Monday, October 8, 2018

[vallalargroups:6023] சமயம் புகுவதற்கு கனவிலும் நினையேன்

🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !
🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏
      🌴🌺சமயம் புகுவதற்கு கனவிலும் நினையேன்🌺🌴
🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 🔥🙏
         
நமது அருட்பெருந் தந்தை திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் தமது இளமைப் பருவத்திலிருந்து சமயம் தொட்டு வாழ்ந்து வந்தார்கள் .

அப்படி அவர்கள் சமயத்தில் வைத்திருந்த லஷியம்தான் அவர்களை இவ்வளவு பெரிய மேல்நிலைக்கு ஏற்றியது ,
என்று கருதுபவர்களுக்கெல்லாம் பெருமான் திருவருட்பா ஆறாம் திருமுறையின் வாயிலாக பலப்பாடல்களில் தமது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்திருப்பார்கள் .

அதுமட்டும் அல்ல உரைநடைப் பகுதியிலேயே ,
சமயத்தில் நான் வைத்திருந்த லஷியம் என்னை இந்த மேல்நிலைக்கு ஏற்றவில்லை ,
என்னை இந்த மேல்நிலைக்கு ஏற்றியது எனக்குள் இருந்த உயிர்இரக்கம்தான் என்றும் அந்த உயிர்இரக்கத்தின் பொருட்டு நான் பெற்றுக்கொண்ட
தயவுதான் ,
இன்று என்னை இதுவரை யாருக்கும் எட்டாத மேல்நிலையில்  ஏற்றி விட்டது என்றும் வெளிப்படையாகவே கூறுகின்றார்கள்.

அதுமட்டும் அல்ல இதுவரை இவ்வுலகம் கண்ட சமயத் துறவிகள் காவியையும் கலர்துணிகளையும்தான் தங்களது உடைகளாக அணிந்து வந்துள்ளார்கள்.

ஆனால் நமது பெருமான் 
உண்மையில் சமயப்பற்றுடன் இருந்தவரானால் மற்றவர்களைப் போன்றே தாமும் இளமை முதல் காவியாடை அணிந்திருக்கலாமே !

ஏன் தூய்மையான வெண்ணிற ஆடையையே அணிந்து வந்தார்கள் .

ஏனென்றால் , கடவுளுடைய பெருந்தயவை இளமையிலேயே பெற்றுக்கொண்டதற்கு அடையாளமாகத்தான் , தயவின் வண்ணமாகிய வெண்துகிலையே இளமை முதல் அணிந்து வந்தார்கள் நமது பெருமான்.

இதன் விளக்கத்தையும் திருவருட்பா உரைநடைப் பகுதியில் கூறுவார்கள் பெருமான் .
காவி என்பது கடவுளின் தயவைப் பெறுவதற்கான முயற்சியில் இருப்பவர்கள் அணிவது என்றும்,

வெண்ணிறம் கடவுளின் தயவைப் பெற்றுக்கொண்டதற்கானஅடையாள வெற்றிச்சின்னம் என்றும் கூறுவார்கள் .

இவற்றை எல்லாம் நாம் உற்று கவணிக்கவேண்டியது அவசியமேயாகும். 🏵

அது மட்டும் அல்ல பெருமான் வாசகப் பெருவிண்ணப்பத்தில் ,
"வாலிபப் பருவந் தோன்றுவதற்கு முன்னரே ,எல்லா உயிர்கட்கும் இன்பந்தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்கின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர்"

என்று அருட்பெருஞ்ஜோதி ஒருவர்தான் கடவுள் என்பதை தனது வாலிபப் பருவத்திற்கு முன்பே ஆண்டவர் தமக்கு தெளிவாகத் தெரிவித்தருளியதாகவும் கூறியுள்ளார்கள் 🏵

மற்றும் ஆறாம் திருமுறையிலே பிறிவாற்றாமை என்ற 68வது தலைப்பில் ,
5வது பாடலில் ,
"மாயையாற் கலங்கி வருந்திய போதும் வள்ளல்உன் தன்னையே மதித்து உன் சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால் தலைவ வேறெண்ணியதுண்டோ தூய பொற்பாதம் அறிய நான் அறியேன்"

