல்லாம்தானே உடையவராயும்,
எல்லாமும் செய்ய வல்லவராயும் ,
எல்லாம்தானே ஆனவராயும்,
எல்லாம்தான் அல்லாதவராயும்.

சொல்லாலும் பொருளாலும்
தோன்றும் அறிவாலும்
துணிந்து அளக்க முடியாதவராய்,

துரிய வெளியைக் கடந்த வள்ளாலர்களின் அனுபவத்தில் அதுஅதுவாய் விளங்கி,

அவர்களும் மதித்திடுங்கால் அரியவராய் பெரியவராய் ,

அணுவும் செல்லாத நிலைகளினும் செல்லுபவராய் ,

இயற்கையில் பாசங்கள் எதுவும் இல்லாதவராய்,
குணங்கள் ஏதும் இல்லாதவராய்,
தத்துவங்கள் ஏதும் இல்லாதவராய்,
என்றும் அழிவில்லாது  அனாதி நித்தியராய்,
களங்கம் ஏதும் இல்லாதவராய்,
தீமை ஒன்றும் இல்லாதவராய்,

வியப்பிற்குரிய விருப்பு வெறுப்பு ஏதும் இல்லாதவராய்,
மெய்யே மெய்யாகி என்றும் சச்சிதானந்த சொரூபராய் விளங்கும் தனிப்பெரும் பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ,

நமது ஆன்மாவாகிய உயிருக்குள் உயிராக இருந்துக்கொண்டு ,
தன்னை ஆன்மாக்கள் அஞ்ஞானமாகிய அறியாமையில் இருக்கும்போது காட்டிக்கொடா வண்ணம் ,

தனது திருவருட்சக்தியில் ஒடுங்கியிருக்கும் ,
"பரிக்கிரக சக்தியாகிய  மாயாசக்தியைக்" கொண்டு மறைப்புகளாக ஏழுதிரைகளால் மறைத்துக்கொண்டுள்ளார்கள் 🌺

ஆன்மாக்கள் பக்குவ ஞானம் விளங்க விளங்க திரைகள் ஒவ்வொன்றாய் விலகி முடிவில் பூர்வ ஞானம் பெற்றவுடன் ,ஆண்டவர் தம்மை முழுவதும் காட்டி ஆன்மாக்களை தன்மயமாக்கிக் கொள்கின்றார்கள்🌺

அண்டவெளியில்  அருட்பருஞ்ஜோதி ஆண்டவர் எவ்வளவு ஆற்றலுடன் திகழ்கின்றார்களோ ,

அதில் அணுவளவும் குறைவில்லாமல் நமது சிற்றம்பலமாகிய சிதாகாசத்தில் இருந்து ஆன்மாக்களுக்கு விளக்கம் செய்விக்கின்றார்கள் 🌺

ஆகலில் ஆறறிவு ஆன்மாக்களாகிய நாம் அருட்பெரும்பதியின் அருளொளி கிடைக்கப்பெற்று ,
அவ்வருளாலே அருட்பெரும்பதியின் அருட்பெருஞ்ஜோதியில் ஐக்கியம் அடைதல் வேண்டியே இப்பிறவி எடுத்துள்ளோம்  என்பதை சிரத்தையுடன் உணர்வோம் 🌺

🙏🔥🌺நமது பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருமேனி பிரகாசத்தை விளக்கிக் கூறும் ஓர் பாடல்🌺🔥🙏
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
அருளாளர் வருகின்ற தருணம் இது தோழி,
ஆயிரம் ஆயிரம்கோடி அணிவிளக்கு ஏற்றிடுக ,

தெருளாய பசு நெய்யே விடுக மற்றை நெய்யேல் திருமேனிக்கு ஒரு மாசு செய்தாலும் செய்யும்,

இருளேது காலை விளக்கு ஏற்றிட வேண்டுவதோ,
என்னாதே மங்கலமா ஏற்றுதலாங் கண்டாய்,

மருளேல் அங்கவர்மேனி விளக்கமதெண் கடந்தே மதி கதிர் செங்கனல் கூடிற்றென்னினும் சாலாதே ; 🌺🙏

