பசித்திரு ! தனித்திரு ! விழித்திரு !
அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி !
தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி !
கொல்லாவிரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
ஜீவகாருண்யமே மோட்சவீட்டீன் திறவுகோல் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
இது ஒரு சன்மார்க்க சிந்தனைக்கு ! பகுதி -5-
அன்புஉள்ளம் கொண்ட ஆன்மநேய அன்பர்களுக்கு வந்தனம் நாம் நம் வாழ்க்கையில்
உணர்ந்துகொள்ளவேண்டிய தத்துவபாடல் சிலவற்றை கொடுத்துள்ளோம் எனவே அன்பர்களே
நாமும் ஜீவகாருண்ய தயவோடு வாழ்ந்து பெறவேண்டியதை விரைவில் பெற்றுக்கொள்வோம்
41, காட்டில் இருந்தாலும் கடுந்தவம் புரிந்தாலும் !
வீட்டில் இன்பத்தால் மனைவியோடு மகிழ்ந்தாலும் !
நாட்டில் அலைந்தாலும் கோவில்குளம் சுற்றினாலும் !
காட்டிடும் குருஇல்லையேல் பயனுண்டோ வாழ்ந்தாலும் !
42, மூப்பு தன்னை அறிந்தாலே முக்தி !
அப்பு வளர்போதில் அடக்கலாம் சக்தி
எப்பொருளும் இல்லையே இதைவிட்டால் சித்தி !
தப்பாமல் உண்டாலே தான்வரும் முக்தி !
43, மூப்பு என்றாலே நீர்நெருப்பு காற்று !
அப்பு என்றாலே அதிலொன்று ஈற்று !
சப்பு என்றாலே சான்றிடும் கூற்று !
உப்பு என்றாலே கசிவைநீ நீற்று !
44, அப்பினை கொண்டு உப்பினை கட்டிடு !
வைப்பினை அறிந்து கைப்பினை நீக்கிடு !
தப்பினை இல்லாத தவயோகம் அறிந்திடு !
முப்பினை கொண்டு நற்கதி சேர்ந்திடு !
45, விந்தோடு நாதம் விளங்க கூட்டிடும் !
வந்தது வாதம் வகையை அறிந்திடும் !
ஐந்து சரக்கோடு நாதவிந்து சேர்ந்திடும் !
வெந்திடும் லோகங்கள் விபரம் தெரிந்திடும் !
46, எட்டோடே இரண்டை அறிந்தவன் சிங்கம் !
விட்டோடாமல் உயிர் உடலினில் தங்கும் !
கூட்டினில் வாழ்ந்திடும் நோய்களுக்கு வங்கம் !
வீட்டினில் கல்லுப்பே மூப்புவின் அங்கம் !
47, தண்ணீரில் காற்றுக்கு நெருப்புதான் அங்கம் !
மூன்றையும் கட்டி முடித்தவன் சிங்கம் !
மண்ணினில் போட்டிட்டால் மாசறுந் தங்கம் !
விண்ணில் வீசிட்டால் ஜோதிநிலை அங்கம் !
48, எலும்பு தசை நரம்பால் எடுத்திட்ட கூடு !
வலுவென்று திமிர்கொண்டு வாழ்ந்திட்டால் கேடு !
கலையான ரசவாதம் அறிந்திட நாடு !
விலையிலா மாணிக்க ஒளிவீசும் வீடு !
49, ஒன்றினில் ஒன்றான ஒருபொருள் நாடு !
உண்மை மாகரம் தன்னையே தேடு !
விண்ணினில் ஆடிடும் விமலனை நாடு !
கண்ஜோதி கண்டாலே அழியாது கூடு !
50, நாசியில் இடபிங்கலை சுழிமுனை வீடு !
கூசிடாமல் ரேசபூரக கும்பித்தல் தேடு !
வாசியை ஒட்டியே வழியறிந்து கூடு !
தேசிகன் நாட்டியம் பார்த்திட நாடு !
தொடரும் .....