என்று மாயை என்னைப்பற்றி அதனால் கலக்கமுற்று வருந்தியபோதுகூட ,
உன்னையே எனது மனதில் கருதிக்கொண்டு ,
உன்னுடைய தோற்றமாகவே பார்த்து நான் மற்றவரை எல்லாம் வழிபட்டுவந்தேனே அல்லால் ,
எனது தலைவனே வேறெதுவும் நான் எண்ணியது உண்டோ ?
உனது தூய்மையான பொன்மலரடிகள் அறிய நான் எதுவும் அறியேன் என்று தெளிவாக கூறுகின்றார்கள் பெருமான். 🏵

நல்லது ,
அப்படி என்றால் ,
சிறுவயதிலேயே பெருமான் அருட்பெருஞ்ஜோதி ஒருவர்தான் கடவுள் என்று தெளிவாகத் தெரிந்தபின் ,
பிறகு எதற்கு கந்தக்கோட்டத்து முருகனையும்,
திருவொற்றியூர் சிவனையும்,
தணிகை முருகனையும்,
தில்லை நடராஜரையும்,
மற்றும்பற்பலத் தெய்வங்களின் பேரில் ஸ்தோத்திரங்களையும் பெருமான் இயற்றி வழிபட்டு வந்தார்கள் ?

நேரடியாகவே இளம்வயதிலிருந்தே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபட்டு வந்திருக்கலாமே என்று நமக்குள் கேள்வி எழும்பலாம் இல்லையா ?

ஏனென்றால் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்கவுற்ற  வேலையை சரிவர செய்வதற்காகத்தான் என்பதை உணர்தல் வேண்டும் 🏵 
 
பெருமான் தோன்றிகாலத்தில் சைவமும் வைணவமும் தழைத்து மக்கள் அச்சமய மதத்தில் அபிமானம் வைத்து இறுகப்பற்றி வாழ்ந்து வந்ததனால் அவற்றைக் கவணித்த பெருமான்,

தற்போது,
சமயம் மதம்பொய் இதனால் ஒரு ஆன்மா அடையவேண்டிய லஷியத்தை அடையமுடியாது , நீங்கள் வணங்குகின்ற கடவுளர்கள் எல்லாம் உண்மைக் கடவுள் இல்லை,

 உண்மைக்கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே என்று தனக்கு அச்சிறுவயதில் ஆண்டவர் அறிவித்ததை  கூறியிருந்தால் இவ்வுலகம் பெருமானின் பிள்ளைப்பருவத்தை கருத்தில்கொண்டு ஏற்று இருக்குமா ?
ஒருகாலமும் ஏற்று இருக்காது .🏵

அதனால்தான் பெருமான் ,
ஆடுகின்ற மாட்டை ஆடிக்கறப்பது போன்றும் ,
பாடுகின்ற மாட்டை பாடிக்கறந்திடுவது  போன்றும்,

இவ்வுலகவர் போக்கிலேயே சென்று,
அவர்கள் வழிபட்ட கடவுள்களாகிய  அறிவுருவாகிய முருகர் வழிபாட்டில் தொடங்கி ,
அந்தச் சிறுவயதிலேயே மேலான மெய்ஞான கருத்தைப் போதிக்கும் தெய்வமணிமாலையில் தனது பூரண மெய்ஞான நிலையையும் ,

தனக்கு இறப்பு என்பதே கிடையாது என்பதை,
பிரம்மன் இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ ? 
இரவு நிறமுடைய எமன் என்னைக் கனவினும் இறப்பிக்க எண்ணம் உறுமோ ?
என்று  தனது இறவா நிலையை தெளிவாக பாடலில் கூறுவார்கள்.🏵

அப்படி ,
அறிவுருவாகிய முருகவழிபாட்டில் தொடங்கி சைவர்கள் வழிபட்டுவந்த சிவனையும் அம்பாளையும் திருவொற்றியூரின் வாயிலாக பலகாலம் வழிபட்டு அத்தலத்தில் இதுவரை சைவசித்தாந்திகள் ஓதி வந்த தேவாரம் திருவாசகத்தினும் பக்தி உருக்கத்தை தரக்கூடிய ஸ்தோத்திரப் பாடல்களை மெய்யுருக  இயற்றியும் ,