ஆன்மாவாகிய நமது பெருமான் ,
மனமாகிய தனது தோழியிடம் ,

தோழி ;
நமது அருளாளர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்ற தருணமாக  இருக்கின்றதால் ,

ஆயிரம் ஆயிரம் கோடி விளக்குகள் வரிசையாக வைத்து அலங்கரித்து அழகுபடுத்துவாயாக,

அந்த விளக்கில்  சுத்தமான பசுநெய்யினால் தீபம் ஏற்றுதல் வேண்டும்,

ஏனென்றால் மற்றநெய்யில் தீபம் ஏற்றினால் அவரது திருமேனிக்கு ஏதேனும் தீமை நேர்ந்தாலும் நேரிடும்.

இது வைகறை பொழுதாக இருக்கின்றதே இன்னும் சற்று நேரத்தில் சூரியோதம்  ஆக இருக்கின்றதே ,
இந்த நேரத்தில் ஏன் இவ்வளவு விளக்குகள் ஏற்றிட வேண்டுமோ  என்று  நினைக்காதே தோழி ,

மங்கலமாய் நினைத்து ஏற்றி வைத்திடுவாய்.

அவரது மேனியைக் கண்டு வியப்படையாதே ! 
அவர்மேனி வெளிச்சம்,
எண்ணற்ற சூரியன்கள் எண்ணற்ற சந்திரன்கள் அளவற்ற அக்கினிகள்  ஒன்றுசேர்ந்து கூடினாலும் அவரது திருமேனி வெளிச்சத்திற்கு இணையாகாது அறிந்துகொள்வாய் தோழி🌺
என்று,

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கோடி சூரியப் பிரகாச திறத்தை விளக்கி கூறுகின்றார்கள் நமது பெருமான்🔥🙏
....நன்றி🙏
...வள்ளல் மலரடிப் போற்றி ! போற்றி !🙏
...பெருமான் துணையில் 🙏
....தயவுடன் வள்ளல் அடிமை🙏
...வடலூர் இரமேஷ் ;

Sunday, September 23, 2018

[vallalargroups:6012] மனிதரும் தேவரும்.

🔥 மனிதரும் தேவரும். 🔥
●●●●●●●●●●●●●●●●●●●●●●

🔥 அறிவினது உயர்ச்சியினாலும் தாழ்ச்சியினாலும் தேவரென்றும் மனிதரென்றும் சொல்லப்பட்டதே தவிர வேறே எந்தக் காரணத்தினாலும் அல்ல.

🔥 ஆனால் தயை விசேஷமிருக்க வேண்டியது என்பது அறிவு உயர்ச்சியில் அடங்கிவிட்டது. 

🔥 தேவர்களுக்கு 4 கையென்பது    ஈகைப்பற்றிய தயை விசேஷத்தைக் குறித்துச் சொன்னதே தவிர வேறல்ல. 

🔥 ஆகையால் தயவே வடிவமாக  இருக்கிறவர்களே  புண்ணிய தேகிகள். அவர்களே தேவர்களுமாவார்கள்  .🔥

🔥 மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்களித்தனை.

🔥 உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெலாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க .

🔥 சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை. 🔥

🔥 வள்ளல் பெருமான். 🔥
●●●●●●●●●●●●●●●●●●●●●

Saturday, September 22, 2018

[vallalargroups:6011] காட்டயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன்

⚫ திருக்குறள். ⚫
●●●●●●●●●●●●●●●

⚫ அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார் 
அற்றாக  அற்றது இலர். ⚫

⚫ பற்று அற்றவர் என்பவர்கள் அவா அற்றவரே ; அவா அறாத மற்றையவர் எல்லாரும் அவ்வளவாக  பற்று அற்றவர் அல்லர். ⚫