(இப்பாடலை இயற்றியவர் பொ. அன்பழக சாமி ,நெ .15,7,வது சந்து ,
பேய் கோபுர வீதி ,திருவண்ணாமலை )
எனவே அன்பர்களே நாமும் நம் வாழ்வில் ஜீவகாருண்ய சிந்தனையோடு கொல்லாவிரதமதை
கடைபிடிக்கவேண்டும் ,நமக்கு இந்த உலகத்தில் வாழ்வதற்க்கு பேராசை அதாவது குறுகிய
காலத்தில் பொன்பொருள் வீடு மனைவி மக்கள் என செல்வசெழிப்போடு வாழவேண்டும் என்கிற
எண்ணம் மேலோங்குகிறதே தவிர.இது ஒட்டைவீடு ஒன்பதுவாசல் என்பதனை யாரும் அறிந்தபாடில்லை
இந்த மனிதமாக்கள் தான் வந்தவழியை மறந்து மிருகத்தைவிட கேவலமாக நடந்துகொள்கிறார்கள்
அதாவது இவன் சீக்கிரம் பொன்பொருள் சேர்ப்பதற்க்கு தீயவழிகளை கையாண்டு அவற்றில் வரும்
செல்வத்தில் ஒருபகுதியை கடவுளுக்கு காணிக்கையாக கோவில் உண்டியலில் போடுகிறான் கடவுள்
இவற்றைஎல்லாம் நம்மிடம் ஒருபோதும் எதிர்பார்பதில்லை ஆண்டவன் நம்மிடம் எவற்றை
எதிர்பார்க்கிறார் பக்குவமடைந்த மனத்தோடு பிற உயிர்களிடத்தில் அன்பு இறக்கம் தயவு கருணையும்
காட்டும் போதுதான் ஆண்டவன் நம்மை ஏறாநிலைக்கு ஏற்றிவிடுகிறான்
மனிதனின் வயறுதான் உண்டியல் இந்த உண்டியலை உணவு என்னும் ஆகாரத்தைகொண்டு நிரப்பினால்
அதில் வரும்பலன் கோடானகோடி யுகங்கள் தவம் செய்கின்ற ஞானிகள் பெறுகின்ற லாபத்தைவிட பன்மடங்கு
பெறலாம் என்கிறார் நமது வ்டலூர் வள்ளல்பெருமானார்
எனவே சான்றோர் பெருமக்களே சற்றே சிந்தித்து பாருங்கள் நாம் தீயவழியில் சென்று அதில் வரும் பாவங்களை சேர்க்காமல் நமக்கு கிடைத்த இந்த தேகத்தை என்றும் அழியாத ஒளிதேகமாக மாற்றும்
உபாயம் தன்னையறிந்து அதாவது பிற உயிரினங்கள் படுகின்ற துன்பங்களை கண்டு
நம்முடைய துன்பமாக பாவித்து உருகுதல்,பசியினால் வருத்தமுறும் எந்த உயிராக இருந்தாலும்
அவற்றுக்கெல்லாம் உணவு என்னும் மருந்தை கொண்டு அவற்றின் பசிப்பிணியை போக்குததாலும் கிடைக்கின்ற ஆசிகள் , மற்றும் நமது வடலூர் வள்ளல்பெருமான் கூரிய உயிர் நேயத்தையும்
பசிப்பிணி போக்குதளையும் நாம் நம் வாழ்வில் இலட்சியமாக கொண்டு வாழ்ந்து வருவோமேயானால் இவைகள் தான் நம்முடைய இந்த தேகம் ஒளிதேகமாக மாறும் உபாயம் ஆகவே நாம் எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரை தியானித்து பெறவேண்டிய லாபத்தை பெற்று உய்வோமாக .
பசி என்று வருவோர்க்கு உணவுகொடு அதுவே ஜீவகாருண்யம் !
ஜீவகாருண்யமே மொட்சவீட்டீன் திறவுகோல் !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொள்ளா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக !
என்றும் உங்கள் அபிமானத்துக்குரிய அன்பன்
ஆன்மநேய .அ.இளவரசன்
வள்ளலார் உயிர்வதை தடுப்பு இயக்கம்
நெ.34,அண்ணா தெரு,
திருவள்ளுவர் நகர்,
ஜமின் பல்லாவரம்
சென்னை -6000 043
கைபேசி:9940656549