அதன்பிறகு வைத்தியநாத சுவாமிகளின் பெயரில் பலப் பதிகங்கள் ,  ராமர் ,கிருஷ்ணர் என்று பலப்பாடல்கள் இயற்றியும் இறுதியில் தில்லை நடராஜரின் பெயரில் பலப்பாடல்களை இயற்றியும் ,

தலயாத்திரையாக சென்ற  தலத்தில் எல்லாம் அந்தந்த மூர்த்திகளின் பெயரில் பலப்பாடல்களை இயற்றி தலவரலாறு கூறி,

முன்பு வந்து சென்று அருளார்கள் போன்றே தாமும் சைவப் பற்றுடன் சமயத்தில் வாழ்வதுபோன்றே நமக்காக வாழ்ந்து காண்பித்து ,

முடிவில் , 
தாம் வந்த லஷியத்தை நிறைவேற்றக்கூடிய காலம் வந்தவுடன் ,
தனது உண்மையை உரைக்க முன்வந்தார்கள் 🏵

எப்படி என்றால் ,
ஒரு ஆன்மா அடையவேண்டிய ஆன்மலாபத்தை  இந்த சமயமும் மதமும் ஒருகாலமும் வழங்க இயலாது ,

அந்த சமயத்தை விட்டு நான் வெளியில் வந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பற்றினேன் ,
அவர் எனக்கு கூறிய மெய்ப்பொருள் பெருநெறி ஒழுக்கம் என்னவெனில் ,
"கருணையும் சிவமே என்பதாகும்"

அதன்படி "உயிர் இரக்கம்கொண்டேன் ",
கடவுளது பெருந்தயவைப் பெற்றேன்,
அந்த தயவைக்கொண்டு
ஏறா நிலைமேல் என்னை ஆண்டவர் ஏற்றுவித்தார்கள் .

தாங்களும் என்னைப்போல் பெற்றுக்கொள்ளலாம் ,
நான் விட்டதுபோல் தாங்களும் சமயத்தை விட்டு விட்டு வாருங்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரையே வழிபடுங்கள் ,

அவர் ஒருவர்தான் எல்லாம் செய்ய வல்லவர் என்று கூறி இவ்வுலகவர்களை சுத்த சன்மார்க்கத்திற்கு பெருமான் அழைக்கின்றார்கள்🏵

இதன் மூலம் நமக்கு என்ன தெரிகின்றது ,

அருட்பெருஞ்ஜோதி என்ற உண்மைக்கடவுளை உலகம் அறியும் காலம் வந்துவிட்டதாலும் ,

சமண மத்தை கழுவேற்ற ஞான சம்பந்தர் வந்தது போன்று,

சமயத்தையும் வைணவத்தையும் மற்றைய மார்க்கங்களை எல்லாம் ஒருநிலைப்படுத்தி சாதி சமயம் மதம் என்ற பெயர்களால் ஒன்றான கடவுளை பலவாக வழிபட்டு மனிதகுலம் பாழ்பட்டு போகாவண்ணம் அனைவரையும் சுத்தசன்மார்க்கம் என்ற ஒரே நெறியில், ஒரேக் கடவுளை வழிபட்டு ஒருமையுடன் வாழ்வித்திடும் பொருட்டு,

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவுள்ளம் கொண்டு நமது பெருமானை இவ்வுலகிற்கு வருவித்தார்கள் .

பெருமானும் நம் அனைவரையும் நமது போக்கிலேயே சென்று மாற்றும் வண்ணம்
நமக்காக சமயத்தில் வாழ்வதுபோன்று வாழ்ந்து காட்டினார்கள் என்பதை நாம் சத்தியமாக உணர்தல் வேண்டும் 🏵 

தற்போது கீழ்கண்ட பாடலின் பொருளை எனது சிற்றவிற் தோன்றிய வண்ணம் காண முற்படுகின்றேன். பிழைஏதும் இருப்பின் கற்றறிந்த பெரியோர்கள் குணமாகப் பொறுத்தருள்வீர் 🏵

பாடல்;
புல்லவா மனத்தேன் எனினும் சமயம் புகுதவா பொய்நெறி ஒழுக்கம் 

சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர் சொப்பனத்தாயினும் நினையேன் .

கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன் கனகமா மன்றிலே நடிக்கும்

நல்லவா எல்லாம் வல்லவா உனையே நம்பினேன் கைவிடேல் எனையே🔥🙏

பொருள்;
புல்லவா மனத்தேன் ; இழிவான ஆசைகொண்ட மனத்தேன்.

எனினும்;
இருந்தபோதும்.

சமயம் புகுதவா;
சமநெறிகளில் புகுவதற்கோ ,

பொய்நெறி ஒழுக்கம் சொல்லவா;
ஆன்மலாபத்தை அடையச்செய்து, 
இறவா அருள்வாழ்வை அளிக்கக்கூடிய பேரின்ப பெருவாழ்விற்கு வழிதுறைக் காட்டாத பொய்நெறிகளின் ஒழுக்கங்களைப் பற்றி  பேசுவதற்கோ ,

பிறரைத் துதிக்கவா ;
உன்னைத் தவிர மற்றையத் தெய்வங்களை வணங்கித் துதிப்பதற்கோ,

சிறிதோர் சொப்பனத்தாயினும் நினையேன்;
ஒரு சிறிய கனவில் கூட நினைத்தது இல்லை.

கல்லவா; 
பாறையை ஒத்த கடின ஆசைக்கொண்ட,

மனத்தோர் உறவையும் கருதேன்;
அப்படிபட்ட மனதைக் கொண்டவர்களுடைய உறவையும் விரும்பிலேன்.

கனகமா மன்றிலே நடிக்கும் ;
மாற்றறியா சுத்த பொன்னால் ஆன  சபையில் நடிக்கின்ற,

நல்லவா எல்லாம் வல்லவா ;
நல்லவரே எல்லாவற்றையும் செய்யக்கூடிய வல்லமைப் பொருந்தியவரே !

உனையே நம்பினேன் கைவிடேல் எனையே ;
உன்னையே நம்பிஇருக்கின்றேன் என்னைக் கைவிட்டுவிடாதீர்கள் 💐🔥🙏

பூரணப் பொருள்;
அருட்பெருஞ்ஜோதி என் தந்தையே !
இழிவான ஆசைகளைக் கொண்ட மனத்தவனாக நான் இருந்தாலும்,

ஆன்ம வாழ்வை நிலைக்க வைத்து ,சிவானுபவ லஷியத்தை அடையசெய்விக்கும் வழிதுறை காட்டாத சமய நெறிகளில் புகுவதற்கோ ,

அல்லது அந்த நெறிகளைப் பற்றி பேசுவதற்கோ ,
சிறியதொரு கனவில்கூட நினைத்தது இல்லை.

இரக்கமற்ற கடினமான பாறைக்கு நிகரான ஆசைகளை மனத்திற்கொண்டவர்களுடைய உறவையும் விரும்பிலேன்.

சுத்தப் பொன்னால் ஆன சபையில் நட்ம்புரிகின்ற நல்லவரே எல்லாவற்றையும் செய்ய வல்லவரே அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவரே ,

உன்னையே நம்பி இருக்கின்றேன் என்னைக் கைவிட்டுவிடாதீர்கள் என்று பெருமான் கூறுகின்றார்கள் 🔥🙏
...நன்றி 🙏
...வள்ளல் மலரடிப் போற்றி போற்றி 🙏
...பெருமான் துணையில் 🙏
...வள்ளல் அடிமை 🙏
... தயவுடன் வடலூர் இரமேஷ் 🙏

No comments:

Type in Tamil (Press Ctrl+g to toggle between English and Tamil)
+Grab this

Post a Comment

Popular Posts

Contact Form

Name

Email *

Message *

Translitrator(English to Tamil)

Type in Tamil(Press Ctrl+g to toggle between English and Tamil)

Translate

Translator

Subscribe-(Free)