⚫ வள்ளுவர். ⚫
••••••••••••••••••••••••••

 🔴 திருவருட்பா. 🔴
●●●●●●●●●●●●●●●●●

🔴 காட்டயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் காலின்மேல் கால் வைக்கப் பயந்தேன் பாட்டயல் கேட்கப் பாடவும்  பயந்தேன்  பஞ்சணை படுக்கவும் பயந்தேன் 
நாட்டிய  உயர்ந்த திண்ணைமேல்  இருந்து நன்குறக்  களித்துக் கால்கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப் பேசுதலை நினைக்கவும் பயந்தனன் எந்தாய். 🔴

🔴 சுத்த சன்மார்க்க லக்ஷிய  அனுபவ விருப்பமுடையவர்களுக்கு நனவினும் மண்ணாசை,  கனவினும் பெண்ணாசை,  சுழுத்தியினும் பொன்னாசை முதலிய மூன்றும் கூடாவாம். 🔴

🔴 வள்ளலார். 🔴
●●●●●●●●●●●●●●●

Thursday, September 20, 2018

[vallalargroups:6010] Invitation: Online Sathvicharam by Vallalar mission USA @ Sun 23 Sep 2018 7pm - 9pm (IST) (Vallalar Groups)

Online Sathvicharam by Vallalar mission USA

When
Sun 23 Sep 2018 7pm – 9pm India Standard Time - Kolkata
Calendar
Vallalar Groups
Who
•
Vallalar Groups- organiser
•
hariharan hariharan- creator
•
vallalargroups@googlegroups.com
Attachments
Ozhivilodukkam unarthum Illaram.jpg
ஒழிவிலொடுக்கம் உணர்த்தும் இல்லறம் by ஆனந்த பாரதி.
Pls see the attachment for further details

Going?    - -     

Invitation from Google Calendar

You are receiving this courtesy email at the account vallalargroups@googlegroups.com because you are an attendee of this event.

To stop receiving future updates for this event, decline this event. Alternatively, you can sign up for a Google account at https://www.google.com/calendar/ and control your notification settings for your entire calendar.

Forwarding this invitation could allow any recipient to modify your RSVP response. Learn More.

[vallalargroups:6009] இன்றைய பசி ஆற்றுவித்தல் மகேந்திரன் குடும்பத்தினர்.. @Bangalore

இன்றைய பசி ஆற்றுவித்தல் மகேந்திரன் குடும்பத்தினர்..நீடுழி வாழ பிரார்த்தனை.

Wednesday, September 19, 2018

[vallalargroups:6008] கணபதி உள்ள இடம் ஶ்ரீ வள்ளலார் விளக்கம்

[vallalargroups:6007] வள்ளலார் கூறும் சுப்பிரமணியம்

[vallalargroups:6006] சுத்தசன்மார்க்க லட்சியம் ..தத்துவங்கள் 96

🙏🔥
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !
       
🙏🔥 மூவாசைகளில் நிராசை வராத வரையில் சுத்தசன்மார்க்க லட்சியம் என்பது எட்டாக்கனியே 🍇🍇🍇
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
     ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை இவ்வெளியவன் தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 🙏
 
சுத்தசன்மார்க்கத்தில் பயனிக்கின்ற சுத்தசன்மார்க்கத்திற்கு உரிமையுடைய சங்கத்தார்கள் ,

சுத்தசன்மார்க்க கொள்கையும், லட்சியமுமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய "பூரண சித்தி "வல்லபத்தைப் பெற்று முத்தேக சித்தி அனுபவத்துடன் "அருட்பெருஞ்ஜோதி இயற்கை "
என்னும் அருட்தேகத்தைப் பெற்றுக்கொண்டு மரணமிலாப் பெருவாழ்வில் வாழும் பேறு பெறுவது என்பது ............!
  
வெறுமனே புலைகொலை தவிர்த்து இருந்தும்,

பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யம் செய்து இருந்தும்,

திருவருட்பா முற்றும் பாராயணம் செய்து இருந்தும்,

புருவமத்தி தியானத்தில் தீபநாட்டம் வைத்து இருந்தும்,

இடைவிடாது மகாமந்திர உச்சாரணம் செய்து இருந்தும் ,

சன்மார்க்க சத்விசாரம் செய்து இருந்தும்,

இடைவிடாது வடலூர் மாதப்பூச ஜோதி தரிசனம் கண்டு இருந்தும்,

ஆகிய அனைத்து சன்மார்க்க நியதிகளிலும் இடைவிடாது நெறிப்படி வாழ்ந்து கொண்டு வந்தாலும்,

பெருமான் கூற்றுப்படி,
"பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்து அம்பலப் பற்றே பற்றாய் பற்றுமின்"
என்ற அறிவுரையின்படி ,

மாயையினால் படைக்கப்பட்ட நிலையற்ற அற்பசுகத்தை தரக்கூடிய இவ்வுலக இன்பத்தை தரக்கூடிய மண் பெண் பொன் என்ற விடய இன்பங்களின்மீது  "நிராசைக்" கொண்டு,

என்றும் அழியாப் பேரின்பத்தைத் தரக்கூடிய அருட்பெரும்பதிமீது மட்டுமே பற்று வைத்து பசுவின் வரவை எதிர்பார்த்து இளங்கன்று பரிதவிப்பது போன்று ,

ஆகாரத்தில் இச்சையற்று,
அழுத கண்ணீர் மாறாத வண்ணம் ஆண்டவரின் அருளுக்காக ஏங்கி தவித்தாலொழிய சுத்தசன்மார்க்க லட்சியத்தை எக்காலும் 
அடைதல் கூடாது 🔥🙏

மூவாசைகள் 🍑🍐🍌
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
     இயற்கையிலேயே தயவை குணமாகக்கொண்ட நமது ஆன்மாவிற்கு ,

இயற்கையாகிய அனாதி ஆணவ மலமும் ,
இயற்கையில் செயற்கையாகிய மாயை மலமும்,
செயற்கையாகி கன்ம மலமும் ஆகிய மும்மலங்களும் சேர்க்கப்படுவதுடன்,

செயற்கை குணங்களாக
காமம்,
குரோதம்,
லோபம்,
மோகம்,
மதம்,
மார்ச்சரியம் என்னும் உட்பகைகளும் வந்தடைகின்றன .

இந்த செயற்கை குணங்களின் வாயிலாக போத அசைவின்கண் தோன்றும் விடய ஆசைகளாகிய ,
மண்,
பெண்,
பொன் என்ற மூவாசைகள் அசைக்கப்பட்டு ஆன்மாவை இறுகப் பற்றிக்கொள்கின்றன 🔥🙏

அதே போன்று  இவ்வுலகப் பொருள்களின்மீது பற்றற்று  நிராசையுடன் ,
போத அசைவின்றி தற்சுதந்திரம் இல்லாமல் திருவருட்சுதந்திரத்தில் நிற்கும் அனுபவத்தர்கள் ,

தேனுண்ட வண்டு அத்தேன் மயமாய் மயங்கி நிற்பதுபோன்று 

போத ஒழிவின்கண்  சிவானந்ததேனில் மயங்கி அலையறியாக் கடல்போல ஆனந்த தெள்ளமுதைப் பருகி பேரின்பத்தை அனுபவிக்கின்றார்கள் 🍓

🙏🔥நனவு ,கனவு,சுழுத்தி🔥🙏
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
இப்பிரபஞ்சப் பொருள்களின் மீது நிராசையை உண்டாக்கும் பொருட்டு நமது பெருமான் சுத்தசன்மார்க்க லட்சியத்தை அடைய விரும்பும் சாத்தியர்களுக்கு  

நனவிலும் மண்ணாசை,
கனவிலும் பெண்ணாசை,
சுழுத்தியிலும் பொன்னாசை முதலிய மூன்று ஆசைகளும் கூடாது என்று கூறுகின்றார்கள் 🔥🙏

நனவு (ல) சாக்கிரம்🍑
       நனவு என்பது நாம் விழித்திருக்கும்போது ஜாக்கிரதையுடன் இருக்கும் விழிப்பு நிலையாகும். 
இது நமது உள்ளம் பித்த உஷ்ணத்தோடு கூடி லலாடம் மற்றும் ஆக்ஞா என்று சொல்லக்கூடிய புருவமத்தியில் இருந்து செயல்படுவதாகும்.

இந்த நிலையில் நமது தத்துவங்கள் 96 ல் ,
ஞானேந்திரியங்கள் 5ம்,
அதனால் அடையக்கூடிய விஷயங்கள் 5 ம் அதாவது,
கண்,
காது,
மூக்கு
நாக்கு,
மெய் என்ற ஞானேந்திரியங்கள் 5ம்,

 அதனால் பெறக்கூடிய உணர்வுகளுமாகிய பார்த்தல்,
கேட்டல்,
நுகர்தல்,
ருசித்தல்,
பரிசித்தல் என்னும் ஞானேந்திரிய உணர்வுகள் 5ம்
மற்றும்,

கன்மேந்திரியங்கள் 5ம்
அதனால் செய்யப்படும் தொழில்கள் 5ம் அதாவது 
வாக்கு,
கைகள்,
கால்கள்,
குதம் (மலவாய் (அ)கருவாய்),
குய்யம்(ஜலவாய்(அ)
எருவாய்) என்ற கன்மேந்திரியங்கள் 5ம் 

அதன் செயல்களாகிய பேசுதல்,
பாடுதல்,
உண்ணுதல், கொடுத்தல் ,
எடுத்தல்,
நடத்தல்,
ஓடுதல்,
மலம் கழித்தல்,
ஜலம் கழித்தல் குழந்தை உற்பத்தி ஆகிய தொழில்களை செய்கின்ற கன்மேந்திரிய 
செய்கல் 5ம் ,
மற்றும்,

பிராணன் முதலாகிய முக்கிய வாயுக்கள் 10ம்,

அந்தக்கரணங்களாகிய மனம்,
புத்தி,
சித்தம்,
அகங்காரம் 
மற்றும் உள்ளத்தை சேர்த்து 5ம் 

ஆக 35 தத்துவங்களும் நனவு நிலையில் வேலை செய்கின்றனவாகும்🔥🙏

கனவு(அ)சொப்பனம்🍅
     இது நாம் கனவு காணும்போது இருக்கும் நிலையைக் குறிக்கின்றது.
     
    கனவு என்பது நமது உள்ளம் வாதநாடியோடு கூடிக் கண்ட ஸ்தானத்தில் நிற்கும்போது செயல்படுவதாகும்.
      
    இந்த நிலையில் மேற்கூறிய ஞானேந்திரியம் 5 ம்,
கன்மேந்திரியம் 5 ம், தவிர மற்ற 25 தத்துவங்களும் வேலை செய்கின்றன🔥🙏

சுழுத்தி(அ)உறக்கம் 🍅
      இது நனவு கனவு அற்று உறங்கும்போது உள்ள நிலையைக் குறிக்கின்றது .
     
சுழுத்தி என்பது நமது உள்ளம் சிலேத்தும நாடியோடு கூடி மார்பு ஸ்தானத்தில் இருந்து செயல்படுவதாகும் .
        
இந்த நிலையில் ஆன்மா எந்தவித தொழில்களும் இல்லமால் தன்னை மறந்து சுகமாய் இருந்து நித்திரை செய்தாலும் அஞ்ஞான நிலையில் இருக்கின்றது .
இதற்கு "கேவல நிலை" என்று பெயர்;
இந்த நிலையில் மனம் சித்தம் மற்றும் பிராணன் தத்துவங்கள் மட்டும் வேலை செய்கின்றன🔥🙏

🙏🏘நனவினும் மண்ணாசை 🏘🙏
🏠🏕🏡🏕🏡🏕🏡🏕🏡🏕🏡🏕🏡🏕🏡🏕
       அனைவரும் ஆசைப்படுதல் வேண்டும் ,
ஆசைப்படுவதற்குதான் பிறவி ,
முற்பிறவியில் ஆசைப்பட்டதனால்தான் பிறவியே கிடைத்தது ,

பிறவியற்று இருக்க வேண்டும் என்றால் ஆசையற்று இருத்தல் வேண்டும்.

மானுடப் பிறவியைப் பெற்ற ஒரு ஆன்மா ஒரு பொருளின்மீது பற்று வைத்தால் அது அவா (அ) ஆசை,

அப்பொருளையே நினைத்துக்கொண்டு இருந்தால் அது காமம் .

அப்பொருளை எப்படியாவது அடைந்தே ஆகவேண்டும் என நினைத்தல் அது மோகம்;

சுத்தசன்மார்க்க லஷியத்தை அடைய விரும்பும் சாத்தியக்ள் எந்த ஒரு பொருளினிடத்திலும் மோகம் முதலிய குணங்கள் இன்றி அவா மயமாய் மட்டும் நிற்றல் வேண்டும்.

பரலோக வாழ்வாகிய சுத்தசன்மார்க்க சத்திய சாத்திய வாழ்வு பெற விரும்புபவர்கள் நிலையற்ற அற்ப சிற்சுகத்தைக் கொடுக்கக்கூடிய இப்பிரபஞ்ச பொருள்களின் மீது எத்துணையும் பற்றற்று நிராசை மயமாய் இருந்து ,

என்றும் நிலையான பேரின்பத்தை அளித்து நம்மை எக்காலத்தும் அழியாநிலையில் வைத்து ,அருள்வாழ்வை அளிக்கக்கூடிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்து மாறாத அன்பு வைத்து ,

எவ்விதத்தாவது  ஆண்டவரது தயவாகிய அருளைப் பெற்றிடவும் ,
ஆண்டவரை அடைந்திடவும் பேராவல்கொண்டு இருத்தல் வேண்டும்🔥

அந்த வகையில் சுத்தசன்மார்க்க லஷியத்தை அடைய விரும்பும் பக்குவிகள் விடய ஆசைகளில்  முதலாவதான மண்ணாசை நனவில்கூட இருத்தல்கூடாது என்று பெருமான் கூறுகின்றார்கள் .
எப்படி என்றால் ,

ஆறறிவு தேகம் கொடுத்து இப்புவியில் வாழப்பிறந்த ஒரு ஜீவருக்கு ,

அறம் பொருள் இன்பம் வீடு என்ற நூற்பொருளின்படி 
ஒருவர் இல்லறத்தை நடத்துவதற்கு ஒரு அகமாகிய இல்லம் அவசியம் வேண்டும் என்றும் , 

அறவழியில் உழைத்து அதனால் பொருளை ஈட்டி  ,அதில் வரும் இன்பத்தைக் கொண்டு வாழ்வு நடத்த நன்செய் புன்செய் நிலம் தேவை என்றும் தனது வாழ்வியல் ஆதாரத் தேவைக்காக மட்டுமே ஆசைக்கொண்டு  

" போதும்" என்ற மனத்தோடு தங்களது குடும்பத்தை அறவழியில் நடத்தி வரவும்,
நேர்மையான உழைப்பில் தமது தேவைக்கு மேல் வருகின்ற வருமானத்தில் 

முன்வினையாலும் அஜாக்கிரதையினாலும் தற்சுதந்திரமில்லாமல் அருள்நியதியின் தணடனைப்படி எந்த வகையிலும் ஆதாரமற்று வறுமையில் இருப்பவர்களுக்கு வாழ்வாதரத்தை கொடுத்து உதவியும் வாழ்தல் வேண்டும் .

அப்படி இல்லாமல் காமம்,
குரோதம்,
லோபம் ,
மோகம்,
மதம்,
மார்ச்சரியம் என்னும் செயற்கை குணங்களின் வயப்பட்டு,

மண்ணாசைப் 
பெருகி பலவீடுகள் மனைகள் நிலங்கள் என்று பேராசையுடன் வாங்கி சேர்த்துவைத்து ,
தன்னைச் சார்ந்து உள்ளவர்களுக்கும், 
தன்னிடம் யாசிப்பவர்களுக்கும்,

ஆதாரமற்ற வறியவர்களுக்கும் கொடுக்கும் குணம் ஏதும் இல்லாமல் லோபியாய் வாழும்போது ,
தான் சேர்த்து வைத்த பொருளினால் தனக்கே முடிவில் கேடு உண்டாகும் என்பதையும் 
அறியும் அறிவு விளக்கமில்லாமல்,

நமது பிள்ளைகளையும்
எதிர்காலத்தில் உழைத்து வாழ்ந்து அதில் பொருள் ஈட்டவேண்டும் என்ற நிலையில் வைக்காமல்,

தான் சேர்த்து வைத்த பொருளைக்கொண்டு ஊதாரிதனமாக சுற்றித்திரியச் செய்து ,
சுகபோகத்தை அனுபவிக்கச்செய்து வாழ்வியல் கஷ்டங்கள் எப்படிப்பட்டவை என்பதை பட்டு தெரியவிடாமலும்,

அதனால் பெறக்கூடிய அனுபவங்களையும் பெறவிடாமல் நாமே அவர்களுக்கு காலம் சொல்லிக்கொடுக்கும் அனுபவப் பாடத்தை கற்க விடாமல் கெடுத்து விடுகின்றோம் .

ஒவ்வொருவரு ஆன்மாவும் உழைத்து வாழவேண்டும் என்று கருதி தனது பிள்ளைகளுக்கு உழைப்பின் அருமையை தெரியவைத்து அவர்கள் ஈட்டும் பொருளில் அவர்களை வாழவைக்கவேண்டும் ,

குடும்பத்தார் அனைவருக்கும் சேர்த்து  தலைமுறைக்கும் நாம்பொருளை தேடிவைத்துவிட்டு பிள்ளைகள்  வீணாகுவதற்கு நாமே காரணமாய் இருத்தல் கூடாது.
இது சாதாதன இல்லறத்தார்கள் அறிவது.

அதுவே சுத்தசன்மார்க்க லட்ஷியம் உள்ள பக்குவ ஜீவர்கள்,

பொருளிலே இவ்வுலகம் இருப்பதை உணர்ந்தும் ,
அருளுலகம் அடைவதற்கு இப்பொருளுலகப் பற்று கூடாது என்பதையும் உணர்ந்து ,

இவ்வுலகப் பொருள்களில் நிராசைக்கொண்டு, மண்ணாசையை  எந்தச் சூழலிலும் மனத்தினால் கூட நினைத்திடாமல் 

இப்பிரபஞ்ச பொருள்கள் எல்லாம் இவ்வுலகில் நாம் வாழ்வதற்கு ஆதாரமாக இறைவன் கொடுத்த வாழ்வாதரப் பொருள்கள் என்று உணர்ந்தும் ,

எல்லாப் பொருள்களும் ஆண்டவருடைய உடைமைகள் என்றும் அவர் ஒருவருக்கே உரிமையுடையது என்றும்  கருதி,

இவ்வுலகில் நம்முடைய பொருள்கள் என்று  ஒரு துரும்புகூட  இல்லை என்பதை நன்றாக உணர்ந்தும் ,

இன்று எது நம்முடையதுவோ ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது,

மற்றொருநாள் அது வேறொருவருடையதாகிறது  என்ற உலகியல் உண்மையை அறிந்தும்,

எந்த வகையிலும் "பொருளால் இருளுரும்" என்ற உண்மையை உணர்ந்து

மூவாசைகளில் முதல் ஆசையாகிய 
மண்ணாசை என்கின்ற "மானிடப் பேயின் " நினைப்பே இல்லாமல் வாழ்ந்திடல் வேண்டும் 🔥🙏.

பதிவு விளக்கம் பெறவேண்டி நீண்டதாய் இருப்பதனால் இதனுடைய தொடக்கமாகிய  பெண்ணாசை மற்றும் பொன்னாசையைப் பற்றி அடுத்தடுத்தப் பதிவுகளில் காண்போம்.
தயவான நன்றிகள் 🔥🙏
....வள்ளல் மலரடி வாழ்க ! வாழ்க 🔥🙏
....பெருமான் துணையில் 🔥🙏
....வள்ளல் அடிமை 🔥🙏
....வடலூர் இரமேஷ் ;

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)